மொழிபெயர்ப்பு பதிப்புகள்

0
ந. முருகேசபாண்டியன்


தமிழில் பன்னெடுங்காலமாக கருத்துகளைப் பதிவாக்கிட கற்பலகைகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பெரிதும் பயன்பட்டன-. இலக்கண இலக்கிய நூல்கள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டு வந்தன. ஓலைச்சுவடிகளை எழுதுதலும் அவற்றைப் பாதுகாத்தலும் என்பது சமூக மதிப்புடன் தொடர்புடையதாகி மடத்தினர் மற்றும் உயர் சாதியினரிடம் மட்டும் வழக்கிலிருந்தன. இதனால் கல்வி கற்றல், எழுதுதல், என்பது விளிம்புநிலை மக்களுக்கு முற்றிலும் மறுக்கப்பட்ட சூழல் நிலவியது. இத்தகு சூழலில், ஐரோப்பியரின் இந்திய வருகைக்-குப் பின்னர், அவர்களால் அச்சடிக்கப்பட்ட தமிழ்ப் புத்தகம் என்பது தமிழர் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் ஊடக வரலாற்றில் அச்சு ஊடகம் தான் பண்டிதரிடம் மட்டும் மறைபொருளாக இருந்த தமிழை விடுவித்து மக்கள் தமிழாக்கியது. தமிழ் நூல்களுடன் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவருவதற்கான சூழல் ஆழ்ந்த பரிசீலனைக்-குரியது.
இந்தியாவிற்குக் கடல் வழி கண்டறிய முயன்ற ஐரோப்பியர் கி.பி.15ஆம் நூற்றாண்டில் வெற்றியடைந்தனர். ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள், இந்திய மன்னர்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, துப்பாக்கி, வெடிமருந்து போன்றவற்றின் துணையுடன் இந்தியாவில் ஆட்சியதிகாரத்-தினைக் கைப்பற்ற முயன்றன. இதே கால-கட்டத்தில் கிறிஸ்தவ சமயத்தினைப் பரப்பிட கிறிஸ்தவக் குருமார்களும் இந்தியாவிற்கு வந்தனர். புறநிலையில் அரசியலிலும், அக-நிலையில் சமயத்திற்குள்ளும் ஊடுருவ, இந்திய மக்களிடம் வழங்கியிருக்கும் மொழிகளைக் கற்றுத் தேர்ந்திட வேண்டிய தேவையானது, ஐரோப்பியருக்கு ஏற்பட்டது. இதனால்தான் இருமொழி அகராதிகளும், புதிய இலக்கண நூல்களும் எழுதிடும் முயற்சியில் ஐரோப்பியர் ஈடுபட்டனர்; ஐரோப்பிய மொழிகளில் வளமாக இருந்த உரையாடல் வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்த முயன்றனர். இத்தகைய சூழல் தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் தோன்று-வதற்கான வலுவான பின்புலத்தை ஏற்படுத்தியது.
குறில், நெடில் வேறுபாடின்றி எழுதப்பட்-டிருந்த தமிழ்ச் சுவடிகளை வாசிக்கச் சிரமப்-பட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள், தொடக்கக் காலத்தில் ஐரோப்பிய அச்சுக்கூடங்களில் தமிழ் நூல்களை அச்சடித்து, தமிழகத்தில் விநியோகித்-தனர். போர்த்துக்கீசிய மன்னரான மூன்றாம் ஜானின் ஆணைக்கேற்ப போர்த்துக்கீசிய மொழியிலிருந்து லிusமீஷீ ஜிணீனீவீறீ நீணீtமீநீலீவீsனீ என்ற நூல், ‘கிறிஸ்தவ வினாவிடை’ கி.பி. 1554ஆம் ஆண்டு தமிழில் வெளியானது. இதுவே மேலைநாட்டில் அச்சிடப்பெற்ற முதல் இந்திய நூல். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ ஜெபங்களையும் கருத்துகளை-யும் உள்ளடக்கிய சிணீக்ஷீtவீறீளீணீ என்ற நூல், வெளி-யிடப்-பட்டது. இந்நூலில் தமிழ்ச் சொற்கள் ரோம் லிபியில் எழுதப்பட்டிருந்தன.
என்ரீக்கோ என்றீக்கல் அடிகளும் புனித ராயப்பர் மனுவேல் அடிகளும் இணைந்து மொழிபெயர்த்த ‘தம்பிரான் வணக்கம்’ (ஞிஷீநீtக்ஷீவீஸீணீ சிலீக்ஷீவீstணீனீ) என்ற தமிழ் நூல் கேரளத்தி-லுள்ள கொல்லத்தில் அச்சடிக்-கப்பட்டு கி.பி. 1574ஆம் ஆண்டு வெளியானது. தமிழகத்தி-லுள்ள வைப்புக்-கோட்டை என்ற ஊரில் நிறுவப்பட்-டிருந்த அச்சுக்கூடத்தில், கிறிஸ்தவ வேதோபதேசம் (திறீஷீs ஷிணீஸீநீtஷீக்ஷீuனீ) என்ற தமிழ் நூல் அச்சடிக்கப்பட்டு இயேசு சபைப் பாதிரிமாரால் கி.பி. 1577ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் நிறுவப்பெற்ற அச்சுக்கூடங்களில் மேலைநாட்டி-லிருந்து கொண்டு வரப்பெற்ற அச்சியந்திரங்-களில் ஐரோப்பிய வல்லுநர்கள் சிறப்பாகப் பணியாற்றினர். இதனால் தமிழில் அச்சு நூல்களின் எண்ணிக்கை பெருகியது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ சமய நூல்களின் எண்ணிக்கை தொடக்கக் காலத்தில் அதிக அளவில் இருந்தன. ஓலைச் சுவடிகளுக்கு மாற்றாக காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்கள் அடித்தட்டு மக்களால் விரும்பி வரவேற்கப்-பட்டன.
