பதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் – பதில்கள்

0
வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங்
1
பதிப்பு-காப்பு உரிமை குறித்து‍ வாசகர்களுக்கு இயல்பாக ஏற்படுகின்ற சந்தேகங்களின் பேரில் எழும் கேள்விகளுக்கு வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங் பதிலளிக்கிறார். . இதனை அசோகன் முத்துசாமி அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்.
லாரன்ஸ் லியாங் சட்டம் சம்பந்தமான ஆராய்ச்சியாளர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த சட்டரீதியான இயக்கங்களை நடத்தி வருபவர். மாற்றுச் சட்ட அமைப்பை(Alternative Law Forum)
அமைத்தவர்களில் ஒருவர். ‘‘அறிவு சார்ந்த சொத்துரிமை’’ சம்பந்தமான அரசியல் கோட்பாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்.
இவர் சட்டம், பொதுக்கலாச்சாரம் அறிவு சார்ந்த சொத்துக்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் அவர், மென்பொருட்களில் திறந்த வெளி அணுகுமுறை இயக்கத்தின் (Open Source Movement) முக்கிய ஆதரவாளர்.
இவர் ‘‘Sex Laws and Video tape: The public is watching, Guide to open content licenses’’  ஆகிய நூல்ககளை எழுதியுள்ளார். தற்போது ‘‘Law, Justice and Cinema’’  என்னும் நூலை எழுதி வருகிறார்.

2
என்னுடைய படைப்பின் மீதான எனது காப்புரிமையை நான் முறைப்படி பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றதா?
என்னுடைய கையெழுத்துப் பிரதியை (அல்லது தட்டச்சுப் பிரதியை) எங்கே நான் பதிவு செய்ய வேண்டும்?
இல்லை. காப்புரிமை தானாகவே வந்துவிடுகின்றது. சம்பிரதாயங்கள் எதுவும் தேவையில்லை. என்றபோதும், ஒரு படைப்பு யாருக்குச் சொந்தம் என்பதில் ஏதேனும் தகராறு வந்தால், காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்பதற்கான சட்டப்படி செல்லத்தக்க முதல்கட்ட சாட்சியமாக காப்புரிமைப் பதிவுச் சான்றிதழ் பயன்படுகின்றது.
காப்புரிமைச் சட்டத்தின் 48வது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது:
காப்புரிமைப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதில் பதியப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றிற்கு காப்புரிமைப் பதிவேடே முதல் கட்ட சாட்சியமாக விளங்கும். அல்லது காப்புரிமைப் பதிவாளரால் உண்மைப் பிரதி என்று சான்றளிக்கப்பட்ட, காப்புரிமை அலுவலகத்தின் முத்திரை பதிக்கப்பட்ட அந்த ஆவணங்களின் சாராம்சங்கள் முதல்கட்ட சாட்சியமாக விளங்கும் கூடுதல் அத்தாட்சியோ அல்லது மூலப்பிரதியைக் காட்ட வேண்டிய தேவையோ இன்றி அனைத்து நீதிமன்றங்களிலும் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். 
என்றாலும், காப்புரிமையைப் பதிவு செய்யாமலிருப்பது உங்களது படைப்புகள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட காப்புரிமைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையைப் பயன்படுத்துவதிலிருந்தும் உங்களை விலக்கி வைப்பதில்லை. இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இந்த நிலையை உறுதி செய்துள்ளன.
காவல்துறையினர் உள்ளிட்ட இச்சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பலர் பெரும்பாலும் இச்சட்டம் பற்றி நன்கு அறியாதவர்களாக இருக்கிறார்கள். பதிவுச் சான்றிதழ் இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆதலால் காப்புரிமையைப் பதிவு செய்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உங்களது காப்புரிமையை இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ள வகை செய்திருப்பதன் மூலம் அமைச்சரகம் அந்த வேலையை மேலும் சுலபமாக்கியிருக்கின்றது.
http://copyright.gov.in/UserRegistration/frmLoginPage.aspx என்கின்ற இணைய முகவரியில்  இந்தச் செயல்முறை பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம்.

