மதங்களை தெரிவோம் – குர்ஆன்

0
அரபு மொழியில் உருவான துவக்க கால மிக
முக்கிய படைப்புகளில் குர்ஆன் முதன்மையான ஒன்று
முஅல்லகாத் (விu’ணீறீறீணீஹீணீt) இஸ்லாத்திற்கு முற்பட்ட
காலத்தின் அரபு மொழியில் அமைந்திருந்த எழுத்து
வடிவிலான கவிதைப் பிரதியாகும்.
கரஅ (ஹீணீக்ஷீணீ’ணீ) அரபு மூலச் சொல்லிலிருந்து பிறந்த
குர்ஆன் சொல் ஒன்று திரட்டக்கூடியது. வாசிக்கக்கூடியது
(ஜிஷீ ஸிமீணீபீ, ஜிஷீ க்ஷீமீநீவீtமீ) என்பதான பொருளைக் கொண்டதாகும்.
மேலும் இச்சொல் வாசி, படி என்பதான அர்த்தம்
கொண்ட சிரியாக் மூலச்சொல்லான கர (ஹீக்ஷீணீ) என்பதிலி
ருந்து உருவானது என்ற கருத்தும் உண்டு.
ஏழாம் நூற்றாண்டு, அரபுலக புவிச்சூழலில், ஏமனில்
யூத மதமும், ரோமில் கிறிஸ்தவமும் நிலைபெற்ற காலமது.
மத்திய அரேபியாவான மக்காவில் அரபு இன மக்கள்
மத்தியில் இஸ்லாத்தின் தோற்றம் நிகழ்ந்தது.
அரபு மேய்ச்சல் சமூக மக்களான பதுயீன்கள்.
விவசாயத் தொழில், கைவினைஞர் தொழில்களை மேற்-
கொண்ட குறைஷிகள், ஹ§தைல் இன மக்கள்வாழ்வுச்-
சூழலில் நபி முகமதுவின் கலாசாரப் பயணம் நிகழ்ந்தது.
அரபு மக்கள்பல்வேறு இனங்கள், குலங்களாக,
பிளவுபட்டு சண்டையிட்டுக் கிடந்தனர். இவர்களை
ஒற்றுமைப்படுத்தி பாரசீகர்களுக்கும், ரோமானியர்களுக்கும்
இணையாக உயரச் செய்வதும், மக்காவின் நாடோடி
மேய்ச்சல் நில பொருளாதார வாழ்விற்கும், மதிநாவின்
வர்த்தகப் பொருளாதார வாழ்விற்கும் இடையே சமச்சீரான
நிலையை உருவாக்குவதும் இதன் முக்கிய நோக்கங்கள்.
தனி மனித, சமூக வாழ்விற்கிடையிலான அறிவியல் ஒழுக்க
நெறிகளை ஏற்படுத்துவதும் இதில் ஒன்று. இவையே
இஸ்லாம் சமயத்தின் தோற்றக் காரணிகளாகத் திகழ்கின்-
றன. இக்கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் விதத்தில்தான்
முஸ்லிம்களின் சமய நூல் குர்ஆன் திகழ்கிறது.
2) முஸ்லிம்கள்அல்லாஹ்வை இறைவன்,
உலகெலாம் படைத்து பரிபாலிக்கும் ஒப்பற்ற உருவமற்ற
தனிப்பரம்பொருள்என்று நம்புகிறார்கள். மனித குலத்தை
நல்வழிப்படுத்த மனிதக் கூட்டத்திலிருந்து இறைவனால்
அனுப்பப்படும் தூதர் நபி. இவ்வாறான ஆதாரபூர்வ
நபிமார்கள்இருபத்து ஐந்துபேர் என்பதும் ஆதம் நபியில்
துவக்கம் கொண்ட இவ்வரிசையில் இறுதித் தூதரே
நபிமுகமது என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைகளில் உண்டு.
நபி முகமது அரேபிய மண்ணில் மக்காவில்
குறைஷியர் குலத்தில் தோன்றி அம்மக்களிடையே
இறைவணக்கம் மற்றும் புதியதான வாழ்வியல் சமுதாய
ஒழுங்குகளை நிலைநாட்டி இஸ்லாமிய மார்க்கத்தை உலக
சமுதாய மக்கள்மத்தியில் உருவாக்கம் செய்தவர்.
