நவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை

0
ஜி. குப்புசாமி


ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள்உருவாக்கிய தேய்வழக்குகளை
விசுவாசமாக நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில்
உள்ள பலதரப்பட்ட நுண் அரசியற் கூறுகள்இன்னமும்கூட நம்மால்
முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்படவில்லை எனலாம். இருண்ட கண்டம்
என்ற ஒரே சொல்லாட்சியின் கீழ் மறைக்கப்பட்டிருந்த உலகின் மூத்த குடியின்
வேர்களும், அவர்களின் எண்ணற்ற கடவுள்களும், இனக் குழுக்களின்
பாரம்பரியங்களும், கலாசாரங்களும் காலனியாளர்களால் அநாகரிகங்கள்என்ற
பெயரில் அழிக்கப்பட்ட, தம் நாட்டு மொழிகளையும் மதங்களையும் அவர்களின்
மேல் திணித்-ததையும், ஓர் இனமாக வாழ்ந்து வந்த அப் பழங்குடிகள்தமக்குள்
பிளவுண்டதையும் புதைசேற்றி-லிருந்து தோண்டி-யெடுக்கப்படும் புராதன கலைப்
பொருள்களைப் போல இன்றைய ஆப்பிரிக்கப் படைப்பாளி மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. தென் அமெரிக்காவைப் போலவே  ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பிய ஆதிக்க நாடுகளால் காலனியாக்கம் செய்யப்பட்ட பூமி. பாரம்பரியம் மிக்க ஆப்பிரிக்கச்¢ சமூகத்தின் மீது மேற்கத்தையவழக்கங்களும் மதிப்பீடுகளும் ஏற்படுத்திய தாக்கங்களை நுட்பமாகக் கலையம்சத்துடன் சித்திரிக்கும் நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் வரலாறு சினுவா
ஆச்சிபியுடன் தொடங்குகிறது. மிஸ்டர் ஜான்சன் போன்ற, வெள்ளையர்களால்
கீழ்த்தரமாகவும் இழிவாகவும் சித்திரிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பின்னணி
நாவல்களிலிருந்து ஆச்சிபியின்  Things Fall Apart முற்றிலும் விலகி உண்மையா
ன ஆப்பிரிக்காவை, அதன் கம்பீரத்தை, பெருமிதத்தை, வலியை,
அவமானத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியது (இந்நாவல் சிதைவுகள்என்ற
பெயரில் காலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொ.பெ: என்.கே. மகாலிங்கம்).
சினுவா ஆச்சிபியை மட்டுமின்றி அவர் பிறந்த நைஜீரியா-வைச் சேர்ந்த பென்
ஓக்ரி, வோலே சொயிங்கா, சீமமாண்டா அடீச்சி போன்றோரின் படைப்புகளையும்
சரியாக உள்-வாங்கிக் கொள்ள நைஜீரியாவின் உள்நாட்டுப் போர்களைப் பற்றி
நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1992 வரை அதன் இயற்கை வளங்களுக்காகச்
சிறுபான்மை வெள்ளையர்களின் இனவெறி ஆட்சியில் ஆட்பட்டிருந்த தென்
ஆப்பிரிக்காவிற்கு அடுத்து ஆப்பிரிக்காவின் மிகவும் வளமான பிரதேசம் அதன்
மேற்குப் பகுதி நாடான நைஜீரியா. நைஜீரியாவில் உள்ள பல்வேறு இனக்-
குழுக்களில் இக்போ இனத்தவர் பெரும்பான்மையாக வாழும் பையாஃப்ரா
நைஜீரியாவிலேயே செழிப்பான பிரதேசம். இக்போ இனத்தவர்
பல்லாண்டுகளாகவே தனிநாடு கோரி போராடி வந்தாலும் 1967ல் வெடித்த
உள்நாட்டுப் போரில் பெரும் ரத்தச் சேதத்திற்குப் பின் பையாஃப்ரா என்ற தனி
நாடு உருவாகியது. சிந்திய ரத்தம் உலர்வதற்கு முன் மூன்றே ஆண்டுகளில்
அமெரிக்க உதவியு-டன் நைஜீரியா அப்புதிய நாட்டைக்
கையகப்படுத்திப் பழையபடியே இணைத்துக் கொண்டது.
