மொழிபெயர்ப்பும் காப்புரிமையும்

0
இரா.நடராசன்*

The original is unfaithful to the translation
– Jorge Luis Borges
Translation is not an art. It is basically a
 political act. other wise it is an art of failure.
– Umberto Eco
                            –
சேக்ஸ்பியரின் ‘ஒத்தெல்லோ’வை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர்கள் மொத்தமாக 17பேர். இந்தப் பதினேழு மொழிபெயர்ப்புகளில் எது சிறந்தது என்பது வேறு; எது காப்புரிமை பெற்ற படைப்பென்பது வேறு. ஒரு மொழிபெயர்ப்பாளனின் காப்புரிமை என்பது சுதந்திரமானதல்ல. அது மூலப்படைப்பாளியின் காப்புரிமையைச் சார்ந்த ஒன்றாகவே இருக்க முடியும் என்பதற்கு இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. ஒரு படைப்பை மொழிபெயர்ப்பதற்கு அப்படைப்பாளியின் காப்புரிமையைப் பெறுவது என்றால் என்ன? அனுமதியைப் பெறுதல் என்றால் என்ன? இந்த விஷயத்தில் ஒரு பதிப்பாளரின் உரிமை எத்தகையது என்பனவற்றிற்கு விடை காண முயலும் முன் நாம் சில அடிப்படைகளை அலச வேண்டி இருக்கிறது.
நமது தமிழ் மரபில் படைப்புகளைப் பொதுமேடைகளிலும் சான்றோர் கூடிய சபையிலும் அரங்கேற்றி அதனைப் பொது உரிமை ஆக்குவதை முக்கிய அடையாளமாகப் பார்க்கிறோம். திருமூலரோ,  திருவள்ளுவரோ தங்களது படைப்புகளுக்கு உரிமை கோரவில்லை. வெள்ளைக்காரர்கள் வந்து நமது மண்ணில் கால் வைத்து வேரூன்றும் வரை நமது மண்ணில் படைப்புகள் _ வாய்மொழிப் படைப்புகளாய் அல்லது கல்வெட்டுகளாய், சுவடி வடிவங்களாய் இருந்தன. ஒரு உ.வே.சா. வீதிவீதியாக அலைந்து ‘சிலப்பதிகாரம்,’ ‘மணிமேகலை,’ ‘சீவகசிந்தாமணி’ என்று மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட சங்க இலக்கியச் செப்பேடுகளைத் தமிழுக்கு மீட்டு அவற்றை மக்கள் இலக்கியமாய், உரிமையாய்க் கொண்டு வந்த வரலாறு நம்முடையது.
உலகெங்கும் கூட இதேநிலைதான் இருக்கிறது. பைபிளைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தபோது அதற்கு உரிமை எதுவும் தேவைப்படவில்லை. 1709_ல் ஆங்கிலேயர்கள் பிரித்தானிய நாட்டில் முதல் காப்புரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். 1710_ல் அது அமுலுக்கு வந்தது. அது எழுத்து வடிவில் வெளிவரும் புத்தகங்களுக்கு ஒரு செல்வந்த அந்தஸ்து இருந்த அந்த நாட்களில், அவற்றை வாங்குபவர்கள்  அவற்றைப் பிரதி எடுக்காதிருக்க அவர்களுக்குக் கால உரிமை வழங்கும் ஒரு சட்டமாக இருந்தது. படிப்பறிவே பத்து சதவிகித ஆங்கிலேயர்களை மட்டுமே அடைந்திருந்த அந்த நாட்களில் அது சாதாரண உழைக்கும் மக்களிடையே எளிதில் பரவாதிருக்குமாறு அச்சட்டம் பார்த்துக் கொண்டது. அது பிரிட்டிஷ் பேரரசுக்கு உதவியாக இருந்தது.
