பெண்கள்: சட்டங்களும், தீர்ப்புகளும்

0

சாதியின் ஆதிக்கம் பெண்ணுக்கு இழைக்கும் வன்கொடுமை, திருமணம் போன்ற நிறுவனங்களும் அதன் தேவைகளும் பெண் மீது நிகழ்த்தும் வன்முறைகள் என்று இந்தப் புத்தகம் பயணிக்கும் திசைகள் நிறைய. இன்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் அநீதிகளையும்பற்றி சில வழக்குகளின் வாயிலாக சொல்வதன்மூலம் ஒட்டுமொத்தமாக பெண்களும் சட்டமும்பற்றிய ஒரு சிறு ஆவணமாக இந்தப் புத்தகம் மாறுகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் இருட்டறையாக இருக்கும் சட்டத்தையும், அதன் புரியாத பக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும் சிறு வெளிச்சமாக இருக்கிறது இந்தப் புத்தகம்.

பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இருக்கும்போதுகூட அதனால் பெண்களுக்குப் பெரிய அளவில் நன்மைகள் விளையவில்லை என்பதுதான் உண்மை. சமூகத்தில் வேரூன்றியிருக்கும் தந்தைமையச் சிந்தனையின்பால் வளர்த்தெடுக்கப்பட்டு, காவல் துறையினராகவும் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வருபவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெண்களுக்கு ஆதரவான போக்குகளை எதிர்பார்க்க முடியாது என்கிற உண்மையை புத்தகத்தில் அழுத்திச் சொல்கிறார் ஜீவகுமார்.

நன்றி: புத்தகம் பேசுது

Buy Now

Share.

About Author

Leave A Reply