Month: June 2011

Post

தமிழ் நூல் தொகுப்பு வரலாறு

தொகுப்பு மரபிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி... புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800_2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூக வரலாற்றில் அக்கறை கொண்டவர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு சமகால வரலாற்று ஆவணமாக ‘தமிழ் நூல் தொகுப்பு...