அமெரிக்கக் காப்புரிமைச் சட்டம் சற்று வித்தியாசமானது. அது ஏனைய அமெரிக்கச் சட்ட விதிகளைப் போலவே வியாபார  நோக்கம் கொண்டது. சட்டப்பிரிவு ஒன்றில் (ணீக்ஷீவீtவீநீறீமீ 1) பிரிவு _ 8 (sமீநீtவீஷீஸீ 8) அதைப் புரிந்து கொள்கிறது. அதிலும் உட்பிரிவு 8 (நீறீணீusமீ 8) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டப்படி காப்புரிமைச் சட்டமாகக் கருதப்படுகிறது. இதில்  படைப்புகள் மட்டுமல்ல, மற்றும் திருமணம் நடத்தும் முறை,  புத்தகம் தயாரிக்கும்  முறையிலிருந்து ஒரு குளிர்பானம் தயாரிப்பு, அதன் பெயர், அந்தப் பெயரை எழுதும் எழுத்துமுறை என அனைத்தையும் தனியுரிமையாக்கிடும் ஷரத்துகள் உள்ளன. இவை பதினெட்டாம் நூற்றாண்டிலேயே முன்மொழியப்பட்டதைப் பார்க்கிறோம்.
1773_ல் புத்தக விற்பனையாளர்களின் பெரும் யுத்தம் (tலீமீ தீணீttறீமீ ஷீயீ தீஷீஷீளீsமீறீறீமீக்ஷீs) என்று வரலாற்றில் பேசப்படும் ஒரு வழக்கு பிரித்தானியாவின் திருப்புமுனை வழக்காகக் கருதப்படுகிறது. ஷின்டன் மற்றும் டொனால்டுசன் புத்தக விற்பனையாளர் களிடையே நடந்த இந்த நீண்ட வழக்கு, புத்தகம் ஒன்றை விற்பதுகூட யாரென்று தீர்மானிக்கும் உரிமை பற்றியதாக இருந்ததைப் பார்க்கிறோம். சாதாரண உழைக்கும் மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான எதையும் தனிச்சொத்தாக ஆக்குகிற வல்லமை முதலாளியத்திற்குக் கைகூடும் என்று ஏங்கெல்ஸ் குறிப்பிடும் அம்சங்களை உள்ளடக்கிய இச்சட்டங்களின் உச்சக்கட்டமாய் அத்தகைய காப்புரிமை என்பது புத்தகம் வெளியிடுதல் _ எழுதுதல் உட்பட அனைத்தையுமே அரசை நடத்திய தேவாலயத்திற்குத் தாரைவார்த்து, போப்பாண்டவரின் ஆசீர்வாதம் இல்லாத அறிவியல் மற்றும் சமூக விடுதலை சார்ந்த தத்துவார்த்த நூல்கள் தடை செய்யப்படுவதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
இதன் நீட்சியாகத்தான் பிரெஞ்சுப் புரட்சியின்போது அரசமைத்த கொம்யூனின் தேசியசபை, புத்தகங்கள் உட்பட அனைத்து அறிவு சார்ந்த செயல்பாடுகளையும் பொதுச் சொத்து (ஜீuதீறீவீநீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீtஹ்) என்று பிரகடனம் செய்தது. ஆனால் புரட்சியின் தோல்வியினால் 1790_களுக்குப் பின் வந்த பிரெஞ்சு _ ஏகாதிபத்திய அரசுகள், அறிவுஜீவியின் உரிமைப் பிரகடனத்தை (tலீமீ பீமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ க்ஷீவீரீலீts ஷீயீ ரீமீஸீவீus) முன்மொழிந்து இன்றுவரை பின்பற்றி வருதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
1886_ல் கூடிய பெர்ன் _ உச்சி மாநாடு காப்புரிமை குறித்த உலகின் முக்கிய முதல் கூட்டமைப்பாகக் கருதப்படுகிறது. பெர்னில் நடந்த சர்வதேசக் காப்புரிமை குறித்த பிரகடனம் 64 நாடுகளால் கைச்சான்று இடப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக 1896_ல் பாரீஸ், 1908_ல் பெர்லின், 1928_ல் ரோம், 1948_புரூசல்ஸ், 1967_ல் ஸ்டாக்ஹோம் என ஒரு சுற்று வந்து 1971_ல் மீண்டும் பாரீசில் காப்புரிமை குறித்த உலக நாடுகளின் பிரகடனங்கள் ஒரு தொடர் சங்கிலி நிகழ்வாக நடந்ததைப் பார்க்கிறோம்.
