சுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்

0
 த.வி. வெங்கடேஸ்வரன்

காலத்தை வென்ற சாகசக் கதைகளில் ஒன்று
“கிக்ஷீஷீuஸீபீ tலீமீ கீஷீக்ஷீறீபீ வீஸீ ணிவீரீலீtஹ் பீணீஹ்s” – எண்பது நாளில்
உலகைச் சுற்றிÕÕ என்ற நூல். ÔÔநிலவுக்குச் செல்வோம்;
ÔÔபூமியின் மையத்தில்ÕÕ, ÔÔகாலுக்கடியில்ÕÕ என பற்பல
அறிவியல் புதினம் படைத்த ஜூல்ஸ் வெர்ன் (யிuறீமீs க்ஷிமீக்ஷீஸீமீ)
என்ற பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய புதினம்தான் எண்பது
நாளில் உலகைச் சுற்றிÕÕ என்ற நாவல். சாகசத்தோடு
அறிவியல் தொழில்நுட்ப புனை புதின அம்சங்களும்
அடங்கியது இந்த நாவல். சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு
1873_ல் வெளியிடப்பட்ட இந்தப் புதினம் அன்றுமுதல்
இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வந்துள்ளது; குறிப்பாக
சிறுவர் சிறுமியரைக் கவர்ந்து வந்துள்ளது குறிப்பிடத்-
தக்கது.
நாவலின் கதாநாயகன் பிலியாஸ் ஃபாக் (றிலீவீறீமீணீs
யீஷீரீஹீ). ரிஃபாரிம் கிளப்பில் நண்பர்களுடன் கட்டிய
பந்தயத்திற்காக உலகை 80 நாளில் சுற்றி வருவேன் என்று
சவால் விடுத்து உலகம் சுற்றும் பயணியாகிறார். அவருடன்,
அவரது பணியாளர் பாஸிபார்டோர் (றிணீssமீஜீணீக்ஷீ tஷீut)
என்பாரும் துணையாகச் செல்கிறார். லண்டனிலிருந்து
அக்டோபர் 2, 1872 அன்று புறப்படும் அவர் டிசம்பர் 21,
1872க்குள்உலகைச் சுற்றி வந்து மறுபடி லண்டன் அடைய
வேண்டும். அவ்வாறு அடைந்தால் சுமார் 20000 பவுண்டு
(இன்றைய மதிப்பில் சுமார் 121/2 கோடி ரூபாய்) பந்தயத்
தொகை கிட்டும்.
லண்டனிலிருந்து புறப்படும் ஃபாக் சூயஸ் கால்வாய்
வழியாக பம்பாய்அடைகிறார். பின்னர் ரயில் மூலம்
பம்பாயிலிருந்து கல்கத்தா செல்கிறார். கல்கத்தாவிலிருந்து
கப்பல் மூலம் ஹாங்காங் அடைகிறார். அங்கிருந்து
ஜப்பானின் யோக ஹாமா கடல்வழி அடைகிறார். யோக
ஹாமாவிலிருந்து சான்பிரான்சிஸ்கோ கப்பல் பயணம்
செய்து, சான்பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் ரெயில்
வழி செல்கிறார். மறுபடி நியூயார்க்கிலிருந்து லண்டன்
கடல்வழி பயணம் செல்கிறார்.
உலகம் சுற்றிய இந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும்
இடர்கள். சவால்கள், இன்னல்கள்கதைக்கு விறுவிறுப்பூட்
டுகின்றன. லண்டன் வங்கி ஒன்றைக் கொள்ளை
அடித்த திருடன் போன்ற சாயல் உள்ளதால் பிக்ஸ் என்ற
ஸ்காட்லாந்துயார்டு உளவு போலிஸ் ஃபாக்ஸைப்
பின்தொடர்கிறார். பிக்ஸ் சொற்படி கல்கத்தாவில் அவரைச்
சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். எப்படி பிக்ஸின்
பிடியிலிருந்து ஃபாக்ஸ் தப்பிச் செல்கிறார் என்பது
