தடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்

0
 ராமாநுஜம்

காந்தியின் சுயசரிதை நூல் பிரபலமடைந்த
அளவிற்கு அவருடைய இந்திய சுயராஜ்யம் பிரபலமானது
அல்ல. ஆனால் காந்தியின் சமூக மற்றும் தனி மனிதன்
பற்றிய பார்வையும் அவருடைய அரசியல் செயல்
வடிவத்தையும் அவர் கையாண்ட அரசியல் உருவகங்கள்
எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இந்திய சுயராஜ்யத்தைக்
கொள்ளலாம். சற்றே பொதுத்தன்மையில் சொல்வதென்-
றால் சத்திய சோதனை அவருடைய தனி மனித அனுபவங்க
ளைத் தொகுத்துள்ளது என்றால், இந்திய சுயராஜ்யம்
அவருடைய சமூகப் பார்வையைத் தொகுத்துள்ளது என்று
சொல்லலாம்.
1909 நவம்பர் 13 முதல் 22ஆம் தேதி வரை
இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குக் கப்பலில்
திரும்பும் போது குஜராத்தியில் இந்த நூல் எழுதப்பட்டது.
Ôஹோம் ரூல் (பிஷீனீமீ ஸிuறீமீ) என்ற தலைப்பில் 1910 ஆம்
ஆண்டு காந்தியால் ஆங்கிலத்தில் இந்நூல் மொழிபெயர்க்-
கப்பட்டது. இந்தச் சிறப்பு அவருடைய Ôசத்திய சோதனைÕ
நூலுக்குக் கூட கிடைக்கவில்லை. Ôசத்திய சோதனைÕயை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவருடைய காரியதரிசி.
Ôஇந்திய சுயராஜ்யÕத்தின் குஜராத்தி மொழி பதிப்பு அன்றைய
காலனி ஆட்சியால், ஆங்கில மொழிபெயர்ப்பு வருவதற்கு
முன்னரே தடை செய்யப்பட்டது. 1938_ல் தான் இந்த
நூல் மீதான தடை நீக்கப்பட்டது.
காந்தியின் அரசியல் பார்வையும் அவரது ஆழமான
நம்பிக்கையும் எதைச் சார்ந்து நின்றது என்பதைப் புரிந்து
கொள்ள இந்த நூல் நமக்குப் பெரிதும் உதவுகிறது.
அவருடைய அரசியல் செயல் வடிவம் என்பது தந்திரம்
அல்ல. அது ஒரு தத்துவப் பார்வை என்பதை இந்த நூலைப்
படித்தவுடன் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த
நூல் வெளிவந்த காலத்தில் பாராட்டியவர்கள்பலர் உண்டு
என்பதைப் போலவே விமர்சித்தவர்களும் நிராகரித்-
தவர்களும் பலர் உண்டு. இந்த நூலை விமர்சனங்களற்று
ஏற்றுக் கொள்வது ஒரு சாராருக்கு எப்படி சாத்தியப்பட்
டதோ அது போலவே மற்றொரு சாராருக்கு இந்த
நூலை நிராகரிப்பதும் சாத்தியப்பட்டது. காலனியம் முன்-
வைத்த நவீனத்துவத்தை எப்படி எதிர்கொண்டார்கள்
என்பதைப் பொறுத்தே ஏற்பதும் மறுப்பதும் சாத்தியப்பட்
டது.
இருபது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள
இந்த நூலைப் படித்து முடித்தவுடன் மிகக் குழப்பமான
சிரமமான நவீன கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், அது
முன்வைத்த வரலாற்றிற்கு எதிராகவும் மிக பலவீனமான
வாதங்களை முன்வைக்க முயற்சிக்கிறார் என்றுதான்
தோன்றும். அதுபோலவே நூலின் பின்னிணைப்பில் இந்திய
கலாசாரம், ஆன்மிகம், பண்பாடு பற்றிப் பல அறிஞர்களின்
கருத்துகளை அவர் தொகுத்துக்
கொடுத்திருப்பதைப் பார்க்கும்
போது இந்தியத் துணைக்
கண்டத்தின் வரலாற்றை அவர்
எந்தத் தளத்தில் நின்று
அμகினார் என்று நம்மால்
புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நூல் காந்தியின் அரசியலைப் புரிந்து
கொள்வதற்கான அடிப்படையாக மட்டும் சுருங்கிப் போகா-
மல் இன்றளவும் அதன் தாக்கம் தொடர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. குறிப்பாக மேற்கத்திய தொழில்நுட்பம்,
மருத்துவம் பற்றிய அவரது பார்வை பின் நவீனத்துவ
வாதிகளிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி-யுள்ளது. இந்த
காலனிய நவீனத்துவம் மொழி, மதம், அறம்
எல்லாவற்றையும் புதிய பரிமாணத்தில் முன்வைத்தது. இதை
காந்தி உணர்ந்து கொண்டார்.
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் ஒரு வாசகனுக்கும்
இடையே நடக்கும் உரையாடல் போல் இந்த நூல்
அமைந்துள்ளது. இந்த வடிவம் மிகவும் சுவாரசியமானது
அதே சமயத்தில் இந்த வடிவத்தில் எழுதுவது மிக
சிரமமானது. (நான் படித்த மட்டில் பிளாட்டோ எழுதிய
Ôசாக்ரடீஸின் கடைசி தினங்கள்Õ இந்தப் பாணியில் மிகச்
சிறந்த நூல் என்று கருதுகிறேன்). ஒரு வாசகனாக நம்மை
நாம் தயார் செய்து கொண்டு இந்த நூலைப் படிக்கும்போது
காந்தியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள்தோன்று-
கிறது. பின்னாளில் அவருடைய எழுத்துகளில் சிலவற்றுக்கு
ப் பதில் தந்துள்ளார். பதில் கிடைக்காத கேள்விகள்
நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. இவற்றையெல்லாம்
மீறி காலனியம் என்பதை ஒரு அறமற்ற செயலாக முன்-
வைத்ததோடு காலனியம் முன்வைத்த நவீனத்துவத்தைத்
தீவிர விமர்சனத்தோடு மறுதலித்ததோடு மிதவாத
பார்ப்பனியம் பெட்டிஷன் மட்டும் கொடுத்துக்
கொண்டிருப்-பது காலனியத்தின் மேல் ஆதிக்கத்தை ஏற்றுக்
கொள்வதாகாதா?, தீவிரவாத பார்ப்பனியம் (காலனிய
ஆயுதங்களோடு அதே ஆயுதங்களைக் கொண்டு மோதி
நம்மால் வெற்றி பெற முடியுமா?) அடிப்படைவாத பார்ப்பனியம்
(பல மதங்கள்/ மொழிகள்கொண்டதாலேயே
இந்தியா என்பது ஒரு நாடு என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள
மறுக்க வேண்டும்?) விஞ்ஞானத்தின் மீதும் தொழில்-
நுட்பத்தின் மீதும் அபரிமிதமான நம்பிக்கை இருந்த
காலகட்டத்தில் (இவற்றுக்கெதிராக ராட்டையை
முன்வைக்-கிறார்) காலனியத்தையும் இவற்றையும் காந்தி
இணைத்துப் பார்த்த முறை நமக்குப் பல அரசியல்
சாத்தியங்களை உருவாக்குகிறது. ஆனால் காலனியம்
முன்வைத்த நவீனத்துவத்திற்கு எதிராக காந்தி எதை
முன்வைக்கிறார்? இதற்கான பதிலை நாம் Ôஇந்திய
சுயராஜ்யத்திற்குÕ வெளியே தேட வேண்டியுள்ளது

Share.

About Author

Leave A Reply