Month: April 2018

Post
“பெண் ஏன் அடிமையானாள்?” – குப்பு. வீரமணி

“பெண் ஏன் அடிமையானாள்?” – குப்பு. வீரமணி

1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்?” நூல், தற்போது மார்ச் 2018) தோழர் பசு கவுதமனின் விரிவுப்படுத்தப்பட்ட’ என்ற குறிப்புடன், பாரதி புத்தகாலய வெளியீடாக (12வது அச்சு வெளிவந்துள்ளது. 11-வது அச்சு இயல்பான பழைய நூலின் தொடர் பதிப்பாகவே பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருந்தனர். பிரசுரிப்போரின் முன்னுரையில், ‘இந்நூல் சுயமரியாதை இயக்க ஸ்தாபகர் பெரியார் ஈ. வே. ராமசாமி அவர்களால் பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவைகளை திரட்டி...

Post

இயற்பியலின் கதை!

அனைவருக்குமான அறிவியல் நூல் வரிசை- புத்தக அறிமுகம் புத்தகம்:இயற்பியலின் கதை ஆசிரியர்:T.பத்மநாபன் தமிழில்: ஆசிரியை.மோ.மோகனப்பிரியா கதை எல்லோருக்கும் பிடிக்கும் தானே! அதுவும் படக்கதை பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா? இப்புத்தகம் அறிவியல் படக்கதைப் புத்தகம். இயற்பியல் தோன்றிய கி.மு விலிருந்து சமீப காலம் வரையிலான இயற்பியலின் வளர்ச்சியினை, இயற்பியலின் பிரிவுகளை, இயற்பியலின் முக்கியமான கருத்துக்களை, அக்கருத்துக்களை உருவாக்கியவர்கள் என ஒரு முழுமையான புத்தகமாக இந்த “இயற்பியலின் கதை” படக்கதைப் புத்தகம் வெளிவந்துள்ளது. இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளவர் T.பத்மநாபன் என்பவர்....

Post

மார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்

  “உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” – லெனின் (மார்ச் 1913) என்ன ஒரு நம்பிக்கையான வரிகள். இது ஏதோ வெற்று முழக்கமல்ல என்பதை லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி அடுத்த ஐந்தாண்டில் நிரூபித்து காட்டியது. “வாய்ச்சவடால் அடித்து அவற்றை (நெருக்கடியை) அகற்றிவிட நடக்கிறமுயற்சிகள் போல் தீங்கிழைக்கும் கோட்பாடற்ற செய்கை வேறெதுவுமில்லை” என்கிறார் லெனின். ஆகவே தான் லெனினின் வார்த்தைகள் வாய்ச்சவடாலாக இல்லாமல் மார்க்சியத்தை...

Post

கோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்

குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும் நூலில் எழுதியிருக்கிறார். மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரமும் காவல் துறையும் சுயலாபத்துக்காக ஆட்சியாளர்களின் மதச்சார்பு நோக்கங்களுக்கு இரையானதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டதையும் அப்பாவிகள் அரசிடம் உதவி கேட்டுக் கதறியும் ஆட்சியாளர்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். மதக் கலவரங்கள்...

Post

என்ன படிக்கலாம்? : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்!

காலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா? நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா? – இவற்றையும் இன்னும் பல கல்வி வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்...