முதலில் புத்தகங்களின் மீதான தார்மீக உரிமையாக மட்டுமே பார்க்கப்பட்ட காப்புரிமை எனும் பிரச்சனை அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் சந்தையின் விற்பனைப் பொருட்கள் வரை விரிவடைந்தன. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்னதாகவே மின்சார பல்பை ஜோசப் ஸ்வான் கண்டு பிடித்திருந்தாலும் அதன் புத்தாக்க உரிமையை அவர் பதிவு செய்யாததால் இன்றுவரை எடிசன் மட்டுமே மின்சார பல்பைக் கண்டுபிடித்ததாக உலகம் நம்புகிறது. (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tவீனீமீsஷீஸீறீவீஸீமீ.நீஷீ.uளீ/tஷீறீ/றீவீயீமீ_ணீஸீபீ_stஹ்றீமீ/ணீக்ஷீtவீநீறீமீ394938.மீநீமீ) எடிசன் கண்டுபிடித்ததாக 1000க்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதன் அடிப்படைகளுக்கு உள்ளே சென்று ஆராயும் ஒருவருக்குப் பெரிய அதிர்ச்சிதான் காத்திருக்கும். எடிசனின்  கண்டுப்பிடிப்புகளில் கிட்டத்தட்ட 1000 பொருட்களுக்கான புத்தாக்க உரிமையை அந்தக் கண்டுபிடிப் பாளரின் வறுமையைப் பயன்படுத்தி வாங்கித் தன் பெயரில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுபோல சர்வதேசச் சட்டங்கள் சிலருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
பெர்ன்_மாநாட்டிற்குப் பிறகு உலகமயமாதலின் காரணமாக காட் (நிகிஜிஜி) ஒப்பந்தமும் ஜிஸிமிறிஷி எனப்படும் காப்புரிமை குறித்த உலகளாவிய ஒப்பந்தமும் உலக வர்த்தக நிறுவனத்திற்கு (ஷ்ஷீக்ஷீறீபீ tக்ஷீணீபீமீ ஷீக்ஷீரீணீஸீவீsணீtவீஷீஸீ)  ஏராளமான உரிமைகளுடன் கூடிய எதேச்சதிகாரத்தைத் தங்கத்தட்டில் வைத்துத் தந்திருப்பதைப் பார்க்கிறோம். இந்தியா மாதிரியான ஒரு மூன்றாம் உலக நாட்டின் குறைந்தபட்ச அபிலாஷையைக் கூட பரிசீலிக்க இதுபோன்ற சர்வதேச அமைப்புகள் தயாராக இல்லை. அமெரிக்க வல்லரசும் அதன் ஆதரவு நாடுகளுமே இந்த அமைப்புகளில் அதிகாரம் செலுத்துகின்றன. நமது வேப்பமரக் காற்றும் பாசுமதி அரிசியும் கூட அவற்றில் சிக்கிக் கொண்டிருப்பதை நாம் இங்கே புதிதாகக் குறிப்பிட வேண்டியதில்லை.
இந்தச் சூழலில் வைத்துதான் நாம் மொழிபெயர்ப்புகளையும் அணுக வேண்டும். இன்னமும் கூட பல லட்சம் பேர் எழுத்தறிவு பெற முடியாத ஒரு நாட்டில் வாழும் நாம் நாட்டின் முன்னேற்றம், மக்கள் விழிப்புணர்வு, அறிவியல் சிந்தனைகள் என ஏதேனும் ஒன்றையேனும் வெகுஜன அளவில் எடுத்துச் செல்ல உதவுகிற உலக அளவிலான இலக்கியங்கள், அறிவுசார் பிற கருவிகளான ஊடகம் சார்ந்த விஷயங்களைச் சுதந்திரமாக மொழிபெயர்த்து இங்கே எடுத்து வந்து கொட்ட வேண்டிய அவசியம் நமக்குள்ளது.
