தமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்த புத்தகங்கள்

0
 சி. பார்த்திபராஜா

பண்பாடு எனறால் என்ன? Ôபண்பெனப்படுவது
பாடறிந்தொழுகல்Õ என்று குறிப்பிடுகிறது கலித்தொகை.
பண்புடைமை என்ற தலைப்பில் திருவள்ளுவரும் பண்பு
என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். பண்பாடு என்ற
சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் இரசிகமணி
டி.கே.சிதம்பரநாதன் ஆவார். 1952 இல் சிuறீtuக்ஷீமீ ணீ நீக்ஷீவீtவீநீணீறீ
க்ஷீமீஸ்வீமீஷ் ஷீயீ நீஷீஸீநீமீஜீts ணீஸீபீ பீமீயீவீஸீவீtவீஷீஸீs என்ற நூலினை எழுதிய
குரோபரும் குளுக்கானும் பண்பாடு என்பதற்கு 160க்கும்
மேற்பட்ட வரையறைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.
அவற்றில் இரு வரையறைகள்இக்கட்டுரையின்
முன்னுரைக்கு அவசியமானவை.

1. மக்கள்தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச்
சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும். பழக்கங்களும்,
மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.

2. பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க
நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன்
சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற
திறமைகளும், பழக்கங்களும் அடங்கிய முழுமைத்
தொகுதியாகும்.
மேற்குறித்த இரு வரையறைகளும் ஒரு பொதுவான
புரிதலுக்கே அன்றி, முழுமையான விளக்கமாக அமையாது.
பண்பாடு என்பதனை ஒரு வகையான தப்பிக்கும் பதம்
(மீஸ்ணீsவீஸ்மீ tமீக்ஷீனீ) என்பார் க.ப.அறவாணன். இன்னதுதான்
என அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில், ஒரு மனிதனின்,
ஒரு மனிதக் கூட்டத்தின் வாழ்வில் வெளிப்படும், பிறப்பு
முதல் இறப்பு வரையிலான அனைத்து
அறிவாற்றல்களையும், நன்மைக் கூறுகளையும் பண்பாடு
எனக் கொள்ளலாம் என்பது அவரது கருத்து.
தமிழர்களின் எழுத்திலக்கியங்களின் பரப்பளவு சுமார்
2,500 ஆண்டுகள்என்று ஆய்வறிஞர்கள்
மதிப்பிட்டுள்ளனர். அதிலும் தமிழில் கிடைத்துள்ள முதல்
நூலும் தொன்மையான நூலுமாகிய தொல்காப்பியம்
என்னும் இலக்கண நூல், தனக்கு முன்னரே ஏராளமான
இலக்கிய, இலக்கண நூல்கள்வழக்கில் இருந்தமையைச்
சுட்டிக் காட்டுகிறது. எனவே, தமிழன் என்ற தேசிய இனம்
பன்னெடுங்காலத்திற்கு முன்னரே உருவாகி,
நிலைபெற்றுவிட்டது எனலாம். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இலக்கியங்கள்
கண்டறியப்பட்ட அல்லது தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட
பின்புலத்திலேயே தமிழர்களின் பண்பாடு குறித்த எழுத்துப்
பதிவுகள்தொடங்குகின்றன. ஆகவே தொடக்க நிலையில்
அவை பெரும்பாலும் இலக்கியங்களை மட்டுமே
தரவுகளாகக் கொண்டிருந்தன. சிலப்பதிகாரம்
பதிப்பிக்கப்பட்ட பின்னணியில் தனது Ôஆயிரத்தெண்ணூறு
ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்Õ என்ற நூலினை எழுதிய
வி.கனகசபை (1855-_1906), தனது நூலில் சிலப்பதிகாரம்
மற்றும் மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களின்
கதைகளை விரித்து அறிமுகப்படுத்துகிறார். இவ்வாறே
இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப்