விறுவிறுப்பான திருப்பம்.
அவர்களது பயணத்தின் இடையில், ÔÔசதிÕÕ
ஊர்வலத்தைக் காண்கின்றனர். விதவையான இளம் பெண்
அவுதா (கிஷீuபீணீ) வை மயக்க மருந்து கொடுத்து
உறவினர்கள்இறந்த கணவரின் உடலோடு எரிக்கப்
பார்க்கின்றனர். மயக்கத்தில் உள்ள அவுதா விரும்பி
உடன்கட்டை (சதி)யில் ஈடுபடவில்லை என்று அறிந்த
ஃபாக் அவளை மீட்கிறார். இருவராக இருந்த அவர்கள்
குழு மூவராக மாறுகிறது. பயணத்தின் வேகம்
தடைபடுகிறது. இவ்வாறு கதை முழுவதும் திடீர் திருப்பம்
நிறைந்தது.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் செல்லும்
வழியில் செவ்விந்தியர்கள்ரெயிலை மறித்து
பாஸிபார்டோர் உட்பட மூவரைப் பணய கைதியாகப்
பிடித்து வைத்துக் கொள்கின்றனர். ஃபாக்ஸ் இக்கட்டில்
மாட்டிக் கொள்கிறார். தனது பயணத்தைத் தொடர்ந்து
விறுவிறு என டிசம்பர் 21க்கு முன்பு லண்டன் அடைந்து,
வெற்றிப் பரிசை அடைவதா அல்லது தன்னுடைய
வேலைக்காரனைக் காப்பாற்றுவதா என்ற சவால். சில
அமெரிக்க ராμவ வீரர்களோடு இணைந்து தன்
வேலைக்காரரை விடுவிக்க முடிவெடுக்கிறார் ஃபாக்ஸ்.
இதன் காரணமாக நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்ல
நிச்சயத்திருந்த கப்பலைப் பிடிக்க முடியாமல் போகிறது.
பின்னர் அடுத்தநாள்வேறு கப்பலில் லண்டன் நோக்கிப்
பயணம் செய்கிறார்.
அயர்லாந்தில் கப்பல் சென்று அடைய, பிக்ஸ்
ஃபாக்ஸைக் கைது செய்கிறார். வங்கி கொள்ளை
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஃபாக்ஸ்
மனமுடைந்து போகிறார். அன்றே லண்டன் சென்று
அடைய வேண்டும். இல்லையேல் பந்தயத்தில் தோற்று
விடுவார். ஆனால் பழம் நழுவிப் பாலில் விழும்போது
தடை ஏற்படுவது போல ஃபாக்ஸ் தடை செய்யப்படுகிறார்.
சில மணித் துளிகளில் உண்மை வெளியாகிறது. மெய்யான
வங்கிக் கொள்ளைக்காரன் பிடிபட்டு விட்டான் என்ற
செய்தி கிடைக்கிறது. ஃபாக்ஸ் விடுவிக்கப்படுகிறார்.
ஆனால் காலம் கடந்து விட்டதால் லண்டனுக்குக் குறித்த
நேரத்தில் எட்ட முடியவில்லை. மறுநாள்பந்தயத்தில்
தோற்ற ஃபாக்ஸ் மனமுடைந்து அவுதாவிடம் மன்னிப்புக்
கேட்கிறார். பந்தயத்தில் வெற்றி அடையாததால் தான்
இதுவரை செய்த செலவின் காரணமாக வறுமையை எட்டி
விட்டதாகவும் ஆகவே அவுதாவை சரிவர கவனிக்க
இயலுமா என்றும் கவலை கொள்கிறார்.
அவுதா திடீர் என உள்ளபடியே தான் ஃபாக்ஸைக்
காதலிப்பதாகக் கூற, உடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய
தேவாலயம் செல்கிறார். அங்குதான் ஒரு உண்மை
புலப்படுகிறது. உள்ளபடியே அன்றுதான் டிசம்பர் 21.
உலகைக் கிழக்கு மேற்கு முகமாகச் சுற்றியதால் ஒருநாள்
வித்தியாசம் ஏற்படும். ஆக உள்ளபடியே பந்தயத்தில் வெற்றி
கொண்டது மட்டுமல்ல; மெய்யாக 79 நாளில் உலகைச்