பெர்ன் சாசனம், ஒரு படைப்பாளியின் உரிமைகளைக் காப்பதாக இருந்தது. ஒரு கலைப்படைப்பை அப்படியே மறுபிரதி யெடுத்துத் தன் பெயரில் அதை வெளியிட்டுக் கொள்ளும் தற்குறித்தனத்தை யாரும் ஆதரிக்கப் போவது இல்லை. ஆனால் ஒரு சார்லஸ் டார்வினையோ, இரிகேரி மெண்டலையோ, லியோ டால்ஸ்டாயையோ இங்கே நமது மொழிக்குக் கொண்டு வரும் அந்த மொழிபெயர்ப்பு வேலையை ஒரு கடமையாக ஏற்றுச் செய்வதற்கு மூல மொழியின் பதிப்பாளர் மற்றும் மூலமொழி _ நாட்டின் ஏனைய ஊடக அதிகார வர்க்கம் ஒரு இடையூறாக இருப்பதையும், பதிப்புரிமை மற்றும் காப்புரிமை ஆகியனவற்றைக் குழப்பி ஒரு கலைப்படைப்பைப் பணம் சம்பாதிக்கும் வர்த்தகமாக மாற்றும் சூழ்ச்சியை நாம் எப்படி ஆதரிக்க முடியும்? பெர்ன் சாசனத்தில் பிரித்தானிய இந்தியா தானாகவே இணைக்கப்பட்டு சுதந்திர இந்தியா பிறந்த பிறகும் நமது மைய அரசு எத்தகைய தனிப்பட்ட காப்புரிமைச் சட்டமும் இயற்றாமல் அதே பெர்ன் சாசனத்தில் அதே பிரித்தானிய அர்த்தத்தில் தொடர்ந்ததும்  மோசமான வரலாறு இல்லையா என்பதுதான் கேள்வி. 1957_ல் கொண்டு வரப்பட்டு 1992 வரை பலமுறை திருத்தப்பட்ட இந்தியக் காப்புரிமைச் சட்டம் பல் இல்லாத ஒரு பாம்பு ஆகும்.
அது அதிகாரிகளை மய்யமாகக்கொண்டு இயங்குகிறது.
இந்தியாவில் ராஜ்யசபாவில் சமீபத்தில் அறிமுகம் ஆகியுள்ள காப்புரிமைச் சட்டத்தின் புதிய ஷரத்து 2010 _ கல்வியளிப்பதற்கான நூல்களைப் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் மொழி _ மற்றும் அதற்கான கணினி வசதி மாற்றத்திற்காகப் பயன்படுத்துவதற்குக் கூட அரசின் லைசென்ஸ் பெற வேண்டும் எனும் நிலையை ஒரு நிர்ப்பந்தமாக ஆக்கியுள்ளது. பார்வையற்றவர்கள், செவித்திறனற்றோர் மற்றும் ஏனைய வகை மாற்றுத் திறனாளிகளின் கல்வி மற்றும் மேம்பாடு குறித்து மத்திய மனிதவள அமைச்சகத்திடம் புரிதல் குறைவாக உள்ளது. இந்தக் காப்புரிமைச் சட்ட ஷரத்து நமது அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 21_ம் பிரிவுகளான வாழ்வுக்கான உரிமை மற்றும் சமத்துவம் ஆகியனவற்றையே கேள்விக்குள்ளாக்குகின்றன. காப்புரிமைத் துறையின் காப்புரிமை அமைப்பு (tலீமீ நீஷீஜீஹ்க்ஷீவீரீலீt தீஷீணீக்ஷீபீ) அரசு அதிகாரிகளால் ஆனதாக உள்ளது. கலை, இலக்கியம் மற்றும் ஊடக அரசியல் சார்ந்த எந்தப் புரிதலும் இல்லாமல் இந்த அமைப்பே ஊழல் மற்றும் முறைகேடுகளால் நீர்த்துப் போவதற்கும் வாய்ப்புள்ளது என்பதே உண்மைநிலை.
