Tuesday, June 2, 2020
Articleஅறிவியல்எழுத்தாளர் அறிமுகம்

விண்வெளியில் பறக்கும்போது புத்தகம் வாசிக்க முடியுமா? – விண்வெளி வீரர்-டிம் பீக்… தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

199views
Spread the love

விண்வெளி வீரரை கேளுங்கள் (Ask an ASTRONAUT) புத்தகம் 2017ல் வெளிவந்த டிம் பீக் எனும் பிரபல பிரிட்டிஷ் விண்வெளி வீரர் எழுதிய சுய அனுபவ கேள்வி பதில் நூல். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) விண்வெளிக்கு ஒரு இந்தியரை அனுப்பிடத்திட்டம் அறிவித்து இருக்கும் சூழலில் டிம்பீக்கின் பதிவுகள் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை. சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத் (ISS) த்துக்கு முதலில் அனுப்பப்பட்ட இங்கிலாந்துகாரர் டிம்பீக். 186 நாட்கள் தொடர்ந்து புவியை சுற்றி வந்து சாதனை படைத்தவர். ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்ஸியின் முதன்மை விண் வீரர்களில் ஒருவர். விண்வெளிக்கு போவது தவிர இதர காலங்களில் உலகெங்கம் குழந்தைகளை சந்தித்து அறிவியல் உரை ஆற்றுகிறார்….. மராத்தான் ஓடுகிறார்….. இதுபோல புத்தகங்கள் எழுதுகிறார். நூலில் இருந்து மிகவும் சுவாரசியமான கேள்வி பதில்களை சுருக்கமாக இங்கே தருகிறேன்.
(மொ.பெ)

Image result for ask an astronaut

1. விண்வெளி வீரர்கள் கஸாகிஸ்தானில் இருந்தே விண்ணிற்கு பறப்பது ஏன்?
பைக்கனூர் ஏவுதளம் தெற்கு கஸாகிஸ்தானில் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள உலகின் முதலும் பெரிதுமான ராக்கெட் ஏவுதளம் ஆகும்.2011ல் அமெரிக்காவின் – ஷட்டில் திட்டம் இழுத்து மூடப்பட்ட பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் நோக்கி செல்ல முடிந்த வசதிகளுடன் கூடிய விண்வெளி வீரர்களுக்கான ஏவுதளம் இதுவே. இந்த ரஷ்ய கனவுக்கூடம் 1950களில் இருந்தே வரலாற்றில் பல திருப்புமுனைகளை சாதித்து வந்துள்ளது. இது அன்று சோவியத்களால் கட்டப்பட்ட அற்புதம். வரலாற்றின் முதல் விண்வெளி பயணமான வாஸ்டாக் -1, 1961ல் அங்கிருந்துதான் ஏவப்பட்டது. முன்னதாக 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் அங்கிருந்துதான் விண்ணில் பறந்தது. இப்படி ஒரு இடத்தை உருவாக்க ஏராளமான கணக்கீடும் திட்டமிடலும் தேவை. ராக்கெட் என்பது ஒரு லாரிபோல. செயற்கைகோள் அல்லது அதற்கு உள்ளே விண்வீரர் கலன் இதெல்லாம் அதில் ஏறி சவாரி செய்யும் விஷயங்கள்.அந்த ஊர்தியை வெற்றிகரமாக புவியை சுற்றி உள்ள விண்வெளிநோக்கி செலுத்த வேண்டுமாயின் நீங்கள் புவி மேற்கிலிருந்து கிழக்காக தன்னை தானே சுற்றுவதை பயன்படுத்தவேண்டும். அதே திசையில் ராக்கெட்டை வீசினால் ஒரு அளவுக்கு உந்துதலை புவியே தருகிறது. அந்த ‘இலவச’ வேகம் ஏதோ ரொம்ப குறைவானது என்று மதிப்பிட்டுவிடாதீர்கள். இது மணிக்கு 1,670 கிமீ வேகம். ஒலியின் வேகத்தைவிட கூடுதல். நீங்கள் பூமத்தியரேகை மேல்நிற்கும்போது அந்த வேகத்தை உணர்வது இல்லை. காரணம் உங்களை சுற்றி உள்ள காற்று உட்பட யாவுமே அதே வேகத்தில் சுழல்கின்றன. ஆனால் விண்வெளிக்கு உங்களை நீங்கள் தாவிட வைக்க இந்த உந்து சக்தி அபாரமாக பலன்தரும் விஷயம். அது ஏன் பூமத்தியரேகை என்கிறீர்களா.

