வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – வரைவு அறிக்கை | ஆர்.ராமானுஜம் | தமிழில்: கமலாலயன்

வரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்கள்: (வரைவு அறிக்கையின் இந்த அம்சங்களிலுள்ள, நாம் உடன்படமுடியாத பல துணை –விரிவான அம்சங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, பரந்த பொருளில் வரவேற்கலாம்.) 1. ஆசிரியர்களுக்கான கல்வியின் மீது பிரதானமான அழுத்தம்: நாட்டிலுள்ள ஆசிரியர் களின் கல்வி இன்று இருக்கும் அவலநிலை பற்றி இந்த ஆவணம் மிகக் கடுமையான மொழியில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த வரைவுக் கொள்கை, “நாடு முழுவதிலும் இருக்கிற தரமற்ற எல்லா ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூடிவிட வேண்டும்“ என்று அறைகூவல் விடுத்துள்ளது. இவற்றுக்கு மாற்று ஏற்பாடாக, இந்த வரைவுக் கொள்கை, ஆசிரியர் பயிற்சிக் கல்வியைப் பல்கலைக் கழகத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவருவது மட்டுமன்றி, கல்வியமைப்பிலேயே ஒரு மையமான இடத்தையும் அதற்கு வழங்குகிறது. 2 . இந்த வரைவுக்கொள்கை, ஒன்று முதல் பதினேழு...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய அரசு மாநில அரசுகளின் உதவியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்டதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. அதுவும் கூட மிகவும் இரகசியமாக தேர்வு செய்தவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினர் மட்டும் கருத்து கேட்பு மையங்களுக்கு சென்று போராடி உள்ளே சென்று கருத்துத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் அறிக்கை யாரும் வெளியிடாமலே வெளிவந்தது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொன்டதாகவும் கூறவில்லை. நிராகரிக்கப்படுகிறது என்று அறிவிக்கவும் இல்லை. ஆனால்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்

உச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும். 1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது தமிழ்நாடு நாட்டிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவர்க்கும் தந்த பெருமை பெற்றது. 1964 ஆம் ஆண்டிலேயே பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாதும், அனைத்து ஆசிரியர்களும் முழுத் தகுதி பெற்றவராகவும் திகழும் நிலை அடைந்தது. இதற்குக் காரணம் கல்வித் திட்டம் வகுக்கவும் செயல்படுத்தவும் மாநிலங்களுக்கு இருந்த முழு உரிமை. 1976 ஆம் ஆண்டில் கல்வி பொதுப் பட்டியலுக்கு...
NEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா

தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில், ஆழ்ந்த கவனத்தோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உடைய இந்தியத் திருநாட்டில் கல்வியின் இன்றைய நிலை என்ன? நாம் மிகத் தீவிரமான கற்றல் சிக்கலில் சிக்கியுள்ளோம். தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் மிகப்பெரும் எண்ணிக்கையினர் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுத் திறன்களைஅடையவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடு பத்து கோடிக்கும் அதிகமான மாணவர்களைக் கற்றலில் இருந்து எழுத்தறிவின்மைக்கு இழக்க நேரிடும். உடனடியாகக் கல்வியில் மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அதிலும் 85 % மூளை வளர்ச்சி ஆறு வயதிற்குள் நடந்துவிடுவதால் இது அவசரமாகக்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

மனு தர்ம சாணக்கியனும் பன்னாட்டு நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்- ம் (Steve Jobs) புதிய உயர்கல்விக் கொள்கை பிதாமகர் | பேராசிரியர் ப.சிவகுமார்

ஆளும் வர்க்கக் கல்விக் கொள்கை எப்படி மக்களுக்கான கல்விக் கொள்கையாக இருக்க முடியும்? புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 20l9ன் உள்ளடக்கம் காவிமய மனுதர்மத்தையும், பன்னாட்டு நிறுவன தொழில் உற்பத்தி முறை மூலதனகுவிப்பு சார்பையும், தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டுத்தளங்களைத் தகர்க்கும் திட்டத்தையும் உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு தொடர்பற்ற மன்னர்களின் உல்லாச வாழ்க்கை தொடர்புடைய ஆயக்கலைகள் 64 ஐ தூக்கி பிடிக்கிறது இந்த கல்விக் கொள்கை. நாளந்தா திட்டம் (MISSION NALANDA), தக்‌ஷசீலா திட்டம் (MISSION TAKSHASHILA) என்னும் இரண்டு திட்டங்களை உயர்கல்விக்கான முன்மொழிவுகளாக வைக்கப்படுகிறது. நாளந்தா பல்கலைக்கழகம் பற்றியாவது வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹர்ஷ வர்த்தனன் யுவான் சுவாங்குக்கு எழுதிய கடிதத்தில் நாளந்தா பற்றிய குறிப்புகள் உள்ளன. பௌத்த பிக்குகளால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நாளந்தா பல்கலைக் கழகத்தில் தர்க்கம், தத்துவம்,...
ArticleNEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

இந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்

இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தில் அதனை தனது ஏதேச்சதிகார ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தங்களது வியாபார தொழிற்புரட்சி சுரண்டலுக்கு வசதியாக...
Articleவரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஒரு பொதுப் பள்ளி முறைமையை பற்றி அவர்கள் பேசவில்லை | பிரின்ஸ் கஜேந்திரபாபு | சந்திப்பு: சிந்தன்

கே: ஹிந்தியை ஒரு மொழியாக பாட மொழியாக கற்றுக் கொடுக்கிறோம் என்று மத்திய அரசு சொல்லும் பொழுது அதற்கு ஒரு...
Articleவரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி… | இரா.முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்

சத்தியமாகத்தான் சொல்கிறேன். நல்ல பல அம்சங்கள் காணப்படும் என்ற நம்பிக்கையுடன், திறந்த மனதுடன்தான் புதியக் கல்விக் கொள்கையின் முன் வரைவை...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

மொழிப்பகை மறக்க வழிகாண வேண்டாமா? | முனைவர் ம. இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர்)

உலகெங்கும் கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது. இணக்கமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க, புதிய தலைமுறை முன்வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வியலை அரசியலாக்க அனுமதிக்காத இளைஞர்கள் எழுச்சி பெறும் காலம் கனிந்துகொண்டு வருகிறது. இறந்த காலத்தில் வாழ யாரும் விரும்புவதில்லை; கட்டாயப்படுத்தினால் வளர்ச்சி முட்டும். முன்னோர் அனுபவங்களும் சிந்தனைகளும் எருவாகலாம்; பயிருக்கு உணவாகலாம்; எருவே உணவாக முடியாதே!  இந்தியாவின் மொழிக்கொள்கை, வளர்ந்துவரும் நாடுகளின் வழிகாட்டுதலோடும் கைவரப் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சாத்தியப்பாடுகளின் துணையோடும் இப்போதேனும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அவ்வப்போது இந்தி தலைகாட்டினாலும் ஆட்சிமொழிப் பிரச்சினைக்கு நேருவின் உறுதிமொழி தடுப்பணையாகி இருக்கிறது. இந்தியாவில் ஆட்சிமொழி பற்றி விவாதம் நடந்த அளவுக்குக் கல்விமொழி பற்றிய விவாதம் நடைபெறவில்லை. இந்தியா விடுதலை அடைவதற்கும் முன்பாகவே மொழிப் பிரச்சினை தொடங்கிவிட்டது. இந்தியாவின் ஆட்சிமொழி / அலுவல்மொழிபற்றிய சிக்கல் வெளிப்படும் முன்பே கல்விமொழி பற்றிய...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!

புதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச்...
1 6 7 8 9 10 23
Page 8 of 23