3
1957_ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு படைப்பைப் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை என்ன?
ஒரு படைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே காப்புரிமை அமலுக்கு வந்து விடுகின்றது. காப்புரிமையைப் பெறுவதற்காக எந்தச் சம்பிரதாயமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. எனினும், கல்வித்துறையின் காப்புரிமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும் காப்புரிமைப் பதிவேட்டில் ஒரு படைப்பைப் பதிவு செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் செய்யப்பட்டுள்ள பதிவுகள் நீதிமன்றங்களில் முதல்கட்ட சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்துவிதமான படைப்புகளையும் பதிவு செய்து கொள்வதற்காகக் காப்புரிமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. காப்புரிமைப் பதிவாளர் அதன் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
அதன் முகவரி
 B.2/W.3, C.R.Barracks,
Kasturba Gandhi Marg,
 New Delhi -110003.
Tel. 338 4387.
4
 ஒரு நூலுக்குக் காப்புரிமை எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்?
ஒரு இலக்கியப் படைப்பின் ஆசிரியரின் இறப்புக்குப் பின் அறுபதாண்டுகள் வரை காப்புரிமை நீடிக்கும். காப்புரிமைச் சட்டத்தின் 22 வது பிரிவு கால அளவை அளிக்கின்றது.

5
ஒரு பத்திரிகையிலோ அல்லது செய்தித்தாளிலோ வெளிவரும் ஒரு படைப்பின் காப்புரிமைக்கு உரியவர் யார், பதிப்பாளரா அல்லது படைப்பின் ஆசிரியரா?
ஒரு ஆசிரியரின் இலக்கியப் படைப்பு விஷயத்தில் காப்புரிமைச் சட்டத்தின் 17 _வது பிரிவு பின்வருமாறு உரிமை அளிக்கின்றது
அ. செய்தித்தாள், பத்திரிகை அல்லது அது போன்ற வார, மாத இதழின் உரிமையாளரிடம் செய்து கொண்ட பணி ஒப்பந்தம் அல்லது பயிற்சி ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றும்போது.
ஆ. செய்தித்தாளிலோ, பத்திரிகையிலோ அல்லது அது போன்ற வார, மாத இதழ்களில் பிரசுரிக்கப்படுவதற்கென எழுதப்பட்டிருக்கும் போது.
அதற்கு மாறாக ஒப்பந்தம் எதுவும் போடப்படாத நிலையில், பதிப்பாளரே அந்தப் படைப்பினுடைய காப்புரிமையின் உடைமையாளராவார். ஆனால், இது செய்தித்தாள், பத்திரிகை அல்லது வார, மாத இதழ்களில் வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் மற்ற விஷயங்களில் படைப்பின் முதல் உரிமையாளராக, படைப்பாளியே இருப்பார்.
கீ

6
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் மீது தனக்குக் காப்புரிமை இருக்கிறது என்று ஒருவர் கூறினால் எப்படி? ஆசிரியரும், பதிப்பாளரும் இப்போது இல்லை. யாரேனும் அதை மறுபடியும் பதிப்பிக்கலாமா?
ஒரு நூல் 20_ம் “நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதிப்பிக்கப்பட்டது என்பதனாலேயே அதற்குத் தானாகவே இனியும் காப்புரிமை இல்லாமல் போய்விடாது. அந்த ஆசிரியர் எப்பொழுது மறைந்து போனார் என்பதைப் பொறுத்தது அது. எடுத்துக்காட்டாக, ஒரு நூல் 1910_ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு, அதன் ஆசிரியர் 1980_ம் ஆண்டுதான் இறந்து போனார் என்றால், காப்புரிமை 2040_ம் ஆண்டு வரை நீடிக்கும்.   
கீ  
7
காப்புரிமையை மற்றொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மாற்றுவதற்கான நடைமுறை என்ன?
உங்களது காப்புரிமையை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ பிறருக்கு எழுதி வைக்கலாம். அதற்கான நடைமுறைகள் சட்டத்தின் 18, 19 ஆகிய பிரிவுகளில் விதிக்கப் பட்டுள்ளன. அல்லது ஒரு குறிப்பிட்ட உரிமத்தை வழங்கலாம்.