அதிலும் ஒரு விஷயம் உள்ளது. பூமத்திய ரேகைப் பகுதியில் புவியின் சுய சுழற்சிவேகம் 1670 கிமீ/மணி. இதுவே அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்லச் செல்ல குறைந்து வடதுவம் மற்றும் தென் துருவப் பகுதிகளில் பூஜ்யத்தை அடைகிறது. எனவே பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து ராக்கெட்டை கிளப்பினால் குறைந்த அளவு எரிபொருள் செலவாகும். அதிக எடை கொண்ட ஒன்றை நாம் விண்ணிற்கு செலுத்தலாம். உலக வரைபடத்தை எடுத்து பார்த்தால் தெரியும் ரஷ்யாவின் பைக்கானூர் போல வாகான பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்த இடங்கள் குறைவு தவிர அதன் கடுங்குளிர் – மிகு வெப்ப தட்பவெப்பம் ரஷ்யாவை பலவிதமான சீதோஷண நிலை ஒரே சமயத்தில் அதை அனுபவித்திருக்கிறேன். – அருகருகே இருக்குமாறு இயற்கையிலேயே உருவாகிவிட்டது. பூமத்தியரேகை பகுதியில் இருந்து விண்ணை நோக்கி நாம் செல்லும்போது புவி சுழற்சி மூலம் நமக்கு பின்னாலிருந்து ஒருவகை ‘இயற்கையான’ உந்துதல் கிடைக்கிறது. அத்தோடு புவியின் சுற்றுப்பாதையில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.இதை நாம் பூமத்திய ரேகைக்கும் சுற்றுப்பாதை சுழற்சிக்கும் இடையிலான கோணமாக அளக்கிறோம். இதை வைத்து விண் ஊர்திகளின் திசையை தீர்மானிக்கிறோம். உண்மையில் வடதுருவ / தென்துருவப் பகுதிகளில் இதைச் சமன் செய்வது மிகக் கடினம் செயற்கைக்கோள்களை விட பல ஆயிரம் மடங்கு நீங்கள் எரிபொருளுக்கு செலவழிக்கப் போகிறீர்கள். ஆனால் பூமத்திய ரேகை பகுதியில் எந்த திசை நோக்கி செலுத்தினாலும் மிககுறைந்த எரிபொருளோடு ஏதாவது ஒரு சுற்றுப்பாதையில் நீங்கள் அதிக பிரயத்தனமின்றி சென்று செட்டில் ஆகலாம். அதனால் பைக்கானூர் ஏவுதளம் தான் முதல் சாய்ஸ்.

Image result for ask an astronaut

2. 300 டன் ராக்கெட்டின் மேல்தளத்தில் உட்காரும்போது எப்படி இருந்தது 2015 டிசம்பர் 15, கஸாகிஸ்தான், உள்ளூர் நேரம் 14.33 ஏவுதல் காலம் (Launch time) மைனஸ் 2 மணி முப்பது நிமிடம். ஏவுதள- மேடையின் 50 மீட்டர்கள் உயரத்தில் பளபளக்கும் சோயுஸ் ராக்கெட்டின் மேல்பகுதியில் நான் நின்றிருந்தேன். நம் புவியை மீண்டும் காண எனக்கு ஆறுமாதங்கள் ஆகும். நாங்கள் மூன்று விண்வெளி வீரர்கள் அப்படித் தயாராக இருந்தோம். நான் டிம்பீக்(இங்கிலாந்து) டிமோத்தி ( டிம்) கோப்ரா (அமெரிக்க நாட்டவர்) மற்றும் யுரி இவானோவிச் மாலன் சென்கோ( ரஷ்ய நாட்டவர்) காலன் சென்கோரதான் சோயுஸ் கமாண்டர். முதலில் நாங்கள் ராக்கெட்டின் மூக்குப் பகுதியின் அசையக்கூட இடம் இல்லாது நெருக்கி அடித்தபடி இருக்கவேண்டிய இடத்தை நோக்கி ஏறவேண்டும். அந்த இடத்தை காப்ஸ்யூல் என்று அழைக்கிறார்கள். இந்த மேல்தளத்திற்கு திறந்த லிஃப்டில் அழைத்து வருவார்கள். கீழே சோயஸ் ராக்கெட்டின் கிரையோஜெனிக் எரிபொருள் அடைத்த – எரிந்து கொதிக்கும் வெப்பத்தை நாம் அங்கிருந்து உணரமுடியும். அது என்ன கிரையோஜெனிக் என்றால் அதீத குளிர்-வெப்பமல்ல. இது ஒரு விசேட இயந்திரம். கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்று இதை சொல்கிறோம்.

