19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள்

1
வெ. ராஜேஷ்


16ஆம் நூற்றாண்டிலேயே அச்சில் வந்த முதல் இந்திய மொழி தமிழ் என்றபோதிலும் 19ஆம் நூற்றாண்டில் தான் அச்சியந்திரம்/தொழில்நுட்பம் தமிழ்ச்சமூகத்தில் பெருமளவு பரவத் தொடங்கியது. இலக்கணங்கள், அகராதிகள், காலண்டர்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றுடன் சென்னையில், முதலில் பதிப்பு செய்யப்பட்ட புத்தகங்களில் பழைய இலக்கிய நூல்களும் இருந்தன.  1812இல் ஞானப்பிரகாசப் பிள்ளை மாச தினசரிதை அச்சுக்கூடத்தில் திருக்குறளைப் பதிப்பித்தார். நாலடியார், திருவள்ளுவமாலை ஆகியவற்றையும் சேர்த்துப் பதிப்பித்தார். எனினும் 1835இல் சுதேசிகள் (உள்நாட்டவர்கள்) பதிப்பகம் தொடங்கும் வகையில் சட்டங்கள் தளர்த்தப்பட்ட பிறகுதான் பெருமளவில் தமிழ் நூல்கள் சென்னையில் அச்சிடப்பட்டன என்பதை நாம் பார்க்கிறோம். 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்கைத் தெரிந்து கொள்ள நமக்கு முதலில் தேவையான முக்கியமான ஒன்று தமிழ்ப் பகுதியில் எத்தனை அச்சகங்கள் இருந்தன, அவை எத்தனைப் புத்தகங்களை அச்சிட்டன என்பதாகும். சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட காலனியாதிக்கப் பொருளாதாரத்தில் உள்நாட்டு அச்சகத்தால் தங்களுடைய தொழிலை நடத்துவது கடினமாக இருந்தது. 1867 வரை எத்தனை அச்சகங்கள் தமிழ்நாட்டில் இருந்தன என்பதைப் பற்றிய முழுமையான விவரங்கள் நம்மிடம் இல்லை. 1867இல் கொண்டு வரப்பட்ட ஙீஙீக்ஷி சட்டம் (அச்சகங்கள் ஒழுங்குபடுத்தல், புத்தகங்கள் பதிவுச் சட்டம்) பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்தையும் சேர்ந்த அச்சகத்தாரும், பதிப்பகத்தாரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்களுடைய அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் வெளியீடுகள் பற்றிய அறிவிக்கையை நூல்கள் பதிவாளர் பொதுக்கட்டளை இயக்குநருக்கு (ஜிலீமீ ஸிமீரீவீstக்ஷீணீக்ஷீ ஷீயீ ஙிஷீஷீளீs ணீஸீபீ tலீமீ ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ ஷீயீ றிuதீறீவீநீ மிஸீstக்ஷீuநீtவீஷீஸீ) அனுப்ப வேண்டும் என்பதைக் கட்டாய-மாக்கியது. நூல் பதிவாளர் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மற்றும் பத்திரிகைகளின் பெயர்ப் பட்டியலை காலாண்டுக்கு ஒருமுறை தயாரித்து மாகாண அரசாங்கம் மற்றும் பொதுக்கட்டளை இயக்குநரின் உத்தரவின் மூலமாக அரசு செயலாள-ரின் (ஷிமீநீக்ஷீமீtணீக்ஷீஹ் ஷீயீ ஷிtணீtமீ) ஒப்புதலுக்கு அனுப்பினார். இக்காலாண்டு அட்டவணை மதராஸ் மாகாண அரசாங்கத்திற்காக வெளி-யிடப்-பட்ட செயின்ட் ஜார்ஜ் அரசிதழ் (திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ நிணீக்ஷ்மீttமீ) வெளியீட்டின் இணைப்பாக 1867 தொடக்கத்திலிருந்து பதிப்பிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்தப் பட்டியல்களை வரலாற்-றறிஞர்களும், தமிழ் இலக்கிய அறிஞர்களும் அணுகுவது அவசியமாகும்.