பையாஃப்ராவின் வடுக்கள்நைஜீரியர்களிடம் இன்னும்
மறையாதிருக்கின்றன என்பதற்குச் சாட்சி ஆச்சிபி, அடீச்சி
போன்றோரின் படைப்புகள்.
நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தைப் பற்றி எழுதும்போது
நைஜீரிய இலக்கியமே அதில் பெரும்பான்மையான
இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நைஜீரிய ஆங்கில
இலக்கியம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் விஸ்தீரணம
டைந்திருக்கிறது. கருப்பு ஆப்பிரிக்க இலக்கியத்தின்
முன்னணிக் கலைஞரான வோலே சொயிங்காவிற்கு
1986_ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
கிடைத்த-போது அது நைஜீரிய இலக்கியத்திற்கான
அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியது.
காலனியாதிக்கத்திலிருந்து, நவ காலனீயத்தின் வழியாக,
முழுமையான சுயராஜ்ஜியத்திற்குப் பெரும் வலியோடு
உருமாறிக் கொண்டிருந்த ஒரு தேசத்தின் போராட்-டங்க
ளை நைஜீரிய இலக்கியம் வெளிப்படுத்துகிறது.
பையாஃப்ரா யுத்தம் முடிந்தவுடனேயே எதிர்பாராத
வகையில் நைஜீரியாவில் புதைந்திருந்த எண்ணெய்வளம்
வெளிச்சத்திற்கு வந்தது. இப்புதிய செழிப்பின் கவர்ச்சி
உருவாக்கிய சமுதாய, அரசியல் ஒழுங்குலைவுகளிலிருந்து
அத்தேசம் இன்றுவரை மீண்டெழாதிருப்பதால் இன்றைய
புதுப் பணக்காரச் சமூகத்தின் குரூரமான சுயநலப் பாங்கிற்-
கெதிரான எதிர் விளைவாகவே இன்றைய நைஜீரிய
இலக்கியம் உருவாகியிருக்கிறது.
நைஜீரியாவின் எதிர்ப்புக் கவிதை மரபு ஒகிப்போ
(Okigbo)வின் Path of Thunder என்ற கவிதையோடு
தொடங்கு-வதாகக் கூறப்படுகிறது. அதுவரை சுயத்தோடு
நடத்தும் போராட்டங்களைப் பற்றியும், தனிப்பட்ட இழப்பு-
களையும் நெக்குருக எழுதி வந்த நைஜீரியக் கவிதைகள்
இனக்கொடுமைக்கும் பேரினவாதிகளின் சுரண்டலுக்கும்
எதிரானதாக மாறி 1960களின் மத்தியில் வெடித்த
உள்நாட்டுப் பிரிவினை யுத்தத்தை வந்தடைந்தது. இதே
யுத்தம் தான் ஒகிப்போவையும் பலி கொண்டது.
தற்போது வாழ்ந்து வரும் நைஜீரியக் கவிஞர்களில்
மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள்இயங்கி
வருகின்றனர். இவர்களில் எவராலும் எதிர்ப்பு மரபிலிருந்து
விலகிச் செல்ல முடியவில்லை என்பதையும் பார்க்கிறோம்.
முதல் தலைமுறையைச் சேர்ந்த சொயிங்காவிடம் ஆப்பிரிக்-
கக்கண்டம் முழுவதையும் அரவணைத்துச் செல்லும்
பார்வை வெளிப்படுகிறது. நைஜீரியாவின் பிற ethno centric
எழுத்தாளர்களிலிருந்து சொயிங்கா மாறுபட்டவர்.
1975ல் தென் ஆப்பிரிக்காவின் இனவெறியாட்சிக்கு எதிராக
மொஸாம்பிக் போர் அறிவித்த போதும், ரோபன் தீவில்
புரோமெதீயஸ் போல நெல்சன் மண்டேலா கால் விலங்கிடப்பட்டிருந்த போதும் அவர் எழுதிய கவிதைகள்
உக்கிரமானவை.
இரண்டாம் தலைமுறைக் கவிஞர்களின் எதிர்ப்புக்
குணம் ஓடியா ஓஃபெய்முன், நியி உசுந்தேர் ஆகியோரின்
கவிதைகளில் வகைமுறைப்படுகின்றது. இருவருமே சமரசமற்ற
மார்க்ஸிஸ்டுகள். பாட்டாளி மக்கள்நலனும் அவர்-
களின் விடுதலையும் மட்டுமே தமது கலைக் கோட்பாடு
என்றிருப்பவர்கள். இருந்தும், அவர்களின் கவிதைகள்
பிரசாரங்களாகவோ கொள்கை முழக்கங்களாகவோ
இல்லாமல் கலையெழுச்சி மிக்கனவையாக இருக்கின்றன.
மூன்றாம் தலைமுறையில் ஹாரி கரூபா, அஃபாம்
அக்கீஹ், சீசன் அஜாயி போன்ற இளங்கவிஞர்களின்
பெயர்கள்எதிர்காலத்தில் பரவலாகப் பேசப்படும் என்று
விமரிசகர்கள்நம்புகின்றனர்.
உரைநடையில் கடந்த இருபதாண்டுகளில் வெளிவந்த
முக்கிய நாவல்களாக சினுவா ஆச்சிபியின் Ôசவானாவின்
எறும்புப் புற்றுகள் (Antihills of the Savannah), கோலே
ஒமோடோஸோவின் விடிவதற்கு சற்று முன்னால் (Just before Dawn) ஆகியவற்றைக் கூற வேண்டும். ஆப்பிரிக்க
இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்த தன் பிரசித்தி
பெற்ற நாவலான Things Fail Apart வெளிவந்து முப்பதாண்
டுகள்கழித்து ஆச்சிபி எழுதிய நாவல் சவானா…
அவரது தேசத்தின் அரசியலில் பல வருடங்களாக நிலவி
வந்த ராμவக் குறுக்கீடுகள்மனிதத்துவத்திற்கு ஏற்படுத்திய
பின்னடைவுகளைக் கையாளுகிறது. (ஆச்சிபியின் மற்றொரு
பிரசித்தி பெற்ற நாவலான Nolonger At  Ease தமிழில்
மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் வீழ்ச்சி என்ற
தலைப்பில் (காலம்) வெளிவந்துள்ளது. ஒமோடோ-
ஸோவின் நாவல் உண்மைச் சரித்திர, கற்பனைக் கூறுகளைப்
பின்னிப் பிணைந்து, பிரிட்டிஷ் அதிகாரிகளால் மட்டு-
மல்லாது சுதந்திரம் கிடைத்த பின் தமக்குக் கிடைக்கப்போகும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துச் சச்சரவிடும்
அரசியல்வாதிகளாலும் இன்றைய நைஜீரியா எப்படி
சூறையாடப்படுகிறது என்று சித்திரிக்கிறது.
ஆச்சிபி, ஒமோடோஸோவின் சாதனைகள் 70களில்
புதிய புயலாக எழுதப் புகுந்த பென் ஓக்ரியின் தீவிரச்
செறிவின் முன் மங்கத் தொடங்கின. ஓக்ரி தனது முதல்
நாவலான Flowers and Shadows ஐ தன் 19வது வயதில்
எழுதினார். இந்நாவலும், அடுத்து வந்த “The Landscape Within ம், அவரது தலைமுறையின் விரக்தியையும்,
அந்நியமாதலையும் காட்டுகின்றன. ஓக்ரியின் பாணி
கார்ஸியா மார்க்வெஸ், சல்மான் ருஷ்டியைப் போல மாய
யதார்த்த வகைமைக்கு நெருக்கமாக வருவது. 1991_ல்
அவரது நாவல் The Famished க்காக புக்கர் பரிசை
வென்றார்.
சர்ரியலிசமும், நகைச்சுவையும், அபூர்வமான கற்பனையும்
கலந்து எழுதப்பட்ட The Man Who came from Back of Beyond மற்றும்  Sympathetic Undertaken என்ற இரு நூல்களை எழுதியுள்ள இன்றைய புதிய எழுத்தாளர் பியி
பாண்டேலி  தாமஸ் எதிர்காலத்தில் மிக முக்கியமான
படைப்பாளியாக இனம் காணப்படுவார் என்று
நம்பப்படுகிறது.
கடந்த இருபதாண்டுகளாகத்தான் பெண் எழுத்-
தாளர்கள்நைஜீரியாவில் வரத் தொடங்கியிருக்கின்றனர்.