நாங்கள் மூவரும் இவை யாவற்றையும் மிக அருகில் கண்ணுற்றபடி மேல்நோக்கி கண்ணாடி குடுவைபோலிருந்த லிஃப்டில் சென்றோம். 300 டன் எடைகொண்ட கொதி-கலனை கடக்கும்போது அந்த வெப்பத்தை உணரமுடிந்தது. ஒரு உலோக மேடையில் அந்த ராக்கெட் பிரமாண்டமாக நின்றது. ஒரு அளவு வரை மேலேறிய பிறகு ஒருவர்பின் ஒருவராக மூக்குப் பகுதியில் அமைந்த காப்ஸ்யூல் முக வரைக்குள் நுழையவேண்டும். ஏணிகள் பயன்படுத்தப்படுவது கிடையாது. இப்படி மேலே ஏறிட அதன் ஆண்டனாக்களின் மடிப்புகளையும் பொந்துகளையும் பயன்படுத்தினோம். இவை யாவும் மிகமிக மெதுவாக அதீத ஜாக்கிரதை உணர்வோடு செய்யப்படவேண்டும். உட்காரும் வேலைமுடிவதற்கு ஒவ்வொருத்தருக்கும் 15 நிமிடம் ஆகும். பிறகு எங்கள் விண்வெளி உடையில் செறுகிட இரண்டு வோஸ் குழாய் அமைப்பும் ஒரு மின் இணைப்பும் இருக்கும். கூடவே எங்களது உடல் அளவை கருவிகளைக் கொண்ட மருத்துவ செட்டையும் தனித்தனியே சரியாக பொருத்தவேண்டும். இந்த மாதிரி நேரத்தில் உங்கள் விண் – ஆடையில் லேசாக பழுது ஏற்பட்டாலும் கிழிந்தாலும்… அவ்வளவுதான் உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். இதைத்தவிர ஹெட்செட்(தகவல்தொடர்பு) பொருத்துவது மேலும் 20 நிமிடம் பிடிக்கும். வோஸ்குழாய்கள் வழியே ஒரு வகை குளிர்விப்பு – உங்கள் விண் – ஆடைகளில் பரவும்.

ஒரு கால்பந்து கோல்கீப்பர் போல கால்முட்டிகளில் அடுத்து நீங்கள் கவசங்களை சரியாக பொருத்தவேண்டும். உயர்ந்தபட்ச ஈர்ப்பு எதிர்விசை பயணத்தில் ஏற்படும் எலும்பு முறிவு உட்பட பலவகை காயங்களில் இருந்து தப்பிக்க இதெல்லாம் அவசியம். பிறகு அந்த தலைகவசம் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குள் ஒருவகை இயல்பு நிலை திரும்பி படபடப்பு மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட… ஒவ்வொரு விண்வெளி வீரரும் தனித்தனியே – இயர்ஃபோன் மூலம் – மூன்று பாடல்வரை இசை கேட்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனக்கு அப்போது நடுக்கம் எல்லாம் இல்லை. இந்த தருணத்திற்காக நான் நீண்டகாலம் காத்திருந்து விட்டேன். எனவே எனக்கு பதட்டம் படபடப்பு எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சாகசத்தை எதிர்கொண்டு காத்திருக்கும் சின்னஞ்சிறுவனைப் போல நமட்டு சிரிப்பும் ஆச்சரிய எதிர்பார்ப்புமாக உட்கார்ந்திருந்தேன்.

