திராவிட இயக்கப் புத்தகங்கள்

0
திருநாவுக்கரசு

புத்தகங்கள்ஏற்படுத்திய புரட்சிகள்மகத்தானவை.
அதேபோல பத்திரிகைகளும் பெரியதொரு மாற்றங்களுக்கு
த் துணை புரிந்து இருக்கின்றன. புத்தகங்களும்
பத்திரிகை-களும் புரட்சிகர அரசியல் இயக்கங்களின்
இரு கண்களாகும். ஆளுகிற கொள்கை எதிரிகள்தம்
ஆட்சிக் காலத்தில் பத்திரிகைகளையும் புத்தகங்களை-
யும் தடை செய்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் _ பழைய சென்னை மாகாணத்தில்
திராவிட இயக்க ஏடுகளும் பொதுவுடைமை இயக்க
ஏடுகளும் புத்தகங்களும் தடை செய்யப்பட்டு இருந்தன.
அதற்குக் காரணம் இவ்வியக்கங்கள்அவ்வேடுகளின்
மூலம் எடுத்துச் சென்ற கருத்துகள்அதன் எதிரிகளுக்கு
அபாயகரமானவையாகத் தெரிந்ததுதான்!
எழுத்தின் எல்லா வடிவங்களையும் இலக்கியமாகக்
கொள்ளலாம். அது பத்திரிகையிலும் இடம் பெற்று
இருக்கலாம். புத்தகமாகவும் வெளிவந்து இருக்கலாம்.
அந்த வடிவங்கள்அறிக்கை, கட்டுரை, ஆய்வுரை, கவிதை,
இசைப்பாட்டு, சிறுகதை, ஓர் அங்க நாடகம், நாடகம்,
குறுநாவல், நாவல், திரைப்படம் என இப்படிப் பல
இருக்கக்கூடும்.
பத்திரிகைகளாகவும், புத்தகங்களாகவும், திரைப்படமா
கவும் வெளிவந்த எழுத்தின் வடிவங்கள்பெரிய-
தொரு சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கின்றன. அவை
தலைக்-கீழ் மாற்றத்தையும் உண்டு பண்ணி இருக்-
கின்றன. அரசுகளைக் குப்புறக் கவிழ்த்தும் இருக்-
கின்றன. மகத்தான புரட்சிகளும் நிகழ்த்தப்பட்டு
வெற்றியும் அடைந்து இருக்கின்றன.
இலக்கியத்திற்கு அந்த ஆற்றல் உண்டு. இலக்கியம்
வாழ்ந்து காட்டியதையும் வாழப் போவதையும்
காட்டும் காலக் கண்ணாடி என்பதோடு சிறந்த வழிகாட்
டுதல்களை வழங்கும் போர்க் கருவியாகவும்
திகழக்கூடியவை. அப்படிப்-பட்ட ஆற்றல் உள்ள இலக்-
கியங்களை ஒவ்வொரு சிறந்த அரசியல் இயக்கமும்
அவ்வவற்றின் கொள்கைகளைப் பரப்ப பயன்படுத்திக்
கொண்டு உள்ளன.
திராவிட இயக்கம் தோன்றி 92_ஆம் ஆண்டு நடை-
பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் பல்வேறு கால
கட்டங்களில் அவ்வியக்கம் வெளியிட்ட புத்தகங்கள்,
ஆதரவு நிலையில் வெளிவந்த புத்தகங்கள்பெரிய
பரபரப்-பையும் சர்ச்சைகளையும் மாபெரும் மாற்றங்க
ளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இதன்மூலம்
ஜனநாயகத்தின் வழி அவ்வியக்கம் அரசைப் பல
கட்டங்களில் கைப்பற்றி இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் வழி அதன் எழுத்தாளர்கள்
எழுதிய புத்தகங்கள்_ எந்தெந்த புத்தகங்கள்_ பரபரப்-
பையும் சர்ச்சைகளையும் உண்டாக்கின என்பதைக்
குறித்து முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே
பார்க்கலாம்.
