குழந்தைகளைக் கொண்டாடுவோம்

0

‘‘மனிதர்களின் பரஸ்பரக் கவனமும், அக்கறையும் தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும், மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும், புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன.’’ என்கிற ஆசிரியரின் அனுபவக் குறிப்புகளே இந்நூலாக வடிவம் பெற்றுள்ளன. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் 15 ஆண்டு கால அனுபவங்களின் தொகுப்பு இது. 800 பக்க நாட்குறிப்பிலிருந்து, ஓராண்டு காலத்தின் 5 முக்கிய நாட்களின் பணிப் பதிவுகளை நம் முன் வைக்கிறார் ஆசிரியர். ‘குழந்தையின் எதிர்காலத்திற்கு நான் பொறுப் பானவன்என்கிற நினைவு அவரை இயக்கும் உந்து விசை. வகுப்பில் இடமில்லாத காரணத்தால் வேறு வகுப்பிற்குப் போகுமாறு ஒரு சிறுவனை அனுப்பி வைக்கும்போது, ‘மாமா என்னைத் துரத்தாதீர்கள்நான் ஒழுங்காகப் படிப்பேன்..’ என்று கண்களில் நீர் ததும்ப, கேவி அழுதபடி வந்து இவரின் முழங்கால்களைக் கட்டிக் கொள்கிறான் அச்சிறுவன். ‘‘தனக்கே உரித்தான திறந்த மனதுடன், ஆசிரியரின் மனதைத் தொடும்படி நெஞ்சார சிறுவன் கூறும் வார்த்தைகள் எந்த ஒரு சிபாரிசையும்விட வலிமை யானவை’’ என்கிறார் ஆசிரியர். 170 நாட்களின் குறிப்புகளைப் படித்துக் கொண்டு வருவதே ஓர் ஆசிரியர்ப் பயிற்சியளிக்கும், பயிற்சி பெறும் செயற்படாக அமைந்து விடுகிறது. ‘குழந்தைகளைக் கொண்டாடச் செய்து விடுகிறது.

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

.அமனஷ்வீலி | தமிழில் : டாக்டர் இராபாஸ்கரன்
தமிழில் மறுவரைவுமுனைவர் .வள்ளிநாயகம்.அம்பிகா. | பக்: 160 | ரூ: 80
Share.

About Author

Leave A Reply