Year: 2017

Post

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)

  இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், காங்கிரஸை விட்டு வெளியேறியபோது அவருடன்...

Post

விவாதிக்க வேண்டிய கடித நூல்- மயிலை பாலு

வன்முறைக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டியது அன்பு ஒன்றுதான் என்பதை வலியுறுத்தும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.ரஷ்யாவின் எழுத்தாளுமை லியோ டால்ஸ்டாய் கடிதவடிவில் எழுதியது இந்நூல். “இந்து விற்கு ஒரு கடிதம்” என அது வெளியிடப்பட்டுள்ளது. 1908 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியிட்டு டால்ஸ்டாய் அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ள கடிதம் 7 சிறு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஒவ்வொரு பகுதி தொடங்கும்போதும் அன்பு என்பதன் ஆற்றல் குறித்தும் அது எவ்வாறு மறைக்கப்பட்டு அரசு, போர்ப்படை, போர், ராணுவம் என்ற வடிவங்களில்...

Post

துன்மார்க்கர்களின் வழி அழியும், நீதிமான்களின் வழி நிலை நிற்கும்! – ச.லெனின்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்கிற சிறுகதை தொகுப்பு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடு மிகஅருமையாக எல்லா கதைகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்குள் உள்ள சாதிய உள்முரண்பாடுகளை கச்சிதமாக பல கதைகளில் விளக்குகிறார் ஜெயச்சந்திரன்.நபர் 1 : “ரதியுத்திரமாக கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் அனைவரும் பரிசுத்த ஜாதியாய் இருக்கிறபடியால் இகத்திற்கான ஜாதியை பற்றி, ரட்சிக்கப்படாதவர்களை போல் பேசுவது நல்லதல்ல” நபர் 2: “கர்த்தர் பாரபட்சம் காட்டுகிற தேவனல்ல...

Post

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

சிந்துவெளிப் பண்பாட்டின் அடித்தளம், திராவிடப் பண்பாடு என்பதன் கொடை, என்பதை மீண்டும்நம் காலத்து ஆய்வறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் மிகுந்த ஆதார பலத்துடன் நிறுவிப் புத்தகம் வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு: ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’. இந்நூலைப் பற்றி ஐராவதம் மகாதேவன் ‘சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி வெளியாகியுள்ள தமிழ் நூல்களிலேயே சிறப்புவாய்ந்தது எனச் சிலாகிப்பது மிகச் சரியாகும்.   சிந்துவெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரைக் காணக் கிடைக்கும் திராவிடப் பண்பாட்டைப் பற்றிய ஆய்வே, இந்த நூல்....

Post

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.’ எழுதியவர்: ஜான் பெர்கின்ஸ். ++++ அடியாள் பொருளாதார அடியாள்-  பெயர்தான் சிம்பிளாக ’அடியாள்’ என்றிருக்கிறது. ஆனால் இவர்கள் அடியாட்கள் மட்டுமில்லை. ஜகஜ்ஜால கில்லாடிகள். மிதமிஞ்சிக் கிடக்கும் தங்களின் அறிவையும் திறமையையும் கொண்டு பிற நாட்டின் தலைவர்களையும் அவர்களின் வழியாக அந்த நாடுகளையும் ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் விழச் செய்பவர்கள். பிறநாட்டு தலைவர்களை அடிபணியச் செய்வதற்காக மிரட்டலில் ஆரம்பித்து மாமா வேலை வரை அத்தனைவிதமான சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாட்டை இன்னொரு நாட்டின்...