Category: நூல் அறிமுகம்

Post
தமிழக பள்ளிக் கல்வி | தொகுப்பு:ச.சீ.இராசகோபாலன் | ரூ.30 | பக்: 64

தமிழக பள்ளிக் கல்வி | தொகுப்பு:ச.சீ.இராசகோபாலன் | ரூ.30 | பக்: 64

சமச்சீர் கல்வியைக் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும். மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தேசியக் கல்விக் கொள்கை பற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஐந்து கல்வி வாரியங்களைக் கலைத்துவிட்டு அனைத்துப் பள்ளிகளுக்குமான ஒரே வாரியத்தை அமைக்க அரசு முற்பட வேண்டும். இராசகோபாலன் முன் வைக்கிற கருத்துகள் நம் அனைவரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் உரியவை.

Post
ஓய்ந்திருக்கலாகாது……. கல்விச் சிறுகதைகள்

ஓய்ந்திருக்கலாகாது……. கல்விச் சிறுகதைகள்

தொகுப்பு: அரசி ஆதி | வள்ளியப்பன் | ரூ: 70 பக். 144 சுந்தரராமசாமி, பூமணி, கிருஷ்ணன்நம்பி, பாவண்ணன், தமிழ்ச்செல்வன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வேணுகோபால், பாமா, தோப்பில் முகமது மீரான், லட்சுமண பெருமாள், ச.பாலமுருகன் – ஆகிய 13 படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அனைத்தும் பள்ளிக்கல்வி, கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், அங்கு பிரம்பும் கையுமாக வாத்தியார்கள், அடிவாங்கி கைவீங்கி நொம்பலப்படும் மாணவர்கள் –  குறித்த கதைகளே.

Post
கனவு ஆசிரியர் | தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன் | ரூ: 90

கனவு ஆசிரியர் | தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன் | ரூ: 90

அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், இறையன்பு, ச.மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், த.வி.வெங்கடேஸ்வரன், பாமா, ச.தமிழ்ச்செல்வன், இரா.நடராசன் ட்ராட்ஸ்கி மருது, கீரனூர்ஜாகிர்ராஜா, பவா.செல்லதுரை, க.துளசிதாசன் – ஆகிய 19 பேரும் தமது ‘கனவு ஆசிரியர்’ யார், ஏன் என்ற நினைவுப்பதிவுகளைச் செய்துள்ளனர். ஒவ்வோர் ஆளுமை குறித்தும் மிகச்சிறப்பான அறிமுகக் குறிப்புகள், அவர்களின் புகைப்படங்கள், பின் கட்டுரைகள் என ஒரு சீரான கட்டமைப்பில் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. எட்டு பிரமுகர்களில், 6 பேர் தங்கள்...

Post
கதை சொல்லும் கலை | ச. முருகபூபதி | ரூ : 10 பக் : 24

கதை சொல்லும் கலை | ச. முருகபூபதி | ரூ : 10 பக் : 24

கதை சொல்வதும், கேட்பதுவும் மிகத் தொன்மையான ஒரு செயற்பாடு. இது எந்த வயதினருக்கும் பிடித்தமான ஒரு செயல்.  குழந்தைகளுக்கு இக்கலையின் பயனை, வெவ்வேறு விதமாக விவரிக்கிறார் ச.முருகபூபதி.

Post
வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்

வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்

முனைவர் பாலாஜி சம்பத்  | தமிழில்: எம்.காயத்ரி | ரூ: 20 | பக்: 32 தேர்வுகள் தேவையா என்ற இப்புத்தகக் கேள்வி அடிப்படையிலேயே ஆழமான பல பிரச்சனைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. நம் சமூகத்தின் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வின் நேரடிப் பிரதிபலிப்பு தேர்வு என்கிறது. கற்றல், வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால், குழந்தைகளைக் கற்கவைக்க  நமக்குத் தேர்வுகள் தேவைப்படாது என்கிறார் ஆசிரியர்.

Post
முதல் ஆசிரியர் | சிங்கிஸ் அய்மாத்தவ் | தமிழில் : பூ. சோமசுந்தரம்  ரூ.40 | பக்.80

முதல் ஆசிரியர் | சிங்கிஸ் அய்மாத்தவ் | தமிழில் : பூ. சோமசுந்தரம் ரூ.40 | பக்.80

நமக்கு அரிச்சுவடி கற்றுத் தந்து, எழுத்தறிவுச் சோலைக்குள் நமது பிஞ்சு விரல்களைப் பற்றி அழைத்துப் போய் உலவி வரச் செய்த அந்த முதல் ஆசிரியரை யாரால் மறக்க முடியும்? இந்த நாவலின் கதாநாயகி அல்டினாயாலும் தனது முதல் ஆசிரியரை மறக்க முடியவில்லை.

Post
கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64

கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64

‘கல்வியில் நாடகம்’ என்றொரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகவே நாடகப் பிரதியை உருவாக்குகிற கூட்டுசெயற்பாட்டை இணைத்திருக்கிறார் பிரளயன். ஓசூரில் டி.வி.எஸ். அகாடமி மாணவர்களுடன் அவ்வாறு இணைந்து உருவாக்கிய நாடகப் பிரதிகளை முன்வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

Post
டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்விகுறித்த உரையாடல் – ஐடிஏசி குழு உறுப்பினர்கள்

டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்விகுறித்த உரையாடல் – ஐடிஏசி குழு உறுப்பினர்கள்

தமிழில்:அப்பணசாமி | பக்: 104 | ரூ:90 பள்ளிக் கல்வியை ஓர் இயந்திரமாக உருவகப் படுத்துகிறது இப்புத்தகம். இதன் செயல்பாடு பழுதடைந்திருப்பதைப் படங்கள், உரையாடல்கள் மூலம் நிறுவுகிறது. பணக்காரருக்கு ஒரு கல்வி – ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலை காலங்காலமாக இருப்பதைக் கூறுகிறது. ‘அனைவருக்கும் பொதுவான கல்வி என்பது கிடையவே கிடையாது என்று சொல்கிறது

  • 1
  • 2
  • 5