திராவிட இயக்கம் அதன் நீதிக்கட்சிக் காலத்தில்
புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட (1916) பார்ப்பனர்
அல்லாதார் அறிக்கை பெருத்த விவாதத்தைக்
கிளப்பியது. அவ்வறிக்கை வெளிவந்த நான்கு
ஆண்டுகளில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றி 1937
வரை ஆட்சியில் இருந்தது.
நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டாக்டர்
டி.எம். நாயர் சென்னை சேத்துப்பட்டில் ஆதி திராவிட
மக்களிடையே உரை நிகழ்த்தினார். (1917) இவ்வுரையை
அன்றைய திராவிடன் நாளேடு வெளியிட்டது. பின்னர்
இப்பேச்சு ÔÔஸ்பார்டாங் ரோடு பேச்சுÕÕ எனச் சிறு நூலாக
வெளிவந்த போது மேட்டுக்குடி மக்கள்ஆடிப் போயினர்.
நீதிக்கட்சி உருவாவதற்கு முன்பு திராவிட இயக்கக்
கொள்கைகளுக்கு ஆதரவாக இரண்டு புத்தகங்கள்
வெளிவந்தன. ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ கீஷீக்ஷீtலீவீமீs, ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ லிமீttமீக்ஷீs
எனும் அப்புத்தகங்கள்திராவிட இயக்கம் தோன்றி
வளரவும், அறிவாளர்களை ஒரே பதாகையின் கீழ்க்
கொண்டு வரவும் துணை புரிந்தன.
நீதிக்கட்சி காலத்தில் அறிஞர் பா.வே. மாணிக்க
நாயக்கர் பல புத்தகங்களை எழுதினார். அவற்றில்
இரண்டு புத்தகங்கள்திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும்
அரசியலுக்கும் வலுவைச் சேர்த்தன. ஒரு
புத்தகம் தமிழில் வெளிவந்தது. அதன் பெயர் ÔÔகம்பன்
புளுகும் வால்மீகி வாய்மையும்ÕÕ என்பது ஆகும். இவர்
எழுதிய இன்னொரு புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்
தது. அந்தப் புத்தகத்தின் பெயர் “ஙிமீtஷ்வீஜ்t ஷீuக்ஷீ ஷிமீறீஸ்மீs
வீஸீ tலீமீ விணீபீக்ஷீணீs 200” என்ப-தாகும். இப்புத்தகம் நீதிக்-
கட்சிக்கு எதிரணியில் இருந்தவர்-களை எள்ளி நகையா
டியது. நீதிக்கட்சிக்காரர்களின் அரசியல் அப்பாவித்-
தனத்தை எடுத்துக்காட்டி அவர்களை உசுப்பி விட்டது.
சுயமரியாதை இயக்கக் காலத்தில் வெளிவந்த பல
புத்தகங்கள்மக்களிடையே பெரும் பரபரப்பையும்,
படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும், சமூக
விழிப்புணர்வையும், அரசியலைக் கவனிக்க வேண்டிய
அவசியத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தின. அவ்வாறு
வெளிவந்த புத்தகம்-தான் ÔÔநான் ஏன் நாஸ்திகனா-
னேன்?ÕÕ _ என்கிற புத்தகம்!
இப்புத்தகத்தின் உள்ளடக்கம் பகத்சிங் தமது
சகோதரர்க்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பாகும்.
இக்கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
ஜீவா. குடிஅரசு பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டவர்

பெரியாரின் தங்கை சா.ரா. கண்ணம்மாள். இதனால்
இருவரும் சிறை தண்டனை பெற்றனர்.
காதரின் மேயோ எனும் அமெரிக்கப் பெண்மணி
ÔÔமதர் இந்தியாÕÕ எனும் புத்தகத்தை எழுதினார். இந்தப்
புத்தகம் 1927ஆம் ஆண்டு ஜூலை தொடங்கி டிசம்பர்
முடிய எட்டுப் பதிப்புகள்விற்றுத் தீர்ந்தன.
