வரைவு தேசியக் கல்விக் கொள்கை

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:

வலங்கைமானின் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்சி கஜேந்திர பாபு பேச்சு : திருவாரூர் ஜீன் 29: புதிய கல்விக் கொள்கை...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா?” எழுத்தாளர் விழியன்

தேசியக் கல்விக் கொள்கை வரைவை தமிழில் சுருக்கமாக அளித்திருப்பது பற்றி தன் கருத்துகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் விழியன். தேசியக் கல்விக்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!

தோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை! 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஆசிரியர்கள் தேவையற்ற உயர்கல்வி வகுப்பறைகள்

வசுதா காமத் SNDT மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்   1986 முதல் 2007 வரை ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (SNDT) மகளிர் பல்கலைக்கழகத்தின் கல்வி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய வசுதா காமத், 2011ஆம் ஆண்டு SNDT  மகளிர்  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராவதற்கு முன்பாக, 2007 முதல் 2011 வரை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை அமைப்பான மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றினார். துணைவேந்தராக ஓய்வு பெற்ற பிறகு, குடியரசுத் தலைவரால் 2015 முதல் 2018 வரை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2015ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து பணியாற்றும் வகையில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ஆணைய உறுப்பினராகவும், 2015 முதல் 2017 வரை திருச்சி தேசிய தொழில்நுட்ப...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

சூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில் முன்னாள் பிரபலமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அப்போது கர்நாடக மாநில அறிவாணையச் செயலாளராக என்ன செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள ஸ்ரீதரைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. அவற்றை அறிந்து கொண்டால், அவர் வெறுமனே கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் மட்டுமாகவே இருக்கவில்லை என்பதுவும், அதற்கும் மேலானவராக இருந்திருப்பதுவும், இப்போதும் இருந்து வருவதுவும், குழுத் தலைவர் கஸ்தூரிரங்கனுக்கும் அவருக்குமிடையே இருந்த உறவும், தொடர்புகளும்கூட நமக்குத் தெரிய வரும்....
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

விலகிக் கொண்டவரும், ராஜினாமா செய்தவரும்

பதினொரு பேருடன் இருந்த குழு ஒன்பது பேர் கொண்ட குழுவாக மாறியது ஏன் என்பதற்கான பதிலை, 2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ஜவடேகருக்கு குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திற்கு அடுத்ததாக வெளியிடப்பட்டிருக்கிற குழு உறுப்பினர்களின் பட்டியலில் இருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. K.J.அல்போன்ஸ் அமைச்சராகி விட்டதால் விலகி விட்டதாகவும், ராஜேந்திர பிரதாப் குப்தா ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, ஒன்பது உறுப்பினர் மட்டுமே கொண்ட குழுவாகவே அந்த குழு உறுப்பினர் பட்டியல் வரைவறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. K.J.அல்போன்ஸ் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வரைவறிக்கைக் குழு அமைக்கப்பட்ட போது, அமைச்சகம் வெளியிட்ட கடிதத்தில் உறுப்பினர் பட்டியலில்  ஸ்ரீ K.J.அல்போன்ஸ் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, அந்தக் குழு அமைக்கப்பட்ட நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக மாறியிருந்தார். 1953ஆம்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019 எப்போது சமர்ப்பிக்கப்பட்டது?

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக 1986ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம் தன்னுடைய புதிய கல்விக் கொள்கைகளை வெளியிட்டது. அந்தக் கல்விக் கொள்கைகள் பின்னர் 1992ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தால் திருத்தியமைக்கப்பட்டன. இரண்டாவது கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழிந்த நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் இந்தியாவிற்கான தேசிய கல்விக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான குழுவொன்றை மத்திய அரசின் முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் T.S.R.சுப்பிரமணியன் தலைமையில் 2015ஆம் ஆண்டு அமைத்தது. 2016ஆம் ஆண்டு மே 7 அன்று ஏறத்தாழ 90 பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை அந்தக் குழு சமர்ப்பித்தது. ஆனாலும் அந்த அறிக்கையின்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வெளியிடப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை” நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது. இந்த அறிக்கை, “சூத்திரனுக்குக் கல்வி கற்பிக்கக் கூடாது”  என்ற மனுதர்மத்தில்(அத்:2,சுலோகம்85) உள்ளபடி, மக்கள் கல்வியை அழிக்கவும், “பணம் இருந்தால் படி” என்பதாகவும் வந்திருப்பதே முதற் காரணம். குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதை மாநில உரிமையும் கடமையுமாக இருந்த கல்வித் திட்டம், இந்திரா காந்தியால் ஒத்திசைவுப்(பொது)பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதாவது கல்வியை மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து “பார்த்துக் கொள்ளும்.” இதிலும் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று ஆக்கப்பட்டது, இப்போது, முற்றிலுமாக மத்தியஅரசே எடுத்துக் கொண்டு, கல்வியில் மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறது இந்தத் திட்டம். “தேசிய” எனும் சொல்லே அதைச் சொல்லி...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் நகலே புதிய கல்விக் கொள்கை

“சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.  இவர் இஸ்ரோ அமைப்பின் தலைவராக இருந்தவர். கல்வித்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாதவர். இவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக்கொள்கை யையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகிற கல்விக் கொள்கையையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து முன்னும் பின்னுமாக வெட்டி ஒட்டி கொடுத்திருக்கிறது. அவ்வளவு எளிதல்ல... கல்வியை முற்றிலும் தனியாருக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற கார்ப்பரேட்டுகளின் விருப்பம் ஒருபுறம், குலக்கல்வி, குருகுலக் கல்வி என்ற காவிகளின் வெறி ஒருபுறம் என இந்த வரைவு அறிக்கை இருதரப்பையும் திருப்திப்படுத்த முயல்கிறது.  ராக்கெட்டை ஏவுவதைப்போல மனித மனங்களை, அவர்களது...
1 2 3 4
Page 1 of 4