முஸ்லிம்களின் உலகியல் மற்றும் மறுமை வாழ்வு
குறித்தும் குர்ஆன் பேசுகிறது. இது ஜிப்ரயீல் என்னும்
தேவதூதர் மூலமாக, வஹியாக, நபி முகமதுவிற்கு அரபு
மொழியில் இறக்கப்பட்ட இறைச் செய்திகளின் தொகுப்பு.
நபி முகமதுவின் பிற்கால வாழ்வின் இருபத்து மூன்று
வருட காலகட்டத்தில் (கி.பி.610-_632) அவ்வப்போது இந்த
வசனங்கள்வெளிப்பட்டன. முதல் குர்ஆன் வசனம்
வெளிப்பட்டு நாற்பது ஆண்டுகள்கழித்தும், நபி முகமது
மரணத்திற்குப் பிறகு இருபது ஆண்டுகள்முடிந்தும், கலிபா
உதுமானின் காலகட்டத்தில் இறுதி செய்யப்பட்ட
குர்ஆனையே இன்று முஸ்லிம்கள்பின்பற்றுகின்றனர்.
இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள்இந்த வஹி
கோட்பாட்டை இறைவனின் அருள்நபி முகமதுவின்
உள்மனத்தூண்டல் மூலமாக வெளிப்பட்டுள்ளதாகவும்
மதிப்பீடு செய்கின்றனர்.
நபி முகமதுவிற்கு வழங்கப்பட்ட குர்ஆனிய
வசனங்கள்ஒலி வடிவிலானவை. பின்னரே எழுத்து
வடிவில் அவை தொகுக்கப்பட்டன. பேரீச்ச மரப்பட்டைகளி
லும், ஒட்டகை பிராணியின் எலும்புகளிலும்,
தோல்களிலும் இவை எழுதப்பட்டன. ஒலி வடிவம், எழுத்து
வடிவமாகும்போது ஒரு மாற்றத்திற்கு உள்ளாகிறது. அரபு
எழுத்து மரபில் ஸேரு, ஸபரு, பேஷ் ஷத்து, மத்து, நுக்தா
உள்ளிட்ட உயிர்க்குறிகள்சார்ந்து இலக்கண முறைமைகளும்,
வாக்கிய அமைப்பு, தொகுப்பு, தலைப்பிடுதல்
உள்ளிட்டவையும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டன.
நபி முகமதுவின் மறைவிற்குப் பிறகு முதல் கலீபா
அபூபக்கர் காலத்தில் குர்ஆன் வசனங்களைத் தொகுக்கும்
பணி துவக்கப்பட்டது என்றாலும் மூன்றாவது கலீபா
உதுமான் காலத்திலேயே குர்ஆன் இறுதி வடிவம் பெற்றது.
காதிபெ- _ வஹி என்னும் இப்னுதாபித் உள்ளிட்ட
இறைவசனம் எழுதும் குர்ஆன் நிபுணர் குழுவால் ஒன்று
திரட்டப்பட்டு குறைஷிகளின் அரபு மொழியின்
துணைக்கொண்டு தயாரித்து முடித்த போது பிற வழக்கில்
உள்ள மாறுபட்ட குர்ஆன் பிரதிகள்அகற்றப்பட்டன.
குர்ஆனின் அமைப்பு முறை ஏழு மன்ஸில்கள்.
முப்பது ஜுஸ்வுகள். 114 ஸ§ராக்கள்(அத்தியாயங்கள்)
என பகுக்கப்பட்டுள்ளன. நபி முகமதுவுக்கு குர்ஆன்
வசனங்கள்தர்தீபே நுஜுலி என்பதான அருளப்பெற்ற
வரிசை மாறுபட்டும் உள்ளது. நபி முகமதுவுக்கு
முதன்முதலில் அருளப்பட்ட ஓதுவீராக (இக்ரஹ்) வசனம்
தற்போது குர்ஆனில் முதல் வசனமாக இல்லை. மாறாக
ஸ§ரத்துல் அலக் 96-வது அத்தியாயத்தின் முதல் ஐந்து
வசனங்களாக அவை உள்ளன. அதுபோல் கடைசியாக
அருளப்பட்ட வசனங்கள்ஸ§ரத்து கவ்பா 9-_ஆம் அத்தியா-
யத்தின் 129-_வது வசனமாகவும், நான்காவது அத்தியாயமான
ஸ§ரத்துன்னிஸா கலாலா பற்றிய வசனங்களாகவும்
இடைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
குர்ஆனில் இடம்பெறும் வசனங்கள்6666, 6250,
6236, 6218 என பலவகையில் மாறுபட்ட எண்ணிக்கையில்
குறிப்பிடப்பட்டாலும் இந்திய அளவில் பின்பற்றப்படும்
குர்ஆனில் 6236 வசனங்கள்மட்டுமே உள்ளன.