சுற்றி விடுகிறார் ஃபாக்ஸ். கடைசிவரை விறுவிறுப்பாக
வெற்றி கொள்வாரா மாட்டாரா என வாசிப்பவர்கள்
கருதும்படி எழுதப்பட்டது இந்த நாவல்.
இந்த நாவல் திடீர் என வெற்றிடத்தில்
உருவானதல்ல. அந்தக் காலத்தில் நிகழ்ந்து வந்த
வளர்ச்சியினைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
1869_ல் சூயஸ் கால்வாய்கட்டுவிக்கப்பட்டது.
1869_ல் அமெரிக்காவின் மேற்கு _ கிழக்கு கடற்கரைக்கு
இடையே ரெயில் போக்குவரத்து நிறுவப்பட்டது. 1870_ல்
பம்பாய்_ கல்கத்தா ரெயில் பாதை போடப்பட்டது.
இவ்வாறு பற்பல தொழில்நுட்பப் புதுமை நிரம்பிய அந்தக்
கால கட்டத்தில் இந்தப் புதினம் அனைவரின் கற்பனை-
யைத் தூண்டிவிட்டது. மெய்யாக உலகம் சுருங்கிவிட்டது
என்ற சிந்தனையை ஐரோப்பாவில் தோற்றுவித்தது.
உள்ளபடியே இந்தப் புதினம் ஒரு தொடர்கதையாக
வெளியிடப்பட்டது. இதன் கடைசி பாகம் டிசம்பர் 22,
1872_ஆம் ஆண்டு (கதையின் கடைசி நாள்) அன்று
வெளியானது. எனவே இதனைப் படித்தவர் பலரும், அன்று
மெய்யாகவே இந்தப் பயணம் நடைபெறுகிறது என்று
கருதினராம்!
இந்தப் புதினத்தை ஆய்வுப் பார்வையில்
நோக்கினால் ÔÔசூரியன் என்றும் மறையாத பிரிட்டிஷ்
காலனியாதிக்கம்ÕÕ குறித்து ஆவென வாய்பிளந்து பார்க்கும்
ஒரு வெளியாள்பார்வையாக இந்தப் புதினத்தைக்
காணலாம். ஐரோப்பியரின் பார்வையில் அன்றைய உலகம்
புலப்பட்டமை இந்த நாவலில் அடிநாதமாகப்
புலப்படுகிறது. ஒவ்வொரு பண்பாடு குறித்தும் ஐரோப்-
பியருக்கு அன்று இருந்த கற்பிதம் (எடு: செவ்விந்தியர்கள்
பணயக் கைதிகளைப் பிடித்துச் செல்லும் சட்டத்திற்குப்
புறம்பான குண்டர்கள்என்று சித்திரம் தீட்டுவது) இந்த
நாவலில் தெளிவாக வெளிப்படுகிறது.
எனினும் திறன்பட காதல் (அவுதாவை
உடன்கட்டை-யிலிருந்து மீட்பது முதல் அவரைத் திருமணம்
செய்வது வரை) வீரம் (பந்தயம் போனாலும் பரவாயில்லை;
தன்னோடு வந்தவரை செவ்விந்தியரிடமிருந்து காப்பாற்ற
வேண்டும் என்ற முடிவு) துணிவு (கப்பலை நடுக்கடலில்
விலைக்கு வாங்கி வேக வேகமாக இங்கிலாந்து நோக்கிச்
செல்ல வைத்தல்) புதுமை (யானை சவாரி உட்பட
உலகெங்கும் உள்ள புதுமைக் காட்சி) என சுவை
அம்சங்கள்நிறைந்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட இந்த
நாவல் இன்றுவரை சிறுவர் சிறுமியரை ஆகர்ஷித்து
உலகின் நான்கு மூலை குறித்து அறிவுறுத்தும் முகமாகவும்
அதேசமயம் பயணம் குறித்த ஆர்வம் ஏற்படுத்தும்
புதினமாகவும் திகழ்கிறது. திடீர் திடீர் திருப்பம்,
தொய்வடையாத சம்பவங்கள்என்ற இந்த அம்சங்களே
இந்நாவல் காலத்தை வென்று என்றும் சிறுவர்
சிறுமியர்களைக் கவரும் நாவலாக அமையக் காரணம்.

Share.

About Author

Leave A Reply