டாம் மாமாவின் குடிசை

0
ச.மதுசுதன்

அந்திநேர வெயிலையும் பொருட்படுத்தாது அடர்ந்த காட்டின் வழியே எலிசா தன ஐந்து வயது ஆன் குழந்தையான ஹாரியுடன் பண்ணையிலிருந்து தப்பித்து போகிறாள்.நீண்ட நடையால் களைப்புற்ற அவளின் கால்களும் விழிகளும் சற்று அயர்ச்சி கொள்ள இரவின் திரைக்குள் பெரும்சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ஓஹயோ ஆற்றை கடக்க ஆயத்தமாகிறாள்.ஆனால் அதற்க்கு முன்பே அவர்கள் எலிசாவை துரத்திக்கொண்டு வந்துவிட்டார்கள்.அவர்கள் சுமார் ஏழு எட்டுபேர் இருக்கும். அவர்களை பார்த்த வேகத்திலேயே என்ன செய்வதென்று புரியாமல் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் குதித்துவிடுகிறாள்.பனிக்கட்டியின் மீது குதித்ததால் நீரில் மூழ்காமல் அடுத்த பணிகட்டிக்கு தாவுகிறாள். அவளின் ஷூ அறுந்து கால்களின் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாது ஹாரியை அடிமை வியாபாரியிடமிருந்து காப்பாற்றும் எண்ணத்தில் தட்டுத்தடுமாறி ஒருவழியாக கரையை கடக்கிறாள்.    
கரையில் எலிசாவை கைபிடித்து காப்பாற்றிய முன்னாள் நிலவுடமையாளன் ஸம்மெசின் வழிகாட்டலின் பேரில் தப்பித்து வரும் கறுப்பின அடிமைகளுக்கு அரசின் எதிர்ப்பையும் மீறி பாதுகாப்பு தந்துதவும் செனட்டர் போர்டின் வீட்டில் தஞ்சம் புகுகிறாள்.எலிசாவுக்கு முன்பே பண்ணையை விட்டு தப்பித்து வந்த அவளின் கணவன் ஜார்ஜ் ஹாரிசும் அங்கு வந்து சேர பல இடர்பாடுகளையும் கடந்து மிசஸ் ஸ்மித் எனும் கனடா நாட்டு பென்மணியின் உதவியுடன் மாறுவேடத்தில் கிருத்துவ மிஷனரி உதவியை நாடி கனடாவுக்கு தப்பிப்போக கும் இதே நேரத்தில் சிறுவன் ஹாரியோடு விற்ப்பதற்க்காகவிருந்த கறுப்பின அடிமை டாம் அடிமை வியாபாரி ஹெலியால் கால்களில் விலங்கிடப்பட்டு கப்பலில் கொண்டு செல்லும் போது சிறுமி இவாஞ்சலினால் ஈர்க்கபடும் டாம் சிருமியையே உற்றுபார்த்து கொண்டிருக்க இதன் அடுத்த கட்டமாய் டாம் இவாஞ்சலின் தந்தையான சென்ட் குளோரினால் கப்பல் பயணத்திலேயே பெரும் தொகைக்கு வாங்கப்படுகிறார் டாம்.ஏற்கனவே இவாஞ்சலின் நோயினால் பாதிக்கப்பட்திருந்தால் வெகு சீக்கிரமே டாமை பிரிந்து இறந்துபோகிறாள்.மகள் இறந்த துக்கத்தில் மகளிடம் செய்துகொடுத்த சத்தியத்தையும் மதிக்காமல் டாமை கொடியவனான சைமன் லாக்ரி  எனும் பண்ணை உரிமையாளனிடம் விற்றுவிடுகிறார் சென்ட் குளோர்.கொடிய சித்திரவதைகளை அனுபவித்து ஒருகட்டத்தில் உயிரை விடுமளவுக்கு பண்ணை கங்கானிகளிடம் சாட்டையடி பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கும் டாமை மீட்க வரும் அவரின் பழைய உரிமையாளன் ஷெல்பி டாமைகண்டு துடித்துபோகிறார்.சொன்னபடியே என்னை மீட்க வந்துவிட்டீர்கள் எஜமான் இதுபோதும் எனக்கென்று உயிர்விடுகிறார் டாம்.டாமின் மரணத்தையொட்டி தன்னிடமிருந்த அனைத்து அடிமைகளும் விடுதலை பத்திரம் தந்து விடுவிக்கிறார் பண்ணை உரிமையாளன்  ஷெல்பி.