1993_ல் காப்புரிமை காலக்கெடு பிரகடனம் என்கிற ஒன்று கைச்சான்று ஆகும் வரை பெர்ன் சாசனம் ஒரு படைப்பாளியின் வாழ்நாள் மற்றும் ஐம்பது ஆண்டுகள் கழித்து அன்னாரது படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்திட காப்புரிமை பெற வேண்டிய அவசியம் இல்லை எனும் ஷரத்தைக் கொண்டிருந்தது. நாட்டுடைமை ஆக்குதல் எனும் _ ஜீuதீறீவீநீ பீஷீனீணீவீஸீ ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்குமிடையே வேறு படுவதைப் பார்க்கிறோம். உதாரணமாக அமெரிக்காவில் ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளி இறந்து 75ஆண்டுகள் ஆகிவிட்டால் அவரது படைப்பு பொது அரங்கிற்கு வந்து விடுகிறது. அதுவே ஜப்பானில் படைப்பாளியின் மரணத்திலிருந்து 100ஆண்டுகள் என்பதாக வரையறுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கிய படைப்புகளை ஒரு இந்தியர் தனது மொழிக்கு எடுத்துச் செல்ல முடியும். ஆனால் ஒரு அயல்நாட்டுப் பிரஜை அதனை மொழிபெயர்த்து எடுத்துச் செல்ல அரசின் அனுமதி பெறவேண்டும். இது பெர்ன் சாசனப்படி அமைந்த நிலை. இதன்படி திருக்குறளை ஒரு தமிழர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். ஆனால் ஒரு பிரான்சு நாட்டுப் பிரஜை அதனை பிரெஞ்சு மொழிக்கு அனுமதியோ, உரிமையோ இன்றி எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் இன்றைய நிலை அப்படிஅல்ல. காட் ஒப்பந்தத்தில் கைச்சான்று இட்ட நாடாக இந்தியாவும் இருப்பதால் இங்கிருந்து எதை வேண்டுமானாலும் காட் நாடுகள் சுருட்டலாம். ஆனால், பிரதான அமெரிக்கச் சார்பு நாடுகள் தங்களுக்குள் ஒரு உள்அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதன்படி மூவடுக்கு சோதனை என்பது மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை இன்று பொதுவாக நடைமுறையில் உள்ளது. இதன்படி,
அடுக்கு 1 _ மேற்கோள்கள், நூலைச் சார்ந்து எழுதப்படும் உப நூல்கள் மற்றும் செய்தி சேகரிப்பு எனும் விதத்தில் மறு அச்சாக்கம் பெறும் படைப்பு.
அடுக்கு 2 _ ஒரு நூலாசிரியரை கேலி அல்லது குறைகூறும் அம்சத்தில் அவரது படைப்பை மறுபிரதி எடுக்காது இருத்தல்.
அடுக்கு 3 _ கல்வியளிப்பதற்கான அர்த்தத்தில் பாடப் புத்தகங்களில் அச்சாக்கம் செய்திட மொழிபெயர்த்துப் பயன்படுத்துதல்.
இவற்றிற்கு காட் ஒப்பந்தத்தின் படி பயன்படுத்த அனுமதியும் அதேசமயம் முழுப் படைப்பை மறு ஆக்கம் செய்து மொழிபெயர்க்கத் தங்கள் நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமும் அனுமதி பெறுவதுமான இரண்டாவது விஷயத்தை அமெரிக்க ஆதரவு நாடுகள் மற்றும் ஐரோப்பிய சமூகம் அணுகுவதைப் பார்க்கிறோம்.
இன்று உலக நாடுகள் எதிலுமே ஒரு புத்தகத்தை வெளியிடும்போது உரிமை அதாவது © என போடப்பட்டு வந்த காப்புரிமைக் குறி தேவையில்லாதது. ஆனால் தொடர்ந்து ஐரோப்பியப் பதிப்பாளர்கள் எனும் ஒரு பெரிய வியாபாரக் குழு அதைப் பயன்படுத்தியே வருகிறது. அறிவியல் அடிப்படைகள்,  உண்மைகள் எனும் தகுதி அடிப்படையில் தகவல்களாகக் கருதப்பட்டு அவற்றிற்குக் காப்புரிமை கிடையாது எனும் நிலை கூட இப்போது இல்லை. அவற்றை மொழிபெயர்த்துப் பயன்படுத்த குறைந்தபட்சம் 20 நாடுகளின் காப்புரிமை நோட்டீஸ் பெற வேண்டும். இணைய தளத்தில் பல உலகளாவிய விஷயங்கள் இலவசமாகக் கொண்டுவந்து கொட்டப்படும் இன்றைய சூழலில் சில மொழிபெயர்ப்புகள் உரிமை பெறாமல் ஆர்வலர் மொழிபெயர்த்தவை (யீணீஸீ tக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ) என்று கருதப்படுகின்றன. அவற்றைச் சில சமயம் காப்புரிமையாளர்களே பாராட்டி, போற்றி வரவேற்பதைப் பார்க்கிறோம். ஆனால் அத்தகைய ஆர்வலர் மொழிபெயர்ப்புகள் அங்கீகாரம் பெறாதவையாகக் கருதப்படுகின்றன. முறையாகப் பதிப்பாளர் தம் வர்த்தகத்தில் பங்கு பெற வசதியில்லாத அறிவுஜீவிகளின் இன்றைய நிலை இதுதான். அப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் மொழிபெயர்ப்புகளும் படைப்புகளும் உரிமையாளரற்ற நூல்கள்
(ளிக்ஷீஜீலீணீஸீ கீஷீக்ஷீளீs) என்று பதிப்பு வர்த்தகர்களால் அழைக்கப்படுகின்றன.
