தமிழகமே வாசிப்போம்

3உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,புத்தக தினம் இந்த நாளில் கொண்டாடப்படுவதற்கான விசேஷ காரணமாக அமைகிறது.  காதலர் தினம் முதல் கல்லூரி தினம் வரை கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில் உலக புத்தக தினம் அறிவுலகவாதிகளின், படைப்பாளிகளின், புத்தக நேசர்களின் நாளாக அதற்குரிய சகல விதமான ஏற்பாடுகளுடன் நிகழ்வதற்கான தீவிரமான சூழலை நாம் எதிர்காலத்தில் உருவாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
2012 உலகப் புத்தக தின நிகழ்ச்சிகள்!

பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த ஆண்டு உலகப் புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்துள்ளன. வருகிற ஏப்ரல் 21 முதல் மே 1 வரை மாநிலம் முழுக்க பல  நிகழ்வுகளை இவ்வமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. தமிழகமே வாசிப்போம் என்கிற அறைகூவலின் கீழ் வாசகர் உலகமே ஒருங்கிணைய உள்ளது.
எப்போது? 
ஏப்ரல் 21 சனிக்கிழமை மாலை6மணிக்கு
எங்கே?
சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகே 
என்ன?
கவிஞர்கள் பலரும் பங்கேற்கும் உலகப் புத்தகதின சிறப்புக் கவியரங்கம்
எப்போது?
ஏப்ரல் 22 ஞாயிறு காலை 7 மணி
எங்கே?
சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை

என்ன?

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் RUN TO READ ஓட்டம்.  

இதன் சிறப்பு என்ன?
தமிழக வரலாற்றில் முதல்முறையாக தமிழகமே வாசிப்போம் என்னும் தாரக மந்திரம் பதித்த பனியன் தொப்பிகளணிந்து படைப்பாளிகள் இந்த ஓட்டத்தில் கலந்துகொள்வர். 
இதன் பிறகு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தாங்கள் வாசித்து முடித்த புத்தகத்தை சக நண்பர்களிடம் தந்து அவர்கள் வாசித்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் புத்தகப் பரிமாற்றம்நடைபெறும்.
 ‘உலகைக் குலுக்கிய புத்தகங்கள்என்ற தலைப்பில் தெருமுனை நாடகம்,
எங்கே?
தமிழகத்தில் பல இடங்களில்

என்ன?
புத்தகத் தேர்’  இழுப்பு, மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சிகள் என இந்நிகழ்வுகள் நீட்சி கொள்கின்றன. புத்தகக் காட்சி நடைபெறும் இடங்களில் வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களிலிருந்து பிடித்தமான பகுதியை வாசித்தல், புத்தக விமர்சனம், எனத் திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் அறிவுலகத்தைச் சார்ந்தவர்களும், வாசகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்புச் செய்வர்.
உற்சாகத்துடன் பங்கேற்போம்! 
தமிழகமே வாசிப்போம்!


Share.

About Author

3 Comments

  1. ஐயா,
    வணக்கம், நான் புதுச்சேரியில் ஒரு தனியார் DTP கடையில் தட்டச்சராக வேலை செய்து வருகிறேன். நான் கணினியில் யுனிகோட் மற்றும் TTF முறையில் தமிழில் அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் விரைவாக தட்டச்சு செய்து தருவேன். தங்களுக்கு என்னுடைய சேவை தேவைப்பட்டால் தாங்கள் sinuvasan@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலும், 00918012174761 என்ற என்னுடைய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

    இப்படிக்கு
    சீனுவாசன்

  2. மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்-தாளவாடி மையத்தின் தலைவர் பரமேஸ்வரன் ஆகிய நான் எழுதுவது. தாளவாடி மலைப்பகுதி கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியமாகும்.இங்கு இருமாநில மக்களுக்கும் பயன்படும் விதமாக உலக புத்தக தினத்தை கடைப்பிடிக்க ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ -மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் முடிவெடுத்துள்ளோம்.அதுவும் ஒருவார இயக்கமாக கடைப்பிடிக்க முடிவு எடுத்து உள்ளோம்.இது முதல் மற்றும் புதிய முயற்சியாகும்.இப்பகுதியைச்சேர்ந்த அனைத்து பள்ளிகள்,அரசுத்துறைகள்,சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,கன்னட மக்கள் என அனைவரையும் சாதி,மத,இன,மொழி,ஏழை,பணக்காரர் என எவ்வித வேறுபாடுமின்றி அனைவரும் ஒரே சமூகம் என்ற உயர்ந்த எண்ணத்தை வளர்க்க,வாசிப்புத்திறனை ஊக்குவிக்க,புத்தக விற்பனையை அதிகப்படுத்த இவை சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தாளவாடி மையத்தில் முடிவு எடுத்துள்ளோம்.தங்களது ஆலோசனையும் கொடுத்து உதவ வேண்டுகிறோம்.எனது மின்னஞ்சல் முகவரி மற்றும் முகநூல் முகவரி paramesdriver@gmail.com // Facebook: parameswarandriver நன்றி! என PARAMESWARAN.C // TAMIL NADU SCIENCE FORUM // THALAVADY // ERODE DISTRICT.

Leave A Reply