தமிழில் கிறிஸ்தவ சமய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது, தொடக்கக்கால உரைநடை வரலாறு, மொழி வரலாறு, சமூக வரலாறு, சமய வரலாறு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். தமிழில் உரைநடை வரலாற்றுத் தொடக்கம் மொழிபெயர்ப்புகளின் வரலாறுதான். ஐரோப்பிய மொழிகளில் உரைநடை வடிவிலிருந்த கிறிஸ்தவ சமய நூல்களைத் தமிழாக்கும்போது, பேச்சு நடையி-லிருந்த தமிழுக்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் முக்கியத்துவம் தந்தனர். அன்றைய காலகட்டத்-தில் செய்யுள் நடையில் எழுதுவதுதான் மேன்மையான இலக்கியம். உரைநடையில் எழுதுவது கீழானது என்ற கருத்து உயர்சாதி இந்துக்களிடமும், பார்ப்பனர்களிடமும் நிலவியது. அதாவது யாப்பு அடிப்படையிலான செய்யுள் வடிவமென்பது கற்றறிந்த மேல் தட்டினரிடையே மட்டும் வழக்கிலிருந்தது. பாமரருக்குப் புரியாத மொழியில் எழுதுவது என்பது உயர்சாதியினரின் தந்திரம்; அறிவுத் துறையில் பிற சாதியினர் நுழையாதிருக்கவும், அவற்றைத் தாங்கள் மட்டும் அனுபவிக்க-வும் அவர்கள் தொடர்ந்து செய்யுள் வடிவத்தையே முன்னிலைப்-படுத்தினர். அன்றைய காலகட்டத்தில் கல்வி கற்கும் உரிமையானது எல்லோருக்கும் மறுக்கப்பட்டிருந்தது. மன்னர்-களின் ஆதரவினால் பார்ப்ப-னர்கள் வேதக்கல்வி கற்று சமூக மதிப்பீட்டில் தங்களு-டைய நிலையைத் தக்க வைத்துக் கொண்-டிருந்தனர். இத்தகு சூழலில் ஐரோப்பியப் பாதிரி-யாரான சீசன்பால்குவினால் தமிழாக்கப்பட்ட கிறிஸ்தவ விவிலிய நூல். கி.பி. 1714ஆம் ஆண்டில் உரைநடை வடிவில் அச்சு வடிவம் பெற்றபோது, கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. விவிலிய நூலின் தமிழ் வடிவம் ‘பறையர் வேதம்’ என்று கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் ஆழமாக வேரூன்றியிருந்த வைதீக இந்து சமயத்தின் சநாதனப் பார்வை, மொழி-பெயர்ப்பு முயற்சியிலும் வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அச்சியந்திரம் தமிழகத்திற்கு கி-.பி. 16ஆம் நூற்றாண்டில் அறிமுகமானாலும், அவை இரு நூறு ஆண்டுகளுக்கும் கூடுதலாக கிறிஸ்தவப் பாதிரியார்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. தமிழகத்தை ஆண்ட ஐரோப்பிய நாட்டினர், தமிழர்களிடையே நிகழும் கருத்துப் பரவல், கல்வி கற்றல் குறித்த கண்காணிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வந்தனர். எனவேதான் கிறிஸ்தவ பாதிரியார்களால், ஐரோப்பிய அலுவலர்களுக்குப் பயன்படும் இருமொழி அகராதிகள், தமிழ் இலக்கண நூல்கள் அதிக அளவில் அச்சிடப்பட்டன. மேலும் கிறிஸ்தவ சமயத்தைத் தமிழரிடையே பரப்பிட சமயப் பிரச்சார நூல்களும் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்பட்டன. கி.பி. 1835இல் ஆங்கிலேய அரசாங்கம் இந்தியர்களும் சொந்தமாக அச்சுக்-கூடம் நிறுவி, தங்களுடைய தாய்மொழியில் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது. அச்சுச் சட்டத்தின் ஒரு பிரிவான நூல்கள் பதிப்புச் சட்டம் இந்திய மொழிகளில் நூல்கள் வெளியிடும் முறையினை வரையறுத்தது. நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், அச்சுக்-கூடத்தின் பெயர், பதிப்பாளர் பெயர், பதிப்பித்த இடம், பதிப்பு ஆண்டு போன்ற தகவல்களைப் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில் அச்சடிக்கப்-படாவிடில், ரூ.5000/_ வரை ஒறுத்தல் தொகை வசூலிக்கப்படும் என அச்சுச் சட்டத்தின் உட்பிரிவு எச்சரித்தது. தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டினைக் கண்காணிக்கும் வகையில் ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றினாலும், தமிழில் பல்துறைப் புத்தகங்கள் வெளியாகும் நிலைமை ஏற்பட்டது. இச்சட்ட அமுலாக்கத்-தின் பின்னரே என்பது தான் உண்மை. ஓலைச்-சுவடி தயாரிப்பிற்கான செலவுடன் ஒப்பிடும்-போது, அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகத்தின் விலை குறைவு. எனவே ஓரளவு பொருளியல் வசதியுடைய தமிழர்களிடையே புத்தகங்களை விலைக்கு வாங்கி, வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அச்செழுத்தினை ‘எழுதா எழுத்து’ என்று குறிக்கும் வழக்கம் தொடக்கக் காலத்தில் தமிழர்களிடையே நிலவியது.
பதிப்பகங்களின் போக்குகள்
இன்றைய கணினியுகத்திலும் அச்சு ஊடக-மானது, தமிழில் செல்வாக்குடன் விளங்குகிறது. மனித குல வளர்ச்சியென்பது, கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரு நிலைகளிலும் ஊடகங்-களைச் சார்ந்து இயங்கும் சூழலில், நூல்களின் பங்கு கணிசமாகவே உள்ளது. பொதுக் கருத்-தியல் அல்லது பொதுப் புத்தியை உருவாக்கிடும் புத்தகங்களை எழுதுகின்ற நூலாசிரியரை விடப் புத்தகத்தினை வெளியிடும் பதிப்பகத்தினருக்கான சுதந்திரம் கூடுதலாகும். இந்நிலையில் மொழி பெயர்ப்புப் புத்தகங்களைத் தமிழில் வெளியிடு-கின்ற பதிப்பகத்தினரின் நோக்கங்கள் பலதரப்பட்டன. அவற்றில் சில.
1.    பொருளீட்டுதலுக்காக வணிக நோக்கில் புத்தகம் வெளியிடுதல்.
2.    பொருளீட்டுவதுடன் ஓரளவு லட்சிய நோக்குடனும் புத்தகம் வெளியிதல்.
3.    லட்சிய நோக்குடன் புத்தகம் வெளியிடுதல்.
வணிகமயமான பதிப்பகத்தினர் மொழி-பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டிலும் வருவாயை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஆவர். இத்தகையோருக்குப் புத்தகங்கள் வெறும் சந்தைக்கான நுகர்வுப் பொருட்கள். புத்தகத்-துக்காகச் சந்தையை உருவாக்க முயலுதலும், சந்தைக்கேற்ற புத்தகங்களைக் கண்டபடி வெளியிட்டுப் பொருளீட்டலும் இவர்களுடைய முதன்மை நோக்கங்கள்.
