இரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்

0
(குழந்தைகளுக்கு அவர்கள் கற்கவும் வருங்காலத்திற்காக வாசிக்க பத்திரப்படுத்தவும் 100 புத்தகங்கள்)
(தமிழல்லாத பிறமொழி நூல்கள்)
 

1. ஆலிவர் ட்விஸ்ட்
நூலாசிரியர் : சர் சார்லஸ் டிக்கின்ஸ்
மொழி : ஆங்கிலம் அருமையான சிறுவர் நாவல்
 

2. அற்புத உலகில் ஆலிஸ்
லூயிஸ்கரோல் (ஆங்கிலம்)
சிறுமி ஆலிஸின் கனவுலகக் கதை


3. உலகை வலம் வந்த 80 நாட்கள்
ஜுல்ஸ் வெர்ன் (ஆங்கிலம்)
உலகை வலம் வரும் அறிவியல் புதினம்


4. முதல் ஆசிரியன்
சிங்கிஸ் அய்த்மத்தவ் (ருஷ்யா)
அறிவுக்கு ஒரு அற்புத நாவல்


5. டாம் சாயர் சாகசங்கள்
மார்க் ட்வைன் (ஆங்கிலம்)
நகைச்சுவை கலந்த கதையாடல்


6. டான் க்விக்ஸோட்
மிகல் கர்வான்டஸ் (ஸ்பானிஷ்)
சாகசங்கள் தோல்வியடையும் நாவல்


7. கிம்
ரட்யார்ட் கிப்லிங் (ஆங்கிலம்)
இம் எனும் சிறுவனின் வாழ்க்கைக் கதை


8. மந்திரமலை
தாமஸ்மன் (ஜெர்மன் பிறகு ஆங்கிலம்)
ஹான்ஸ் வாழ்வை கற்றுக்கொள்கிறான்


9. தைரியமான புதிய உலகம்
ஆல்டஸ் ஹக்ஸ்லே (பிரெஞ்சு)
வருங்காலம் பற்றிய அறிவியல் நாவல்


10. என் ஆரம்ப வருடங்கள்
சார்லி சாப்லின் (ஆங்கிலம்)
அற்புத நடிகரின் துயரமிகு வாழ்க்கை


11. விடுதலை நோக்கிய நீண்ட நடைப்பயணம்
நெல்சன் மண்டேலா (ஆப்ரிகானம்)
தென்ஆப்ரிக்க விடுதலை வேள்வியின் கதை


12. சத்தியசோதனை
காந்தியடிகள் (குஜராத்தி/ஆங்கிலம்)
மகாத்மாவால் எழுதப்பட்ட சுயசரிதை நம்மையும் சோதிக்கும்.


13. குழந்தைப் பருவம்
மக்சீம் கார்க்கி (ருஷ்ய மொழி)
கார்க்கியின் ஆரம்பகால வாழ்க்கை


14. கலிவரின் பயணங்கள்
ஜொனாதன் ஸ்ப்ட் (லத்தீன்)
லுமர் கலிவர் எனும் மனிதர் எதிர்கொள்ளும் கற்பனை சாகசங்கள்


15. இவான்ஹு
சர் வால்டர்ஸ்காட் (ஆங்கிலம்)
மிகச்சிறந்த வரலாற்று நாவல்


16. கிரிஸ்டோமலையின் கவுன்ட்
அலெக்சாந்தர் டூமாஸ் (ஆங்கிலம்)
ஹென்றி மிமிமி மன்னர்காலக் கதை


17. கடத்தப்பட்டவன்
ஆர்.எல். ஸ்டீவன்ஸன் (ஆங்கிலம்)
கப்பல் பயணத்தில் வேலைக்கார சிறுவனின் கதை


18. மால்குடி நாட்கள்
ஆர்.கே. நாராயண் (ஆங்கிலம்)
மால்குடி எனும் (கற்பனை) ஊரில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு


19. ஹங்கில்பரி ஃபின் சாகசங்கள்
மார்க் ட்வைன் (ஆங்கிலம்)
டாம் சாயரின் நண்பன்தான் இந்த ஃபின்


