Category: இன்றைய புத்தகம்

Post

என்ன படிக்கலாம்? : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்!

காலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா? நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா? – இவற்றையும் இன்னும் பல கல்வி வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்...

Post

டால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்

சுவிசேஷங்களின் சுருக்கம் நூல் குறித்து அ.மார்க்ஸ்… 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேத்தி, “என்ன தாத்தா கடைசிக் காலத்திலே பைபிள் படிக்க ஆரம்பிச்சுட்டியா?” எனக் கேலி செய்கிறாள். இது வரை நான் பைபிள் படித்து அவள் பார்த்ததில்லை. ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவனானாலும் என் தந்தை அந்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும் நம்பிக்கையுடன் வாழ்ந்த என் தாயின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதும் இல்லை....

Post

நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

வளர்ச்சி, மேம்பாடு – இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.   காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. சராசரியாக...

Post

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)

  இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், காங்கிரஸை விட்டு வெளியேறியபோது அவருடன்...

  • 1
  • 2