மேலை நாடுகளில் வணிக ரீதியில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள மூன்றாந்தரமான படைப்புகளை மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லாமல் தழுவியெழுதித் தமிழில் வெளி-யிடுவதை வணிகப் பதிப்பகத்தினர் ஊக்கப்-படுத்துகின்றனர். கொலை, கொள்ளை, திகில், மர்மம் நிறைந்த மலிவான ஆங்கில நாவல்களைத் தழுவித் தமிழாக்கும் போக்கு 1890 _ 1920 ஆண்டு-களில் வலுவாக இருந்தது. ரெயினால்ட்ஸ், கொனான்டாயில் போன்றோரின் மூன்றாந்-தரமான படைப்புகள் தமிழில் செல்வாக்குப் பெறவும், அவர்களைப் பின்பற்றி வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புச்சாமி ஜே.ஆர். ரெங்கராஜு போன்றோர் தமிழில் பிரபலமடையவும் வணிகப் பதிப்பகத்தினர் முக்கியக் காரணமாக விளங்கினர்.
ஷெர்லாக் ஹோம்ஸ், பெரிமேசன் போன்-றோரின் துப்பறிதல் போன்ற மர்மக் கதைகள் தமிழ் வடிவம் பெறவும் பதிப்பகத்தினரே முயன்றுள்ளனர். எதை மொழி பெயர்த்தால் அதிகமாக விற்பனையாகுமோ அதையே சந்தைப்படுத்துதல் என்பது சமூக விழுமியங்-களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.
இன்று தமிழில் தனிமனிதனின் ஆளுமையை வளப்படுத்த முயலும் சுயமுன்னேற்ற நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உலகமயமாக்கல் காரணமாக உலகமெங்கும் சுரண்டப்படும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் வயிறார உணவு உண்ணவே சிரமப்-படும் சூழல் நிலவியது. வறுமை, வேலைவாய்ப்-பின்மை நிலவுவதற்குக் காரணமாக விளங்கும் சமூக அமைப்பு பற்றி அக்கறை கொள்ளாமல், எல்லாவற்றுக்குமான தீர்வு, ஒவ்வொருவருக்-குள்ளும் பொதிந்துள்ளது என்று வாசகனையே மையப்படுத்தும் சுய முன்னேற்ற நூல்கள், தனி-மனிதனையே எல்லாவற்றுக்கும் பொறுப்புக்குள்-ளாக்குகின்றன.  லட்சக்கணக்கில் அமெரிக்கா-வில் விற்பனையான நூல் என்ற அடையாளத்-துடன் வெளியிடப்படும் இத்தகைய மொழி-பெயர்ப்பு நூல்கள், மனிதனை சமூகத்திலிருந்து பிரிப்பதுடன், அவனை குற்றமனப்பான்மைக்கு உள்ளாக்குகின்றன. யோகம், தியானம், ஆன்மீக விடுதலை ஆகியவை பற்றிப் பேசும் குறிப்பிட்ட சமயச் சார்பற்ற யோகா மாஸ்டர்கள் எழுதி-யுள்ள புத்தகங்களின் தமிழாக்கமும், தனிமனி-தனை, மையமிட்ட நிலையில் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றுள்ளன; பல பதிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழில் எவை மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற புரிதல் இன்றி, மேலைநாட்டுக் குப்பைகளை எல்லாம் தமிழாக்கிக் ‘காசு’ பண்ண முயலும் பதிப்பகத்தினரின் முயற்சிகள் ஆழமான விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியனவாகும்.
எண்பதுகளில் தொடங்கி தமிழில் பரபரப்பாக விற்பனையாகும் மாத நாவல்கள், பாக்கெட் நாவல்கள், குடும்ப நாவல்கள், கிரைம் நாவல்கள் வெளியீட்டில் மறைமுக நிலையில் மொழிபெயர்ப்பு செல்வாக்குச் செலுத்துகின்றது. கொலை, கொள்ளை, பாலியல், மர்மம், திகில் போன்ற அம்சங்களைக் கலந்து எழுதப்பட்ட ஆங்கில நாவல்களைத் தழுவியெழுதி ராஜேந்திர குமார், ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் இன்று முழு வீச்சுடன் பொருளீட்டுகின்றனர். அதேவேளையில் இவர்களின் இந்நூல்கள் வாசகர்களின் இலக்கிய ரசனையை மழுங்கடிப்பதுடன், அசலான தமிழ்ப் படைப்புகளின் பரவலைத் தடுத்திடவும் முயலுகின்றன. இத்தகைய மூன்றாந்தரமான தழுவல் போக்கு என்பது பதிப்பகத்தினரின் தூண்டுல் காரணமாக பெரிய அளவில் சந்தைப்-படுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.
புத்தக வெளியீடு என்பது பொருளீட்டு-வதற்காகத் தான் என்ற கருத்தைக் கொண்டிருப்-பினும், தரமான நூல்களையும் வெளியிட வேண்டுமென்ற நோக்கமுடைய பதிப்பகத்தினர் தமிழில் கணிசமாக உள்ளனர். இத்தகையோரின் முயற்சி காரணமாகவே தமிழில் அதிக அளவில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. வெகுசன ரீதியிலான புத்தகங்களை வெளியிடும் பதிப்பகம் அறிவியல் மொழிபெயர்ப்பு புத்தகத்-தையும் வெளியிடுவது என்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அல்லயன்ஸ், கலைமகள் போன்ற பதிப்பகங்கள் குறிப்பிடத்தக்க அறிவியல் மொழிபெயர்ப்பு புத்தகங்களை வெளியிட்-டுள்ளன. பெ.நா. அப்புஸ்வாமி போன்ற மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதிட இத்தகைய பதிப்பகத்-தினரே ஆதாரமாக விளங்கியுள்ளனர்.
சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் பன்முகத் தன்மையான போக்குகளை வளர்க்கும் என்ற நோக்கில் செயற்படும் பதிப்பகத்தாரின் பதிப்பு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்றன. அரசியல், அறிவியல், சமயம், இலக்கியம் போன்ற பல்துறை நூல்களின் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்-கிடும் பதிப்பகத்தினரின் முயற்சிகள் காலந்-தோறும் தமிழர் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுப் பொருளீட்டுவது இத்தகைய பதிப்பகங்களின் நோக்கமன்று. முன்னர் வெளியிட்ட நூல்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பினும் பதிப்பகத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தரமான நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவார்கள்.
தரமான பதிப்பகங்களை தனியார் பதிப்பகங்கள், நிறுவனம் சார்ந்த பதிப்பகங்கள் என இரு பெரும் பிரிவுக்குள் பகுக்கலாம்.
தமிழில் இலக்கியப் போக்குகள் வளர்ச்சி-யடைந்ததில் பிறநாட்டு மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு முக்கியமான இடம் உண்டு. இன்று நவீன இலக்கியம் என்று அறியப்படும் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை உருவாக்கத்தில், மொழிபெயர்ப்புகள் பின்புலமாக விளங்குகின்றன. கி.பி-. 1870இல் வீ. விசுவநாதம் பிள்ளை மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் ‘தி மெர்ச்சண்ட் ஆப்வெனிஸ்’ நாடகமானது வெனிஸ் வர்த்தகன் என்ற பெயரில் புதிய போக்கினுக்கு வித்திட்டது. இதுபோன்ற பல்வேறு மொழிபெயர்த்த நூல்களைச் சான்றாகக் காட்ட முடியும்.