Image result for ask an astronaut

3. வானம் அதாவது புவி என்பது எங்கே முடிவடைகிறது. எங்கிருந்து விண்வெளி தொடங்குகிறது? அதை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?
கணக்கீட்டு வசதிகளுக்காக புவியின் வான எல்லைக்கோடு முடிந்து விண்வெளி துவங்கும் இடம் ஒரு கற்பனை கோடாக 100 கிமீ தொலைவில் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த கோட்டுக்கு கார்மன் கோடு என்று பெயர். ஹங்கேரி நாட்டு கணிதமேதை, வானூர்தியியல் அறிஞர் தியோடர் வான் கார்மன் வழங்கிய கணக்கீட்டு முறைப்படி அது அமைந்துள்ளதால் அது கார்மன் எல்லைக்கோடு. ஆனால் ஊர்விட்டு ஊர் துவங்கும்போது பெயர்பலகை வைப்பது போல அவ்வளவு எளிமையானது அல்ல இது. நமது காற்று மண்டலம் அளவிட மிகக்கடினமாக அமைந்துள்ளது. ஏனெனில் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அது மெலிகிறது. நம் கடல் மட்டத்திலிருந்து நூறு கிமீ உயரத்தில் எனும் காற்று மண்டல தூர அளவைப் புரிந்துகொள்வது எப்படி? நான் சென்று அடையவேண்டிய சர்வதேச விண்வெளி நிலையம்(ISS) 400 கிமீ உயரத்தில் புவியைச் சுற்றுகிறது. நம் காற்று மண்டலம் 80கிமீ முதல் 500 -1000 கிமீ வரைகூட சிறுசிறு துகள் கூட்டமாய் வியாபித்து இருக்கிறது என்றால் நம்புவது கஷ்டம். சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில்தான் புவியின் சுற்றுப்பாதையில் நம் புவியை சுற்றுகிறது. என்றாலும் அந்த 400 கிமீ உயரத்திலும் நம் காற்று மண்டலத்தின் வாயு மூலக்கூறு ஒன்றிரண்டு அங்கும் இங்கும் திரிவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். இது விண்வெளி பயண அர்த்தத்தில் ஒரு ஈர்ப்பு விளைவு கொண்டது. எந்த உயரத்தில் என்றாலும் புவி உங்களை ஈர்த்து இழுப்பதை நிறுத்தாது. மிகச்சிறிய அளவே இருந்தாலும் இத்தகைய மூலக்கூறுகள் சர்வதேச நிலையத்தை இழுவைக்கு உட்படுத்துகின்றன. ஒரு மாதத்திற்கு இரண்டு கிமீ எனும் வேகத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் புவிநோக்கி இழுவை விசைக்கு உட்படுகிறது. அவ்வப்போது அதை பழைய இடத்திற்குத் தள்ளுகிறார்கள். இது மட்டுமல்ல ஹபுல் தொலைநோக்கி (560 கிமீ உயரத்தில் சுற்றும் செயற்கை கோள்தான் அது) போன்றைவையும் கூட மெதுவாக புவியை நோக்கி இழுக்கப்படுகிறது என்பதே உண்மை.

அயனோஸ்பியர் எனும் மேலடுக்கு எங்கே முடிகிறது. என்பதற்கு சரியான கணக்கீடு கிடையாது. இது காற்று மண்டலத்தில் சூரிய கதிர்வீச்சை அயனிகளாக்கி வைத்திருக்கும் அடுக்காகும். அயனியாக்கம் என்பது ஒரு அணு தன் எலெக்ட்ரானை கைவிடுவதைக் குறிக்கிறது.இந்த அடுக்கு தகவல் தொடர்பை சாத்தியமாக்குகிறது. எக்ஸோஸ்பியர் 10000கிமீ வரை கூட வியாபித்து சூரிய கதிர்வீச்சு காற்றனலோடு கலக்கும். நமக்கு மிக துல்லியமாகவிண்வெளி 50கிமீ தூரத்திலேயே உணரக் கிடைக்கும். என்னால் அப்படி உணரமுடிந்தது. நீங்கள் இப்படி எதையும் நினைத்து அசைபோடுவதற்கு முன்பே விண்வெளியை அடைந்துவிடுவீர்கள்.
சோயுஸ் விண் கலம் ‘விண்வெளி’ எனும் 100 கிமீயை அடைய மூன்று நிமிடமே ஆனது. ஆனால் ஊர்தியை பொறுத்து இது வேறுபடும். ராக்கெட் உந்து வேகத்திற்கும் எடைக்கும் உண்டான விகிதம் பயணவேகத்தை தீர்மானிக்கிறது.

