வரைவு தேசியக் கல்விக் கொள்கை

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கையில் அறிவியல், தொழிநுட்பம், அறிவியல் கண்ணோட்டம்: ஆபத்துக்களும் அபத்தங்களும் | பேரா.பொ.இராஜமாணிக்கம்

பேரா.பொ.இராஜமாணிக்கம் அறிவியல் தொழிநுட்பம் குறித்து தேசியக் கல்விக் கொள்கை கூறுவது என்ன? புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் ஆரம்பமே இந்திய மையக் கல்வி என்பது தான். ஏனென்றால் இந்தியா நீண்ட காலமாக புகழ் மிக்க முழுமையடைந்த கல்வியை வழங்கி வந்திருக்கிறது எனப் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்திய மையக் கல்வியின் நோக்கமாகக் குறிப்பிடுவது என்னவெனில்.. இந்திய மக்களின் பன்முகத்தன்மை, அவர்களின் பாரம்பரியம், பண்பாடு, மொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுசார் சமூகம் என அறிவிக்கிறது.....பண்டைய கல்வியின் முக்கிய நோக்கம் அறிவைப் பெறுவது மட்டுமல்ல இந்த உலகில் வாழ்வதற்கான தயாரிப்பிற்காகவும் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதும் தன்னை விடுவித்துக் கொள்வதும் ஆகும் எனக் கூறுகிறது. இந்தியக் கல்வி முறை சரக்கா, சுஸ்ருதா, ஆரியப்பட்டா, பாஸ்கராச்சாரியா, சாணக்கியா, பதஞ்சலி, பாணினி போன்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளது என்றும் கணிதம், வானவியல்,உலோகவியல், மருத்துவம்,...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து மோடி அரசு எதை எடுத்துக் கொள்ளும், எதைப் புறக்கணிக்கும்? | பேரா.அ.மார்க்ஸ்

தற்போது பா.ஜ.க அரசு மக்கள் முன் வைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2019’ நகல் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது: “பா.ஜ.க அரசின் கல்விக் கொள்கை என்றவுடன் நம் எல்லோருக்கும் வரும் ஐயம் காவிமயமாக்கலை நோக்கமாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருக்கும் என்பதுதான். நல்ல வேளையாக அப்படி எதுவும் இதில் இல்லை”. அப்படியெல்லாம் வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை என்பது உண்மைதான். ஆரம்ப மற்றும் உயர்கல்வியில் பன்னாட்டுத் தர அளவில் இந்தியக் கல்வியை இன்றைய உலக அளவிலான கல்விச் சூழலுக்குக் தக தகவமைப்பது என்கிற அடிப்படியில்தான் விண்வெளி விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இந்த அறிக்கை அமைந்துள்ளது. ஆனால் அது மிக நுணுக்கமாக நமது நாட்டுக்கே உரித்தான சாதி, தீண்டாமை, பெரும்பான்மை மதவாதம் ஆகியன குறித்து வெளிப்படுத்தும் மௌனம் மோடி அரசைப் பொருத்தமட்டில்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

பாலகர்கள் பத்திரம்! இந்தப் பூனையை நம்பவா?… | ச.மாடசாமி

எப்போதும் நான் சற்றுப் பதற்றத்தோடு படிக்கும் பகுதி - பாடத் திட்டமும் பயிற்று முறையும். அதிகாரத்தின் வழி வாய்ப்பு பெற்றவர்கள் வந்து குப்பை கொட்டும் இடம்! புதிய கல்விக் கொள்கை 2019ஐ எடுத்ததும் முதலில் நான் வாசித்தது- Curriculum and Pedagogy. வாசித்து முடித்ததும் ஒரு பூனைக் கதை ஞாபகத்துக்கு வந்தது. வயதான பூனை அது. எலியைப் பிடிக்க முடியவில்லை. அசையாமல் செத்தது போல் கிடந்தது.உண்மையில் பூனை செத்து விட்டதாக எலிகள் கருதின. பூனையின் பக்கத்தில் வந்து விளையாடின.அப்போதும் பூனை அசையவில்லை. ஓர் எலி உற்சாகம் மிகுதியால் பூனையின் தலையில் ஏறி விளையாடியது. உடனே பூனை சட்டென்று  அந்த எலியைப் பிடித்தது. பிற எலிகள் ஓட்டம் பிடித்தன. எலிகள் உலகின் மாறாத பாடம்: “ பூனையை நம்பாதே!”. இந்தியா பாகிஸ்தானை வென்ற கிரிக்கெட் விளையாட்டைக் கூட ‘பாகிஸ்தான்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – வரைவு அறிக்கை | ஆர்.ராமானுஜம் | தமிழில்: கமலாலயன்

வரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்கள்: (வரைவு அறிக்கையின் இந்த அம்சங்களிலுள்ள, நாம் உடன்படமுடியாத பல துணை –விரிவான அம்சங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, பரந்த பொருளில் வரவேற்கலாம்.) 1. ஆசிரியர்களுக்கான கல்வியின் மீது பிரதானமான அழுத்தம்: நாட்டிலுள்ள ஆசிரியர் களின் கல்வி இன்று இருக்கும் அவலநிலை பற்றி இந்த ஆவணம் மிகக் கடுமையான மொழியில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த வரைவுக் கொள்கை, “நாடு முழுவதிலும் இருக்கிற தரமற்ற எல்லா ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூடிவிட வேண்டும்“ என்று அறைகூவல் விடுத்துள்ளது. இவற்றுக்கு மாற்று ஏற்பாடாக, இந்த வரைவுக் கொள்கை, ஆசிரியர் பயிற்சிக் கல்வியைப் பல்கலைக் கழகத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவருவது மட்டுமன்றி, கல்வியமைப்பிலேயே ஒரு மையமான இடத்தையும் அதற்கு வழங்குகிறது. 2 . இந்த வரைவுக்கொள்கை, ஒன்று முதல் பதினேழு...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய அரசு மாநில அரசுகளின் உதவியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்டதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. அதுவும் கூட மிகவும் இரகசியமாக தேர்வு செய்தவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் மட்டும் கருத்து கேட்பு மையங்களுக்கு சென்று போராடி உள்ளே சென்று கருத்துத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை யாரும் வெளியிடாமலே வெளிவந்தது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொன்டதாகவும் கூறவில்லை. நிராகரிக்கப்படுகிறது என்று அறிவிக்கவும் இல்லை. ஆனால்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்

உச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும். 1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது தமிழ்நாடு நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவர்க்கும் தந்த பெருமை பெற்றது. 1964 ஆம் ஆண்டிலேயே பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாதும், அனைத்து ஆசிரியர்களும் முழுத் தகுதி பெற்றவராகவும் திகழும் நிலை அடைந்தது. இதற்குக் காரணம் கல்வித் திட்டம் வகுக்கவும் செயல்படுத்தவும் மாநிலங்களுக்கு இருந்த முழு உரிமை. 1976 ஆம் ஆண்டில் கல்வி பொதுப் பட்டியலுக்கு...
NEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா

தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில், ஆழ்ந்த கவனத்தோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உடைய இந்தியத் திருநாட்டில் கல்வியின் இன்றைய நிலை என்ன? நாம் மிகத் தீவிரமான கற்றல் சிக்கலில் சிக்கியுள்ளோம். தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் மிகப்பெரும் எண்ணிக்கையினர் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுத் திறன்களைஅடையவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடு பத்து கோடிக்கும் அதிகமான மாணவர்களைக் கற்றலில் இருந்து எழுத்தறிவின்மைக்கு இழக்க நேரிடும். உடனடியாகக் கல்வியில் மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அதிலும் 85 % மூளை வளர்ச்சி ஆறு வயதிற்குள் நடந்துவிடுவதால் இது அவசரமாகக்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

மனு தர்ம சாணக்கியனும் பன்னாட்டு நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்- ம் (Steve Jobs) புதிய உயர்கல்விக் கொள்கை பிதாமகர் | பேராசிரியர் ப.சிவகுமார்

ஆளும் வர்க்கக் கல்விக் கொள்கை எப்படி மக்களுக்கான கல்விக் கொள்கையாக இருக்க முடியும்? புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 20l9ன் உள்ளடக்கம் காவிமய மனுதர்மத்தையும், பன்னாட்டு நிறுவன தொழில் உற்பத்தி முறை மூலதனகுவிப்பு சார்பையும், தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டுத்தளங்களைத் தகர்க்கும் திட்டத்தையும் உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு தொடர்பற்ற மன்னர்களின் உல்லாச வாழ்க்கை தொடர்புடைய ஆயக்கலைகள் 64 ஐ தூக்கி பிடிக்கிறது இந்த கல்விக் கொள்கை. நாளந்தா திட்டம் (MISSION NALANDA), தக்‌ஷசீலா திட்டம் (MISSION TAKSHASHILA) என்னும் இரண்டு திட்டங்களை உயர்கல்விக்கான முன்மொழிவுகளாக வைக்கப்படுகிறது. நாளந்தா பல்கலைக்கழகம் பற்றியாவது வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹர்ஷ வர்த்தனன் யுவான் சுவாங்குக்கு எழுதிய கடிதத்தில் நாளந்தா பற்றிய குறிப்புகள் உள்ளன. பௌத்த பிக்குகளால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நாளந்தா பல்கலைக் கழகத்தில் தர்க்கம், தத்துவம்,...
ArticleNEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

இந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்

இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தில் அதனை தனது ஏதேச்சதிகார ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தங்களது வியாபார தொழிற்புரட்சி சுரண்டலுக்கு வசதியாக...
Articleவரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஒரு பொதுப் பள்ளி முறைமையை பற்றி அவர்கள் பேசவில்லை | பிரின்ஸ் கஜேந்திரபாபு | சந்திப்பு: சிந்தன்

கே: ஹிந்தியை ஒரு மொழியாக பாட மொழியாக கற்றுக் கொடுக்கிறோம் என்று மத்திய அரசு சொல்லும் பொழுது அதற்கு ஒரு...
1 2 3 4
Page 2 of 4