கண்ணுக்குள் சற்று பயணித்து

0

கவிஞர் வத்ஸலா குஜாத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம் இந்தி அறிந்தவர. தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுததய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய சில நுட்பமான நிகழ்வுகளைக் கொண்டிருந்தன.
பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி விமர்சனப் பார்வையுடன் முன்வைக்கத் தொடங்கினால் பல பொய்மைகள் உடையும். புனிதங்கள் அழியும். அதைப் பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான் குடும்ப கௌரவம் என்கிற மூட்டை அவர்களது முதுகின்மேல் ஏற்றப்பட்டிருந்தது. அந்த மூட்டையை இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்து நிற்க விரும்பும் பெண்களுக்கு கை கொடுத்து உதவி செய்கிறார் வத்சலா, தன் கண்ணுக்குள் சற்று பயணித்து.

புத்தக தேவைக்கு

044 24332924

https://thamizhbooks.com/kannukkul-sattru-payanithu.html

Share.

About Author

Leave A Reply