8
பொதுத் தளத்தில்(public domain)  இலவசமாகச் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதால் திரைப்படச் சுவரொட்டிகள், நாட்காட்டி கலைப்படங்கள், தீப்பெட்டி முத்திரைச் சீட்டுகள் ஆகியவை காப்புரிமை உள்ள பொருட்களா?
ஒரு படைப்பு பொது அரங்கில் கிடைப்பதா லேயே அது காப்புரிமைப் பாதுகாப்பை  இழந்து விடுவதில்லை. ஒரு படைப்பில் காப்புரிமை இல்லாத நிலையிலோ அல்லது காப்புரிமை காலாவதியாகிவிட்ட நிலையிலோ தான் அது பொது அரங்கிற்கே வருகின்றது.
கீ
9
நு£லகங்களும், ஆவணக் காப்பகங்களும் காப்புரிமை உள்ள ஒரு படைப்பைப் பாதுகாப்பதற்காக நகலெடுக்க முடியுமா?
ஆம். ஒரு நூல் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை எனில், ஒரு பொது நு£லகப் பொறுப்பாளரின் உத்தரவின் பேரில் அதிகபட்சமாக அந்த நூலை மூன்றுக்கு மிகாமல் பிரதியெடுத்துக் கொள்வதற்கு (பிரசுரம், இசைத்தகடு, அட்டவணை, வரைபடம் அல்லது திட்டப்படம் உள்பட) காப்புரிமைச் சட்டத்தின் 52 (0) பிரிவு அனுமதி அளிக்கின்றது.
10
திறந்தவெளி அணுகுமுறை (Open axis) என்றால் என்ன? ( ஒரு படைப்பை ) திறந்தவெளி மூலமாக வெளியிடுவதனால் பிரச்சனைகள் உண்டா?
திறந்தவெளி அணுகுமுறை அல்லது இலவச மென்பொருள் என்பது அதை மறு உற்பத்தி செய்வதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது அதைத் தழுவி மற்றொன்றை உருவாக்குவதற்கோ தடைகள் எதுவும் விதிக்காத மென்பொருளைக் குறிக்கின்றது. நூல் வெளியீட்டாளர்களுக்குக்  கூடுதல் பொருத்தமான சொல் ‘திறந்த உள்ளடக்கம்’ என்பதுதான். இலக்கிய மற்றும் கலாசார படைப்புகளுக்குத் திறந்த உள்ளடக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, பொதுப் படைப்பாக்க உரிமங்கள் என்பவற்றிற்கு ஒரு உதாரணம், திறந்த உள்ளடக்க உரிமங்களாகும்.
‘பொதுப் படைப்பாளிகள்’ என்பது லாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். சட்டம் அளிக்கக்கூடிய அறிவுசார் உடைமை உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்த விரும்பாதவர்
களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ‘சில உரிமைகள் காப்புரிமைக்கு உட்பட்டவை’ என்றோ அல்லது ‘இப்படைப்பில் எதுவும் காப்புரிமைக்கு உட்பட்டவையல்ல’ என்று உலகிற்கு அறிவிப்பதற்கான எளிய, ஆனால் நம்பகமான வழிக்கான இன்னும் தீர்க்கப்படாத கோரிக்கை இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். முழுமையான காப்புரிமை தாங்கள் விரும்பும் வகையில் தங்களது படைப்பு வெளிச்சம் பெறுவதற்கும், பரவலாக விநியோகிக்கப்படுவதற்கும் உதவுவதில்லை என்கின்ற முடிவிற்குப் பலர் வெகு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார்கள். தொழில்முனைவோர் பலரும், கலைஞர்கள் பலரும் தங்களது படைப்பாக்க முதலீட்டிலிருந்து லாபம் பெறுவதற்கு இப்போது நூதனமான வழிமுறைகளையே தேர்வு செய்வார்கள். இன்னும் பலர் அறிவுசார் பொதுமைக்குப் பங்களிப்பதன் மூலமும்,
அதில் பங்கேற்பதன் மூலமும் மனநிறைவு அடைகிறார்கள். காரணங்கள் எதுவாயினும், இணைய குடிமக்கள் பலர் தங்களது படைப்புகளை மறுபயன்பாட்டிற்கும், மாற்றங்களுக்கு உட்படுத்தவும், பெருந்தன்மையான வகையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்பது தெளிவு. தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகின்றவர்களுக்காகப் பொதுப் படைப்பாளிகள் அமைப்பு தன்னுடைய இணையதளத்தில் கட்டணம் எதுவுமின்றி உலகிற்கு வழங்குகின்றது.

