Author: Creator (Creator )

Post

துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு

வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட்.   கி.பி.1500ல் ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா முதலிய பகுதிகள் தொழில்நுட்ப அடிப்படையில் முன்னேறியிருந்தன. அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெக் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில்...

Post

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு

இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா? இந்தக் கேள்விகளைப் பற்றியெல்லாம் ஜாரெட் டைமண்ட் யோசித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், 15 ஆண்டுகள் தீவிரமாக ஆய்வுசெய்ததன் பலன்தான் இந்தப் புத்தகம்....

Post

இளையோருக்கு மார்க்ஸ் கதை!

புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர் ஆதி.வள்ளியப்பன் அவ்வளவு எளிமையாகத் தந்துள்ளார். இவரின் நாராய் நாராய், மனிதர்க்குத் தோழனடி, சிட்டு உள்ளிட்ட பல நூல்கள் எனது பள்ளியில் உள்ள மாணவர் நூலகத்தில் மாணவர்களால் மிகவும் விரும்பப் படும் நூல்கள்.   பலருக்கு...

Post

கல்வி : ஓர் அரசியல்

காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்? விதியா? இறைவனா? இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும் இறைக்கொள்கைகளால் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்த நூல் சமுதாயம் தேய்ந்த நிலையிலேயே இருப்பதற்கும், வறுமைக் கோட்டை தாண்டாமல் இருப்பதற்கும் , மானுடரின் கண்கள் எல்லாம் கனவின் தீவுகளாக மட்டுமே மாறுவதற்கும் கல்வி ஓர் அரசியல் ஆனதே காரணம்...

Post

நவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்!

எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் ( 2018 சுஜாதா விருது- கட்டுரை) : நூல் அறிமுகம்  தேடுதலில் மனித உயிர் தனித்துவம் மிக்கது. நம்பிக்கை சடங்கானது. சடங்கு பண்பாடானது. பண்பாடு சமயம் என்பதைக் கட்டமைக்கிறது. சமயம் பல்வேறு தத்துவங்களை உருவாக்கியது. அதிகார வர்க்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட தத்துவங்கள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் மாற்றுப் பாதையை நோக்கி நகர்கின்றன. அறிவியல் சிந்தனையோடு கூடிய காரண, காரிய எதார்த்தம் மனிதனை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. மனிதன் இடப் பெயர்வு என்பதை இயல்பாகக் கொண்டாடுபவனாக...

Post

இந்திய தத்துவ மரபில் நாத்திகம்

இந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது.. ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ மரபு நாத்திக மரபே என்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும் சிறப்பான ஆய்வுநூல் “இந்திய நாத்திகம்”.. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களால் எழுதப்பட்டது. திரு.சாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதிபுத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.. இது தேவிபிரசாத்...

Post

என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை

புத்தக தினத்தின் அடுத்த நாள் ஏப்ரல் 24 தங்கை உதயலட்சுமி எனக்கு இப்புத்தகத்தைப் பரிசாகத் தர , ஏப்ரல் 25 அன்று , பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்கையில் கையோடு இந்நூலை எடுத்துச் சென்றேன். பேருந்திலேயே வாசிக்க ஆரம்பித்து விட சரியான சூழலில் இப்புத்தகம் எனது கையில் இருந்தது. இனி எனது பார்வையில் இந்த சிவப்புப் பால் பாயிண்ட் பேனா …… பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதிய 10 கல்விக் கட்டுரைகளின் தொகுப்பே...

Post

கண்டேன் புதையலை!

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தினமணி.காம் – இல் இது தொடராக வெளிவந்தது.   “தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட சின்ன வயசுல கணக்கு வகுப்புன்னாலே கணக்கு...

Post

ஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்

இளையோருக்கு மார்க்ஸ் கதை மார்க்ஸ் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. மார்க்ஸை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்று நாளெல்லாம் மார்க்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைய உலகை பணமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் உலகை மாற்றிக்கொண்டிருக்கிற மனித உழைப்பே, உலகை ஆளும் சக்தியாக இருக்க வேண்டும் என மார்க்ஸ் முன்வைத்த நியாயத்தின் பக்கம் உலகம் திரண்டுகொண்டு இருக்கிறது. மக்கள் மீது அதிகாரம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசுகள் அனைத்துக்கும் மார்க்ஸ் என்னும் பெயர் அச்சமூட்டுவதாக இருக்கிறது....

  • 1
  • 2