20. துப்பறிவாளன் ஷெர்லாக் ஹோம்ஸ்
ஆர்தர் கெனான் டாயல் (ஆங்கிலம்)
அற்புதமான துப்பறியும் கதைகளின் தொகுப்பு


21. மகா அலெக்ஸாந்தர்
ஜான் குந்தர் (ஆங்கிலம்)
மாமன்னன் அலெக்ஸாந்தரின் வரலாறு


22. மெதுசலாவுக்குத் திரும்புவோம்
ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஆங்கிலம்)
அற்புதங்கள் நிறைந்த ஒரு நாடகம்


23. காலம் குறித்த சுருக்கமான வரலாறு
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (ஆங்கிலம்)
பிரபஞ்சம் தோன்றிய வரலாற்றை விளக்கும் நூல்


24. தீண்டத்தகாதவன்
முல்க் ராஜ் ஆனந்த் (ஆங்கிலம்)
மனிதக்கழிவுகளை அகற்றுபவர் குறித்த நாவல்


25. கேண்டர்பரிக் கதைகள்
சவ்ஸர் (லத்தீன்)
ஒரு ஊரை மையமாகக் கொண்ட அழகுக் கதைகள்


26. மகிழ்ச்சியை வெல்லுவோம்
பெரடண்ட் ரஸல் (ஆங்கிலம்)
அறிவியல்ரீதியில் மகிழ்ச்சியை விளக்கும் நூல்


27. தி கிரௌன் ஆஃப் வைல்ட் ஆலிவ்
ரஸ்கின் பாண்டு (ஆங்கிலம்)
குழந்தை நூலாசிரியரின் சிறந்த நாவல்


28. குற்றமும் தண்டனையும்
பியோதர் தாஸ்தாவ்ஸ்கி (ருஷ்ய மொழி)
யதார்த்தவாதத்தின் உச்சக்கட்ட நாவல்


29. இருட்டு அறை
ஆர்.கே. நாராயண் (ஆங்கிலம்)
குழந்தைகள் போற்றும் பெண்ணியநாவல்


30. தோட்டக்காரன்
இரவீந்திரநாத் தாகூர் (வங்காளம்)
நோபல் பரிசு எழுத்தாளரின் குழந்தை நாவல்


31. காலி செய்யப்பட்ட கிராமம்
ஆலிவர் கோல்டுஸ்மித் (ஆங்கிலம்)
கவித்துவ கதைகள் நிறைந்தது


32. இந்தியாவை கண்டுணர்வோம்
ஜவஹர்லால் நேரு (ஆங்கிலம்)
பலகோணங்களில் இந்தியாவைப் பார்க்கும் நூல்


33. பொம்மையின் வீடு
இப்ஸன் (ஆங்கிலம்)
தனிமையின் தத்தளிப்பை சித்தரிக்கும் நாவல்


34. மனிதனின் தோற்றம்
சர் சார்லஸ் டார்வின் (லத்தீன்)
மனிதக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய அறிவியல் பாதையை விளக்குகிறது


35. தந்தையும் மகன்களும்
இவான் துர்க்கனேவ் (ருஷ்யா)
தலைமுறைகள் போற்றும் நல்ல நாவல்


36. தி ஃபால் ஆப் தி ஸ்பர்ரோ
சலீம் அலி (ஆங்கிலம்)
பறவை கல்வியிலாளரின் சிறந்த வாழ்க்கை நூல்


37. கண்ணிற்கு புலப்படாத மனிதன்
எச்.ஜி. வெல்ஸ் (ஆங்கிலம்)
விஞ்ஞான சாகஸக் கதை


38. ராபின்ஸன் க்ரூஸோ
டேனியல் டிபோ (ஜெர்மன்)
பிரபலமான அழகிய நாவல்


39. யுத்த தளவாடங்களைக் கைவிடுவோம்
எர்னஸ்ட் ஹெம்மிங்வே (ஆங்கிலம்)
உலகம் யுத்தத்தை எப்படி கைவிடுமென விளக்கும் நாவல்