இந்த காலாண்டு நூற்பெயர் பட்டியலில் அச்சகத்தாரின் பெயர், முகவரி, நூலின் பெயர், படைப்பாளி/பதிப்பாசிரியரின் பெயர், நூல் பதிப்பிக்கப்பட்ட நாள், பதிப்பிக்-கப்பட்ட நூல்களின் எண்-ணிக்கை, உடைமையாளரின் உரிமைகள், பிரசுர உரிமைப் பதிவு ஆகியவற்றுடன் இன்னும் பல விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
1867 சட்டத்துக்கு (ணீநீt) முன்பு எத்தனை அச்சகங்கள் இருந்தன. அவற்றால் எத்தனை நூல்கள் பதிப்பிக்கப்பட்டன போன்றவை குறித்து முழுமை-யான தகவல்கள் நம்மிடம் இல்லை. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வந்த அச்சகங்களில் ஒன்று (சென்னை கல்வி சங்கம்) கல்லூரி அச்சகம் ஆகும். அது 1813இல் செயின்ட் ஜார்ஜ் கல்லூரியில் நிறுவப்பட்டது. கல்லூரியின் கண்காணிப்புக் குழுவால் (ஙிஷீணீக்ஷீபீ ஷீயீ ஷிuஜீமீக்ஷீவீஸீtமீஸீபீமீஸீநீமீ) தயாரிக்கப்பட்ட ஆண்டு நிர்வாக அறிக்கையில், கல்லூரி அச்சகத்தில் பதிப்பிக்கப்-பட வேண்டிய நூல்களுக்கான விளம்பரங்களை நாம் பார்க்க-லாம். அதில் பெரும்பாலானவை இலக்கணங்கள், அகராதிகள், பிரபலமான கதைகள், சட்டம் சார்ந்த நூல்கள், காலண்டர்கள், பஞ்சாங்கங்கள், வானியல் சார்ந்த நூல்களாகவே இருந்தனவே தவிர, தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்கள் சொற்பமாகவே இருந்தன. இதற்குக் காரணம் இந்தக் கல்லூரி லண்டனிலிருந்து வரும் அரசாங்க அதிகாரி-களுக்குத் தென்னிந்திய மொழிகள் பற்றி பாடம் புகட்டுவதற்காக அமைக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து-கொள்ள வேண்டும். அதனால் கல்லூரி அச்சகம் உடனடித் தேவையான பயன்பாட்டிற்குரிய நூல்களை பதிப்பித்தது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் 1827ஆம் ஆண்டு வருடாந்திர நிர்வாக அறிக்கையில் அக்கல்லூரி தொடங்கப்பட்ட 1812 முதல் 1825 வரை கல்லூரியின் பலவித துறை-களுக்கு செய்யப்பட்ட செலவுகள் பற்றிய விவரங்கள் இருந்தன. அச்சகப் பிரிவு செலவுகள் 1812இல் ரூ. 357 ஆக இருந்தது. இது 1825இல் ரூ. 72-00 ஆக உயர்ந்தது. கல்லூரி அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்களின் விவரப் பட்டியல் (ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ்) நம்மிடையே இல்லை. கல்லூரி அச்சகத்தால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் உலகம் முழுவதுமுள்ள நூலகங்களில் பரவிக் கிடக்கின்-றன. 19ஆம் நூற்றாண்டின் அச்சக, பதிப்பக வரலாற்றில் கல்லூரி அச்சகத்தின் இடத்தை அலசி ஆராய்வதற்கு முன்னால் கல்லூரி அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியலை நாம் தயாரிப்பது மிகவும் முக்கிய-மானது. அந்தக் கல்லூரியில் நூலகம் இருந்தது, அந்த நூலகத்தில் எப்படிப்பட்ட நூல்கள் சேகரிக்கப்பட்டு இருந்தன என்பதைப் பற்றி துரதிருஷ்டவசமாக நம்மால் அறிய முடியவில்லை. இது பற்றி அறிய எந்தவித நூல்-களின் பெயர்ப் பட்டியலும் இல்லை. பாதிரியார் வில்லியம் டெய்லரின் நூற்பட்டியல் கி சிணீtணீறீஷீரீuமீ ஸிணீவீsஷீஸீஸீமீ ஷீயீ  ளிக்ஷீவீமீஸீtணீறீ விணீஸீusநீக்ஷீவீஜீts வீஸீ tலீமீ லிவீதீக்ஷீணீக்ஷீஹ் ஷீயீ tலீமீ (லிணீtமீ) சிஷீறீறீமீரீமீ திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ என்பதன் முதல் தொகுதி 1857 இல் வெளியிடப்பட்டது. இது செப்டம்பர் 1828இல் கல்லூரி நூலகத்தில் ஆவணப்படுத்திய மெக்கன்ஸியின் தொகுப்புகளை மட்டுமே விவரமாகக் கொண்டுள்ளது.