11
வர்த்தகம் சாராத உரிமத்தை நான் தேர்வு செய்தால், அப்போதும் என்னுடைய உரிமம் பெற்ற படைப்புகளின் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
நிச்சயமாக. வர்த்தக நோக்கமின்றிப் பயன்படுத்துதல் என்கின்ற நிபந்தனை உங்களது படைப்புகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். காப்புரிமை பெற்றுள்ள உங்களுக்கு அல்ல. உங்களது படைப்புகளை மற்றவர்கள் லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அல்லது நகலெடுத்தாலோ, பொருள் ஈட்டுவதற்காகவோ அல்லது பொருளாதார ஆதாயத்திற்காகவோ உங்களது அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. படைப்பாளிகள் தங்களது படைப்புகளை மேல்நிலைக்கு உயர்த்தவும், விற்பனை செய்யவும் புதிய வழிகளைப் பரிசோதித்துப் பார்க்குமாறு படைப்பாளிகளை ஊக்குவிப்பதுதான் எங்களது முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. உண்மையில், படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் வர்த்தக அம்சங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே, அதன் விநியோகத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும் கருவியாகவே வர்த்தக சார்பற்ற ஒரு உரிம முறையை நாங்கள் வடிவமைத்தோம்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்களது புகைப்படம் ஒன்றை வர்த்தகச் சார்பற்ற உரிம முறையில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அதை உங்களது இணையதளத்தில் வலையேற்றம் செய்கிறீர்கள். ‘ஸ்பெக்டக்கில்’ என்கின்ற ஒரு லாப நோக்கில் நடைபெறும் பத்திரிகையின் ஆசிரியர் உங்களது புகைப்படத்தைப் பார்க்கின்றார். அதைத் தன்னுடைய அடுத்த இதழின் அட்டைப் படமாகப் பயன்படுத்த விரும்புகிறார். வர்த்தகச் சார்பற்ற வகையின் கீழ் அவர் அந்தப் புகைப்படத்தைத் தன்னுடைய நண்பர்களுக்கும், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் காட்டலாம். ஆனால், அவர் அதைத் தன்னுடைய பத்திரிகைக்காகப் பயன்படுத்த வேண்டும் எனில், அவர் உங்களிடம் ஒரு ஒப்பந்தம் (நீங்கள் புத்திசாலியாக இருந்தால், பணம் பெற்றுக்கொண்டு) போட்டுக் கொள்ள வேண்டும்.

12
காப்புரிமை பதிவு செய்யப்பட்ட
ஒரு படைப்பின் எத்தனை பக்கங்கள்
ஒரு நூலகத்தில் பயன்படுத்துபவருக்குக் கொடுக்கப்படலாம்? அதே நபர் வேறு நாட்களில் எஞ்சியுள்ள பக்கங்களையும் கேட்டால் என்ன செய்வது?

சட்டத்தில் எண்ணிக்கையின் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் விவரிக்கப் படவில்லை. இலக்கிய, நாடக, இசை அல்லது கலைப்படைப்பை, ஆய்வு உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளும்போது ‘நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்’ என்கின்ற வார்த்தைகளை மட்டுமே சட்டம் பயன்படுத்து கின்றது. அது ஒவ்வொரு விவகாரத்தையும் (அல்லது வழக்கையும்) சார்ந்தது.

13
நான் வாசிப்பதற்காக ஒரு நூலை முழுமையாக நகலெடுக்க முடியுமா? என்னுடைய நண்பருக்கு அதை நான் பரிசளிக்கலாமா?
தனிப்பட்ட ஆய்விற்காக ஒரு படைப்பை நியாயமாகப் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் இல்லை. வழக்குச் சட்டத்திற்கான விளக்கப்படி, ஒரு படைப்பின் எவ்வளவு பகுதி நகலெடுக்கப்படுகின்றது என்கின்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்திருக்கின்ற போதும், ஆனால் நீங்கள் அதை மற்றவர்களுக்கு இரவல் அளித்தால் அது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு புறம்பானதாகக் கருதப்படக் கூடும்.
கீ
14
சில படைப்புகள் பொதுப் பணத்தின் மூலம் பதிப்பிக்கப்படுகின்றன. அவையும் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
ஆம். ஆனால், 52_ வது பிரிவில் அரசின்  படைப்புகளுக்குப் பிரத்யேகமான விதி விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

15
அறிவுத்திருட்டு (றிறீணீரீவீணீக்ஷீவீsனீ) என்றால் என்ன?
மற்றவருடைய படைப்பை அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, குறிப்பாகக் கல்விச் சூழலில் அப்படிச் செய்வது அறிவுத் திருட்டு எனப்படும். 
கீ
16
ஒரு ஆசிரியரின் காப்புரிமை அவரது சட்டப்படியான வாரிசுக்குத் தானாகவே மரபு வழிச் சொத்தாக ஆகிவிடுமா?
அதற்கு மாறாக உயில் எதுவும் இல்லாத வரையில், சட்டப்படியான வாரிசுகள் காப்புரிமையின் உடைமையாளர்களாக ஆகின்றார்.

