Book Review

நூல் அறிமுகம்: “பெண்ணின் மறுபக்கம்” – சிந்து சுந்தராஜ்

Spread the love

 

“பெண்” என்ற சொல்லின் அர்த்தை  தேடுபவர்களா நீங்கள்? அப்படியானால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

மனிதக்குலம் எப்படி தோன்றியது என்ற கேள்விகளுக்கு எல்லாம் விஞ்ஞானம் விடைத் தேடியதில் கடைசி  முற்றுப்புள்ளியாக தான் பெண் கண்டெடுக்கப்பட்டதாக சொல்படுகிறது. ஆம் அப்படி முற்றுப்புள்ளியாகி வரலாற்றை  ஆய்வுக்கு உட்படுத்தினோமானல் அதில் கிடைத்த பதில்  வரலாற்றில் பெண் என்பவளே  தெடக்கப்புள்ளியாகிறாள். அப்படியான தேடுதலைத்தான் “பெண்ணின் மறுபக்கம் ” பேசுகிறது. இப்படி  பெண் பற்றி மட்டும் தேடாமல் அவளின் அரசியல், ஆளுமை, உடல், பாலியில், போராட்டம் என  எல்லா தளங்களில் ஓரு சேர கொடுத்திருக்கிறார் டாக்டர். ஷாலினி.

புத்தகத்தை படிக்கும் போது நாம் எப்படி பட்டவர்களாக வளர்ப்பட்டுயிருக்கிறோம் என்பதை நமக்குள் பல கேள்விகள் எழுகின்றது. கேள்விக்கான பதிலாகவே எல்லா தலைப்பும் நம்மை நகர்த்துகிறது. பெண் பற்றிய கதையாக நமக்கு புகட்டப்பட்ட எல்லா கதையிலும் பெண்ணின் சித்தரிப்பு வேறு மாதிரி ஓரு பிம்பத்தை நம்மில் ஏற்படுத்தி விட்டு இருக்கிறது என்பது தெரிகிறது. பெண்-ஆண் எப்போதும் இரு வேறு துருவங்கள் என்ற  சித்திரிப்பின் முலம் ஏற்ற தாழ்வை  முன்னிறுத்தி அதில் தொடர்ந்து பயணித்த இருக்கிறோம்.

The questions that we ought to ask | Dr. Shalini N & Shyam Sundar ...

ஓரு படத்தில் ரஜினியின்  பாடலில் ” அள்ளி ராணியே  நீ எனக்கு கப்பம் கட்டு நீ , ஜன்ம ஜன்மாக நீ எனக்கு கட்டுபட்டு நீ ” என்ற வரிகள் இருக்கும். இதன் பொருள் ராணியே என்றாலும் அவள் ராஜாவிற்கு கீழ் தான் என்று சொல்வதை ஆராய்ந்தால் உண்மை புலப்படும். இயற்கை படைத்த எல்லா ஜீவராசிகளும் , உயிரினங்களும் உழைப்பை முதன்மையாக கொண்டே  முன்னேறி இருக்கிறது. ஆனால் இன்றும் ஆணுக்கு கீழ் பெண் என்று எதனால் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருந்திருக்கலாம். பல முறை வருத்தப்பட்டு இருக்கிறேன் ஆணாக பிறக்கவில்லை என்று. சில இடங்களில்  பெண்களை  வெறும் பிண்டமாக பார்க்கும் ஆண்களை பார்த்து பயந்தும் கூட இருக்கிறேன். அப்படியானவர்களுக்கிடைய சிலரை பார்த்து வியந்தும் இருக்கிறேன் பெண்களுக்காக உரிமை குரலை உயர்த்திய மார்க்ஸ்,  எங்கெல்ஸ்,சிங்கார வேலன், பெரியார், புதுமைப்பித்தன் களத்திலும் எழுத்திலும்  போராடிய போராளிகள். அவளை அவளாக பார்த்து ஆல்பா ஆண்கள் எனலாம். “ஆண்தான் உசத்தி, பெண் தான் மட்டம் ” என்றவர்களுக்கெல்லாம் இவர்களின் பேச்சு தலையில் அடித்த சம்மட்டி அடி.

அதேநேரத்தில், ” பெண்ணின் தலைமைப் பதவி ஆணிடம்  எப்படி வந்தது? மீண்டும் அந்தப் பதவியை பெண்ணுக்குத் தராமல் எதற்காக ஆண் வைத்திருக்கிறான்? பெண்ணின் அறிவை அகற்ற எத்தனை விதமான உத்திகளை ஆண் பயன்படுத்துகிறான்? என்று பல கேள்விகளுக்கு விடையை தந்து இருக்கிறார் டாக்டர். ஷாலினி.