சுன்னி முஸ்லிம்கள்முப்பது அத்தியாயங்களாகக்
கருதும் குர்ஆனை ஷியா முஸ்லிம்கள்இமாம் அலிக்கு
(நபி முகமதுவின் மருமகனார், நான்காம் கலீபா) இறைவன்
வஹியின் மூலம் அருளியது என அல் நூர்யான் மற்றும்
அல்விலாயா என புது இரு அத்தியாயங்களையும் இணைத்-
துள்ளார்கள்.
கிபி 632_ல் நபி முகமதுவின் மறைவிற்குப் பிறகு
தங்கள்ஆட்சிக் காலத்திலேயே கலிபாக்கள்உமர்,
உதுமான், அலி ஆகியோர் கொல்லப்படுகின்றனர். கலிபா
அலியின் மகன் ஹ§சைனும் தோழர்களும் கர்பலாவில்
படுகொலை செய்யப்படுகின்றனர். ஆக்ரமிப்புப் போர்கள்,
உள்நாட்டுக் கலவரங்கள்என பல இதில் உண்டு. இந்த
வகையில் அதிகாரத் தலையீடுகள், சார்பு நிலைகள்,
இனப்பகை முரண்கள், ஆதிக்கங்கள், மறைக்கப்பட்ட,
மாற்றப்பட்ட, சேர்க்கப்பட்ட வசனங்கள்என பல்வேறு
பிரச்சனைகளைக் கலிபா உதுமானின் காலத்தில் இறுதி
செய்யப்பட்ட குர்ஆன் எதிர்கொண்டுள்ளது.
3) குர்ஆனின் 114 அத்தியாயங்களுக்கும் இடப்பட்ட
தலைப்புகளில் பல கவித்துவக் குறியீடுகளாகவும், யதார்த்த
மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின்
இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் திகழ்கிற
இடி (அர்ரஃது). அந்த ஒளி (அந்நூர்), மலை (அத்தூர்),
புழுதிக்காற்று (அத்தாரியாத்), நட்சத்திரம் (அந்நஜ்மு),
சந்திரன் (அல்கமர்), கிரகங்கள்(அல்புரூஜ்), விடிவெள்ளி
(அத்தாரிக்), வைகறை (அல்பஜ்ர்), இரவு (அல்லைல்),
மற்பகல் (அல்லுஹா) காலைப்பொழுது (அல்பலக்) என்பதா
க இவை அமைந்துள்ளன. உயிரினங்களின் அடையா
ளங்களைக் கொண்ட பெயர்கள்பிறிதொரு வகை.
பசுமாடு (அல்பகறா), கால்நடைகள்(அல்அன்ஆம்)ஸ்ரீ,
தேனீ(அந்நஹல்), எறும்பு (அந்நமல்), சிலந்தி (அல்
அன்கபூத்), யானை (அல்பீல்) என இவற்றை
வரிசைப்படுத்தலாம். இவ்வாறு தலைப்பிட்ட குர்ஆனின்
அத்தியாயங்கள்வெவ்வேறு உள்ளடக்கங்களைக்
கொண்டுள்ளன. மாதிரியாக காலைப்பொழுது சிறு
அத்தியாயத்தில் வைகறையின் அதிபதியான இறைவனிடம்
இரவின் இருளிலிருந்தும், முடிச்சுப் போட்டு ஊதும்
பெண்களிடமிருந்தும், பாதுகாவல் தேடுகிறது. இருளிலி
ருந்து ஒளியை நோக்கிய பயணமாக இது அமைகிறது.
