மாமதுரையில் புத்தகத் திருவிழா

0

.பாலகிருஷ்ணன்
பபாசி ஒருங்கிணைக்கும் 8வது மதுரை புத்தகத்திருவிழாவிற்கு சென்றவுடன்புத்தகம் பேசுது,  புத்தகம் பேசுது புதிய  புத்தகம் பேசுதுஎன்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மின் விசிறியின் காற்றினால் சலசலத்த காட்சி அவை நம்மை அருகில் வரும்படி கை அசைத்ததை போலவே இருந்தது. மேலும் அவை நமக்கு ஏதோ ஓரு புது செய்தி சொல்ல காத்து கிடந்தது போல் இருந்தது. அருகினில் சென்று ஒவ்வொரு புத்தகத்தையும் புரட்ட புரட்ட அவை ஏற்படுத்திய உணர்வு அம்மாவின் மடிசாய்ந்து கதை கேட்பது போல் இருந்தது. கதை, கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, புதினம், விமர்சனம் என அனைத்து வகை இலக்கிய படைப்புகளும் பூத்துக் குலுங்கின. புத்தக பூங்காவாக. புத்தக அரங்கில் புத்தகங்களை நேசிப்போம்.. வாசிப்போம் என்ற தலைப்பில் பல்வேறு தலைவர்களின் வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தன.என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தக புழு உரங்குகிறதென்றுஎன்றார் பெட்ரண்ட்ரஸல்பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மாட்டின்லூதர் கிங். தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். இதைபோல் இன்னும் நிறைய வாசகங்கள் புத்தகவாசிப்பின் முக்கியத்துவத்தை பார்வையர்கள் உணரும்படி அமைந்திருந்தது.

நேருக்கு நேர்
அரங்குகளில் புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அருகில் நிற்பவரிடம் கேட்டால் அவர் விளாவாரியாக புத்தகத்தை எழுதியவரை போலவே பதில் கூறுகிறார். விசாரித்தால் புத்தகத்தை எழுதியவர் அவராகவே இருந்துவிட நாம் ஆச்சரியத்துடன் வளைந்து குலைந்து மகிழ்ச்சியடைய வேண்டியுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வாசகர்கள் வாங்கிய புத்தகங்களில் கையெழுத்திட்டுவிட்டு பத்திரிக்கையில் கூறிய போது படைப்பாளிகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு கிடைப்பதில்லை. எனது நாவலை படித்த ஒரு வாசகர், 2 ஆண்டுகளாக என்னை சந்திக்க வேண்டும் என ஏங்கியதை இன்று கையெழுத்திடும் போது உணர முடிந்தது என்றார். ஆம் இந்த புத்தக திருவிழா புத்தக பூங்கா மட்டுமல்லாமல் படைப்பாளிகள் சங்கமிக்கும் பெருங்கடலுமாக காணப்படுகிறது. படைப்பாளிகளை சந்திக்க நினைக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் நல்ல ஒரு சந்தர்ப்பமாகவே இருக்கும்.
எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான இணைப்பில்
 புத்தக அரங்கிற்கு வெளியே அமைந்திருக்கும் கலையரங்கில் புத்தங்கள் வெளியிடுவதும்,  படைப்புகள், படைப்பாளிகள் குறித்த மதிப்பீட்டுரையும் சொற்பொழிவுக்களும் நிகழ்ந் வண்ணம் இருந்தன. நாம் சென்ற போது ஜி.நாகராஜனின் படைப்புகள் குறித்து, இயக்குனர். பாரதிகிருஷ்ணகுமார் பேசிக்கொண்டிருந்தார் ஜி.நாகராஜன் படைப்புகளான ஆண்மை, வெகுமதி, குறத்திமுடுக்கு போன்ற சிறுகதைகள் சமுக அவலத்தையும் அதன் மிதான விமர்சனத்தையும் படம்பிடித்து காட்டுகின்றன என்றார். மேலும் ஒரு படைப்பாளியின் வெற்றி எழுத்திற்கும், வாழ்க்கைக்குமான நெருக்கத்தில் தான் அமையும், அந்த வகையில் ஜி.நாகராஜனின் படைப்புகள் நெஞ்சுக்கு நெருக்கமாகவை என்று கூறினார்.