கருப்பர் இன எழுத்தாளர்கள், செவ்விந்தியப் பாடகர்கள், ஆஸ்திரேலியப் பழங்குடி இனப் படைப்பாளிகள், பெண்ணியப் போராளிகள் எனத் தொடங்கி உலகில் சாதாரண மக்களோடான பசியோடும் பிணியோடும் தன்னை இணைத்துக்கொண்ட லட்சக்கணக்கான அறிவுஜீவிகள் தங்களது படைப்புகளுக்கு உரிமை கோருவதே கிடையாது. எந்த மொழியிலும் எந்த வடிவத்திலும் இவர்களது படைப்புகளை மொழிபெயர்க்க இவர்கள் அனுமதி மறுப்பதே கிடையாது. ஒரு படைப்பின் நோக்கம் அதைச் சொத்தாக மாற்றுவது அல்ல. அதனை வெகுமக்களிடம் எடுத்துச் சென்று சேர்ப்பதுதான் என்பது இவர்களுக்குத் தெரியும்.
அந்த வகையில் ஒரு உலகளாவிய படைப்பை மொழிபெயர்த்து ஒரு பெரும் மக்கள் திரளிடம் எடுத்துச் செல்வது  _ உள்நோக்கமற்ற _ ஒரு சிறப்புப் பணியாக சமூகச் செயல்பாடாக இருக்கும் பட்சத்தில் அதற்குக் காப்புரிமை என்பது குறுக்கே நிற்குமானால்  அச்சட்டங்களுக்கு எதிராகப் போராடுவதும் அக்களத்தில் துணிந்து நின்று செயல்படுவதும் சமூக ஆர்வலர்கள் அனைவரின் கடமையாகும்.
துணை நின்ற நூல்கள்
1. ‘பதிப்பு காப்புரிமையின் வரலாறு’ _ மைக்கேல் காயில், லாவிட் பதிப்பக வெளியீடு, லண்டன் _ 2002.
2. ஜிலீமீ னீணீளீவீஸீரீ ஷீயீ னீஷீபீமீக்ஷீஸீ வீஸீtமீறீறீமீநீtuணீறீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீtஹ் றீணீஷ்: ஜிலீமீ ஙிக்ஷீவீtவீsலீ மீஜ்ஜீமீக்ஷீவீமீஸீநீமீ – பிராட் ஷெர்மன் மற்றும் லுயோனெல் பென்ட்லி (1999) கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் (மிஷிஙிழி 9780521563635)
3. விடுதலையின் தொழில் நுட்பம் (ஜிலீமீ tமீநீலீஸீஷீறீஷீரீஹ் ஷீயீ யீக்ஷீமீமீபீஷீனீ) _ டிசோலோ பூல்இத்தியல் (1983) ஹார்வர்ட் பல்கலை _ பிரஸ் (மிஷிஙிழி 9780674872332

* கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என அனைத்துத் தளங்களிலும் பயணித்து வருபவர். “புதிய புத்தகம் பேசுது” இதழின் ஆசிரியர். ஆயிஷா நடராசன் என அழைக்கச் செய்த “ஆயிஷா” என்ற புகழ்பெற்ற சிறுநூலை (லட்சத்துக்கு மேற்பட்ட படிகள் – இன்றும் விற்பனையில்) எழுதியவர். மேலும் விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள், கணிதத்தத்தின் கதை, கலிலியோ (நாடகம்), உள்ளிட்ட ஏராளமான
அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும் பாவ்லோ பிராய்ரோவின் ஆங்கில நூலை “ஒடுக்கப் பட்டோரின் விடுதலைக்கான கல்விமுறை” என்ற தலைப்பிலும் பிரெடரிக் டக்ளஸின் ஆங்கில நூலை ‘கறுப்பு அடிமையின் கதை”   என்ற தலைப்பிலும் தமிழாக்கம் செய்தவர்.

Share.

About Author

Leave A Reply