பண்பாட்டை விளக்கப்படுத்தும் முறைமை உருவாக்கம்
பெறுகிறது. அதாவது, சங்கத் தமிழரின் பண்பாட்டை
எடுத்தியம்பும் கட்டுரைகள், நூல்கள்முதன்மையாகச் சங்க
இலக்கியங்களையே தரவுகளாகக் கொண்டிருந்தன.
இலக்கியங்கள்பண்பாட்டை அப்படியே பிரதிபலிக்குமா?
என்ற வினா இவ்விடத்தில் எழுவது இயல்பேயாகும்.
இலக்கியங்கள்சமூகத்தைக் கண்ணாடியைப் போன்று
பிரதிபலிப்பன என்ற Ôபிரதிபலிப்புக் கோட்பாடுÕ உலக
அளவில் தாக்குதல்களைச் சந்தித்து விட்டது.
இலக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு
பண்பாட்டை மட்டுமல்ல, வரலாற்றையும் கட்டக்கூடாது.
ஏனெனில், இலக்கியம் முழுவதும் உண்மையாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. இலக்கியத்தின்
சாராம்சம்தான் உண்மை. அவ்வாறெனின் இலக்கியத்தின்
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள, ஏனைய
தரவுகளைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தமிழ்ப் பண்பாட்டு வரலாறெழுதியலும் அகழ்வாய்வுகள்,
கல்வெட்டுகள், நாட்டாரிலக்கியங்கள்ஆகியவற்றைத்
துணைக் கொண்ட பின்னர், புதிய திசை வழியை நோக்கிப்
பயணப்பட்டது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள்(1876_-
1916), காவிரிப்பூம்பட்டின உறைகிணறுகள்அகழ்வாய்வுகள்
(1910). அரிக்கமேடு அகழ்வாய்வுகள்(1945) ஆகியன தந்த
புதிய செய்திகள்தமிழர் பண்பாட்டு வரலாறெழுதியலில்
ஒரு உண்மைத் தன்மையைத் தந்தன.
தமிழர் தம் பண்பாட்டு வரலாறு குறித்த நூல்களைப்
படிக்கும்போது, குறிப்பிட்ட நூலின் அல்லது
நூலாசிரியரின் வரலாறெழுதியல் முறைமையைக் கருத்தில்
கொண்டு படிக்க வேண்டும். ஏனெனில் தரப்பட்டுள்ள
தரவுகள்உண்மையானவையாகவே இருக்கும். ஆனால்
அதை எடுத்தியம்பும் நூலாசிரியரின் கருத்தியல், அரசியல்
ஆகியன கருத்தில் கொள்ளத் தக்கன. பண்பாட்டை
விளக்கப்படுத்துதல்களில் கருத்தியல்களின் வகிபாகம்
கூர்ந்து கவனிக்கத்தக்கது. சங்க காலம் என்ற பத்துப்பாட்டு,
எட்டுத் தொகை ஆகிய இலக்கியங்களில் காலம்,
தமிழர்களின் பொற்காலம் என்ற முறையிலும் அதுவே
தமிழர்களின் தன்னரசுக்காலம் என்றும்
முன்வைக்கப்பட்டது. சங்கம் மருவிய காலம் என்று
அழைக்கப்படுகிற களப்பிரர் காலம் இருண்டகாலம் என்று
அடையாளப்படுத்தப்பட்டது. எனவே தமிழர் தம் இனப்
பெருமையை முன்வைப்பதாகப் பண்பாட்டு வரலாறு
எழுதப் பெற்றது. சேரன் செங்குட்டுவனை
அடிப்படையாகக் கொண்டு, வடவர் எதிர்ப்பும் தமிழர்
தொல்பெருமையும் பேசிய திராவிடக் கருத்தியலும்
பண்பாட்டு வரலாறெழுதியலில் கணிசமான பங்களிப்பைச்
செலுத்தியது. சங்க காலம் பொற்காலம், சோழர்காலம்
பொற்காலம் என்ற கருத்துருவாக்கங்களை மார்க்சிய ஆய்வு
முறைமை தகர்த்தெறிந்தது. எனவே, கருத்தியல்களின்
வெளிச்சத்தில் பண்பாட்டை நோக்கும் முறைமையை நாம்
கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சரியான
கருத்தியல் அடிப்படையில் நாம் தமிழ்ப் பண்பாட்டு
வரலாற்றை நோக்கவில்லையெனில் பல தவறான
புரிதல்களை அடைய நேரும் ஆபத்துகள்உண்டு.
Ôதமிழ் இலக்கிய வரலாறுÕக்கு நிகழ்ந்த பேராபத்து.
Ôதமிழர் பண்பாட்டு வரலாற்றுக்கும் சிறிதளவு