5வருடங்களாக தேடிய புத்தகம்
மதுரை மாநகராட்சி கமிஷ்னர் நந்த கோபால் வாசகர்களுடன் வாசகராக புத்தக்களை தேடிக்கொண்டிருந்தார்.அவரிடம் புத்தக திருவிழா குறித்து பேசிய போது கூறியதாவது. மக்களின் வாசிப்பு அதிகரித்துள்ளது. வாசிக்க விரும்பும் போது புத்தகங்கள் அனைத்து இடங்களிடம் கிடைப்பதில்லை.  உதாரணமாக வீர ஸாவாக்கரின்முதல் இந்திய சுதந்திர போராட்ட வரலாறுபுத்தகத்தை நான் 5 வருடங்களாக தேடினேன். இறுதியாக புத்தக திருவிழாவில் தான் அந்த புத்தகம் கிடைத்தது. பல்வேறு விதமான புத்தகங்களை தேடி அலையும் வாசகனுக்கு புத்தக திருவிழா நல்ல வாய்ப்பு ஆகும் என்றார்.
சில பதிப்பகமும், சில புத்தகங்களும் ஒர் அறிமுகம்
பாரதி புத்தகாலயம்:
1000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில்  இந்த புத்தக திருவிழாவிற்கு என புதியதாக 20 தலைப்புகள் காணக்கிடைக்கின்றன. அவைகள்
இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி, நோயின்றி வாழ 4வழிகள், குஜராத் வளர்ச்சியா வீக்கமா, ஆட்டிசம் சில புரிதல்கள், மார்க்ஸ் ஏங்கெல்ஸ், பெத்தவன், ஈசாப் கதைகள், தமிழ் இலக்கியம் ஒரு புதியபார்வை, செள்ளு, பகத்சிங் சிறைக் குறிப்புகள், தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும், பட்டியல் சாதிகள் பழங்குடிகள் அரசு, பெடரல் இந்தியா, சமஸ்தான இந்தியா, இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும், மெல்ல விலகும் பனித்திரை, மார்க்சிய லெனினிய தத்துவம், விண்மீன்கள் வகை வடிவம் வரலாறு, கண்டோம் கடவுள் துகள்கள், சூரியமண்டலம், மாகடிகாரம்.
கிழக்கு பதிப்பகம்:
800க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
கி.மு கி.பி, மோடியின் குஜராத், டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், சே குவரா மற்றும் ஹிட்லர் குறித்த புத்தகங்கள். மேலும் சுஜாதா, ஜெயமோகன் படைப்புகள் கிடைக்கின்றன.
500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன
கருத்து பட்டறை :
100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
பேரா.கே.ராஜய்யன் தமிழ்நாட்டுப் பாளையர்காரர்களின் தோற்றமும் விழ்ச்சியும், எரியும் பனிக்காடுபி.எச்.டேனியல்.
நற்றினை பதிப்பகம்:
62க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
ஊமைசெந்தாய், ஜெயமோகன் குறுநாவல்கள், ரப்பர்.
புலம் பதிப்பகம்:
400க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
மகிழ்ச்சியான இளவரசன், வண்ணம் புசிய பறவை, மனிதகுல வரலாறு.
தமிழினி
400க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், நாஞ்சில் நாடன் சிறுகதைகள், செந்நிற விடுதி.
Book for Children
கனவு ஆசிரியன், கணிதத்தின் கதை, விண்வெளி 1000, கணிதமேதை இராமனுஜம், சிக்மன்ட் பிரய்டு கனவுகளின் விளக்கம். மற்றும் குழந்தைகள் படிக்க வேண்டிய அனைத்துவகை புத்தகங்களும் கிடைக்கின்றன.
750க்கும் மேற்பட்ட ஆங்கில தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
Chetan Bhagat Books, Sidney Sheldon Books, ‘Thennali raman’ Stories, 151 Questions and Answers, Wonders of World, 365 Activities.
அடையாளம் பதிப்பகம்:
350க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
டாக்டர் இல்லாத இடத்தில், மனநல மருத்துவர் இல்லாத இடத்தில், கோணங்கியின்’, புதுமைபித்தன் கதைகள், இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு, இந்திய விடுதலை வெற்றி, அமெரிக்காவின் மறுபக்கம், ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி மிக சுருக்கமான அறிமுக புத்தங்கள் (25).
சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்;:
190க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