ஞி.தி. கார்மிக்கேல் (பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் மதிப்பீட்டாளர் குழுவின் செயலாளர்) பாதிரியார் வில்லியம் டெய்லரின் கி சிணீtணீறீஷீரீuமீ ஸிணீவீsஷீஸீஸீமீ யின் முதல் தொகுப்பிற்கு ஒரு முன்னுரை எழுதியுள்ளார். மெக்கென்ஸியின் சேகரிப்புகளை மட்டுமே கொண்டுள்ள கல்லூரி நூலகத்தின் நூல் சேகரிப்பு குறித்த வரலாற்றை நமக்கு இம்-முன்னுரை தெரிவிக்கிறது. கார்மிக்கேல், மெக்கென்ஸிக்கு முன்பு அந்நூலகத்தில் 300 புத்தகங்கள் இருந்தது பற்றிய ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் அவர் கூறிய அந்த 300 புத்தகங்கள் என்னென்ன, அவை எப்படிக் கிடைத்தன என்பது பற்றிய வரலாற்றை குறிப்பாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கார்மிக்கேல் அவர்களே தெரிவித்துள்ளார்.
1835இல் அச்சகத்தின் கட்டுப்பாடு தளர்த்தப்-பட்ட பின் சுதேசி அச்சகங்கள் சென்னையில் பரவலாயின. அக்காலத்திய பெருமைமிக்க தமிழ்ப் பண்டிதர்களின் முன் முயற்சியால் சரஸ்வதி அச்சுக்கூடம், கல்விக் களஞ்சியம் அச்சுக்கூடம், கல்வி விளக்க அச்சுக்கூடம் போன்ற முக்கிய அச்சகங்கள் மெட்ராஸில் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டன. 1830களிலிருந்து, 1870 வரை தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள் எல்லாம், லட்சுமி விலாஸ அச்சுக்கூடம், பிரபாகர அச்சுக்கூடம், விவேக விளக்க அச்சுக்கூடம், சண்முக விலாஸ அச்சுக்கூடம், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், சரஸ்வதி விலாஸ அச்சுக்கூடம், வித்யாநுபாலன அச்சுக்கூடம் போன்ற அச்சகங்களில் பதிப்பிக்-கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் பதிப்பிக்-கப்பட்ட தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள் திருக்குறள், திருவாசகம், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, திரிகடுகம், திருமுருகாற்றுப்படை, பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், திருவிளை-யாடல் புராணம், எண்ணற்ற மத்தியகால பிரபந்த இலக்கியங்கள் ஆகியவையாகும். தொல்காப்பி-யத்தின் சில பகுதிகள், நன்னூல், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி போன்ற இலக்கணப் படைப்புகள் பதிப்பிக்கப்பட்டன. அச்சகத்தின் பெயர்கள், அதன் இருப்பிடம், பதிப்பிக்கப்பட்ட நூல்கள் போன்ற தகவல்களை இந்தப் புத்தகங்களிலிருந்து ஓரளவு நம்மால் அறிய முடிந்தாலும் பதிப்பகங்களின் வரவு_-செலவு கணக்குகள், நிதி ஆதரவு நூல்கள் வெளி-வர நிதி உதவிய புரவலர்கள், அச்சக உரிமை-யாளர்களின் வரலாறு போன்றவை பற்றிய விவரங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
1867வரை தமிழ்ப் பகுதியில் உள்ள அச்சகங்-களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் முழுமை-யானதல்ல. 1865இல் கி சிறீணீssவீயீவீமீபீ சிணீtணீறீஷீரீuமீ ஷீயீ ஜிணீனீவீறீ றிக்ஷீவீஸீtமீபீ ஙிஷீஷீளீs என்பதனை ஜான்மர்டாக் என்பவர் தொகுத்தார். அவர் இந்திய வைஸ்ராய்க்கு 10_1_1866 ஆம் தேதியன்று கல்கத்தாவிலிருந்து ‘ஞிutஹ் ஷீயீ நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt ஷ்வீtலீ க்ஷீமீsஜீமீநீt tஷீ க்ஷிமீக்ஷீஸீணீநீuறீணீக்ஷீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ வீஸீ மிஸீபீவீணீ’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் வைஸ்ராயால் மாகாண அரசாங்கங்-களுக்கு அனுப்பப்பட்டது. 1867ஆம் வருடத்திய அச்சகங்கள் ஒழுங்குபடுத்தல் _ புத்தகப் பதிவுச் சட்டத்திற்கு முக்கியமான மூலமாக இருந்ததில் இந்தக் கடிதமும் ஒன்று. மர்டாக் அந்தக் கடிதத்-தில், பதிப்பிக்கப்பட்ட எழுத்துகளை பத்திரப்-படுத்துவதன் தேவையைப் பற்றி மட்டுமின்றி அச்சக உரிமையாளர்களைப் பற்றிய விவரமும் தேவை என்பதைக் குறிப்பிட்டுள்ளார். மர்டாக் கூறியதை இங்கே குறிப்பிடுவது ஏற்றதாக இருக்கும். அவர் பின்வருமாறு கூறுகிறார்.