இப்புத்தகத்தில் அப்படி என்ன இருந்தது? இந்திய
மக்களின் வாழ்நிலையை எடுத்துக்காட்டி ÔÔஇவர்கள்
சுயாட்சிக்கு அருகதை இல்லாதவர்கள்ÕÕ என்கிற
கருத்தை அப்புத்தகம் வெளியிட்டு இருந்தது.
இக்கருத்தை ஆதரித்துக் கோவை அய்யாமுத்து
பெரியாரின் குடிஅரசு ஏட்டில் ÔÔமேயோவின் கூற்று
மெய்யா? பொய்யா?ÕÕ எனும் கட்டுரைத் தொடரை
எழுதினார். பிறகு அது புத்தகமாக வந்து பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
சுயமரியாதை இயக்க வெளியீடுகளாக (குடிஅரசு
பதிப்பகத்தின் சார்பில்) தமிழில் முதன் முதலில்
வெளியிடப்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை,
மதத்தைப் பற்றி லெனின், கதரின் தோல்வி, (இதை
எழுதியவர் சுயமரியாதை இயக்கத்தின் முதல்
செயலாளராக இருந்த எஸ். இராமநாதன். 1925 வரை
காங்கிரசில் இருந்தபோது அவர் ÔÔகதரின் வெற்றிÕÕ
என்றொரு புத்தகத்தை எழுதினார். பிறகு சுயமரியாதை
இயக்கத்திலிருந்தும் விலகி மீண்டும் காங்கிரசில்
சேர்ந்து 1937இல் இராஜாஜி அமைச்சரவையில்
அமைச்சரானார்) ஞான சூரியன், பிர்லா மாளிகை
மர்மம், இ.மு. சந்திரசேகரப் பாவலரின் இராமாயண
ஆராய்ச்சி, பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள்,
இராமாயண ஆராய்ச்சி போன்ற நூல்கள்தமிழகத்தை
ஒரு புரட்டுப் புரட்டி எடுத்துவிட்டன.
திராவிடர் கழகக் காலத்தில் புலவர் குழந்தை
இயற்றிய இராவண காவியம் என்றொரு செய்யுள்
நூல் வெளிவந்தது. இந்நூல் வெளிவருவதற்கு முன்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின், ÔÔஇரணியன் அல்லது
இணையற்ற வீரன்ÕÕ எனும் நாடகம் நூலாக்கப்பட்டு
வெளிவந்தது. இந்நூல்தான் திராவிட இயக்கத்தாரின்
நூல்களுள்முதன் முதலாகத் தடை செய்யப்பட்ட
நூலாகும். இதற்குப் பிறகுதான் இராவண காவியம்
1948இல் அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி
அமைச்சராக இருந்தபோது தடை செய்யப்பட்டது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ்நாடு தழுவிய
காப்பியப் பெருநூல்களாகக் கடைசியாக வெளிவந்தவை
கம்ப இராமாயணமும், பெரிய புராணமும் மட்டுமே!
அதன்பிறகு 3000 செய்யுள்களுக்கு மேலாக
இயற்றப்பட்டு வெளிவந்த நூல் இராவண காவியம்
மட்டுமே! இராவண காவியத்திற்குப் பிறகும் இவ்வளவு
செய்யுள்களைக் கொண்ட மற்றொரு காப்பிய நூல்
தமிழில் இதுவரை வெளிவரவில்லை.
மேலும் கம்ப இராமாயணத்திற்கு இராவண
காவியம் எதிரான நூல் என்று சொல்லுவதை விட
அதனை (கம்ப) இராமாயணத்திற்கு ÔÔமாற்று
இலக்கியம்ÕÕ என்றே குறிப்பிட வேண்டும். 1948இல்
தடை செய்யப்பட்ட இந்நூல் 17.5.1971இல் கலைஞர்
மு. கருணாநிதி முதல்வராக இருந்த-போது தடையை நீக்கினார்.