நிகழ்ந்துள்ளது. ஆனாலும் அது தமிழ் இலக்கிய
வரலாறுக்கு நேர்ந்ததைப் போல பெரிதல்ல. அதாவது,
தமிழ் இலக்கிய வரலாறு தமிழ்ப் பட்டப் படிப்பு
மாணாக்கருக்கான பாடத் திட்டத்தில் இடம் பெற்ற பிறகு,
புற்றீசல்களைப்போல, தமிழ் இலக்கிய வரலாறுகள்
முளைத்தெழுந்தன. தனது தமிழ் இலக்கிய வரலாறு
புத்தகத்தைப் பல பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டத்தில்
அமைத்ததன் மூலம் ஒரு பேராசிரியர் சென்னையில்
மிகப்பெரிய வீட்டினைக் கட்டினார் என்று
சொல்லப்படுவது உண்டு. இன்று வரையிலும் இலக்கிய
வரலாற்றுக்கான சந்தை குறைவுபடவில்லை. இலக்கிய
வரலாறு எழுதிவிட்டுப் பல தமிழ்ப் பேராசிரிய நண்பர்கள்,
கல்வி நிறுவனங்களிடம் சென்று, தன் நூலினைப்
பாடநூலாக அமைக்கச் சொல்லிப் பாடாய்ப் படுத்திக்
கொண்டிருக்கும் Ôஆய்வறிஞர்கள்Õ பலர் வாழும்
பெருமையுடைத்து இந்நாடு. தமிழர் வரலாறு மற்றும்
பண்பாடு தமிழிலக்கியம் பயிலும் மாணாக்கருக்குப்
பாடமாக அமைக்கப்பட்ட பிறகு, அதற்கெனவே
எழுதப்பெற்ற நூல்களும் உண்டு. அந்த வகையறா
நூல்களைக் கையேடுகளாகக் கொண்டு அமைதியுற
வேண்டியதுதான்.
தமிழர் பண்பாட்டு வரலாறு குறித்த முழுமையான
நூல் இதுவரையிலும் வெளிவரவில்லை. உண்மையில்
அவ்வாறான பண்பாட்டு வரலாறு குறித்த நூல் ஒரே
நூலாகவும் இருக்க முடியாது என்பது உண்மையே. பல
தொகுதிகளாகப் பல்வேறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டு
அமைக்கப்பட வேண்டிய பெரும்பணி அது. ஆனாலும்,
குறிப்பிடத்தக்க நூல்கள்தமிழில் வெளிவந்திருக்கின்றன
என்பதை மறுக்க இயலாது. பண்பாடு என்பது விரிந்து
பரந்த பொருள்தரும் பதம் ஆதலால், அதன்
முழுமையையும் விளக்கும் வகையில் இப்பட்டியல்
தரப்படவில்லை. மாறாகச் சில அறிமுக நூல்கள்மட்டுமே
தரப்படுகின்றன. உதாரணமாக, தமிழரின் இசை குறித்து
ஏராளமான நூல்கள்வந்துள்ளன. ஆனால் இப்பட்டியல்
அவற்றையெல்லாம் உட்கொள்ளவில்லை. பொதுவாகத்
தமிழர் பண்பாடு குறித்து எழுதப்பட்ட நூல்களே இங்குக்
குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் சில
நூல்கள்மட்டுமே தரப்பட்டுள்ளன. அவற்றைத்
திறவுகோல்களாகக் கொண்டு எண்ணற்ற நூல்களைக்
கண்டடையலாம்; அவற்றோடு பயணப்படலாம்.
1. தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு, – கோ.தங்கவேலு
2. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், – கே.கே.பிள்ளை
3. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், – ஆ.இராமகிருஷ்ணன்
4. தமிழர் பண்பாடு, கம்பன் காவியம், – எஸ்.வையாபுரிப்பிள்ளை
5. தமிழர் வரலாறும் பண்பாடும்,- நா.வானமாமலை
6. தமிழர் நாகரிகமும் பண்பாடும், – அ.தட்சிணாமூர்த்தி
7. தமிழக வரலாறும் பண்பாடும், -வி.டி.செல்லம்
8. தமிழர் நாகரிகமும் பண்பாடும், -மா.இராசமாணிக்கனார்
9. தமிழர் நாகரிகமும் பண்பாடும், -ஞா.தேவநேயப் பாவாணர்
10. தமிழர் பண்பாடும் தத்துவமும், நா.வானமாமலை
11. தமிழர் வரலாறு நாகரிகம் பண்பாடு, -புலவர் செந்துறைமுத்து
12. பண்டையத் தமிழர் வாழ்வும் வழிபாடும், -க.கைலாசபதி
13. இந்தியப் பண்பாடும் தமிழரும்,- எஸ். இராமகிருஷ்ணன்
14.சோழர் காலத்து அரசியல் பண்பாட்டு வரலாறு,-