“ஒவ்வொரு வருடமும் எந்தெந்த பழைய நூல்கள் திரும்பவும் அச்சகத்தால் பதிப்பிக்கப்-பட்டுள்ளன என்பதன் விவரம் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு எந்தெந்தப் புதிய படைப்புகள் வட்டாரமொழி இலக்கியத்-தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட தகவல்கள் எப்படி சேகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை. வங்காள அரசாங்கம் பிரசுர உரிமைப் படைப்புகள் பற்றிய விவரங்களைக் கூறுபவர்-களுக்குப் பதிவுக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கிறது; மேலும், அந்நூல்களுக்கு அரசிதழ் வெளியீட்டில் இலவச விளம்பரம் கொடுக்கிறது.
இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை என்றாலும் இது போதுமானதல்ல. அச்சடிக்கப்-பட்ட நூல்களில் நான்கில் மூன்று பங்கு நூல்கள் பதிவு செய்யப்படவில்லை. அதனால் அவற்றைப் பற்றிய விவரங்களையும், அதோடு கூடிய ஆவணங்களையும் சேகரிக்க முடியாது. இதற்கான நெறிமுறை என்னவென்றால் ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும். அதாவது சட்டமுறை-யில் அனைத்து அச்சகங்களிடமிருந்து அவற்றின் வருடாந்திர வரவு_செலவு கணக்குகளைப் பெறவேண்டும். இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட ஒவ்வொரு நூலின் ஒரு பிரதியையும் நன்கொடை-யாக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் உண்டு. இந்த மாதிரி சட்டமுறைகளை இந்தியாவில் கொண்டு வருவது கடினம் என்று சிலர் நினைக்க-லாம். ஆனால் நூல்களின் பெயர், விலை, அளவு ஆகிய விவரங்களுடன் கூடிய பட்டியலை அளிப்பதற்கு ஆட்சேபணை எதுவுமில்லை. இந்-நிலைமையில் கவனம் தேவைப்படும் முதன்மையான அம்சங்கள் வருமாறு:
1.    அனைத்து அச்சகங்களும் உரிமம் (லிவீநீமீஸீநீமீ) பெற்றிருக்க வேண்டும்.
2.    எழுச்சி காலத்தில் ஒவ்வொரு வெளியீடும் அச்சகத்தாரின் பெயர், முகவரி ஆகிய-வற்றை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும்.
3.    அச்சடிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு தாளின் பிரதியும் (சிஷீஜீஹ்) கோப்பிடப்-பட்டு தேவைப்படும்போது சரிபார்க்க ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அச்சக நிறுவனங்களுக்கும் நிரந்தர உத்தரவாக இருக்க வேண்டும்.’’ (அரசாங்க உத்தரவு 79/80, கல்வித்-துறை 19.3.1867)
அச்சிடுபவர் அல்லது வெளியிடுபவர் அல்லது புத்தகங்கள் பற்றிய தகவல்கள் காணாமல் போ-கும் சமயத்தில் அச்சடிக்கப்பட்ட செய்தியை ஆவணப்படுத்துவதற்கான ஆர்வம் 19வது நூற்றாண்டின்போது, தீவிரமாக இருந்தது. இது, மர்டாக் இந்திய வைஸ்ராய்க்கு ஒரு யோசனை கூறிய முறையிலிருந்து தெளிவாகிறது. எனினும் 1867ஆம் ஆண்டு வரை நாம் அந்தக் காலத்திய நூல்கள் மற்றும் விளம்பரங்கள் குறித்த அபூர்வமான பட்டியல்களுடன் திருப்தியடைந்து கொள்ள வேண்டியிருக்கிறது-.
