சிங்கப்பூர் பதிப்புத்துறை

0
எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி

தமிழர்கள் கடல்கடந்த நாடுகளுடன் கெ/£ண்டிருந்த தொடர்பு வரலாற்றுப் பழமை வாய்ந்தது. ஆயினும் தக்க ஆதாரங்கள் இல்லா-விட்டால் இத்தொடர்பை யாரும் ஏற்க-மாட்டார்கள். வரலாற்றைப் பதிவு செய்யும் பண்பு தமிழர்களிடையே இல்லாததன் விளைவு தமிழர்களையும், தமிழையும் பெரும் இழப்புக்-குள்ளாக்கியது. தமிழர்களின் அயலகத் தொடர்பு என்றோ அல்லது அயலகக் குடியேற்றம் என்றோ சிந்தித்துப் பார்த்தால் ஆங்கிலக் காலனித்துவ ஆட்சி நிலவிய கால-கட்டத்தைத் தொடக்கமாகக் கொள்ளவேண்டி உள்ளது. இக்கால கட்டத்தில் உடல் உழைப்புத் தொழிலாளிகளாக அழைத்து வரப்பட்டோரே மிக அதிகம். எனவே விடுதலைக்கு முந்திய சிங்கப்பூரில் நூல் படைத்தோர் அதிகம் கற்றவர்கள் அல்லர்; காரிகை கற்றுக் கவி பாடியவர்கள் சிலர். ஏட்டில் எழுதா இலக்கியமாகப் படைத்தவர் பலர்.
‘வண்ணை அந்தாதி’; ‘வண்ணைநகர் ஊஞ்சல்’; ‘சிங்கை நகர் அந்தாதி’; ‘சித்திரக்கவிகள்’ ஆகிய நான்கும் கி.பி. 1887இல் சிங்கப்பூரிலேயே அச்சிடப்பட்ட நூல்களாகும். சி.கு.மகதூம் சாயபுக்குச் சொந்தமான தீனோதயவேந்திரசாலை-யில் அச்சிடப்பட்டன. இந்நான்கு நூல்களையும் பாடியவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை-யைச் சேர்ந்த சி.ந. சதாசிவப் பண்டிதர் ஆவார். பிழைக்க வந்த நாட்டை பாடுபொருளாய்க் கொண்டு இலக்கியம் படைத்த காரணத்தால் இவர் சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடி எனக் கருதப்படுகிறார்.
சதாசிவபண்டிதரின் நூலுக்கும் காலத்தால் முற்பட்ட ‘இரத்தினச் சுருக்கம்’ என்னும் நூல் கி.பி. 1878இல் வெளிவந்திருந்தாலும்கூட அதனை முழுக்க முழுக்க இசுலாமிய நூல் என்றே கூறவேண்டி உள்ளது. இந்நூலின் ஆசிரியர் ஷாகுமுகம்மது அப்துல் காதிறு ஜெயினுத்தீன் என்பவர். இந்நூல் லே. செய்கு-சாயபு மரைக்காயர் அவர்களின் முயற்சியால் ஜாவிப் பிறானாக்கன் கம்பெனிக்குச் சொந்தமான  ஸயீதியேந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
“பதானந்தமாலை’’ (1890), “சுருட்டுக்கும்மி’’ (1878) ஆகியவை மலாயாவில் வெளிவந்த இசுலாமிய நூல்கள் ஆகும். இவற்றுள் முன்னது பினாங்கில் ‘ஸ்டெரெயிட் பிரஸ்’ என்னும் அச்சுக்கூடத்தில் அச்சானது. இந்நூலைப் பாடியவர் முகம்மது சுல்தான் மரைக்காயர். இரத்தினச் சுருக்கத்தில் இடம்பெற்ற சிறுநூல் ‘சுருட்டுக்கும்மி’ என்பதாகும். இரத்தினச் சுருக்கத்தின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் ஆவார்.