40. டிவைன் காமெடி
ஏ. டான்தே (லத்தீன்)
நகைச்சுவை நிறைந்த கடவுளர் கதை


41. மூலதனம்
கார்ல் மார்க்ஸ் (ஜெர்மன்)
வாழ்வில் இன்றில்லாவிட்டாலும் என்றாவது அவசியம் அலசிஆராய்ந்து வாசிக்க வேண்டிய நூல்


42. ஜேன் அயர்
சார்லோ ப்ராண்ட் (ஆங்கிலம்)
ஜேன் எனும் ஏழை அனாதைச் சிறுமி பற்றிய நாவல்


43. டேவிட் காப்பர் ஃபீல்டு
சார்லஸ் டிக்கன்ஸ் (ஆங்கிலம்)
சிறுவன் மனிதனாகும் வினோதக் கதை


44. உயிரிகள் தோன்றிய கதை
சர் சார்லஸ் டார்வின் (ஆங்கிலம்)
உயிரியலின் முதுகெலும்பாய் விளங்கும் நூல்


45. பியரி யட் ஜீன்
கய் டி மாப்பஸான் (பிரெஞ்சு)
ஜீன் மற்றும் அவனது சகோதரர், சொத்து, உறவு என விரியும் நாவல்


46. யுலீஸஸ்
ஜேம்ஸ் சாய்ஸ் (ஆங்கிலம்)
ட்ரோஜான் யுத்தத்தை வித்தியாசமாய் அணுகும் நாவல்


47. இஃப் இட் டை
ஆண்ட்ரி கைடு (பிரெஞ்சு)
தலைசிறந்த சுயசரிதை


48. கலங்கரை விளக்கு நோக்கி
விர்ஜீனியா உல்ஃப் (ஆங்கிலம்)
ஒரு ஜோடிக்கு எட்டு குழந்தைகள்… ஆறு உறவினர்கள் இவர்களின் கதை.


49. டெஸ், டர்பர் வில்ஸ்
தாமஸ் ஹார்டி (ஆங்கிலம்)
முதல் பாதி நாவலில் வீட்டுவேலைகள் செய்து பிற்பாதியில் மீளும் சிறுமியின் கதை


50. டைஃபூன்
ஜோஸப் கொனார்டு (உக்ரேன்)
பெரும்புயல் வீசும் நாவல்.


51. திரு. போல்லியின் வரலாறு
எச்.ஜி. வேல்ஸ் (ஆங்கிலம்)
இதயம், மனது இரண்டுக்குமான இடைவெளியில் ஊடாடும் விஞ்ஞான மாய உலகம்


52. எதிர்பார்ப்பு
சர் சார்லஸ்டிக்கன்ஸ் (ஆங்கிலம்)
நேர்மையாக வாழ்வதன் அர்த்தத்தை உணர்த்தும் கதை


53. இருளின் இதயம்
ஜோசப் கொனார்டு (ஆங்கிலம்)
காங்கே நதியில் ஒரு சாகஸ பயணம்


54. சைலாஸ் மார்னர்
ஜார்ஜ் எலியட் (ஆங்கிலம்)
கைத்தறி தொழிலாளியின் தத்துக்குழந்தை சிறுமி மீது கவனம் பெறும் நாவல்


55. காஸ்டர் பிரிட்ஜ் மேயர்
தாமஸ் ஹார்டி (ஆங்கிலம்)
மனைவி குழந்தைகளை ஏலத்திற்கு விற்க முடியுமா?