பெரியாரின் ÔÔபொன் மொழிகள்ÕÕ எனும் நூல் தடை
செய்யப்பட்டது. அறிஞர் அண்ணாவின் ÔÔஆரிய மாயைÕÕ
எனும் நூலும் இதே கால கட்டத்தில் தடை செய்யப்பட்
டது. இவ்விரு நூல்களும் ஒரே சமயத்தில் தடை
செய்யப்பட்டு பெரியாரும் அறிஞர் அண்ணாவும்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இரு தலைவர்-
களும் 10 நாள்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
அறிஞர் அண்ணா எழுதிய Ôஇலட்சிய வரலாறுÕ,
புலவர் பு. செல்வராசு எழுதிய Ôகருஞ்சட்டை ஒழிய
வேண்டுமா?Õ, ஏ.வி. ஆசைத்தம்பி எழுதிய Ôகாந்தியார்
சாந்தி அடையÕ போன்ற நூல்கள்தடை செய்யப்பட்
டன. சி.பி. சிற்றரசு எழுதிய Ôபோர்வாள்Õ, கலைஞர்
மு. கருணாநிதி எழுதிய Ôதூக்குமேடைÕ, Ôஉதயசூரியன்Õ,
போன்ற நாடகங்கள்தடை செய்யப்பட்டன. அறிஞர்
அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு ஜாமீன்
தொகையும் கேட்கப்பட்டது.
பெரியார் தமது ÔகுடிஅரசுÕ ஏட்டில் இந்த ஆட்சி
ஏன் ஒழிய வேண்டும்? என்று எழுதியதற்காகக்
குடிஅரசு ஏட்டை பிரிட்டிஷார் தடை செய்தனர்.
அதனால் அவர் பகுத்தறிவு, புரட்சி எனும்
இதழ்களையும் நடத்த வேண்டியதாயிற்று.
திராவிட இயக்கத்தாரால் 300க்கும் மேற்பட்ட
ஏடுகள்நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட
எழுத்தாளர்கள்தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினா
ர்கள். ஏராளமான நூல்கள்ஒரு ரூபாய், இரண்டு
ரூபாய்விலையில் வெளியாயின; விற்பனையும் ஆயின.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள்
தொடர்ந்து விற்பனையாகிக் கொண்டே இருந்தன.
Ôபொன்னிÕ இதழின் வழி பாரதிதாசனின் பரம்பரை
ஒன்று உருவாயிற்று. அவர்களும் கவிதைகளைப்
புனைந்து நூல்களாக்கி வெளியிட்டனர்.
தடை செய்யப்பட்டு பரபரப்பாகப் பேசப்பட்ட
நூல்களன்றி அந்தக் காலத்தில் நம் சிந்தையைச்
சிலிர்க்கச் செய்த நூல்களுள்சிலவற்றைச் சொல்லியே
ஆக வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம்,
பிடிசாம்பல், கலைஞர் கருணாநிதியின் நளாயினி,
பேராசிரியர் அன்பழகனின் வகுப்புரிமைப் போராட்டம்,
நாவலர் இரா. நெடுஞ்செழியனின் இங்கர்சால், இரா.
செழியனின் அண்ட சராசரங்கள், அடிமையின் காதல்,
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின்
தென்னாட்டுப் போர்க்களங்கள், முப்பால் ஒளி கே.ஜி.
இராதா மணாளின் பர்ண சாலை, தாரா, அரக்கு
மாளிகை, இராம. அரங்கண்ணலின் ரஸ்புடீன்,
வியர்வையின் வெற்றி, அறுவடை, சி.பி. சிற்றரசுவின்
விஷக்கோப்பை, எமிலி ஜோலா, டி.கே. சீனிவாசனின்
ஆடும் மாடும், ஊர்ந்தது உயர்ந்தால், எஸ்.எஸ்.
தென்னரசுவின் மயிலாடும் பாறை, தில்லை
வில்லாளனின் ஆண்டாள்(திரை) என இப்படிச்
சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி வெளிவந்த திராவிட இயக்கப் புத்தகங்கள்
அறிவுத் தாகத்தைத் தூண்டின. மனத்தில் ஒரு
கிளர்ச்சித் துடிப்பைத் தோற்றுவிக்கவும் செய்தன.
அந்த இனிய நாள்கள்மீண்டும் திரும்புமா?


Share.

About Author

Leave A Reply