உலகக் கல்வியாளர்கள்

0

காலம் காலமாக நிலவிவந்த நமது மரபார்ந்த கல்விச் சிந்தனைகளை உலுக்கி அடிமுதல் நுனிவரை புரட்டிப்போட்ட எட்டு உலகறிந்த கல்விச் சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றம்சங்களையும அவர்கள் முன்வைத்த புதிய கல்விச் சிந்தனைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார் இரா. நடராசன்.

மூன்றுமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு கல்விப்போராளி மரியா மாண்டசோரி. மனவளர்ச்சி குன்றியவர்கள் உட்பட எல்லாக் குழந்தைகளும் சமமாக அமர்ந்து கற்றலில் ஈடுபடும் ஒரு வகுப்பறையை உலகிலேயே முதலில் அறிமுகம் செய்தவர். குழந்தைகளை இராμவத்தில் இணைக்க முற்பட்ட முசோலினியை எதிர்த்து சிறைவாசத்தையும், நாடுகடத்தலையும் பரிசுகளாகப் பெற்ற மரியா மாண்டசோரி, தாய்மொழி வழிக் கல்வியையே வலியுறுத்தியவர். இன்றுமாண்டசோரி முறைப்படி நடப்பதாக ஆரவாரம் செய்து பணம் குவிக்கும் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளுக்கும் அந்த அம்மையாரின் கொள்கைகளுக்கும் சம்பந்தமே கிடையாது என நிறுவுகிறது இவரை அறிமுகம் செய்யும் கட்டுரை.

  • குழந்தைகள் தோற்பதே பள்ளியில்தான் என்று முழங்கி உலகம் முழுவதிலும் மாற்றுக்கல்விச் சிந்தனைகளை உலகளாவிய விதத்தில் முன்வைத்த ஜான் கால்ட்வெல் ஹோல்ட். ‘குழந்தைகள் ஏன் கல்வியில் தோற்கின்றனர்?’ ‘குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர்?’ போன்ற 10 நூல்களின் ஆசிரியர்.
  • ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை அடையச் செய்ய வேண்டுமெனில் கல்விதான் அதற்கு ஒரே வழி என்ற பாவ்லோ ஃப்ரெய்ரேவின் புரட்சிகரமான சிந்தனைகள்;
  • ரெனெய் ஸாஸோ உளவியல் ரீதியில்கல்வி என்பது ஒரு குழந்தைக்குள்செயல்படாது அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்தல் என்பதாக உளவியல் ரீதியில் குழந்தைகளை μகியவர். டிக்லெக்ஸியா என்ற, மாணவர்களின் திறன் குறைபாட்டை ஆராய்ந்தவர்.
  • சமூகக் குழுக்கல்வி, குழந்தைகளே பள்ளிக் கட்டுமானப் பணி மூலம்உறைவிடங்களாகவே பள்ளிகளைக் கட்டமைப்பது, ஒவ்வொரு பாடசாலையிலும் அருங்காட்சியகம்என புதிய சிந்தனைகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப் படுத்தியும் காட்டிய சோவியத் நிபுணரான அலெக்ஸாந்தர் யுட்னோவிச் ஸெலென்கோ:
  • ஏனையோர் காதால் கற்பதை செவிப்புலன் அற்றோர் விழிகளால் கற்க வேண்டும்` என ஒரு வகையில் கைவிரல்களால் உரையாடும்மௌனமொழியைக் கண்டறிந்த அபி சார்லஸ் மைக்கேல் எபி;
  • உளவியலுக்கும்கல்விக்குமுள்ள தொடர்பை மெய்ப்பித்த இவான் பெட்ரோவிச் பாவ்லோவ்;
  • ஆரம்பபள்ளிஉயர்கல்வி குறித்துஎப்படிச் சிந்திக்கிறோம்?’ ‘கல்வியில் ஜனநாயகம்` உள்பட 12 நூல்களின் ஆசிரியரான ஜான் டூவியின் புதிய செயல்முறைப் பரிசோதனைகள்என எட்டு பேர் பற்றிய சுருக்கமான உயிரோட்டமிக்க அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

உலகக் கல்வியாளர்கள்
இரா.நடராசன் | ரூ: 20 பக்: 48
புக்ஸ் பார் சில்ரன்
044 24332924

Share.

About Author

Leave A Reply