“உலகிலுள்ள பல மொழிகளிலும் ஊறிக் கிடக்கும் சிறந்த உண்மைகளை உறுதியாக மொழிபெயர்த்து, அழியாவண்ணம் நமது தாய்மொழியான இனிய தமிழில் நிலைபெற்று நிலவுவதே எங்கள் ஸ்டார் பிரசுரத்தின் நோக்கம்’’ என்ற பதிப்பகத்தினரின் அறிவிப்பு மிகவும் உயர்வானது.
“எட்டுத் திக்குகளிலும் சென்று இறவாப் புகழுடைய இலக்கியங்களை தமிழ் மொழிக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்ற எண்ணமே, ஆற்றங்கரை ஆலை போன்ற சிறந்த நூல்களை வெளியிடுவதன் அடிப்படைக் கருத்தாகும்’’ என்ற நோக்குடைய தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இதுவரை நூற்றுக்கணக்கான இலக்கிய நூல்களையும், பிறதுறைநூல்களையும் தமிழாக்கிப் பதிப்பித்-துள்ளது.
இவைபோன்று பல்வேறு சான்றுகளைத் தர முடியும். மொழிபெயர்ப்பு என்பது மேலையுலகச் செல்வங்களை எல்லாம் தமிழருக்கு அறிமுகம் செய்யும் என்ற நம்பிக்கையில் லட்சிய நோக்கம் பொதிந்துள்ளது.
‘சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழில் வெளியிடும் முதன்மையான நிறுவனம்’ என்ற தலைப்பு ஜோதி நிலையம் 1950களில் வெளியிடத் தொடங்கிய மொழிபெயர்ப்பு நூல்களில் இடம் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல.       ஏ.கே. கோபாலன், புதுமைப் பிரசுரம், ஸ்டார் பிரசுரம், சக்தி காரியாலயம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போன்ற பதிப்பகங்களும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் லட்சிய நோக்குடன் செயற்பட்ட தொடக்கக் காலப் பதிப்பகங்கள் ஆகும்.
நிறுவனங்களின் வெளியீடுகள்
அனைத்துலக நிறுவனங்கள், அரசாங்க சார்பில் நடத்தப்பெறும் பதிப்பகங்களும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் அவையின் அங்கமான யுனெஸ்கோ கல்வி, கலை, பண்பாடு போன்ற-வற்றால் ஒருங்கிணைந்த பார்வை கொண்-டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பண்பாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பிற-நாட்டு மொழியிலுள்ள முக்கியமான நூல்கள் வெளிவரத் தேவையான பொருளுதவி அளிப்ப-துடன் மூல ஆசிரியரின் அனுமதியையும் பெற்றுத் தருகிறது. யுனெஸ்கோவின் உதவியுடன் சென்னையிலிருந்த தென்மொழிகள் புத்தக-நிறுவனம் தமிழில் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. மேலும் அவ்-வமைப்பு, நேஷனல் புக்டிரஸ்ட் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் குழந்தைகளுக்கான மொழி-பெயர்ப்பு நூலினையும் வெளியிட்டுள்ளது.
இந்திய அரசினால் 1954இல் நிறுவப்பெற்ற அமைப்பான சாகித்ய அகாடமி, மொழி-பெயர்ப்பு படைப்புகள் வெளியீட்டினை ஊக்கப்படுத்துவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. சாகித்ய அகாதெமி நிறுவனம் சொந்தமாகவும், தமிழகப் பதிப்பகங்களுடன் இணைந்தும் மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்துள்ளது. சாகித்ய அகாதெமி தேர்ந்-தெடுத்து வெளியிட்டுள்ள நூல்களின் தரம் பற்றி மாறுபாடான கருத்துகள் உள்ளன. “சாகித்ய அகாதெமி தேர்ந்தெடுத்த பிறநாட்டு இலக்கியப் படைப்புகள் தரமானவை. எனினும் அவற்றினை மொழிபெயர்த்த பேராசிரியர்களின் மொழிபெயர்ப்புகள் இலக்கியத் தரமாக அமையவில்லை; எனினும் சுமார் 10 அல்லது 20 நூல்களாவது சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புகளில் தேறும் என்று க.நா.சு. குறிப்பிட்டுள்ள கருத்து ஆய்விற்குரியது.
இந்திய அரசாங்கத்தின் பண்பாட்டு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், மக்க-ளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கென்று நிறுவப்பட்டதாகும். அரசியல், பண்பாடு, நுண்கலை வரலாறு, மெய்யியல், இலக்கியம் போன்ற பல்துறை நூல்களின் தமிழாக்கத்திற்கு நேஷனல் புக் டிரஸ்ட் அடிப்படையாக விளங்குகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் வெளியாகும் முக்கியமான நூல்களைப் பற்றிய அறிவும், அவற்றை வாசித்து மதிப்பிடுவதும் தமிழகத்தில் வழக்கிலுள்ளன. ஆனால் அண்டை மாநிலங்களில் வெளியாகும் புத்தகங்கள் பற்றி யாரும் அறியமாட்டார்கள். இந்நிலையைப் போக்கி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளில் வெளியாகியுள்ள முக்கியமான நூல்களைப் பக்கத்து மாநிலத்துக்காரருக்கு அறிமுகப்படுத்துவதில் இந்திய அரசின் பண்பாட்டு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்று-கின்றன.
தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் தமிழில் கல்லூரிக் கல்வியை வழங்கிட வேண்டுமென்பதற்காகப் பல்துறை நூல்களை நூற்றுக்கணக்கில் தமிழாக்கி வெளியிட்டுள்ளது. இதனால் அறிவியல், சமூக அறிவியல், தொழில்-நுட்பம், கலையியல் பாடங்களைத் தமிழில் எழுதுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் சோவியத் யூனியன், சீனா ஆகிய இரு நாடுகளும் முனைந்து செயற்பட்டன. இதனால் மார்க்சிய லெனினியக் கருத்துகள் தமிழில் பரவலாயின. சீனப் பொதுவுடமைத் தலைவர் மா_சே_துங்கின் அரசியல் கட்டுரை-களும் தமிழாக்கப்பட்டன. இது தமிழில் ஆழமான விளைவை ஏற்படுத்தியது. மார்க்சிய _ லெனினிய அமைப்புகள் நிறுவப்பெற்று, புரட்சிகரமான மனப்பான்மை தோன்று-வதற்கான பின்புலத்தினை தமிழாக்கப்பட்ட அரசியல் நூல்கள் வடிவமைத்துத் தந்தன. இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ரஷியாவில் உருவாக்கப்பட்ட சோசலிச யதார்த்தவாதக் கோட்பாடு தமிழிலும் செல்வாக்குப் பெற்றதன் விளைவுதான் சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும், பொன்னீலனின் கரிசல், ஜெயகாந்தனின் ‘இந்த நேரத்தில் இவள்’ போன்ற நாவல்களின் படைப்பாக்கங்களாகும்.
