தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்

0

இந்நூல் தான், தமிழ்நாட்டில் கூட்டுச் செயல்முறையில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் முதல் முயற்சியாகும். 
-பேராசிரியர் என்.ராஜேந்திரன்

ஒரு சமூகப் பொருளியல் பார்வை
நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து, நவீன தமிழ்நாடு குறித்த ஆராய்ச்சியின் அளவு அதிகரித்த வண்ணமே இருந்திருக்கிறது. இதற்கான செயற்களத்தை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிவாண்மையாளர்கள் அமைத்தனர். இவர்கள், தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் கலாச்சார அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தவர்கள். இவர்களை பின்பற்றிய இந்திய அறிவாண்மையாளர்கள் அரசியல், பொருளாதார ஆய்வுகளில் சில தனித்தன்மை வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளனர். குறிப்பிட்ட மதிக்கத்தக்க பங்களிப்புகள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வரலாறு இன்னும் முழுமையாக அறியப்படாத களமாகவே இருக்கிறது. நவீன தமிழ்நாட்டின் பொருளாதார வரலாறு என்னும் களத்தில் கவனிக்கத் தக்க அறிவாண்மையான நூல்களில் கீழ்க்காணும் நூல்கள் உள்ளடங்கும். ஏ.சாரதாராஜுவின் Economic Conditions in the Presidency 1800 1850, நீலமணி முகர்ஜி எழுதிய Ryotwrari System in India 1792, 1827 (1980)கே.கௌ எழுதிய Modes of Production in Southern India (1980)சி.ஜே. பேகரினுடைய An Indian Rural Economy (1984) Tamilnadu Countryside 
இத்தகைய அறிவாண்மை மிகுந்த இலக்கிய வரிசையில் நிச்சயமாக ஏ.கே. காளிமுத்துவின் நூல் ஒரு முக்கியமான இடத்தைப் பெறும். தமிழ்நாட்டின் விவசாயப் பொருளாதாரமும் விவசாய உழைப்பும் சித்தாந்த ரீதியில் அறியப்படாத களங்களாகவே இருக்கின்றன. காலனிய கால பொருளாதாரத்தையும் தாழ்நிலை விவசாயிகளின் நிலைமைகளையும் ஏ.கே. காளிமுத்து மிகுந்த அழுத்தத்துடன் தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். இந்நூலானது அறிமுகம், முடிவு ஆகிய இரு அத்தியாயங்களைத் தவிர்த்து ஏழு அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. “காலனியத்திற்கு முற்பட்ட தமிழக வேளாளர் குடிகள்” என்ற தலைப்பிலான அத்தியாயமானது சங்க காலம் முதல் காலனிய ஆட்சி நிறுவப்பட்டது வரையான காலத்திய வேளாண் குடிகளின் நிலைமைகள் குறித்த ஒரு ஆய்வாக உள்ளது. இந்த அத்தியாயமானது, காலனிய பொருளாதாரத்தின் தொடக்கத்திற்கான பின்னணியை திறமையான முறையில் அளிக்கிறது இது, நுண்ணோக்கும் வாசகர் ஒருவர் காலனியத்திற்கு முந்தைய பொருளாதாரத்தையும் காலனிய கால பொருளாதாரத்தையும் வேறுபடுத்தி பார்க்க அவருக்குப் பெரிதும் உதவுகிறது. இந்நூலின் ஆசிரியர், நேரடித் தொடர்பற்ற தகவல் மூல ஆதாரங்களையே (sமீநீஷீஸீபீணீக்ஷீஹ் ஷிஷீuக்ஷீநீமீs) பெரிதும் சார்ந்திருக்கிறார். இந்த மூலாதாரங்கள் பொருளாதார வரலாறு குறித்த இளம் ஆய்வாளர்கள், தொன்மைக்கால மற்றும் மத்திய கால தமிழ்நாட்டின் பொருளாதார வரலாறு சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நூல்களை அடையாளம் காண்பதற்கு உதவக் கூடியவையாகும்.
இந்நூலின் இரண்டாவது அத்தியாயம், காலனி ஆட்சியின் விரிவாக்கம் குறித்து ஆராய்கிறது. இதன் பொருட்டு 1792 முதல் 1801 வரை நிகழ்ந்த யுத்தங்கள், உடன்பாடுகள் போன்ற செயல்முறைகளை பயன்படுத்துகிறார். இதில் 1801ஆம் ஆண்டு மிக முக்கியமானதாகும். ஏனெனில் இந்த ஆண்டில் தான் (வெள்ளையர் ஆட்சிக்கெதிராக) (கிளர்ந்தெழுந்த பாளையக்காரர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதும் அவர்களின் நிலங்கள் காலனிய வருவாய் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதும் நிகழ்ந்த ஆண்டாகும். இதில் நூலாசிரியர், காலனிய நிர்வாகத்தால் செய்முறைப்படுத்தப்பட்ட வரிவசூல் முறைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துகிறார். ஜமின்தார்முறை, ரயத்வாரிமுறை, கிராம கட்டுக்குத்தகை முறை, இனாம்தாரர் முறை போன்ற வருவாய் ஏற்பாடுகள் குறித்தும் விளக்குவதிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த அத்தியாயம், வரி விதிப்பின் இயல்பு, தாழ்நிலை விவசாயிகள் மீது அவை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது இது, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்று நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. அநேகமாக, இந்நூல் தான், தமிழ்நாட்டில் கூட்டுச் செயல்முறையில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் முதல் முயற்சியாகும். இந்த முயற்சிக்காக நூலாசிரியர் பாராட்டுக் குரியவராகிறார்.
மேலும் இந்நூலின் ஆசிரியர், தொடக்க முதலாளித்துவம், காலனிய அரசாங்கத்தின் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை குறித்தும் விரிவாக விவாதித்திருக்கிறார். விவசாயத்தை வர்த்தக மயமாக்கியது விவசாய உற்பத்தியின் இயல்பையே மாற்றியது. மேலும் புதிய உற்பத்தி சக்திகளான பணப் பொருளாதாரம், அடிமை முறையின் ஆரம்பம் ஒப்பந்த முறையிலான உழைப்பு ஆகியவற்றையும் கொண்டு வந்தது.

நூலாசிரியர், பெரும் பொருளாதார முடக்கத்தின் போதும் அதற்கு பிந்தைய காலத்திலும் நிலவிய விவசாய நிலைமைகள் குறித்தும் ஒரு ஆழமான ஆய்வு செய்திருக்கிறார். இந்த ஆய்வின் மூலம், அப்போதைய விவசாய நிலைமை குறித்து முழுமையாக தனது நூலில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உருவாகிய நவீன விவசாய இயக்கங்கள் குறித்த விபரங்களை சேகரித்து ஆய்ந்துள்ளார். இந்நூலானது, வாசகர்களிடம் நிலையான கருத்துப் பதிவை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் நூலாசிரியரின் எளிமையான மற்றும் நன்கு விளங்குகிற எழுத்து நடையேயாகும். மொத்தத்தில், இந்நூலாசிரியர் விவசாயப் பொருளாதாரம், தாழ்நிலை விவசாயிகளின் நிலைமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் தனது நூலில் அளிப்பதற்கு நூலாசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீணாகிவிடவில்லை. இந்நூல், நவீன தமிழ்நாடு குறித்து ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு குறிப்பாக ஆராய்ச்சியிலும் கற்பித்தலிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கட்டாயமானதாகும். 
நன்றி: Historical review

Buy Now

Share.

About Author

Leave A Reply