களப்பணியில் கம்யூனிஸ்டுகள்-2 : நூல் வெளியீடு

0

தமிழக பொதுவுடமை இயக்க வேர்களின் வீர வரலாற்று ஆவணமான, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் எழுதிய ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ நூலின் இரண்டாம் தொகுதி வெளியீட்டு விழா திங்களன்று மாலை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் சார்பில் என்.சிவகுரு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். எஸ்.செல்வராஜ் வரவேற்றார். சிபிஎம் தஞ்சை மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், பாரதி புத்தகாலயம் மேலாளர் கே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தீக்கதிர் ஆசிரியர் மதுக் கூர் இராமலிங்கம் நூலை வெளியிட்டுப் பேசினார். நூலின் முதல் பிரதியை எழுத்தாளர் பசு.கவுதமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

நூலாசிரியரும், சிபிஎம் அரசியல்தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.இராமகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். அவர் பேசுகையில், “பொதுவுடமை இயக்க தலைவர்கள் சிறையில் இருந்த வரலாறுகளை நாம் அறிவோம். ஆனால் எளியதொண்டர்களின் வரலாற்றையும் வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது தான் இந்தப் படைப்பு. நாகை, தஞ்சை, திருவாரூர் என பல இடங்களில் கூலித் தொழிலாளிகளாக, அன்றாடங் காய்ச்சிகளாக எதையும் பிரதிபலன் எதிர் பார்க்காமல் செயல்பட்ட தோழர்களால் தான் இன்றுகட்சி உயிர்ப்போடு செயல் படுகிறது. கட்சி தடை செய்யப்பட்ட போதும், அடக்குமுறைக்கு ஆளான போதும், கட்சிக்காகப்  பணியாற்றிய, போராளிகளாக செயல்பட்ட பல்வேறு தோழர்களையும் இந்நூலில் இடம்பெறச் செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் எளிய தொழிலாளர்கள் கட்சியில் இருப்பதால்தான் கட்சி தனித்துவத்தோடும், உயிர்ப்போடும் உள் ளது. மூன்றாவது தொகுதி விரைவில் வெளியாகும். இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக் கும் எனது நன்றி” என்றார். நிறைவாக தமுஎகச மாநில துணைச் செயலாளர் களப்பிரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தஞ்சை ரயிலடியில் நூலாசிரியர் ஜி.இராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து நூலைப் பெற்றுக் கொண்டார்.

 புத்தகத்தை இங்கு வாங்கலாம்

நன்றி: தீக்கதிர்

Share.

About Author

Leave A Reply