குடியேறிகள் படைத்த நான்கு நூல்களான “அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி’’ (1893), “சிங்கை நகர் சிங்கார வடிவேலர் காவடிச் சிந்து’’ (1907) “புத்தர் ஆலய வழிநடைச்சிந்து’’ (1936), “இந்தியக் கப்பற் பிரயாண வழிநடைச்சிந்து’’ (1937) என்பவை செல்நெறியால் தமிழகத்தையும், பாடுபொரு-ளால் சிங்கப்பூரையும் கொண்-டவை. இந்நூல்களுள் குதிரைப் பந்தய லாவணி நா.வ. இரங்க-சாமிதாசனால் பாடப்பட்டது. சிங்கைநகர் சிங்கார வடிவேலர் சிந்து தைப்பூசப் பெருமையைக் கூறுவதாய்க் காரைக்குடியைச் சேர்ந்த ராம. மு. ராம. இராம நாதன் பாடியுள்ளார். பிரமன் ஆலய வழிநடைச் சிந்தின் ஆசிரியர் முத்துநாடார். இந்நூலின் இரு பாகங்-களுள் முதற்பாகம் மட்டுமே கிடைத்துள்ளது. பி.கே. ஆறுமுகதாசன் இந்தியக் கப்பற் பிரயாண வழிநடைச் சிந்தின் ஆசிரியர் ஆவார்.
‘கவிதைமலர்கள்’ ந.பழனிவேலு முதற்-கொண்டு நூல்களின் அச்சுப்பணிக்குத் தமிழகத்தையே நம்பினர். ஆயினும் விடுதலைக்கு முந்திய சிங்கப்பூரில் ‘விக்டோரியா பிரஸ்’, ‘தமிழோசைப் பதிப்பகம்’ போன்ற பல பதிப்பகங்-களும் தமிழ்நூல்களை அச்சிட்டு வெளி-யிட்டன. சொ.ஐ.துரை என்பவர் ‘சிங்கப்பூர் வழி-காட்டி’ என்னும் பத்திரிகையைத் தமிழோசைப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டார். இங்குள்ள பதிப்பகங்கள் பல பத்திரிகைகளை வெளியிட்டன என்பதையும் நாம் அறிகிறோம்.
பதிப்புத்துறையில் தனிநபர் முயற்சிகள்
சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் தங்கள் படைப்பு-களை நூலுருவில் வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழ்நாட்டில் அச்சிடுகின்றனர். நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினர் நூல் அச்சிடும் செலவு தமிழகத்தில் குறைவாக இருப்பதாலும், அங்கு  நூலகங்களுக்குரிய புத்தகங்களின் எண்ணிக்கை 600லிருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாலும், புத்தகச்சந்தை-களிலும், கண்காட்சிகளிலும் தங்களின் நூல்கள் விலைபோவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்ப-தாலும் தமிழகத்தில் நூல்களை அச்சிடுகின்-றனர். சிங்கப்பூர், மலேசியாவுக்கெனச் சில நூறு புத்தகங்களைக் கொண்டுவந்து வெளியீட்டு விழாவில் தாம் செலவழித்த பணத்தை ஈட்டிவிடு-கின்றனர். புகழுக்காக அலையும் புரவலர்கள் தராதரம் இன்றிப் பணத்தைக் ‘குறிப்பிட்ட சிலருக்கு’ மட்டுமே வாரி வழங்கு-கின்றனர். இந்நிலை ஒரு புறம் இருக்கத் தமிழகத்-தில் நூலை அச்சிடுவோர் சிங்கப்பூர் நூலக எண் (மிஷிஙிழி) பெற்றுச் சிங்கப்பூர் முகவரியில் நூலை அச்சிடுவதாய்க் குறிப்பிடுவதை-யும் காண முடிகிறது. இன்னும் சிலர் சிங்கப்பூரிலேயே சொந்தப் பதிப்பகம் ஒன்றின் பெயரைப் போட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு போடப்படும் சொந்தப் பதிப்பகங்களில் மிகப்பல முறையாகப் பதிவு செய்யப்படாதவை என்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் ‘தைநூலகம்’ என்ற ஒரு பதிப்பகத்தை நிறுவிச் சிங்கப்பூர்ப் படைப்-பாளிகளின் நூல்களை வெளியிட்டார் எழுத்துச் செம்மல் திரு.ஏ.பி.சண்முகம். உதாரணத்திற்குச் சிங்கை மா. இளங்கண்ணன், மு. தங்கராசன் போன்றோரின் நூல்களை வெயியிட்டுள்ளார் ஏ.பி.சண்முகம். இவர் தனது சொந்த நூல்களையும் இப்பதிப்-பகத்தின் வழியே வெளியிட்டுள்ளார். ஏ.பி. சண்முகம் போல சிங்கை முகிலன் ‘அய்ரா அறிவகம்’ என்னும் பெயரால் சிலருடைய நூல்களை வெளியிட்டுள்-ளார். இஃது முறையாகப் பதிவு செய்யப்பட்டதா என்பது அறியுமாறில்லை. கடையநல்லூர் ஜமீலா, க.து.மு.இக்பால் ஆகியோரின் படைப்புக்-களுள் சில இப்பதிப்பகம் மூலம் வெளிவந்-துள்ளன.