அமெரிக்க அரசாங்கம், சிறந்த இலக்கியப் படைப்புகளையும் சோவியத் ரஷ்யாவின் மார்க்சிய லெனினியப் போக்குக்கு எதிரான அரசியல் கருத்துகள் அடங்கிய நூல்களையும் தமிழில் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட பதிப்பகங்கள்,  அமைப்பு சார்ந்த பதிப்பகங்கள், ஆகியன தமிழ் மொழிபெயர்ப்பில் பருண்மை-யான நிலையில் இன்று வரை தொடர்ந்து ஆளுமை செலுத்தி வருகின்றன. இன்று அசலான தமிழ் நூல்களை விட மொழி-பெயர்ப்-புகள் மேன்மையானவை என்று பொதுப்புத்தி-யில் உருவாகியுள்ள கருத்தினில் நுண் அரசியல் பொதிந்துள்ளது.
தொடக்கக்கால மொழிபெயர்ப்புகள்
பண்டையத் தமிழகத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலிருந்தும் தமிழாக்கமானது தழுவல் நிலையில் தொடங்கி-யது. மூல மொழியிலுள்ள கருத்தினை மொழிபெயர்ப்பாளர் தனது நோக்கத்தினுக்கு ஏற்ப மாற்றி எழுதும் போக்குத்தான் நிலவியது. அச்சியந்திரங்களின் வருகைக்குப் பின்னர் தமிழில் நூல்கள் அச்சடிக்கப்பெற்றாலும், மொழிபெயர்ப்பு நூல்கள் ஒப்பீட்டளவில் பெரிய எண்ணிக்கையில் இல்லை.
தமிழைப் பொறுத்தவரையில் விவிலிய மொழிபெயர்ப்பு முக்கியமானது. 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மானியரான சீகன்பால்கு தொடங்கிவைத்த விவிலிய மொழிபெயர்ப்பு முயற்சியானது, ஐரோப்பியரான பிலிப் போகன் பப்ரிஷியஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியாரால் முழுமையடைந்து, 1796ஆம் ஆண்டு முழுமை-யாக வெளியானது. இந்திய மொழிகளில் முதன்முதலாக முழுமையாக விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில்தான்.
விவிலியத்தின் புதிய ஏற்பாடு திருத்தம் செய்யப்பெற்று பிரேஷியாவைச் சார்ந்த இரேனியசீன் என்பவரால் 1833ஆம் ஆண்டு தமிழில் வெளியானது.
பப்ரிஷியஸின் விவிலிய மொழிபெயர்ப்-பானது சீராக்கப்பட்டு, ஹென்றிபவர் தலைமை-யிலான குழு 1871ஆம் ஆண்டில் புதிய பதிப்பு வெளியிட்டது. ‘பவர் வேதாகமம்’ தான் இன்று வரை தொடர்ந்து கிறிஸ்தவர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. கடந்த 200 ஆண்டு-களுக்கும் கூடுதலாக வெவ்வேறு காலகட்டங்-களிலும், இன்றும் விவிலியத்தின் மொழி-பெயர்ப்பு பல்வேறு புதிய வடிவங்களைப் பெற்று வருகின்றது. தமிழின் உரைநடைக்கு வித்திட்ட விவிலிய மொழிபெயர்ப்பானது, தமிழ்மொழி வரலாற்றில் முக்கியமான பதிவாகும்.
கி.பி. 1820இல் தொடங்கப்பட்ட சென்னைப் பாடப்புத்தகச் சங்கம் ஆங்கிலேய அலுவலர்-களுக்கு தமிழ் கற்பிப்பதற்காக உரைநடை நூல்கள் எழுதுவதை ஊக்குவித்தது. இதனால் டேனியல் டிபோ எழுதிய ராபின்சன் குருசோ நாவலானது உரைநடை வடிவில் சுருக்கப்பட்டு வெளியானது. அதே நிறுவனம் வெளியிட்டுள்ள உலக சரித்திரம், இந்திய சரித்திரம் போன்ற நூல்களும் தழுவல் நூல்களாக உள்ளன.
கி.பி. 19ஆம் நூற்றாண்டில் புராணங்கள், சைவ சித்தாந்தம், சிற்றிலக்கியம், நன்னூல் போன்றவற்றைக் கற்பதும் மனனம் செய்வதும்-தான் கல்வி என்று கருதிய தமிழரிடையே ஆங்கிலக் கல்வி முறையானது மாற்றத்தை ஏற்படுத்தியது. மரபு வழிப்பட்ட திண்ணைக் கல்வி, குருகுலக் கல்வி முறைக்கு மாற்றாகப் புகுத்தப்பட்ட ஆங்கிலேய முறைக்கல்வியானது, புதிய துறைகளை அறிமுகப்படுத்தியது. இதனால் பல்வேறு துறைகளில் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் வெளிவருவதற்கான சூழல் ஏற்பட்டது.
தமிழில் தொடக்கக் காலத்தில் மொழி-பெயர்ப்பு நூல்களை வெளியிட்ட பதிப்பகங்-களின் பெயர்களையும், அவற்றின் நோக்கங்-களையும் அறிய இயலவில்லை. தனிநாயகம் அடிகளார், மா.சு. சம்பந்தம் போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்கள் தான் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய தகவல்களுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. எனவே அறிமுக நிலையில் மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவல்கள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
கி.பி. 1832இல் இரேனியல் பாதிரியார் எழுதிய ‘பூமி சாஸ்திரம்’ என்ற அறிவியல் நூல் தழுவலாகும். இலங்கைக்கு மருத்துவத் தொழில் செய்ய வந்த அமெரிக்கரான ஃபிஷ்கிறினால் கிஸீணீtஷீனீஹ், றிலீஹ்sவீஷீறீஷீரீஹ் ணீஸீபீ பிஹ்ரீவீமீஸீமீ என்ற நூல் தமிழாக்கப்பட்டு ‘அங்காபாதி சுகரண வாதி உற்பாவண நூல்’ என்ற பெயரில் 1852இல் வெளியிடப்பட்டது. வைத்தியாகரம் (ஜிலீமீ ஜீக்ஷீவீஸீநீவீஜீறீமீs ணீஸீபீ ஜீக்ஷீணீநீtவீநீமீ ஷீயீ விமீபீவீநீவீஸீமீ) மனுஷ அசுரணம் (பிuனீணீஸீ றிலீஹ்sவீஷீறீஷீரீஹ்), மனுஷ அங்காதிபாதம் (பிuனீணீஸீ ணீஸீணீtஷீனீஹ்), இந்திய பதார்த்த சாரம் (றிலீணீனீணீநீஷீஜீமீவீணீ ஷீயீ மிஸீபீவீணீ) வைத்தியம் (றிக்ஷீணீநீtவீநீமீ ஷீயீ விமீபீவீநீவீஸீமீ) ஆகிய மருத்துவம் சார்ந்த நூல்கள் ஃபிஷ் கிறினின் மேற்பார்வையில் பிறரின் உதவியுடன் தமிழாக்கப்பட்டு வெளிவந்தன. ஆங்கில வைத்திய முறையைத் தமிழில் போதிப்பதற்காக மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் சமஸ்கிருதச் சொற்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருப்-பினும், அறிவியல் தமிழை முன்னெடுத்துச் சென்ற வகையில் ஃபிஷ் கிறினின் முயற்சி போற்றுதலுக்குரியது.