இருவேறு சம்பவங்களின் தொகுப்பாய் ஆங்கிலத்தில் வெளியான uncle toms cabin என்ற பெரும் நாவலை சிறுவர்களுக்காக சுருக்கிய பதிப்பாய்   பி.ஏ.வாரியார் மூலத்தின் சுவை குன்றாமல் மலையாளத்தில் மொழிபெயர்த இந்நாவலை  அம்பிகா நடராசன் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு கொடுத்திருக்கிறது பாரதி புத்தகாலயம். ஐரோப்பிய சமூகத்தில் புகழ் பெற்ற நாவல்களை சிறுவர்களுக்காக சுருக்கிய பதிப்பாய் வெளியிடுவது வழக்கமான ஒன்று.அது இப்போது டாம் மாமாவின் குடிசை எனும்  புத்தகத்தின் மூலம் தமிழுக்கும் வந்திருப்பது வரவேற்க வேண்டிய அம்சமே.
கறுப்பின அடிமைகைளை பற்றி எந்தவொரு அக்கறையுமில்லாத காலகட்டத்தில் (1852) ஹாரியட் பிரீச்சர் எனும் அமரிக்க பெண் எழுத்தாளரால் கிருத்துவ பார்வையில் எழுதபட்ட இந்நாவல் வெளியான அந்த வருடத்திலேயே அமரிக்காவில் மூன்று லட்சம் பிரதிகளும் பிரிட்டனில் ஒரு மில்லியன் பிரதிகளும் விற்று தீர்ந்ததாக சான்றுகள் கூறுகின்றன.இதன் காரணமாய் அமரிக்காவில் ஏற்பட்ட கறுப்பின அடிமைகள் பற்றிய புரிதல் அமரிக்க மக்களிடையே பௌதீக சக்தியாய் உருமாறி உள்நாட்டு போரில் போய் முடிந்தது.உள்நாட்டு போரின் முடிவு கறுப்பின மக்கள் அனைவரும் அடிமை விலங்கிலிருந்து விடுபட்டனர். 
ஒரு இலக்கியத்தால் அரசியல் பூர்வமாக எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் என நிரூபித்த நாவல் இதுவென ஆப்ரகாம் லிங்கனால் பாராட்டப்பட்ட பெருமை இந்நாவலைச்சாரும்.
கறுப்பின அடிமைகளை வைத்து ஏகாதிபத்திய தேசங்கள் உருவான வரலாற்றை அலெக்ஸ் ஹேலி ஏழு தலைமுறைகள்(The Roots) எனும் நாவலின் மூலம் எடுத்துரைத்தார்.கறுப்பின அடிமைகள் படும் சித்திரவதைகளை பெட்ரிக் டக்லஸ்  தன்  சுயசரிதையில் (Narrative of the Life of Frederick Douglass)  உலகிற்கு எடுத்து சொன்னார் என்றாலும் கறுப்பின அடிமைகளை பற்றி வெளியான முதல் பெரும் நூல் என்ற பெருமை Uncle toms cabin நாவலையே சாரும்.

சமூக மாற்றத்திற்கான உந்துதலை ஒரு இலக்கியத்தின் மூலம் செய்து 

கட்ட முடியும் என்ற வரலாற்று சான்றாய் Uncle toms cabin நம்முன்னே திகழ்கிறது.
டாம் மாமாவின் குடிசை
(Uncle toms cabin) 
ஆங்கில மூலத்திலிருந்து மலையாள சுருக்கம்  :பி.ஏ.வாரியார்  
மலையாளத்திலிருந்து தமிழ் :அம்பிகா நடராசன்
விலை :45/- | பக்கம்: 79.
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
421,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018. 
Share.

About Author

Leave A Reply