அதைப்போன்றே இயற்கை உருவாக்கி எல்லா உயிரினங்களிலும்  ஆண் தான் தன் அழகை காட்டி பெண்களிடம் உறவு கொள்ளும் முயலும். அதற்காக தான் ஆண் மயிலுக்கு தோகை ,மானுக்கு கொம்பு, யானைக்கு தந்தம் போன்றவையெல்லாம்  படைக்கப்பட்டது. ஆனால் இதில் மனித  இனம் மட்டுமே பெண்கள் ஆண்களை கவறுவதாக சொல்லப்படுகிறது. மற்றும் எல்லா உயிர்களைப் போலவே மனித இனத்திலும் பெண் தான் பிரதானம். ஆராம்ப காலத்தில் அவள் தான் மனித கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய இருக்கிறாள். அவள் தான் கடவுள் , அவள்  தான் தலைவி, அவள் தான் அரசி!

அப்புறம் எப்படி அவள் நிலைமை மாறியது? இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவள் எப்படி இத்தனை கீழ் நிலைக்கு மாறினாள்? எல்லாம் இந்த மரபணுக்கள் நடத்தும் பாலியல் போரினால் தான்!

“பாலியல் போரா?!  என்று ஆச்சரிய தொனியில் கேட்கிறீர்கள்…. ஆம் இதுதான் பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் உலகின் மிக நீளமான போர்!….

மனிதப் பெண் மற்ற மிருகங்களை போல, வெறும் பருவ காலத்தின்போது, அனிச்சை செயலாக புணர்ச்சி கொள்ளும் ஜந்து இல்லை. அவள் அன்பும், பாசமும் , நம்பிக்கையும் உணர்ந்தால் மட்டுமே இணைய தொடங்கும் அவள் ஓரு வித்தியாசமான விளங்காயிற்றே.

பெண்ணின் மறுபக்கம் Pennin Marupakkam
மனிதப் பெண் ஆணை தேர்ந்தெடுக்கப்  மறப்பனு  தேர்வையை(Sexual Selection) கையாண்டாள். அது காலத்துக்கேற்ற வாறு  மாறிக்கொண்டே வருகிறது. அந்த  காலத்தில் வெறும் வீரம், உடல் வனப்போ,உணவு கொணரும் திறனை, ஆண் குறியின் அளவை வைத்தோ இனி எடைப் போடுவதாக இல்லை. காரணம் இவற்றை எல்லாம் விலைக் கொடுத்து வாங்க முடியும். செயற்கையாக சாதிக்க முடியும். சராசரி ஆண்களுக்கு சாத்தியப்படாத , முற்றிலுமமே இயற்கையான, கிடைக்காத அரிதான குணங்களை வைத்துத்தான் பெண் எப்போதுமே ஆண்களை தரம் பிரித்து தேர்ந்தெடுக்கிறாள்.
காலத்துக்கேற்ப தன் தேர்வு விதிகளை மாற்றி, மகசூலை அதிகரிக்க முயல்வதுதானே பெண்ணின் இயல்பு. அதனால், நவநாகரிக உலகின் தேவைகளை அனுசரித்து மணிதப் பெண் மனித ஆணிடம் மிக உயரிய குணத்தையே  விரும்பி தேர்வு செய்யலானாள். இதனை பெண்கள் அவர்களுக்கான ஆல்பா ஆண் என குறிப்பிடுகிறாள். அந்த தேர்வுக்கான தகுதிகள் ஒருவருக்கு மாறுதல் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும் ஓன்றுப்பட்ட கருத்து இல்லாவிட்டாலும் எல்லோரும் ஆண்களிடம் பிரதானமான ஒன்றை எதிர்ப்பார்க்கிறார்கள்.  அத்தகைய தகுதியாக அவள் எதிர்ப்பார்ப்தற்கான காரணங்கள் என்னென்ன?அது என்ன என்பதையும் பேசுகிறது இப்புத்தகம்.

மனிதப் பெண்ணின் இந்த மறுப்பக்கத்தை உணர்ந்தவர்கள் அதிசயித்து அவளை ஆராதிக்கிறார்கள் அல்லது அஞ்சி ஓதுங்குகிறார்கள் ;இல்லை போற்றி பாராட்டுகிறார்கள். அல்லது அடக்கி காட்ட முற்படுகிறார்கள். இப்படி அவரவர் மனநிலையைப் பொறுத்து அவரவரது  எதிர்வினைகள் மாறினாலும் பெண்ணின் இயல்பு மட்டுமே மாறுவதே  இல்லை. இயற்கையின் மற்ற சக்திகளைப் போலவே அவள் எதற்கும் பணியாமல் பயணித்துக் கொண்டே போகிறாள்.

நூல்: பெண்ணின் மறுபக்கம் 
ஆசிரியர்: டாக்டர். ஷாலினி
வெளியீடு: விகடன் 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery