மதங்களை தெரிவோம் – விவிலியம் (பைபிள்)

0
 ஆர். சிவசுப்பிரமணியன்

கிறித்தவ மதம் சார்ந்தும், மத எல்லையைத்
தாண்டியும் உலகெங்கும் பரவலாக அறிமுகமான நூல்
விவிலியம். பிப்லோஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்,
எழுதப் பயன்படுத்திய புல் காகிதத்தைக் குறித்தது. அப்புல்
காகிதத்-தில் எழுதப்பட்ட நூலைப் பிப்லோஸ் என்று
அழைத்தனர். புத்தகங்கள்என்ற பன்மை வடிவில் பிப்லியா
என்ற சொல் உருவானது. பிபிலியா (ஙிவீதீவீறீவீணீ) என்ற கிரேக்கச்
சொல்லின் திரிபே பைபிள்ஆகும். ÔபிபிலியாÕ என்ற
சொல்லைத் தழுவியே Ôவிவிலியம்Õ என்ற தமிழ்ச் சொல்
உருவாகியுள்ளது.
விவிலியம் பல நூல்களின் தொகுப்பாகும். இது, Ôபழைய
ஏற்பாடுÕ, Ôபுதிய ஏற்பாடுÕ, என இரு பகுதிகளாகப் பகுக்கப்பட்
டுள்ளது.
பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய (ஹீப்ரு)
மொழியில் எழுதப்பட்டதாகும். விதிவிலக்காகச் சில
பகுதிகள்கிரேக்க மொழியில் அமைந்தன. கிறித்துவுக்கு
முன் எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழி-
©பெயர்த்திருந்தனர். அப்போது எழுபது நூல்கள்இதில்
இடம் பெற்றிருந்தன. கத்தோலிக்கம் இவற்றுள்நாற்பத்தியா
று நூல்களையும் சீர்திருத்தக் கிறித்தவம் முப்பத்-
தொன்பது நூல்களையும் ஏற்றுக் கொண்டுள்ளன.
உரைநடையிலும் செய்யுளிலும் அமைந்த இந்நூலில்
இடம் பெற்றுள்ள முப்பத்தெட்டு நூல்களும் நடையாலும்
உள்ளடக்கத்தாலும் வேறுபட்டவையாகும். புராணம்,
வரலாறு, சட்டம், அறவுரை, தீர்க்கதரிசனம், நன்னெறிப்ப
டுத்தல் ஆகியன இவற்றுள்இடம்பெற்றுள்ளன.
மானிடவியல் நோக்கில் பார்த்தால் இனக்குழு வாழ்க்கை,
அடிமை வாழ்க்கை, மேய்ச்சல் நில வாழ்க்கை, வேளாண்மை
வாழ்க்கை என்ற நான்கு கட்டங்கள்பழைய ஏற்பாட்டில்
இடம் பெற்றுள்ளன எனலாம்.
புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 27
நூல்களைக் கொண்டது. இவற்றுள்முதல் நான்கு
நூல்கள்Ôநற்செய்திÕ நூல்கள்(நிஷீsஜீமீறீs) என்றழைக்கப்படு-
கின்றன. இவை முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா,
அருளப்பர் என்ற யேசுவின் நான்கு சீடர்களால் எழுதப்பட்
டவையாகும். தூதுவன் என்ற பொருளைத் தரும்
Ôஅப்போஸ்தலர்Õ என்ற சொல்லின் அடிப்படையில்
Ôஅப்போஸ்தலர் பணிÕ என்ற நூல் புதிய ஏற்பாட்டில்
இடம் பெற்றுள்ளது. யேசு தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து
மறை பரப்ப அனுப்பிய சீடர்களே அப்போஸ்தலர்
எனப்படுகின்றனர். ஆயினும், அப்போஸ்தலர் அனைவரின்
பணிகளையும் இது குறிப்பிடவில்லை. குறிப்பாக
இந்தியாவுக்கு வந்த இயேசுவின் சீடரான தோமையாரின்
பணிகளைப் பற்றிய
குறிப்புகள்எவையும் இதில்
க £ ண ப் ப ட வி ல் ¬ ல .
இராயப்பர், சின்னப்பர் என்ற
இருவரின் பணி மட்டுமே
இப்பகுதியில் இடம்
பெற்றுள்ளது.
கிறித்தவம் நிலை பெற்ற
பின்னர் கி.பி. 369_இல் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
என்ற இரண்டையும் இன்றிருக்கும் வடிவத்திற்குத்
தொகுத்தனர். அவ்வாறு தொகுத்த போது பல பகுதிகளை
நீக்கிவிட்டனர். இவ்வாறு நீக்கப்பட்ட பகுதிகள்Ôபுறக்-
கணிக்கப்பட்ட நூல்கள்Õ அல்லது Ôதள்ளு-படி ஆகமங்கள்Õ
(கிஜீஜீஷீநீக்ஷீஹ்ஜீலீ) என்று பெயர் பெற்றன. தேர்ந்-தெடுத்த
பகுதிகளைக் கொண்ட விவிலியமே கிறித்தவர்களின்
அதிகாரப்பூர்வமான விவிலியம் (சிணீஸீஷீஸீவீநீணீறீ ஙிவீதீறீமீ)
எனப்படுகிறது. இவ்வாறு தொகுத்தவர்கள்ஆண்கள்
என்பதால் பெண்களைக் குறித்த பல பகுதிகள்விடுபட்டுப்
போயின என்பது பெண் இறையியலாளர்-களின்
குற்றச்சாட்டாகும்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இலத்தீன் மொழி-
பெயர்ப்பைத் தனது அதிகாரப்பூர்வமான விவிலியமாகக்
கொண்டிருந்தது. அதைப் பிற மொழிகளில் மொழி-
பெயர்ப்பதை அது விரும்பவில்லை. சீர்திருத்த இயக்கத்தின்
போது, அதன் முன்னோடி நிகழ்வுகளில் ஒன்றாக ஜெர்மன்
மொழியில் விவிலியத்தை மார்ட்டின் லூதர் மொழி-
பெயர்த்தது அமைந்தது.
சமய நூல் என்றாலும் அதன் மொழிநடைக்காக
விவிலியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பல சமயத்-
தினராலும் படிக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் இடம்-
பெற்றுள்ள யேசுவின் மலைப் பொழிவும், அவர் பயன்-
படுத்திய உவமைக் கதைகளும், பழைய ஏற்பாட்டில் இடம்
பெற்றுள்ள சங்கீதம் என்ற பகுதியும், சமய எல்லையைக்
கடந்து பல்வேறு சமயத்தினரும் விரும்பிப் படிக்கும்
பகுதிகளாக உள்ளன. தமிழ் உரைநடை வரலாற்றில் தமிழ்
விவிலிய மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் புறக்கணிக்க
முடியாது. சமூக மாறுதல்களுக்கேற்ப விவிலியத்தின் தமிழ்
மொழிபெயர்ப்பு மாற்றமடைந்து வருகிறது. சான்றாக
மாற்றுத் திறனுடையோரை குருடர், செவிடர் என்று பழைய
தமிழ் மொழிபெயர்ப்புகள்குறிப்பிட, தற்போது
விழியிழந்தோர், காது கேளாதோர் என்று குறிப்பிடப்பட்
டுள்ளனர். இது போன்றே பெண்களை Ôஅள்Õ விகுதியில்
குறிப்பிடுவதையும் தவிர்த்துள்ளனர்.

Share.

About Author

Leave A Reply