1835_க்கும் 1870_க்குமிடையே இயங்கிக் கொண்டிருந்த சுதேசி அச்சகங்களின் பொரு-ளாதார அடிப்படை என்ன? அரசாங்கத்தின் எந்த உதவியும் இந்த அச்சகங்களுக்கு அளிக்-கப்படவில்லை. இலக்கிய வரலாற்றாய்வாளர் ஒரு குறிப்பிட்ட அச்சகத்தை எடுத்துக்கொண்டு அதைப் பற்றி ஆராய்ந்தால் அது ஆர்வமுள்ள-தாக இருக்கும். 19ஆம் நூற்றாண்டில் லக்னோவில் இருந்த நேவல் கிஷோர் அச்சகம் ஹிந்தி மற்றும் உருது மொழிப் பதிப்புகளில் முக்கியமானதாக உயர்ந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி உல்ரிக் ஸ்டார்க் (ஹிறீக்ஷீவீளீமீ stணீக்ஷீளீ) என்பவர் ஓர் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
சென்னை மாகாணத்தில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் இல்லாமல் இருப்பது கவலையைத்-தான் அளிக்கிறது.. அறிஞர்களால் எழுதப்பட்ட அச்சக வரலாறும், பதிப்பக வரலாறும் அங்-கொன்றும் இங்கொன்றுமான தகவல்களையே தருகின்றன. 19ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் நூல்கள் தயாரிப்பு குறித்த கால அளவு ரீதியான அதாவது பொதுவான வரலாற்றை, அச்சகத்தார் அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் ஆகியவை குறித்த முழுமையான புள்ளிவிவரங்களுடன் எழுதுவது தேவை-யாகிறது. இத்தகைய வரலாறு 19ஆம் நூற்றாண்-டின் தமிழ் அச்சக, பதிப்பக வரலாற்றின் போக்குகளை அடையாளம் காண உதவும்.
அச்சக மற்றும் பதிப்பக வரலாற்றை சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். சமூக வரலாற்றுத் தளத்திலிருந்து தனித்துப் பார்க்கக்கூடாது என்பது முக்கியமானது. சமூக_மதச் சீர்திருத்த இயக்கங்களும், சாதி இயக்கங்களும், அச்சகம் மற்றும் பதிப்பக வரலாற்றுக்கு ஓர் ஊக்க சக்தியாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் யாழ்ப்பாணத்-தில் ஆறுமுக நாவலர் என்பவரால் கிறிஸ்துவ மதப் பரப்பாளர்களுக்கு எதிராக சைவ மறுமலர்ச்சி கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக முன் எப்போதுமில்லாத அளவுக்கு சைவத் தமிழ் இலக்கிய நூல்கள் பதிப்பிக்கப்-பட்டன. ஆறுமுக நாவலரின் மறுமலர்ச்சி முயற்சியால் வன்னார்பண்ணையின் செல்வவள-மிக்க நிலப்பிரபுக்களிடமிருந்து நிதிஉதவி பெற்றதோடு திருவாவடுதுறை ஆதீனம், ராமநாத-புரம் ஜமீன்தார் ஆகியோருடன் வலைப்பின்னல் போன்று நெருக்கமான தொடர்புகளையும் அவர் கொண்டிருந்தார். இந்த இயக்கமானது தமிழ் செவ்விலக்கியங்களின் பதிப்புக்கு ஒரு பிரதான ஊக்க சக்தியாக இருந்தது. இந்தப் பின்னணி-யில்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைவ மற்றும் பிராமண உரிமைகள் வற்புறுத்தப்-பட்டதன் பின்னணியில் அயோத்திதாச பண்டி-தரின் முயற்சிகளின் பங்கை நாம் தீர்மானிக்க வேண்டும். உயர் சாதியினர் பழந்தமிழ் இலக்கி-யத்தைத் தங்களுக்கேற்ற வகையில் தகவமைத்துக் கொண்டதை அவர் மிகக் கடுமையாக எதிர்த்-தார். இந்திய வரலாற்றுக்கு புத்த மத ரீதியில் விளக்கம் அளித்தார்.
