ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை

0

 இந்த நூல், வயது வந்தோர் கல்விகற்பித்தல் முறைகள் குறித்துப்பேசுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கல்வியின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விமரிசனப் பார்வையுடன் ஆராய்கிறது. ‘எடுத்துச் சொல்வதுஎன்ற நோயால் அவதியுறுகிறது இன்றைய கல்விமுறை. இது வங்கிக்கல்வி` எனக் கடுமையான விமரிசனங் களை முன்வைக்கிறார் ஆசிரியர். அவரே இருபது ஆண்டுக்காலம் கடுமையான ஆய்வுகளை களத்தில் நேரடியாக மேற்கொணடு பல தீர்க்கமான முடிவுகளைக் கண்டடைந்தார். வாழ்வனுபவங்களே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியாளராக மாற்றின. படிப்பறிவற்ற ஏழை எளிய மக்களுடன் பணியாற்றத்தொடங்கிய ஃப்ரையிரே, தான் கண்டடைந்த கல்வி முறையை விடுதலைக்கான கோட்பாட்டியல் என அழைத்தார். ஓர் இடத்தில் ஆற, அமர உட்காருவதற்கான நேரம்கூட வாய்க்கப் பெறாத கூலித் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருந்தனர். பிரேசில் நாட்டில், படிப்பறிவற்றவர் களுக்கு ஓட்டுப்போட அனுமதி -_உரிமை ஏதும் கிடையாது. அந்த நிலையை மாற்றிட அவர்களிடம் கல்வியறிவைக் கொண்டு செல்வதுதான் ஒரேவழி என வாழ்நாள் முழுக்க அப்பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1968-ல் இப்புத்தகம் போர்ச்சுக்கீசிய மொழியில் வெளியானது. 1970-ல் ஸ்பானிய, ஆங்கில மொழிகளில் இது வெளியான போது உலகில் 60 நாடுகள் தமது மக்களின் எழுத்தறிவுக்காகச் சட்டங்கள் இயற்றின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்தநூல் 1974 வரை பிரேசிலில் தடை செய்யப்பட்ட ஒன்று! நமதுமவுனக் கலாச்சாரத்தை உடைத்துஉரக்கப் பேச` வைக்கிற பதினேழு புத்தகங்களை எழுதியவர் பாவ்லோ ஃப்ரையரே. தமிழில் அவரின் கருத்துகளை முடிந்தவரை எளிமையாகத் தந்திருக்கிறார் இரா.நடராசன்.

புரட்சிகரக் கோட்பாடு இல்லாது ஒருபுரட்சிகர இயக்கம் இயங்க முடியாது’’ என்பதன் அர்த்தம், ஒரு புரட்சியை வெறும் வார்த்தையாலோ அல்லது வெறும் செயல்களாலோ மட்டுமே நடத்தி விட முடியாது. மக்களின் மீதான கடப்பாடு என்பது அவர்கள் ஒடுக்கப்படும் யதார்த்தத்தை மாற்றுவதே. மாறுதல் கோட்பாடு தேவை என்றால், மாறுதல் செயல்பாடுகளுக்கான கோட்பாடான அது, மாறுதலின் அடிப்படைப் பங்களிப்பை அம்மக் களுக்கே வழங்கும் ஒன்றாக இல்லாமல் போவதற்கு வாய்ப்பே இல்லைஎன்கிறார் பாவ்லோ ஃப்ரையிரே.

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை

பாவ்லோ ஃப்ரையிரே|தமிழில்இரா.நடராசன்|ரூ:95|பக்:176
Share.

About Author

Leave A Reply