Image result for ask an astronaut

4. விண்வெளி கலனில் எடையற்ற உணர்வுநிலையும் மிதக்கும் யதார்த்தமும் பழக எவ்வளவு நேரம் ஆகிறது. உடலில் அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
வெட்டவெளியில் மிதப்பதற்கு நீச்சல் கால்பந்து மற்றும் இன்ன பிற விளையாட்டுகள் போல தனி பயிற்சி தேவை. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பயிற்சி இல்லாமலும் சமாளிக்கமுடியும். ஓரளவு உடல் கட்டுப்பாடு உங்களுக்கு இருந்தால். விண்வெளி மிதத்தல் தன்மைக்கு மைக்ரோ கிராவிட்டி அதாவது நுண் ஈர்ப்பு நிலை என்று பெயர்.
அதைப் பழகிக்கொள்ள ஆளைப்பொருத்து முன்பின் ஆகலாம். முதலில் மந்தமான உப்பிய உணர்வும் விகாரமான கோணங்களில் உடம்பு இங்கும் அங்கும் போகும் அத்தருணமே மிகுந்த படபடப்பை தருகிறது. உடலை விழாமல் நிமிர்ந்து நிற்க வைப்பது எது என நான் ஆராய்ந்து இருக்கிறேன். தண்ணீரில் மிதப்பதற்கும் இதற்கும் மிக அதிக வேறுபாடுகள்.உண்டு கால்களால் உந்துதல் என்பது தண்ணீரில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் உங்கள் உடல் நுண்ஈர்ப்பில் ஏறக்குறைய வெற்றிடத்தில் எடையே இல்லா மிதத்தலிலும் அனிச்சையாக அதையே முயற்சி செய்யும். தண்ணீர் உங்களை கீழ்நோக்கி இழுத்தபடியே இருக்கும். விண்-நுண் ஈர்ப்பு உங்களை மேல் நோக்கி தள்ளும். ஒரு ஹைட்ரஜன் பலூன் போலதான் உங்கள் உடல். பொதுவாக நம்முடைய காதுக்குள் வெஸ்டிப்யூல் எனும் இடத்திற்குள் எண்டோ லிம்ப் எனப்படும் ஒரு திரவம்உள்ளது. உடலசைவு சமநிலைக்கு இதுதான் பொறுப்பு. புவியின் ஈர்ப்புவிசையே இல்லாத சூழலில் இந்த திரவம். மேலெழும்பி பொங்கும் தன்மையை அடையும். ஏற்கனவே பலூன் போல நாம் நம்மை உணர்கிறோம். தலைகீழாகவோ படுக்கை நிலையிலோ மிதக்கும்படியும் நேரலாம். கிட்டத்தில் அல்லது மேல்கூரையில் உள்ள மின் பித்தான்கள் , கருவிகள் எதையாவது பாதித்துவிடக்கூடாது என்பதே பிரச்சினை. எனக்கு இந்த சூழல் பழகுவதற்கு ஒருவாரம் ஆனது.
விண்வெளியில் இந்த மிதத்தல் அனுபவத்தால் பல நன்மைகளும் உண்டு. நுண் – ஈர்ப்பு விஷயத்தில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை எனில் உங்கள் உடல் கூன் விழுந்த – உட்காருவதற்கும் நிற்பதற்கும் இடைப்பட்ட ஒரு வளைவு நிலையை எடுக்கும். இது அனிச்சை நிகழ்வு கைகள் தானாகவே – பறவை இறக்கை நிலையும் அடையும். விண்வெளியில் மேல்-கீழ் கிடையாது எல்லாபக்கமும் ஒன்றுதான் என்பதை உணர்வது கடினம். எடையற்ற நிலையில் – உடலில் கனமான எதையும் சுமக்கலாம். அறையே அதிக இடம் கொண்டிருப்பது போல தெரியும்.Image result for ask an astronaut

5. விண்வெளி அறிவியல் ஆய்வுகளால் நமக்கு என்ன பயன்?
1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் மண்ணிலிருந்து யூரிகேகெரின் விண்ணிற்கு முதலில் பறந்தபோது மனித உடல் விண்வெளியின் மிதக்கும் தன்மையை தாங்குமா என்பதில் பல சந்தேகங்களும் அச்சங்களும் இருந்தன. மூளை நுரையீரல் இதயம் போன்றவை செயலிழந்து விடும் பேரபாயம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால் மனித உடல் ஒரு பேரதிசயம். விண்வெளியிலும் புவியிலும் அந்ததந்த சூழலுக்கு ஏற்றாற்போல தன்னை தகவமைக்கும் தன்மைகொண்டது. ஆனால் அந்த விஷயம் உணரப்பட்டதில் இருந்து விண்வெளி நமக்கான திறந்த ஆய்வுக்கூடமாக பயன்படுகிறது என்றால் நம்பமாட்டீர்கள். ஏறத்தாழ ஒவ்வொரு விண்வெளிப்பயணமும் ஒவ்வொரு ஆய்வு நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இது அரசு பணத்தில் மட்டுமே நடப்பது இல்லை ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் இடம்பெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையம் தொழில் துறை மற்றும் தனியார் ஆய்வுகளுக்காகத் தனிப் பிரிவே வைத்துக்கொண்டு செயல்படுகிறது. நமது அன்றாட வாழ்வை மேம்பட்டதாக ஆக்கிட விண்வெளி ஆய்வுகள் பலவிதமாக பயன்பட்டுள்ளன.