1855இல் வெளியான இயற்கணிதம் (கிறீரீமீதீக்ஷீணீ), 1861இல் வெளியான வான சாஸ்திரம் (கிstக்ஷீஷீஸீஷீனீஹ்), 1871இல் வெளியான தத்துவ சாஸ்திரம் (ஜிலீமீ மீறீமீனீமீஸீts ஷீயீ ஸீணீtuக்ஷீணீறீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்), 1885இல் வெளியான கால்நடை சாஸ்திரம் (க்ஷிமீtமீக்ஷீவீஸீணீக்ஷீஹ் sநீவீமீஸீநீமீ) போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழுக்குப் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின.
சேடன் பாபு ராஜகோபாலாச்சாரியார், ‘யூசிலிட்டின் «க்ஷத்திர கணிதப் பால போதினி (நிமீஷீனீமீtக்ஷீஹ்) என்ற மொழிபெயர்ப்பு நூலினை 1901ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
1908 ஆம் ஆண்டில், ‘மானிட மர்ம சாஸ்திரம் அல்லது சிசு உற்பத்தி சிந்தாமணி’ என்ற மருத்துவ நூல் கிறீனின் மொழி பெயர்ப்பில் வெளியானது.
இவை போன்று தமிழில் வெளியான பல்வேறு துறை மொழிபெயர்ப்பு நூல்கள், உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியலைத் தமிழில் கற்பிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தின. இதன் காரணமாக 1930களில் முதலில் கலையியல் பாடங்களும் பின்னர் அறிவியல் பாடங்களும் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. எளிய தமிழில் ஆழமான அறிவியல் கருத்து-களைப் போதிக்கும் வகையில் சுருக்கமாகவோ, தழுவியோ எழுதப்பட்ட நூல்கள் தமிழில் நிரம்ப வெளிவந்தன. ராஜாஜி,               பெ.நா. அப்புஸ்வாமி, ஆர்.கே. விசுவநாதன், நாராயண-சாமி ஐயர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றோரின் முயற்சிகள் காரணமாக தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கின.
தமிழில் அறிவியல் நூல் வெளியீட்டினை ஊக்குவிக்கும் வகையில் அறிவித்த பரிசு காரண-மாக வெளியான மொழிபெயர்ப்பு நூல்களில் ஈ.த. ராஜேஸ்வரி அம்மையாரின் அணுப்-புராணம் (1955), ந. சுப்புரெட்டியாரின் அணுக்கரு, பௌதீகம் (1966) ஆகியன குறிப்பிடத்தக்கன.
கல்லூரியில் தமிழைப் பயிற்று மொழியாக்கி 1955ஆம் ஆண்டில் தமிழக அரசு ஆணை பிறப்-பித்தது. தமிழ் வெளியீட்டுக் கழகம் மாணவர் பாடத்திட்டத்திற்காக முப்பத்தைந்து மொழி-பெயர்ப்பு நூல்களை வெளியிட்டது. பின்னர் நிறுவப்பட்ட தமிழ்நாட்டு முப்பாடநூல் நிறுவனம் இருநூறுக்கும் மேற்பட்ட சமூக அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளது.
1980களில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முயற்சி காரணமாக மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் போதிப்பதற்காக இருபத்தெட்டு நூல்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் பல அச்சு வடிவம் பெற்றுள்ளன.
தமிழைப் பொறுத்தவரையில், அசலாக விஞ்ஞானிகளால் எழுதப்படும் மூல நூல்கள் என்பது மிகவும் குறைவு. பெரும்பாலும் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள நான்கைந்து நூல்களை ஒப்பிட்டு நோக்கித் தொகுத்து, தேவையானவற்றை மட்டும் சுருக்கி எழுதப்படும் தழுவல் நூல்களே தமிழில் மிகுதி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இலக்கிய மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்-தக்கன பின்வருமாறு: ஆங்கிலத்தில் ஜான் பணியன் எழுதிய பில்கிரிம் புரோகிரஸ் என்ற கவிதை நூலானது எஸ். பவுலினால் மொழி-பெயர்க்கப்பட்டுச் சுவிசேஷ பிரபல்ய மிஷன் சங்கத்தாரால் கி.பி. 1793இல் வெளியிடப்பட்டது. தாண்டவராய முதலியாரின் பஞ்சதந்திரக்-கதைகள்- (1826), ஜேசுதாஸ் பிள்ளையின் பார-சீகக் கதைகள் (1840), அண்ணாசாமி முதலியா-ரின் அரபிக் கதைகள் (1857), ஏ. திருவேங்கடத்-தின் கிரேக்க ஈசாப் நீதிக் கதைகள் (1853),       அ. வேதக்கண்ணின் ஆதிநந்தவனப் பிரளயம் (1863),. வீ. விசுவநாதபிள்ளையின் வெனிஸ் வர்த்தகர் (1870) ஆகியனவாகும்.
மில்ட்டனின் பாரடைஸ் லாஸ்ட் கவிதை நூலானது பரதீசு உத்தியான நாசம் என்ற பெயரில் 1881இல் வெளியாகியுள்ளது. அதே நூல் 1887இல் சாமுவேல் வேதநாயகம் தாமஸினால் பூங்காவனப் பிரளயம் என்ற பெயரில் தமிழாக்-கப்-பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் பிற துறை நூல்களின் மொழிபெயர்ப்புகளைவிட இலக்கியப் படைப்புகள் இன்றுவரை தொடர்ந்து அதிகஅளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளி-லிருந்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நூல்களின் அட்டவணையைத் தொகுத்தாலே அவை தனி நூலாக விரியும்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகமெங்கும் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தின. பின் காலனித்துவ அரசியல் நிலைமைக்கேற்ப, பண்பாட்டு ரீதியிலும் அழுத்தமான மேலை-நாட்டுப் பாதிப்புகள் உள்ளன.