சொந்தப் பதிப்பகங்களை நிறுவினாலும் (முறைப்படி) அவற்றின் மூலம் பெரிய அளவில் வளர்வதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. தமிழகத்தில் உள்ள பதிப்பகங்களைப் போலப் பிரபலமாவதற்கும், பணம் பண்ணுவதற்கும் இங்கு வாய்ப்புக்கள் இல்லை. ஒரு வேளை பாட நூல்களை, பயிற்சி நூல்கள் போன்றவற்றை அச்சிட்டுப் பணம் பண்ணலாம். இலக்கிய நூல்களுள் ஆய்வு நூல்களை அச்சிட்டு வெளியிடுவது நொடித்துப் போவதற்கு ஒருவர் தேடிக் கொள்ளும் வழியாகும். ஆனாலும், சிலருடைய ஆய்வு முயற்சிகள் வீணாகி விடக்கூடாது; நூலுருப் பெறவேண்டும் என்னும் விழைவு காரணமாக ஆய்வுநூல்கள் அவ்வப்-போது வெளிவருவதுண்டு. இக்கட்டுரையாளர் புதியன காணும் புதுமை வேட்கையால் ‘தருமு பப்ளிகேஷன்ஸ்’ என்னும் பதிப்பகம் மூலம் ஆய்வு நூல்களை வெளிக்கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக (இந்திய சமூகத்தினருள்) வாழ்ந்தாலும் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பணவேட்கை மிகுந்து வரும் சமூகத்தில் அறிவுத்தாகம் – இலக்கியத் தாகம் குறைவு. தமிழ்மொழி பிரபல-மடைய ஒரு கருவி; போட்டிகளில் பரிசு பெற ஓர் உபாயம்; சமூகத் தலைவராக விரும்புவோரும் பலரால் அறியப்படத் தமிழை ஒரு கருவியாகக் கொள்ளும் மனோபாவம்; வழிகாட்டவேண்டிய ஆசிரியர் சமூகமும் தமிழை வைத்துப் ‘பிழைப்பு’ நடத்தும் மெத்தனம் ஆகியவை பதிப்புத்துறை எதிர்நோக்கும் சிக்கல்களுக்குக் காரணமாகும். தமிழுக்கு அரசாங்கம் நல்கும் நல்ல வாய்ப்புகளை நழுவ-விடும் அவலநிலையால் நாமே நம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கி-றோம். சுயலாபத்தைச் சிந்திக்காமல் தொலை-நோக்கோடு சிந்தித்தால் தமிழை வாழவைக்க-லாம். தமிழ்ப் பதிப்பகங்களை வாழவைக்கலாம்.