மனித புரதங்கள் குறித்த ஆய்வுகளை முதலில் குறிப்பிடவேண்டும் உங்கள் உடல் லட்சக்கணக்கானவகை புரதங்களால் ஆனது. உடலின் 17 சதவிகிதம் புரதம்தான். நம்மை உயிரோடு வைத்திருக்க புரதங்கள் ஓய்வின்றி வேலைசெய்கின்றன. ஆனால் இப்புரதங்களின் கூட்டு செல்களில் ஏற்படும் பிறழ்வு காரணமாக மனிதனுக்கு மிக ஆபத்தான பின் விளைவுகளும் ஏற்பட்டுவிடுகின்றது. உதாரணம் அல்ஸ்மீர் எனப்படும் மிக ஆபத்தான நினைவு பிறழ்வு நோய், பார்கின்ஸன் எனப்படும் கொடிய நரம்பியல் நோய் ஹன்டில்டன், என்ஸடாலோ பத்தி எனப்படும். ‘ மாட்டு – மன ப்பிறள்வு’ எனும் கொடிய நிலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அப்புறம் இன்று உலகை ஆட்டிப்படைக்கும் விதவிதமான புற்றுநோய்கள் இந்த நோய்களை குணப்படுத்த – தடுத்திட சிகிச்சை தரும் மருந்துகளில் பெரும்பாலானவை நோய்களை ஏற்படுத்தும் புரதமூலக்கூறுகளுக்குகிடையே நுழைந்து வேலைசெய்யும் மிகச்சிறிய மூலக்கூறுகளால் ஆனவை. புரத மூலக்கூறுகளுக்கு இவையே நுழைந்த அவற்றை செயலிழக்க வைக்கும் தந்திரமான மருந்துகள் அவை. அந்த மூலக்கூறுகளை உருவாக்குகிறது. அவ்வளவு எளிதல்ல ஒரு ஜிக்சா புதிரின் ஒரு பகுதிபோல செதுக்கிறார்கள். புரதமூலக்கூறு ஒரு படிகமாக உருவாக்கப்பட்டு அதற்கான மருந்து மூலக்கூறை பொருத்தமான படிகமாக்க புவியில் தோல்விகண்டார்கள். ஆனால் விண்வெளியில் நுண் அந்த படிக மூலக்கூறு மருந்தை உருவாக்குவது. மிக எளிதாக உள்ளது புவி ஈர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தின் தன்மை உதவுகிறது. இப்படி நூற்றுக்கணக்கான நோய்த்தடுப்பு மருந்துகள் இன்று விண்வெளியில் உருவாக்கப்படுகின்றன.

Image result for ask an astronaut

விண்வெளியின் சுற்று சூழல், நுண்ணுயிரி -செல்களில் பலவகை மாற்றங்களை கொண்டுவருகின்றன. ஆன்டிபயாடிக் – அதாவது நுண் உயிர்க்கொல்லி மருந்து பலவகையாக கையாளப்பட்டு புவியியல் நுண் உயிரிகள் அதை தாங்கும் சக்திபெற்ற இன்று பல மருந்துகள் எந்த வீரியத்தில் செலுத்தினாலும் வேலை செய்வது கிடையாது. நுண் ஈர்ப்பில் இன்று நடைபெறும் முக்கிய ஆய்வுகளில் ஒன்றுக்கு வீரிய சோதனை என்றுபெயர். அதாவது நுண் உயிர்க்கொல்லி தீவிரத்தோடு செயலாற்றி வைக்கும் முறைகள் வெற்றி கண்டு வருகின்றன. அதன் உச்சமாக இன்று நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ரத்த எதிர் நுண்உயிரி குறைபாடு இவற்றால் மரணங்கள் தடுக்கப்படுகிறது என்றால் MRSA எனும் வகை மருந்தூசிகளால்தான். இவை அனைத்தும். விண்வெளி ஆய்விலிருந்து வந்தவைதான். -இந்த MRSA வகை மருந்துகள் அதீத வேகத்தை உடல்முழுதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி உடனடி நிவாரணம் தருவதற்கான காரணத்தை உணர்ந்தால் விண்வெளி ஆய்வுகளின் முக்கியத்துவம் புரியும் இந்தவகை மருந்துகள் பிளாஸ்மா எனப்படும் அயனிமம் எனும் வகை நிலைசார்ந்தவை.