1870களின் பிற்பகுதியில் தொடங்கி தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் ஒரு புதிய போக்கினை நாம் காணமுடிகிறது. முதல் முறையாக நாவல்-களும், சங்க இலக்கியப் படைப்புகளும் பதிப்பிக்-கப்பட்டன. வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற முதல் தமிழ் நாவல் 1879ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது; சென்னையில் ஸ்காட்டிஷ் அச்சகத்தால் அந்நாவல் 750 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. இந்தப் புதிய நாவலின் இலக்கிய நடை பிரபலமடைந்ததால் 1885 ஜூனில் சென்னையில் கலாரத்னாகர அச்சகத்தால் 2000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. இந்த நாவல் மற்ற சங்க இலக்கியப் படைப்புகளை விட பிரபலமடைந்-தது. அதன் தேவையும் அதிகரித்தது.
1887இல் சி.வை. தாமோதரம்பிள்ளை கலித்தொகையைப் பதிப்பித்தார். இதில் தொடங்கி எல்லா சங்க இலக்கியங்களும் முழுவதுமாக பதிப்பிக்கப்பட்டன.           உ.வே. சாமிநாத அய்யர் அவர்களால் பத்துப்பாட்டு (1889), புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904) போன்றவை பதிப்பிக்கப்-பட்டன. ஐம்பெரும் காப்பியங்களில் சீவக-சிந்தாமணி (1887), சிலப்பதிகாரம் (1892), மணிமேகலை (1898) ஆகிய மூன்றும் பதிப்பிக்-கப்பட்டன. 1880 தொடக்கத்தில் பதிப்பிக்கப்-பட்ட தமிழ் இலக்கிய நூல்கள், தமிழ் வரலாறு, இலக்கியம், கலாசாரம் ஆகியவை பற்றிய புரிதல்களை மாற்றின. சங்ககால இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய காலவரிசையைப் பின்னோக்கித் தள்ளின. மேற்கத்திய கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த உள்நாட்டு அறிவுஜீவிகள் பி. சுந்தரம் பிள்ளை, கனகசபைப்பிள்ளை,எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், கே.ஜி. சேஷையர் போன்றவர்கள் சங்க இலக்கியத்தை ஆதாரப்-பூர்வமாகக் கொண்டு தமிழ் வரலாற்றை பற்றி ஊக்க மிக்க கேள்விகளை எழுப்பினர். 1890களின் தொடக்கம் தமிழ் இலக்கியப் பதிப்பக வரலாற்றில் ஒரு புதுப்போக்கை உருவாக்கியது. படிக்கும் பொதுமக்களிடையே நாவல்கள்தான் தமிழ் இலக்கியப்படைப்புகளைவிட பிரபல-மடைந்தன. அவைகளுக்கான தேவையும் அதிகரித்தது.  தமிழ்ச் சங்க இலக்கியப் படைப்பு-களின் முதல் பதிப்பு எதுவும் 1000 பிரதிகளுக்கு மேல் பதிப்பிக்கப்படவில்லை. ஆனால் ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தின் இரண்டாவது பதிப்பில் 2000 பிரதிகள் பதிப்பிக்கப்பட்டன. சங்க இலக்கியம் முதல் பதிப்புக்கும், இரண்டாவது பதிப்புக்கும் நீண்ட இடைவெளியிருந்தது. ஆனால் நாவல்கள் உடனுக்குடன் அதிகமாக பதிப்பிக்கப்பட்டன. ஆறு வருட காலத்தில் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ முதல் பதிப்பில் 750இலிருந்து இரண்டாவது பதிப்பில் 2000ஆக உயர்ந்தது.
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திலும், நூலகங்களிலும் தகவல்கள் நிறைய இருப்பினும் 19ஆம் நூற்றாண்டின் தமிழ்ப் பதிப்பக வரலாறு பற்றிய அறிவு இன்னும் தொடக்கக் கட்டத்தி-லேயே உள்ளது.
தமிழ்ச் சமூகத்தில் பதிப்பு வரலாறு குறித்த ஆராய்ச்சிக்குள் நுழைவதற்கு முன்பு அது குறித்த கால அளவியல் ரீதியான முழுமையை உள்ளடக்கிய வரலாற்றை முதலில் உருவாக்க வேண்டும் என்பதில் ஆய்வாளர்கள் ஈடுபட-வேண்டும்; அதற்கு உரிய தருணம் இதுதான். பின்னர் நூல்கள் தயாரிப்பு குறித்த கால அளவு ரீதியான வரலாறு 19வது நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வெளியீடுகளில் நிலவிய போக்குகளை அடையாளம் காண்பதற்கான ஆரம்பகட்டமாக இருக்க வேண்டும். இதில் சமூக வரலாற்றைத் தவிர்ப்பதற்கில்லை.
Share.

About Author

1 Comment

Leave A Reply