Day: May 4, 2018

Post

ஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்

இளையோருக்கு மார்க்ஸ் கதை மார்க்ஸ் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. மார்க்ஸை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்று நாளெல்லாம் மார்க்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைய உலகை பணமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் உலகை மாற்றிக்கொண்டிருக்கிற மனித உழைப்பே, உலகை ஆளும் சக்தியாக இருக்க வேண்டும் என மார்க்ஸ் முன்வைத்த நியாயத்தின் பக்கம் உலகம் திரண்டுகொண்டு இருக்கிறது. மக்கள் மீது அதிகாரம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசுகள் அனைத்துக்கும் மார்க்ஸ் என்னும் பெயர் அச்சமூட்டுவதாக இருக்கிறது....