நமக்குத் தெரிந்து ஒரு வேதிப்பொருளின் மூன்று நிலை வாயு, திரவம், திடநிலை. ஆனால் அதற்கு அப்பாற்பட்ட நான்காவது நிலை அயனிமநிலை மின்னல். ஒரு அயனிம நிலை என்பது மின்மயமாக்கப்பட்ட வாயுநிலை, இவற்றில் எதிர்மின் நேர்மின் சமநிலை பேணப்படும். ஒட்டுமொத்த மின்னூட்ட அளவு பூஜ்யம். நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கண்ணிற்கு புலப்படும் அண்டப்பகுதி பொருட்கள் முழுதும் அயனிம நிலையில் மட்டுமே உள்ளன. நாம் செயற்கை அயனிம நிலையில் விண்வெளியில் உருவாக்கும் மருந்துவகைகள் நம் உடலில் ஒளியின் வேகத்தில் பரவும் தன்மை கொண்டவை. இதைத்தவிர விண்வெளி ஆய்வுகள் மூலம் பல உலோக கலவைகளை நாம் உருவாக்கி வருகிறோம். விண்வெளி ஆய்வுகள் விரைவில் நமது பிளாஸ்டிக்கிற்கு மாற்றை கண்டடையவும் வாய்ப்பு உள்ளது

Image result for ask an astronaut


6. எந்த மாதிரி உணவை விண்வெளியில் சாப்பிட தருகிறார்கள்… பூமியில் சாப்பிடுவதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?
ஒரு விஷயத்தை நீங்கள் நினைவு வைத்திருக்கவேண்டும். விண்வெளி ஆய்வகத்தில் உணவு மணக்காது. நீங்கள் எதையுமே முகர்ந்து மூச்சிழுத்து வாசனை அறியமுடியாது. அங்கே காற்று இல்லாமல் இல்லை. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பிராணவாயு கிடைக்காமல் இல்லை. புவிபோல சுவைக்க முடிந்த ’நல்ல சாப்பாடு’ என்பது சாத்தியமில்லை. முட்டை, பருப்பு சூப், ஆட்டுக்கறி பர்கர், சிக்கன் சாலட் என இருந்தாலும் உங்களது நாக்கின் சுவை உங்களது நுகர்தலையும் நம்பி இருக்கிறது. என்பதால் அவை லேசாக மாறுபடவே செய்யும். சாக்லெட் கசப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.விண்வெளியில் உணவு அருந்திட நீங்கள் உணவை புவியில் இருந்தே எடுத்துச்செல்ல வேண்டும். அங்கே தீமூட்டி சமைப்பது சாத்தியமில்லை எதை உண்டாலும் அதன் சிறு துகள்கள் அறை எங்கும் சுற்றித்திரிந்து பல நாட்கள் பாதிக்கும் விண் ஆய்வு மையத்தில் வெப்பசலனம் கிடையாது. சூடான காற்று மேல்நோக்கி செல்லாது. செயற்கை சூழலில் உங்களது உடலில் உள்ள திரவங்கள் அனைத்துமே உங்கள் மார்பு வரை உயர்ந்து உங்களுக்கு உப்பிய முகத்தன்மையை தருகிறது. எனவே புவி மாதிரி மூக்கு, நாக்கு வேலை செய்வது இல்லை. நாங்கள் வயிறு நிறைய சாப்பிட நுண் ஈர்ப்பில் தலைகீழ் நிலைக்கு சென்று உணவு எடுத்துக்கொள்வதும் உண்டு.

