Month: February 2018

Post

நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

வளர்ச்சி, மேம்பாடு – இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.   காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. சராசரியாக...

Post

வளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்

வளர்ச்சி என்பது என்ன ? வன்முறை என்பது என்ன ? இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர் யாருக்கானவர் என்பது .பாக்கியம் மிகத் தெளிவாக அனைவருக்குமான வளர்ச்சியின் பக்கம் நின்று ; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசே திட்டமிட்டு ஏவும் வன்முறையை இந்நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் . வன்முறை என்பது கொலையும் சித்திரவதையும் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுரிமையைப் பறிப்பதும் மறுப்பதும் வன்முறையே என முதல் அத்தியாயத்தில் நிறுவுகிறார் .. இந்த ,...