புளோரா ந்வாபா, புச்சி இமிசீட்டா, அடாவ்ரா உலாஸி,
இஃபியோமா ஒகேயே, ஸேநாப் அல்கலி போன்ற அதிகம்
பொருட்படுத்தத் தகாத படைப்பாளிகளுக்குப் பின்
உக்கிரமான, ஆச்சிபி, ஸொயிங்கா, ஓக்ரி போன்றோருக்கு
இணையான ஆளுமைகள்தோன்றத் தொடங்கியிருக்-
கின்றனர். 1977_ஆம் ஆண்டு பிறந்த சீமமாண்டா ந்கோஸி
அடீச்சி விரைவிலேயே இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த
படைப்பாளிகளில் ஒருவராக மதிக்கப்பட்டு, இலக்கிய
உலகின் எல்லா உயரிய விருதுகளையும் பரிசுகளையும்
பெறு-வார் என்று நான் அனுமானிக்கிறேன். பையாஃப்ரா
சம்பவங்களில் நேரடி அனுபவம் அடீச்சிக்கு கிடையாது.
அப்போது அவர் பிறந்திருக்கவேயில்லை. அதனால் என்ன?
அந்த இக்போ இனத்தவரின் சரித்திரத்தில் படிந்திருக்கும்
ஆழமான வடுக்கள்இவரது Purple Hibiscus. half of a yellow sun என்ற இரு நாவல்களில் வெளிப்படுவது போல்
வேறெந்த நைஜீரியப் படைப்பிலும் வெளிப்படவில்லை.
இவரது சிறுகதைகளும் நாவலுக்கிணையான வீரியம்
மிக்கவை. இவரது சிறுகதைகள்தொகுப்பாக இதுவரை
வர-வில்லை. (தற்போது அவரது சிறுகதைகளை நான் மொழி-
பெயர்த்து வருகிறேன். ஆங்கிலத்தில் வருவதற்கு முன்
தமிழில் அவரது தொகுப்பைக் கொண்டு வந்துவிட ஆசை.)
அடீச்சியைப் பற்றிப் பேசும்போது ஏறக்குறைய அவருக்-
கிணையாகக் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர் ஸெஃபி
ஆட்டா. 2006_ஆம் வருடம் வெளிவந்த இவரது முதல்
நாவல் Everything Good will come ஆப்பிரிக்க
இலக்கியத்திற்கான ஸொயிங்கா விருதை வென்றிருக்கிறது.
ஆப்பிரிக்க இலக்கியத்தில் நைஜீரியாவுக்கு அடுத்த
பங்களிப்பு தென் ஆப்பிரிக்காவிற்கு. நோபல் பரிசு பெற்ற
ஜே.எம். கூட்ஸி, நாடின் கார்டிமர் ஆகியோர் முதலில்
நினைவிற்கு வரும் பெயர்கள். மற்ற ஆப்பிரிக்க நாடுகளின்
இலக்கியங்களைப் போலவே தென் ஆப்பிரிக்கப்
படைப்புகளிலும் அரசியல் வேரூன்றியிருக்கிறது. தென்
ஆப்பிரிக்காவின் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்
காலத்தில் நிலவிய இனவெறி, துவேஷம், சுரண்டல்கள்_
அதன் பின் தொண்ணூறுகளின் துவக்கத்தில் மாறத்
தொடங்கிய அரசியல் வானிலை, நெல்சன் மண்டேலா
விடுதலை, முதன்முறையாகப் பொதுத் தேர்தல்கள்,
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சி என்ற அதன் சமூகத்-
தில் தலைகீழ் மாற்றங்கள்ஏற்பட்ட அடுத்த கட்டம்
அதற்கு அடுத்த கட்டத்தில் அதிகார வர்க்கமாக இருக்கும்
கருப்பினத்தவர் இப்போது சலுகை வட்டத்திற்கு வெளியே
தள்ளப்பட்ட சிறுபான்மை வெள்ளையர் மீது நிகழ்த்தும்
வன்முறை, ஆக்கிரமிப்பு எனக் கடந்த இருபதாண்டுகளை
மூன்று கட்டங்களாகத் தென் ஆப்பிரிக்காவின் சமீப கால
வரலாற்றைப் பிரிக்கலாம். இதே கால வரிசையில்
கூட்ஸயின் Waiting for the Barbarians. Life and Times of Michael K, Disgrace போன்ற நாவல்கள் இம்மூன்று காலகட்டங்களைப் பதிவு செய்கின்றன. இவற்றில் மைக்கேல்
கே தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர் திரு நா.
தர்மராஜனால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
தன் ஆதர்ஸமான தஸ்தயேவ்ஸ்கியைப் பாத்திரமாக்கி
எழுதிய மற்றொரு மிக உன்னதமான நாவலான The Master of petersburg, சா. தேவதாஸ் அவர்களால் பீட்டர்ஸ்பர்க் நாயகன் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இனி வடக்கு நோக்கிப் பயணிக்கலாம். உலகின்
இரண்டாவது மிகப்பெரிய நிலப்பகுதியான ஆப்பிரிக்கா
புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெவ்வேறு
இயல்புகளுற்ற பிரதேசங்களால் அடுக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரிய, பிரெஞ்சு காலனியாதிக்கத்தில் (1830_1962) இருந்த
இஸ்லாமிய நாடு. பேசும் மொழிகள்அரபியும் பெர்பெர்
என்ற வட்டார மொழியும். பிரெஞ்சு காலனிய கால
கட்டத்தில் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டது. அல்ஜீரியா
என்றாலே நினைவிற்கு வரும் எழுத்தாளரின் பெயர்
அஸ்ஸியா ஜெபார் (Assia Djebar), ஃபாத்திமா ஜோஹ்ரா
இமாலயீன் என்ற இயற்பெயர் கொண்ட இவர்
பிரெஞ்சில்தான் எழுதுகிறார். இவரது முதல் நாவல் Lasoif (தாகம்) 1957ல் வெளிவந்தது. பிரான்ஸின் ஆதிக்க
அரசியலில் அல்ஜீரியா தன் அடையாளங்களைப்
பறிகொடுத்-திருப்பதை அரபியும் பெர்பெரும் பிரெஞ்சும்
கலந்த கலவையான, ஆனால் சுயமானதொரு மொழியில்
எழுதுகிற அஸ்ஸியா ஜெபார் அரசியற் காரணங்களுக்காகத் தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, பிரான்சிலும்
அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து
வருகிறார். இலக்கியம் மட்டுமின்றித் திரைப்படங்களிலும்
கால் பதித்த ஜெபார் 1976_ஆம் வருடம் La Nouba desfemmes du Mont Chenoua (செனூவா மலைப்பெண்களின் பாடல்) என்ற நீளமான பெயர் கொண்ட திரைப்படத்தை
எழுதி இயக்கினார். வெனிஸ் படவிழா விருதினைப் பெற்ற
திரைப்படம் இது. தற்போது எழுத்தை விட திரைப்படங்களி
ல் அதிக கவனம் செலுத்துபவராகியுள்ளார்.
பல நூறு இனங்களையும் கலாசாரங்களையும்
உள்ளடக்கியுள்ள மாபெரும் நிலப்பரப்பு ஆப்பிரிக்கா.
அதன் வலிமை அக்கண்டத்தின் புராதன குல மரபுகளில்
பொதிந்திருக்கிறது. பொதுவாக எந்த ஆப்பிரிக்க நாவலை,
சிறுகதையை வாசித்தாலும் அவற்றின் களத்தோடு நம்மால்
நெருக்கமாக உணர முடிவதற்கும், பாத்திரங்களின் பெயர்-
களையும் இடங்களின் பெயர்களையும் நீக்கி விட்டால்
நமக்குப் பரிச்சயமான இந்திய _ ஏன், தமிழ்நாட்டுக்
கதைகளைப் படிப்பதைப் போன்றே தோன்ற வைப்பதற்கும்
காரணம் நம்மிரு கண்டத்தவருக்கும் கலாசார ரீதியில்
கூட அதிகம் வித்தியாசமில்லை என்பதுதான். மனித
உறவுகளும் அவற்றின் மதிப்பீடுகளும் இந்தியாவிலும்
ஆப்பிரிக்காவிலும் ஒன்று போலவே இருக்கின்றன.
Share.

About Author

Leave A Reply