அல்பீல் _ யானை குறும் அத்தியாயத்தில் மக்கமா நகரின்
கஃபாவை அப்ரஹா மன்னனின் யானைப் படைகளின்
மூலம் அழித்தொழிக்க வரும்போது இறைவன் பறவைக்
கூட்டங்களை அனுப்பி அவை எறிந்த சுடுமண் கற்களால்
அப்படையே அழிந்துபோன நபி முகமதுவின் காலத்திற்கு
முந்திய நிகழ்வைப் பதிவு செய்கிறது. இது புனைவு
மொழியாடல் வடிவத்திலும் வெளிப்பட்டுள்ளது.
நபி முகமதுவுக்கு முற்பட்ட அரபு சமூக வரலாற்றை
எழுதிச் செல்லுதல் என்கிற நோக்கில் குர்ஆனின் சில
தலைப்புகளின் உள்ளடக்கம் அமையப் பெற்றுள்ளது.
அல்அன்பியா- _ நபிமார்கள்என்னும் 21-வது அத்தியாயம்
மூஸா ஹாரூன் இபுராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப்,
தாவூத், ஸ§லைமான், யூனூஸ் உள்ளிட்ட நபிமார்கள்
பற்றிப் பேசுகின்றன. மேலும் யூனூஸ், ஹ§து, யூசுப்,
இப்ராஹிம், முகமது ஆகிய நபிமார் வரலாறுகள்தனித்தனி
அத்தியாயங்களாகவும் அமையப் பெற்றுள்ளன. பனு
இஸ்ராயீல் அத்தியாயத்தில் இஸ்ரவேலர்களான யூத குல
வரலாறு மூஸா நபியின் நிகழ்வுகளோடு வெளிப்பட்-
டுள்ளது.
இஸ்லாமிய கோட்பாடுகளின் உருவாக்கம்
நிகழ்ந்தபோது அங்கு நிலவிய யூதர்கள், கிறிஸ்தவர்கள்
மற்றும் பழங்குடி மக்களோடு உரையாடலை நிகழ்த்த
வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு இருந்தது. இதன்
வெளிப்பாடே அல்பகறா _ -பசுமாடு மற்றும் ஈஸா நபி
(இயேசு)யின் பாட்டனாரான இம்ரானின் சந்ததிகளைப்
பற்றிப் பேசும் ஆலு இம்ரான், தூதர்களைப் பொய்யர்கள்
எனக் கூறி ஏற்றுக் கொள்ளாத ஹிஜ்ர்வாசிகளான ஸமூது
சமுதாயத்தினரை வெளிப்படுத்தும் அல்ஹிஜ்ர் உள்ளிட்ட
அத்தியாயங்களைக் குறிப்பிடலாம்.
குர்ஆனில் பெண் சார்ந்த பிரச்சனைகளை
மையப்படுத்திப் பேசும் பகுதிகளாக 19-வது அத்தியாயம்
மர்யம் (ஈஸா நபியின் தாய்) 4-_வது அத்தியாயம் அன்னிஸா-
_ பெண்கள், 65வது அத்தியாயம் அத்தலாக்-_ விவாகரத்து
உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். முஸ்லிம்
பெண்களுக்கான திருமணம், குடும்ப வாழ்வு, சொத்துரிமை,
விவாகரத்து, வாரிசுரிமை சட்டங்கள்என பல தீர்மானிக்-
கப்பட்ட சட்ட விதிகளை இப்பகுதிகள்கொண்டுள்ளன.
அறிவுக்கும், கல்விக்கும் முதன்மையளிக்கும்
அல்கலம்- _ எழுதுகோல் மனிதப்பிறப்பை ரத்தக்கட்டியிலி
ருந்து உருவானதாக புராதன உடலியல் விஞ்ஞானத்தை
முன்வைக்கும் அல்- _ அலக் ஆகிய அத்தியாயங்களும்,
இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கன.
இஸ்லாமியப் பொருளியலின் அடிப்படையான
நாற்பதில் ஒரு பங்கு ஏழை வரியாக செலுத்தக்கூறும் ஜகாத்
கோட்பாடு நலிந்த பிரிவினருக்குச் செய்ய வேண்டிய
தானதருமம், அடிமை முறை ஒழிப்பு, வணிகத்தில் பேண
வேண்டிய நெறிமுறைகள்உள்ளிட்ட பிரச்சனைகளையும்
வழிகாட்டுதல்களையும் இன்னும் பல பகுதிகளில் குர்ஆன்
எடுத்துரைக்கிறது.
Share.

About Author

Leave A Reply