17
கிராமபோன் தட்டுகளிலிருந்து இசையைக் குறுந்தகட்டில் பிரதியெடுத்து விற்பனை செய்யலாமா?
கூடாது. அது காப்புரிமை பெற்றவரின் ஒலிப்பதிவு உரிமையை மீறுவதாகும்.
கீ
18
பொது நிகழ்ச்சிகளுக்கு செய்தித்தாள்கள் அழைக்கப்படுகின்றன. அந்த செய்தித்தாள்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்குக் காப்புரிமை கோரப்படுகின்றது. செய்தித்தாளை அழைத்த நிறுவனத்தால் அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்த முடியுமா? புகைப்படங்கள் விளைபலனாக இருக்கலாம் ஆனால், அந்த நிறுவனம்தானே அதன் உள்ளடக்கம்?
இது அந்த நிகழ்ச்சியின் தன்மையைப் பொறுத்தது. அது ஒரு நிகழ்த்துக் கலையாக இருந்தால் முன்கூட்டியே நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை பொதுக்கூட்ட உரைகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் பற்றி செய்தி கூறுவதாக இருந்தால் காப்புரிமைச் சட்டத்தில் அவற்றுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

19
 காப்புரிமையை மீறுவதற்கு தண்டனை என்ன?
சட்ட மீறலுக்கு சிவில் மற்றும் கிரிமினல் பரிகாரங்கள் இருக்கின்றன .சிவில் பரிகாரங்களில் தடையுத்தரவு மற்றும் நட்டஈடு போன்றவை அடங்கும். சிறைத் தண்டனையும், அபராதமும் கிரிமினல் தண்டனைகளில் அடங்கும்.
கீ
20
 காப்புரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் எவை? அது மாநில அல்லது மத்திய அரசாங்கத்தின் தனியுரிமையா?
அது மத்தியப் பட்டியலில் 49_ஆவதாக வருகின்றது. 
கீ
21
 ஆண்டறிக்கைகள், நினைவு மலர்கள் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
ஆம், அவை அசலான படைப்புகள் என்கின்ற தகுதியைப் பூர்த்தி செய்தால்.

22
 உரிமையாளரற்ற படைப்புகள் என்றால் எவை? உரிமையாளரற்ற படைப்புகளைப் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
காப்புரிமை உள்ளவர் தன்னுடைய படைப்பு என்று உரிமை கோராமலிருந்தாலோ அல்லது பதிப்பாளர் அந்தப் படைப்பைப் பதிப்பிக்காமல் இருந்தாலோ அது உரிமையாளரற்ற படைப்பு ஆகும். அத்தகைய படைப்புகளை மறுபதிப்பு செய்வதற்கான நடைமுறைகளை ஒத்துக்கொண்ட பின்னர், காப்புரிமைப் பதிவாளருக்கு விண்ணப்பித்த பின்பு அவற்றுக்குக் கட்டாய உரிமம் வழங்குவதற்கு இந்தியச் சட்டம் அனுமதிக்கின்றது.
கீ
23
 காப்புரிமை அளிக்கப்பட்ட படைப்புகளின் விவரங்கள் அடங்கிய தேசியப் பதிவேடு இருக்கின்றதா? இம்மண்ணின் சட்டத்தைப் பின்பற்ற நாம் இதை எப்படி அறிந்து கொள்வது? ஏற்கனவே பொது வெளிக்கு வந்துவிட்ட ஆனால், அரிதாகிவிட்ட படைப்புகளைச் பதிப்பிப்பதற்கு எந்த முகமையேனும் தடையில்லாச் சான்று வழங்க முடியுமா?
காப்புரிமைப் பதிவாளரால் அது பராமரிக்கப்படுகின்றது. காப்புரிமை உள்ள ஒரு படைப்பைக் கட்டாய உரிமத்தின் மூலம் மறுபடியும் பதிப்பிப்பதற்கு நீங்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.

Share.

About Author

Leave A Reply