க்ரியா, விடியல், அடையாளம், சென்னை புக்ஸ், பாரதி புத்தகாலயம், என்.சி.பி.ஹெச்., வ.உ.சி. நூலகம், சந்தியா, காலச்சுவடு, கருப்புப் பிரதிகள், மருதா, உயிர்மை போன்ற பல்வேறு பதிப்பகங்கள் மொழிபெயர்த்து வெளியிடுவதில் முனைந்து செயற்படுகின்றன. ஒவ்வொரு பதிப்பகமும் தனக்-கெனக் குறிப்பிட்ட முறையில், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுகின்றன. அவை பற்றித் தொகுப்பாகக் காணும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது; சில முக்கியமான போக்குகள் மட்டும் தொகுத்து தரப்பட்டுள்ளன. கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் கூடுதலாகத் தொடர்ந்து வெளியிடப்பெற்று பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ள முக்கியமான மொழி-பெயர்ப்பு நூல்கள் பற்றியும் குறிப்புகள் தரப்பட்-டுள்ளன.
ஹிந்தியில் ராகுலசாங்கிருத்தியாயன் எழுதிய சமூக வரலாற்று நூலை ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற பெயரில் கண. முத்தையா மொழிபெயர்த்த நூலானது தமிழ்ப் புத்தகாலயத்-தினால் முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மனிதகுல வரலாற்றை விளக்கும் அந்நூல் இன்று வரை சமூக அக்கறையுள்ளவர்களிடையே பிரபலமாக விளங்குகிறது.
இராமாயணத்தை ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற பெயரிலும் மகாபாரதத்தை ‘வியாசர் விருந்து’ என்ற பெயரிலும் ராஜாஜியால் சுருக்கி எழுதப்பட்ட மொழிபெயர்ப்பு நூலானது முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகி-யுள்ளன. இந்திய இதிகாசங்களை எளிய தமிழில் விளக்கியுள்ள ராஜாஜியின் தமிழ்நடையானது, நூல் வெளியாகி அரை நூற்றாண்டிற்குப் பின்னரும் வாசகரை ஈர்ப்பதாக உள்ளது.
காந்தி நினைவு நிதி நிறுவனம் காந்தியடி-களின் தொகுப்பு நூல்களை முழுவதுமாகத் தமிழில் வெளியிட்டுள்ளது. அவை தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான ஆவணங்கள்.
க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள டாக்டர் வெர்னரின் ‘மருத்துவர் இல்லாத இடத்தில்’ என்ற மருத்துவ மொழிபெயர்ப்பு நூல் பல்லாயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இன்று பலருடைய வீட்டில் மருத்துவப் பார்வை நூலாகவும் விளங்குகிறது. அதே பதிப்பகம் வெளியிட்டுள்ள பிரெஞ்சு நாவலாசிரியர் ஆல்பர்ட் காமுவின் ‘அந்நியன்’ நாவல்,        வெ. ஸ்ரீராமின் அற்புதமான மொழிபெயர்ப்பில் வாசகரின் மனத்தில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எண்ணிக்கை-யில் குறைவு எனினும் தேர்ந்தெடுத்த படைப்-புகளின் சரியான மொழிபெயர்ப்புகள் மூலம் க்ரியா அதிர்வுகளை ஏற்படுத்த முயலுகின்றது.
சோவியத் யூனியன் பதிப்பகங்களான முன்னேற்றப் பதிப்பகம், புரோகிரஸ் பப்ளிஷர்ஸ், மீர் பதிப்பகம் போன்றன தமிழில் பல்வேறு துறை சார்ந்த ரஷிய நூல்களின் மொழி-பெயர்ப்புகளை வெளியிட்டுள்ளன. சோவியத் யூனியனின் இடதுசாரிப் போக்கினுக்கு முக்கியத்-துவம் தந்து மலிவு விலையில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழக அரசியலிலும் தமிழிலக்கியப் போக்கிலும் பாதிப்பை ஏற்படுத்-தியுள்ளன. மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ், ஸ்டாலின் போன்றோரின் அரசியல் ஆவணங்கள் பல்வேறு நூல்களாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. சோவியத் ரஷிய இலக்கிய மேதைகளான டால்ஸ்டாய், செகாவ், கோர்க்கி, ஷெலகோவ், புஷ்கின், லேர்மன்தவ் போன்றோரின் இலக்கியப் படைப்புகளும் பெரிய எண்ணிக்கையில் தமிழாக்கப்பட்டுள்ளன. தமிழ் மட்டும் அறிந்த வாசகர்கள் கூட ரஷிய இலக்கியப் பரப்பின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் ரஷியப் பதிப்பகங்களின் தமிழாக்கங்கள் உதவின.
தமிழகத்தில் செயற்படுகின்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எனப்படும் என்.சி.பி.ஹெச். பதிப்பக-மும் பல்வேறு துறை சார்ந்த மொழிபெயர்ப்பு-களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. எண்பதுகளில் சோவியத் யூனியன் சிதறி நொறுங்குவதற்கு முன்னர் இடதுசாரிச் சிந்தனையை முன்னிலைப்படுத்திய புத்தகங்களை மொழிபெயர்ப்பதில் என்.சி.பி.ஹெச். பெரிதும் அக்கறை கொண்டிருந்தது.
விடியல் பதிப்பகம் சேகுவேரா, லுமூம்பா போன்ற இடதுசாரிப் புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் பின் காலனித்துவ அரசியல் எழுச்சி, அரசியல் விடுதலை, கொரில்லாப் போராட்டம், வளரும் நாடுகளின் சமூக அரசியல் நிலைமைகள் ஆகியவை குறித்த நூல்களையும் அதிக அளவில் மொழிபெயர்ப்பு நூல்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தது. குறிப்பான அரசியலை மையமிட்ட மொழிபெயர்ப்புகளின் தேர்வில் நுண் அரசியல் பொதிந்துள்ளது. கீழைக்காற்று பதிப்பகமும் அரசியல் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தந்து புத்தகங்களை வெளியிட்டு வருகின்றது.
ஓசோவின் தத்துவம், யோகம் பற்றிய பல நூல்கள் தமிழாக்கப்பட்டு கண்ணதாசன் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு வாசகர்க-ளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
காலச்சுவடு பதிப்பகம் தமிழில் வெளியிட்-டுள்ள டி. வி. ஈச்சரவாரியார் மலையாளத்தில் எழுதிய ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்: ராஜன் கொலை வழக்கு’(2005), இந்தியாவில் நடைபெற்ற அவசர காலக் கொடுமைகளை நுட்பமாக விவரித்துள்ளது. அரசியல் ரீதியில் முக்கியமான நூலாகும்.
உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ-வின் படைப்புகளைத் தொகுத்து மொழி-பெயர்த்துள்ள ராமாநுஜத்தின் முயற்சியானது நிழல் பதிப்பக வெளியீடாக 2004 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. மண்ட்டோவின் புனை-கதைகள், நினைவோடைகள் வாசிப்பில் பெரும் அதிர்வை ஏற்படுத்தக் கூடியன.
டக்கர் அக்கர்மென் எழுதிய கி ழிணீtuக்ஷீணீறீ பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ லிஷீஸ்மீ நூலானது ச. சரவணன் மொழிபெயர்ப்பில் ‘காதல் வரலாறு’ என்ற பெயரில் சந்தியா பதிப்பகத்தினால் வெளியிடப்-பட்டுள்ளது. ஆண்_பெண் உறவில் தோன்றும் காதல் பற்றிய நுட்பமான ஆய்வினை நூலானது முன்னிறுத்துகின்றது.
ஆக்ஸ்போர்டு பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள நூல்களை ‘மிகச் சுருக்கமான அறிமுகங்கள்’ என்ற தலைப்பில் பல்துறை நூல்களின் தமிழாக்கங்களை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. பிராய்ட், பின் நவீனத்துவம், புத்தர், பௌத்தம் போன்ற பல்வேறு தலைப்புகளில் வெளியாயுள்ள நூல்கள் அறிமுக நிலையில் முக்கியமானவை-யாக விளங்குகின்றன.
மராத்தியிலும் கன்னடத்திலும் வெளியாகி-யுள்ள தலித் இலக்கியப் படைப்புகளையும் தலித் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழாக்கி வெளியிடுவதில் விடியல் பதிப்பகத்-தின் முயற்சி பாராட்டிற்குரியது.
சுற்றுச் சூழல் நோக்கில் இன்று உலகினை அச்சுறுத்தும் சுற்றுச் சூழலியல் பிரச்சனைகள் பற்றிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அக்கறை காட்டி வருகின்றது.
மனித உரிமைகள், சட்டத்தின் நிலை, வன்முறை, சித்ரவதை, காவல்துறை, சிறைத்துறை, சிறைக் கைதிகள் போன்ற மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு நூல்களின் தமிழாக்கங்-களை ‘மக்கள் கண்காணிப்பகம்’ வெளியிட்டு வருகின்றது.
அறிவியல் நூல்கள் வெளியீட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. எனினும் அவ்வப்போது இப்பதிப்பகங்கள் ராக்கெட், கணினி, இண்டர்நெட், விண்டோஸ் போன்ற புத்தகங்களை வெளியிட்டு மாணவர்களுக்கு பயிற்சி தர முயலுகின்றன.  
பொதுமக்கள் பயன் அடையும் வகையில் தமிழ் ஒலி பெயர்ப்பினுக்கு முக்கியத்துவம் தந்து வயரிங், மோட்டார் மெக்கானிசம், கார் ரிப்பேரிங் போன்ற நூல்களும் தமிழில் வெளியிடப்பெற்று, அத்துறை சார்ந்தோரிடம் கவனம் பெறுகின்றன.
இவைபோன்று ஒவ்வொரு பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புப் பணிகளின் முக்கியத்துவம் பற்றி விவரித்தால், அவை பல்கிப் பெருகும். எனவே பொது நிலையில் பதிப்பகங்களின் பதிப்புப் பணி பற்றி அறிந்து கொள்வதற்காகச் சிறிய அளவி-லான தகவல்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புப் பதிப்புகள் மூலம் தமிழில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை மட்டும் பின்வருமாறு தொகுக்கலாம்.
*    உரைநடை என்ற புதிய வடிவம் தமிழில் நடைமுறைப்படுத்தப்பட்டு பெருவழக்-காகிடும் சூழலை மொழிபெயர்ப்புகள் உருவாக்கின.
*    நவீன இலக்கியம் தோன்றுவதற்கான பின்புலத்தை மொழிபெயர்ப்புகள் ஏற்படுத்தின.
*    அறிவியல், சமூக அறிவியல் போன்றன தமிழுக்கு அறிமுகமாவதில் மொழி-பெயர்ப்பும் அடித்தளமாக விளங்கு-கின்றன.
*    அறிவியல் கருத்துகளைத் தமிழில் வெளிப்படுத்த இயலும் என்பதற்கேற்ப லட்சக்கணக்கான கலைச் சொற்கள் உருவாவதற்கு மொழிபெயர்ப்பு நூல்களே ஆதாரம்.
*    உலக இலக்கியப் போக்குகளும் பல்வேறு இசங்களும் மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு அறிமுகமாயின.
*    தமிழில் எந்தவொரு புதிய கருத்தையும் வெளிப்படுத்தவியலும் என்ற நிலையை உருவாக்கியதில் மொழிபெயர்ப்புகள் முக்கியமான பங்காற்றுகின்றன.
மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு என்பது தமிழைப் பொறுத்தவரையில் பொதுநிலையில் சமூக அக்கறையுடன் தொடர்புடையதாகவே விளங்குகின்றது. மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பதிப்பகத்தினரின் மனநிலையானது தமிழ்ச் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயலு-வதின் விளைவாகவே உள்ளது. இந்நிலையில் கண்ணில் தட்டுப்பட்ட சராசரியான புத்தகங்-களை எல்லாம் தமிழாக்கும் பதிப்பகங்களின் முயற்சியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலை நாடு என்றாலே மேன்மையானது என்ற கருத்துப் போக்கில் மேலைநாட்டுப் படைப்புகள், ஆய்வுகள் எல்லாவற்றையும் விமர்சனமற்றுப் போற்றும் மனநிலை இன்று உருவாகியுள்ளது. மொழிபெயர்ப்பு நூல் பற்றிய பிரேமைகள் களையப் பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழில் அசலாக எழுதப்படும் புத்தகங்களின் தனித்துவத்தை மெருகூட்டுவதாக மொழி-பெயர்ப்புகள் அமைய வேண்டியது அவசியம்.
பின்காலனித்துவ அரசியல் சூழல் நிலவும் தமிழகத்தில், மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிப் புனையப்படும் கருத்துகளையும் விமர்சனத்திற்-குள்ளாக்க வேண்டும். அப்பொழுதுதான் எந்த நூல்களை மொழிபெயர்க்க வேண்டாம் என்ற புரிதல் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு ஏற்படும். இப்புரிதல் இன்றைய காலக்கட்டத்தின் உடனடித் தேவையும் கூட.
Share.

About Author

Leave A Reply