ம. பாலசுப்பிரமணியன்
15. தொல்பொருள்ஆய்வும் தமிழர் பண்பாடும்,- சா.குருமூர்த்தி
16. எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும், – சாமி.சிதம்பரனார்
17. பத்துப்பாட்டும் தமிழர் பண்பாடும், – சாமி. சிதம்பரனார்
18. சமுதாயமும் பண்பாடும், – அ.மு.பரமசிவானந்தம்
19. தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்,- சோமலெ
20. தமிழக வரலாறு, – மா.இராசமாணிக்கனார்
21. தமிழகம், – ந.சி.கந்தையாபிள்ளை
22. தமிழர் வரலாறு, – பிடி. சீனிவாசய்யங்கார்
23. தமிழர் சமயவரலாறு, – ஆ.வேலுப்பிள்ளை
24. தமிழகக் கலைவரலாறு, – க.சி.கமலையா
25. பண்டைய தமிழகம், – சி.க.சிற்றம்பலம்
26. பல்லவர் வரலாறு, – மா.இராசமாணிக்கனார்
27. தமிழ்நாட்டு வரலாறு _ சங்ககாலம் _- வாழ்வியல் -_ தமிழ்நாட்டு
வரலாற்றுக் குழு
28. பழங்காலத் தமிழர் வாணிகம், – மயிலை சீனி. வேங்கடசாமி
29. தென்னிந்தியாவைப் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகள், –
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
30. சோழர்களின் அரசியல் கலாசார வரலாறு, பாகம் இரண்டு, –
மா.பாலசுப்பிரமணியன்
31. தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், க.காந்தி
32. தமிழர் ஆடைகள், – கே.பகவதி
33. தமிழர் திருமணம், – சசிவல்லி
34. தமிழர் தோற்கருவிகள், – ஆர்.ஆளவந்தார்
35. தமிழும் பிற பண்பாடும், – தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
36. சங்க காலத் தமிழர் வாழ்வு, – லெ.ப.கரு.இராமநாதன்
37. தமிழர் சமயம், – கா.சுப்பிரமணிய பிள்ளை
38. தொல்லியல் ஆய்வுகள், – கே.வி.இராமன்
39. தமிழ் மணம், – தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
40. தென்னிந்திய வரலாறு பாகம் 1 & 2, – கே.கே.பிள்ளை
41. பிற்காலச் சோழர் சரித்திரம், – டி.வி.சதாசிவப்பண்டாரத்தார்
42. பாண்டியர் வரலாறு, – டி.வி.சதாசிவப்பண்டாரத்தார்
43. தமிழகக் கோயிற்கலைகள், – இரா.நாகசாமி
44. மதுரை நாயக்கர் வரலாறு, – அ.கி.பரந்தாமனார்
45. தமிழக விழாக்கள், – அ.கி.பரந்தாமனார்
46. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், – மயிலை சீனி.வேங்கடசாமி
47. தமிழ் மணம், – தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
48. தமிழ்க்காதல், – வ.சுப.மாணிக்கனார்
49. தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், – ஆ.வேலுப்பிள்ளை
50. தமிழர் சால்பு, – சு.வித்தியானந்தன்
51. அற்றை நாள்காதலும் வீரமும், – க.ப.அறவாணன்
52. இலக்கிய சாஸன வழக்காறுகள், – மு.இராகவையங்கார்
53. திராவிடர் ஆதி வரலாறும் பண்பாடும், – வி.சிவசாமி
54. பண்பாட்டு அசைவுகள், – தொ.பரமசிவம்
55. தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, – ராஜ் கௌதமன்
56. அறம் அதிகாரம், – ராஜ் கௌதமன்
57. தமிழர் மானிடவியல், – சீ.பக்தவத்சல பாரதி
58. மண்μம் மனித உறவுகளும், – கோ.கேசவன்
59. தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும், நவீனவாக்கமும், –
கா.சிவத்தம்பி
60. தமிழ்நாட்டு வரலாற்றில் இலக்கிய ஆதாரங்கள்-
பா.சூரியநாராயணன்

Share.

About Author

Leave A Reply