56. வேக் ஃபீல்டின் விஸார் குடும்பம்
அலிவர் கோல்ட்ஸ்மித் (ஆங்கிலம்)
டாக்டர் பிம்ரோஸ் என்பவர் பற்றிய பிரபல நாவல்


57. கடினமான காலங்கள்
சார்லஸ் டிக்கன்ஸ் (ஆங்கிலம்)
தொழிற்புரட்சியில் பின்னப்பட்ட நாவல்


58. அக்னி சிறகுகள்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (ஆங்கிலம்)
உத்வேகம் வரவழைக்கும் சுயசரிதை


59. வெனிஸ் நகரத்து வணிகன்
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆங்கிலம்)
சுவையாக சீர்மிகுந்த நாடகம்


60. ஃபாதர் ப்ரௌன் நிரபராதி
ஜி.கே. செஸ்டர்டன் (ஆங்கிலம்)
பாதிரி ஒருவரின் அப்பாவித்தனங்கள்


61. நேர்மையான திருடன் மற்றும் கதைகள்
தாஸ்தாவ்ஸ்கி (ருஷ்யா)
சிறப்பான சிறுகதையின் தொகுதி


62. காற்றும் திராட்சைகளும்
பாப்லோ நெருடா (ஸ்பானியம்)
எளிதில் விளங்கும் நல்ல கவிதைகள்


63. காற்றோடு போனவை…
மார்க்கரட் மிட்சல் (ஆங்கிலம்)
அழகிய இசைக்காவியம் இது


64. நல்ல நிலம்
பியர்ஸ் பக் (ஆங்கிலம்)
சிறு கிராமத்து வாழ்வை வர்ணிக்கும் நூல்


65. உலகின் வரலாறு _ சில நிகழ்வுகள்
ஜவஹர்லால் நேரு (ஆங்கிலம்)
மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்


66. விளங்கமுடியா பிரபஞ்சம்
ஜேம்ஸ் ஜீன்ஸ் (ஆங்கிலம்)
பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கட்டுரைகள்


67. கிழவனும் கடலும்
ஹெர்னஸ்ட் ஹெம்மிஸ்வே (ஆங்கிலம்)
சுவையான சம்பவ அடுக்குகள் கொண்ட நாவல்


68. இறந்த காலமும் நிகழ்காலமும்
தாமஸ் கார்லைல் (ஆங்கிலம்)
வரலாற்று பின்னணியில் ஒரு சாதனை கதை


69. ஜூராஸிக் பூங்கா
மைக்கெல் க்ரிச்டன் (ஆங்கிலம்)
டைனாசர்களை அறிமுகம் செய்த பிரபல நாவல்


70. இவானவ்
ஆண்டன் செக்காவ் (ருஷ்யா)
மத்தியதர வர்க்க வாழ்க்கை மின்னும் நாவல்


71. நள்ளிரவில் சுதந்திரம்
லாரிகொலின்ஸ் டாமினிக் லாப்பியர் (ஆங்கிலம்)
இந்திய விடுதலை கதையை வித்தியாசமாய் அணுகும் நூல்
72. அன்னை நிலம்
சிங் இஸ்அய்த் மாதவ் (ருஷ்யா)
இரண்டாம் உலகப்போரை வருணிக்கும் அற்புத நாவல்


73. எம்மா
ஜேன் ஆஸ்டன் (ஆங்கிலம்)
உலகப் பிரசித்தி பெற்ற மானுடவியல் நாவல்


74. காமாவுனின் மனித வேட்டை ஆடுபவை
ஜிம் கார்பட் (ஆங்கிலம்)
இந்திய புலிகளை பற்றிய கதைகள்


75. எதிரிகள்
மக்ஸீம் கார்க்கி (ருஷ்யா)
எளிய ஆனால் அழுத்தமான நாவல்


76. பிரின்ஸி பியா மாதமாட்டிகா
சர் ஐசக் நியூட்டன் (லத்தீன்)
புவிஈர்ப்பு விசை நியூட்டனின் கட்டுரைகள் ஆய்வுகள்


77. பஞ்சதந்திரா
விஷ்ணுசர்மா (ஹிந்தி)
சுவாரஸியமான குட்டிக்கதைகள்


78. தபால் நிலையம்
இரவீந்திநாத் தாகூர் (வங்காளம்)
பிரசித்தி பெற்ற நாவல்களில் ஒன்று