வெளிச்சத்தின் நிறம் கருப்பு, கச்சத்தீவு, நாட்டு கணக்கு, சிறகை விரிப்போம், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, வெற்றி கொடி கட்டு
சந்தியா பதிப்பகம்:
260க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
ஒருவழிப்பறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமுலம், தொ.. செவ்வி நேர்காணல், பூனை எழுதிய அறை,
உள முற்ற தீ.
200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மென்பொருள் குறுந்தகடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
தேசிய விருது பெற்ற  பட்டாம் பூச்சி, மற்றும் கல்வி, பொழுதுபோக்கு, பள்ளிகள் தொடர்பான அனைத்துவித பயிற்சி  மென்பொருள் குறுந்தகடுகள் கிடைக்கின்றன.
கயல், கவின் பதிப்பகம்:
29க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
விடுபூக்கள், காட்சி பிழை மாத இதழ்.
 உயிர்மை பதிப்பகம்:
400க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதித்தா, ஆகியோரின் படைப்புகள் கிடைக்கின்றன.
காவ்யா பதிப்பகம்:
500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
வள்ளுவர் வரலாறு, இலக்குவம், திலகபாமா கவிதை தொகுப்பு, மற்றும் .நா.சு. புத்தகங்கள்.
கீழைக்காற்று பதிப்பகம்:
280க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
மருத்துவ அரசியல், விடுதலை போரின் வீரமரபு, படிப்பும் விடுதலைக்கான அறிவும், காதல்.
எதிர் வெளியீடு:
70க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
சொல்லி தீராதது, மீன்குகைவாசிகள், கருத்த லெப்பை, செம்பருத்தி பூத்தவீடு.
பெரியர் புத்தகங்கள்:
450க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
வாழ்வியல் சிந்தனை, ஒற்றைப்பத்தி, வரலாற்றில் பெண் கொடுமைகள், மண்டல்குழுவும் சமுகநீதியும்.
வம்சி பதிப்பகம்:
70க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில:
வெண்கடல், சிச்சுபுறா, ஏசு கதைகள், அக்கடா, ஆலிஸின் அற்புத உலகம்.
கடந்தாண்டு 2லட்சம், இந்தாண்டு 3லட்சம் புத்தகங்கள்,
பபாசியின் மதுரை மாவட்ட தலைவர் வி.புருசோத்தமன் கூறுகையில் 250க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், 220 அரங்குகளில் சுமார் 3லட்சம் புத்தகஙகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படும்படியான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்த படியாக எண்ணிக்கையில் அதிகமான கல்வி நிறுவினங்கள் உள்ள மாவட்டமாக மதுரை இருக்கின்றது. எனவே  இங்கு புத்தக திருவிழாவின் தேவையும் அவசியமும் இயல்பாகவே உண்டு. அதனால் பொதுவாகவே புத்தக திருவிழாவிற்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது. மேலும் மதுரை புத்தக திருவிழாவை பொறுத்தவரை, மதுரை மக்கள் மட்டுமல்லாது அருகாமை மாவட்டங்களில் இருந்தும் வாசகங்கள் வந்து புத்தகங்காக வாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.
நீங்க எப்போ
புத்தக கண்காட்சிக்கு மத்தியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகளையும், மிக விமர்சியாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், அரங்கில் பார்வையாளர்களாக பங்குபெறும் அனைவருக்கும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. அறிவு பசியை தீர்ப்பதோடு வயிற்று பசியை போக்கவும் விதவிதமான உணவு  வகைகளும் பிரத்தியோகமான கடைகளில் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும்.
புத்தகமும் வாசகனும், வாசகனும் படைப்பாளியும, ஒத்த கருத்துடைய நண்பர்கள் கலந்துரையடும் போது மனம் புத்தாக்கம் பெருகிறது. நாளையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. என்ன கிளம்பிட்டிங்களா புத்தகம் வாங்க……
            

Share.

About Author

Leave A Reply