பதிப்பகங்களும் தமிழ் பதிப்புத் துறையும்
தமிழ் ஆட்சிமொழியாக இருப்பதாலும், தமிழை முதல் மொழி மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்கும் வாய்ப்புகள் இருப்பதாலும் தமிழ்ப் பாடநூல்கள், பயிற்சிநூல்கள் போன்றவை தனிப்பட்ட நபர் மற்றும் பதிப்பகம் புத்தகக் கடைகள் அளவில் விற்பனையில் சங்கடங்களை எதிர்நோக்குவதில்லை. புத்தகக் கடைகளும் சில பதிப்பகங்களும் நன்றாக ஜீவனம் நடத்துகின்றன. உதாரணத்திற்கு ஜி.ஜி.எஸ். புத்தகக்கடை, ராஜி பப்ளிகேஷன்ஸ் போன்ற-வற்றைக் கூறலாம். புத்தகக் கடைகளுள் இ.வி.எஸ் புத்தகக் கடை என்னும் கடை இ.வி.எஸ். பதிப்பகம் என்னும் பெயரில் பதிப்புரிமைச் சட்டங்களை மீறி, சுயமாக எதையும் எழுதாமல் மற்றவர்களின் எழுத்து-களைத் திருடி நூலாக வெளியிட்டது உண்டு. இதை நோக்க வியாபாரிகள், படித்தவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் பதிப்புரிமைச் சட்டங்களை மீறுதல், மற்றவரின் எழுத்தைத் திருடுதல் என்பன போன்ற குற்றங்களுக்கும் தமிழ்ப் புதிப்புலகில் பஞ்சமில்லை எனத் துணிந்து கூறலாம். பதிப்புரிமை பற்றிய விழிப்-புணர்வு அவசியம் உண்டாக்கப்படவேண்டும்.
அரசாங்கமும் பதிப்புகளும்
தமிழ்மொழிப் புழக்கத்தைப் பெருக்கும் நோக்கில் அரசாங்க ஆதரவில் தமிழ் மொழிக்கு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் மொழி பற்றிய பல்வேறு நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. இதன் தொடர்பாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பயன்தரும் தமிழ் ஆங்கில அகராதி (ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) வெளியிடப்பட்டது.
வாசிப்பை நேசிப்போம் என்னும் கருப்-பொருளை அடியற்றி ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ (ஸிமீணீபீ ஷிவீஸீரீணீஜீஷீக்ஷீமீ) இயக்கம் மூலம் தேசிய நூலக வாரியம் கடந்த நான்கு ஆண்டுகளாக நான்கு மொழிகளிலும் சிறுகதைகளைத் தேர்வு செய்து அவற்றை ஆங்கில மொழியில் மட்டுமின்றி நான்கு இனத்தவரும் அக்கதைகளை வாசிக்க மொழி பெயர்த்து (தமிழ்க்கதை சீன, மலாய் மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்) நூலாக்கி, வாசிப்போர் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறது. தமிழ்ப் படைப்புகள் பிறமொழி மக்களைச் சென்றடைய இப்பதிப்புகள் வழிப் பெருந்துணை புரிகின்றது தேசிய நூலக வாரியம். அவ்வப்போது நூலக அடைவுகளை-யும் தமிழில் வெளியிடுகிறது. (உ.ம். லீ கொங்சியன் நூலகத்தின் சீரிய தமிழ்த் தொகுப்பு; தமிழ் முரசு – சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் ஓர் அடைவு (1936-_1960), தொகுதி 1).
தேசியக்கலைகள் மன்றமும் தமிழ்ப்பதிப்புகளும்
அரசாங்க அமைப்பான தேசியக்கலைகள் மன்றம் நூல்களைப் பதிப்பிக்க மான்யம் வழங்குகிறது. தனிநபருக்கு வழங்கப்படும் இம்-மான்யத்தை இருமுறை கனகலதா பெற்றுள்ளார். அண்மையில் எம்.கே. நாராயணன் பெற்றுள்-ளார். கலாச்சார விருது என்பது இவ்வமைப்பால் வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருது பெற்றவர்களின் நூல்களைப் பதிப்பிக்க அரசாங்கம் மான்யம் கொடுத்து உதவும். திரு. சிங்கை இளங்கண்ணன், திரு. ந. வரதன் போன்றோர் தங்கள் நூல்களை இம்மான்யத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தனர்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேசியக் கலைகள் மன்றமும் எஸ்.பி. ஹெச் நிறுவனமும் இணைந்து நடத்தும் எழுத்தாளர் வாரத்தின்-போது தங்கமுனை விருதுப் போட்டியில் பரிசுபெற்ற கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகின்றன. நான்கு மொழிக்-கதைகளும் இவ்வாறே நூலுருப் பெறுகின்றன. 2001 முதல் இத்திட்டத்தின் வழிக் கவிதைகளும் சிறுகதைகளும் பதிப்பிக்கப்படு-கின்றன.
தேசியக் கலைகள் மன்றம் “சிங்கப்பூர்ப் புனை கதைகள்’’ (திவீநீtவீஷீஸீs ஷீயீ ஷிவீஸீரீணீஜீஷீக்ஷீமீ); “சிங்கப்பூர்க் கவிதைகள்’’ (றிஷீமீtக்ஷீஹ் ஷீயீ ஷிவீஸீரீணீஜீஷீக்ஷீமீ); புத்தாயிரத்-தாண்டுக் கவிதைத் தொகுப்பான “ரிதம்’’ போன்ற பல்வேறு நூல்களை நான்கு மொழிகளிலும் வெளியிட்டு உள்ளது.
தேசியப் பல்கலைக் கழகம், தேசியக் கல்விக் கழகம், கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவு போன்ற-வையும் தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளன. சிங்கப்பூரின் வெள்ளிவிழாவை ஒட்டி 1990களில் இருபத்தைந்து நூல்கள் அரசாங்க ஆதரவில் வெளிவந்தன. இவற்றை நோக்க சிங்கப்பூர் அரசாங்கம் எல்லோருக்கும் சமவாய்ப்பு நல்கி எல்லா இனத்தவரின் முயற்சிகளுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இது சிங்கப்பூர்த் தமிழர்கள் செய்த நற்றவத்தின் பயன் எனலாம்.
அமைப்புக்களும் பதிப்புத்துறையும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை எனத் தனித்துறை அமையாவிட்-டாலும் தமிழ்ப் பேரவை என்ற அமைப்பு 1975-இல் தொடங்கப்பட்டது. முனைவர் அ.வீரமணி தலைமையில் மிகச்சிறப்பாகச் செயலாற்றிப் பல ஆய்வுக்கருத்தரங்குகளை “சிங்கப்பூரில் தமிழும் தமிழ் இலக்கியமும்’’ என்னும் கருப்பொருளில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பு அளித்தது. அக்கட்டுரைகள் நூலுருப் பெற்றது பாராட்டப்படவேண்டிய விஷயம் ஆகும்.
தமிழர் பேரவை & சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றமும் பதிப்புப்பணிகளும்
இவ்விரு அமைப்புகளும் முனைவர் அ.வீரமணியின் துடிப்புமிக்க மதியுரைகளின் பேரில் செயல்பட்டன. இலக்கிய ஆர்வலர்களை-யும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் கட்டுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் படிக்கச் செய்து அவற்றை நூலுருவில் பதிப்பித்தன இவ்வமைப்புக்கள். இலக்கிய ஆய்வு, சமூகவியல் ஆய்வு என ஆய்வைப் பல பரிமாணங்களுக்கு எடுத்துச் செல்ல இவ்வமைப்புக்களின் பதிப்புகள் உதவின.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் _ ஒரு நூற்றாண்டு என்னும் தலைப்பில் 1996இல் ஆய்வரங்கு நடத்தியது. அதில், வாசிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியது. வெள்ளிவிழா மலர் போன்ற சில மலர்களையும் நூலாக வெளியிட்டுள்ளது பயனுள்ள பணி-களாகும்.
அரசாங்க ஆதரவோடு தனிநபர்களும் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருப்பதன் வாயிலாகத் தமிழ்ப் பதிப்புலகம் வெகுவேகமாக வளர்கிறது என்றே சொல்லவேண்டும். இந்த வேகமான வளர்ச்சியில் வெளிநாட்டுத் திறனாளர்களாக இங்கு வந்து தம் படைப்பாற்றலையும், இலக்கிய வேட்கையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்-கும் புதுவரவுகளின் பதிப்புப்பணியும் முக்கியத்-துவம் பெறுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.Share.

About Author

Leave A Reply