ஒவ்வொரு குழந்தையும் நேசிப்போம்

0

குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக் கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங் களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர் பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல்.

குழந்தைகள் போடும் சத்தமே பெற் றோருக்கு வேதனை தரக்கூடியது. இது பற்றிப் பேசும் கோச்சார்க், குழந்தை நடக்கும்போது நடக்கும், கடிக்கும்போது கடிக்கும் என்று சொல்கிறார்.

‘எல்லா நரிகளும் தந்திரம் மிக்கதா, நிழல் என்றால் என்ன, கடவுள் யார், எப் படி இருப்பார்?’ போன்ற குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்கள் மட்டத்திற்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசிப் புரிய வைப்பதே சிறந்தது என்று அவர் கூறுகிறார்.

வளரிளம் பருவத்துக் குழந்தை களுக்கு எல்லா விஷயங்களும் புரிந்திருப் பதில்லை ஆனால் அவர்கள் எல்லாவற் றுடனும் எதிர்நீச்சல் போடத் தீர்மானித்து விடுகிறார்கள் என்கிறார் கோச்சார்க். ஆகவே அவர்களின் விருப்பத்தையும் இசைவையும் கேட்டு ஆலோசனைகள் கூற வேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர்.

‘படிப்பு என்பது தெரிந்துகொள்ளவா? இல்லை. மேலும் மேலும் கேள்வி கேட்க’ என்று தெரிவிக்கும் கோச்சார்க் குழந்தை களை அணுகும் முறையில் மாற்றம் ஏற்பட்டால் கல்வியிலும் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

வாசிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும் யதார்த்தத்தை வெளிப் படுத்துவதாகவும் எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஜேனஸ் கோச்சார்க்

தமிழில்: தி.தனபால்

பாரதி புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம் பேட்டை, சென்னை- 18, தொலைபேசி: 2433 2424.

விலை: ரூ. 40

நன்றி: தி இந்து (தமிழ்)

Buy Now

Share.

About Author

Leave A Reply