79. மழை அரசன்
சால் பெல்லோ (ஆங்கிலம்)
மந்திர உலகின் மாயக்கதை


80. பழம் பொருட்களின் கடை
சார்லஸ் டிக்கன்ஸ் (ஆங்கிலம்)
படிக்க படிக்க சுவாரசியமாய் இருக்கும் சிறுவர் நாவல்


81. பீட்டர் பான்
ஜெ.எம். பாரி (ஆங்கிலம்)
ஆங்கில சிறுவர் நாவல்


82. பிளேக்
ஆல்பர் காம்யூ (பிரெஞ்சு)
துயரத்தின் அபத்தத்தை சித்தரிக்கும் நாவல்


83. உட்டோப்பியா
தாமஸ்மோர் (லத்தீன்)
உட்டோப்பியா எனும் கற்பனை நாடு பற்றிய நாவல்


84. தி ரெஸ்க் யூ
ஜோஸ்கான் ராட் (ஆங்கிலம்)
திகில் நிறைந்த பிரபல நாவல்


85. வால்கா முதல் கங்கை வரை
ராகுல சாங்கிருத்தியாயன் (ஹிந்தி)
மனித பண்பாட்டின் கதை
 

86. கோவில்புலி
ஜிம் கார்பட் (ஆங்கிலம்)
திகில் நிறைந்த சிறுத்தை நாவல்
 

87. மனித உடலியலின் வரைபடவியல்
ஆண்டியஸ் வெஸாலியஸ் (பெல்ஜியம்)
ரத்த ஓட்டத்தை விளக்கிய நூல்
 

88. டாம் அங்கிளின் வாழ்வரை
பிரீச்சர் ஸ்டவ் (ஆங்கிலம்)
அடிமை கறுப்பர் வாழ்வை சித்தரிக்கும் நாவல்
 

89. வானவில்
பியர்ஸ் பக் (ஆங்கிலம்)
சீனத்து கிராம வாழ்வை சித்தரிக்கும் கதை
 

90. பதேர் பாஞ்சாலி
பிபூதி பூஷன் (வங்காளம்)
சத்யஜித்ரேவால் படமாக எடுக்கப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற எளிய நாவல்
 

91. தாய்
மக்சீம் கார்க்கி (ருஷ்ய மொழி)
எறக்குருக வைக்கும் பிரம்மாண்ட நாவல்
 

92. சிறை பெல்ட்
கனான் டாயல் (ஆங்கிலம்)
துப்பறியும் நாவல்
 

93. பிரபஞ்ச உருண்டைகளின் சுழற்சி
நிக்கோலஸ் கோபர் நிகஸ் (போலிஷ்)
சூரியனை கோள்கள் சுற்றுவதை விவரிக்கிறது
 

94. லில்லியும் சிஸேமும்
ரஸ்கின் பாண்டு (ஆங்கிலம்)
குழந்தை நாவலாசிரியரின் நாவல்களில் ஒன்று
 

95. சுவாமியும் நண்பர்களும்
ஆர்.கே. நாராயண் (ஆங்கிலம்)
அவரது முதல் நாவல்
 

96. வரப்போகும் பொருட்கள் விஷயங்களின் வடிவம்
எச்.ஜி. வெல்ஸ் (ஆங்கிலம்)
எதிர்காலவியல் அறிவியல் புதினம்
 

97. புதையல் தீவு
ஆர்.எல். ஸ்டீபன்ஸன் (ஆங்கிலம்)
சாகஸ சிறுவர் பற்றிய ஆழமான நாவல்
 

98. கோட்பாடுக்காக காத்திருத்தல்
சாமுவேல் பெக்கெட் (பிரெஞ்சு)
அபத்த இலக்கியம் எனும் நவீனயுக்தி நாவல்
 

99. மாந்திரீகவாதியின் வீடு
அட்ரியன் மாத்யூ (ஆங்கிலம்)
இரண்டாம் உலக யுத்த பின்னணி கதை
 

100. டாவின்சி கோட்
டான் பிரவுன் (ஆங்கிலம்)
மர்ம முடிச்சுகள் கொண்ட நவீனம்

Share.

About Author

Leave A Reply