சிலசமயம் உணவு 18 முதல் 24 மாத பழைய விஷயமாக கூட இருக்கும். பெரும்பாலும் புரதச்சத்து. ஏனைய சத்துக்களை தரும் சரிவிகித உணவு டின்களில் கூழ்ம நிலையில் அப்படியே முழுங்கிட தருவார்கள். சிலவகை உணவுகள் அந்த நுண் ஈர்ப்பைக் கெடுத்து அங்கே எந்த பயனும் இன்றி ஆபத்தானவையாகவும் மாறி வருகிறது. உதாரணமாக சிப்ஸ் பொட்டலம் அங்கே செரிமான பிரச்சினை தருவதோடு அதன் துகள்கள் எங்கும் சுற்றித்திரிந்து சுவாசக் கேட்டை தந்துவிடுகின்றன. முற்றிலும் காய்ந்த நிலை உணவு பொருட்களை சுடுநிலை நீரேற்றி (அதற்கு மின் வெப்பமேற்றிகள் உண்டு) நாங்கள் உண்பதும் உண்டு. ஒவ்வொரு விண்வெளி வீரரும் பொது உணவைத்தவிர தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு வகையை டிக் செய்து அதை உலர்ந்த நிலையில் பெறவும் வசதி உள்ளது. நான் கேட்டது யார்க் ஷைர் தேனீர்

Image result for ask an astronaut

9. புவியிலிருந்து விண்வெளிக்கு பறக்கும்போது வெப்ப பாதுகாப்பு கவசம் தேவைப்படவில்லை அதே திரும்ப வரும்போது முழு ராக்கெட்டும் வெப்ப தடுப்பு கவச அரண் ஒன்றை பயன்படுத்துகிறதே இது ஏன்?
விண்ணிற்கு பறப்பதை விட பலமடங்கு அதிக வேகத்தில் திரும்ப வருகிறோம். புவிக்கு திரும்பிட தனிப்பயிற்சி தேவை. ஒலியின் வேகத்தைவிட 25 மடங்கு அதிக அதீத வேகத்தில் புவியின் காற்றழுத்தத்தை கிழித்தபடி உள் நுழைகையில் உராய்வு பலமடங்கு அதிகரிக்கிறது. இயக்கநிலை அழுத்தம் காற்றின் துகள்களால் பெரும் வெப்ப பிழம்பாய் மாறவும் வாய்ப்பு உண்டு. சோயுஸ் ராக்கெட் புவியிலிருந்து கிளம்பும்போது மாக் – கியூ எனப்படும் இயக்கநிலை அழுத்தம் உச்சத்திலிருந்து குறைந்துகொண்டே செல்லும்… காரணம் மேலே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே செல்கிறது. துகள் ஏற்படுத்தும் உராய்தலும் குறைந்துகொண்டே போகும். ஆனால் திரும்பி வரும்போது அதற்கு நேர் எதிராக மாக்-கியூ அதிவேகமாக அதிகரித்து பெரிய ஆபத்தாக வடிவெடுக்கும்இந்த வெப்பத்தை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு திரைக்கவசம் தேவையாக உள்ளது. சூப்பர்சானிக் எனப்படும் ஒலியை விட கூடுதல் வேகம் என்பது மாக் கியூ 2.2 வரை வெப்ப ஆற்றல் தாங்க முடியும் இதைவிட கூடுதல் வேகத்திற்கு போனால் ஒரு குஷன் போல அந்த வெப்பக் கவசம் செயல்படுகிறது.

திரும்பி வரும்போது விண்வெளி வீரருக்கு பலவகை உடல் உபாதைகளும் ஏற்படுவதுண்டு. மெக்லிஸின் எனும் ஒரு மாத்திரை தருகிறார்கள். இதை பயிற்சியின்போதே உங்களுக்கு வழங்கி டெஸ்ட் செய்து விடுவார்கள். உங்களுக்கு எவ்வளவு டோஸ் தேவையோ தருகிறார்கள். மிதக்கவைக்கும் நுண் ஈர்ப்பிலிருந்து சட்டென புவி ஈர்ப்பிற்கு திரும்பும்போது உடல் திரவங்கள் வற்றிவிட வாய்ப்புஉள்ளது. என்பதாலும் மயக்க நிலை மற்றும் ஒருவகை குமட்டல் இவற்றை உணர்ந்திடவும் வாய்ப்புள்ளது.

மெக்லிஸின் மருந்தில் போனமைன், டிராமாமைன் புரோமெதாசைன் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதால் உங்களை அந்த மருந்து அற்புதமாக பாதுகாக்கிறது. ஆனால் இதெல்லாம் ஏதுமின்றி ஒரு யுரிகேகரின் எப்படி பத்திரமாக திரும்பினார். அவரது ஆளுமை, சுயக்கட்டுப்பாடு இவற்றை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியாது சல்யூட் யூரிகேகெரின் … காம்ரெட்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery