தலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் – செவ்விலக்கிய நூல்கள்

0
 என். குணசேகரன்

தமிழகத்தில் கடந்த நூற்றாண்டின் துவக்க
காலத்திலிருந்தே மார்க்சியத் தத்துவ வாசிப்பும், பிரசாரமும்
இடையறாது நிகழ்ந்துள்ளது. மார்க்சியத் தத்துவம் மற்றும்
மார்க்சிய அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார
நிகழ்வுகளை எடை போட்டு, கட்டுரைகள்எழுதி
வெளியிடு-வது எப்போதும் தொய்வில்லாமல் நடைபெற்று
வந்துள்ளது. ஏராளமான பத்திரிகைகள், நூல்கள்இந்த
எழுத்துகளைத் தாங்கி வெளிவந்திருக்கின்றன.
ஆனால், ஏனைய வெகுஜன எழுத்துகள்பரவலான
அறிமுகம் பெற்றது போன்று, மார்க்சிய எழுத்துகள்பரவிட-
வில்லை. ஏனெனில் வெகுஜன ஊடகங்களும் பதிப்பகங்களும்
அன்று வளர்ந்து வரும் முதலாளித்துவம், மற்றும்
நில ஆதிக்கச் சக்திகளின் செல்வாக்கின் கீழ் இருந்தன.
குறிப்பாக வெகுஜனக் கட்சியாக அன்று இருந்த காங்கிர-
சின் கோணத்தில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான
கருத்துக்களைத் தாங்கி, பத்திரிகைகள், நூல்கள்
வெளிவந்தன.
பதிப்புத் துறையில் கம்யூனிஸ்டுகளின் எதிர்நீச்சல்
இந்தப் போக்கின் ஊடாக, எதிர்நீச்சல் அடித்து
கம்யூனிஸ்டுகள்தங்களது பிரசாரத்தை மேற்கொண்டனர்.
வெறும் ஆங்கிலேயர் ஆட்சி எதிர்ப்பு மட்டுமல்லாது,
ஏகாதிபத்தியம் என்ற கருத்தாக்கத்தை அறிவியலாகப்
புரிந்துகொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பாகப் பரிணமிக்கச்
செய்த பெருமை மார்க்சியர்களின் எழுத்துக்கு உண்டு.
அந்நிய ஆட்சியின் அடக்குமுறை, சமூகப் பிற்போக்கு,
பழமைவாதிகளின் எதிர்ப்புகள்கடும் பொருளாதார
சிரமங்கள்ஆகிய தடைகள்பலவற்றைத் தாண்டி, இப்பணி
யைக் கம்யூனிஸ்டுகள்செய்து வந்தனர்.
இதற்கு, 1930, 40_ஆம் ஆண்டுகளிலேயே அவ்வப்போது
கிடைத்து வந்த லெனினது நூல்கள்உதவின. ஆட்சியின்
கடுமையான தடை இருந்ததால் அனைத்து நூல்களும்
கிடைப்பதில் சிரமம் இருந்தது. பின்னாளில் விடுதலைக்குப்
பிறகு, சோவியத் யூனியனது முன்னேற்றப் (றிக்ஷீஷீரீக்ஷீமீss றிuதீறீவீsலீமீக்ஷீs)
பதிப்பகம், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோ-
ரது நூல்களைத் தமிழில் பதிப்பித்து ஏராளமாக வெளியிட்
டது ஒரு மகத்தான சேவை.
மார்க்சிய நூல்களைப் பல்வேறு வகைகளில் பெற்று,
அதனடிப்படையில் அதிக அளவில் மார்க்சிய, லெனினிய
கருத்துகளை எழுதி வெளியிட்டவர்களில் முதன்மையானவ
ர் சிங்காரவேலர் எனலாம். பெரியாரும் இப்பணிக்கு
உதவிகரமாக இருந்துள்ளார்.
மார்க்சிய மூலவர்களின் அடிப்படை தத்துவ நூல்கள்
பல தமிழில் வெளிவந்துள்ளன. ஏங்கெல்ஸின் ÔÔடூரிங்குக்கு
மறுப்புÕÕ, ÔÔஇயற்கையின் இயக்கவியல்ÕÕ, ÔÔகுடும்பம், தனிச்-
சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்ÕÕ, உள்ளிட்டவை.
மார்க்சியத் தத்துவத்தைக் கடந்த தலைமுறைக்குப் போதித்த
நூல்கள். எனினும், லெனினது ÔÔதத்துவார்த்தக் குறிப்புக்கள்ÕÕ
மற்றும் ÔÔபொருள்முதல்வாதமும் அனுபவ வாத விமர்-
சனமும்ÕÕ போன்ற தத்துவத் துறை சார்ந்த பொக்கிஷங்கள்
அதிகம் தமிழுலகத்திற்கு அறிமுகப்படுத்தாதது மிகுந்த
குறை. ஏற்கெனவே பலவற்றை முன்னேற்றப் பதிப்பகம்
வெளியிட்டிருந்தாலும், மொழிபெயர்ப்புத் தரத்தை மேம்-
படுத்தி, வாசிப்போர் எளிதில் வாசிப்பதற்கேற்ற வடிவத்தில்
கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.
அறியாமை கலந்த பக்தி, மூடத்தனம், பழமையைக்
கண்மூடிப் போற்றுகின்ற அறிவீனம், இன்னமும் நிலைத்து
நிற்கிற மதவெறி போன்றவை இன்றைய தமிழகத்தில்
அதிகரித்து வருகின்றது. அறிவியல் தொழில்நுட்பத்
துறையை ஆழ்ந்து கற்றவர்கள்மத்தியிலும் முந்நாள்
திராவிட இயக்க வாரிசுத் தலைமுறையிடமும் இந்தப்
போக்கு உள்ளது. இந்நிலையில் பெரியாரின் பகுத்தறிவுப்
பிரசார நூல்கள்போதுமானதல்ல. இதற்கு இணையாக
மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்-ணோட்-
டத்தை விளக்குகிற நூல்கள்அதிகம் வெளிவர வேண்டும்.
பிளெக்கானவ் போன்று லெனினுக்கு முந்தைய தலை-
முறையினரின் தத்துவ நூல்கள்(ஒன்றிரண்டைத் தவிர)
வெளிவராதது ஒரு குறை. லெனினின் சமகாலத்தவரான
புக்காரின், டிராட்ஸ்கி போன்றோர் பங்களித்த தத்துவ
நூல்களும் தமிழில் வெளிவர வேண்டியுள்ளது.
1970_1980 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ், இங்கிலாந்து,
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த மார்க்சியர்கள்
இடையே ஏராளமான தத்துவ விவாதங்கள்நடை-
பெற்றுள்ளன. அல்த்தூசர் போன்றவர்கள்எல்லாம் புதிய
பங்களிப்புகள்செய்து, மார்க்சியத்தின் வர்க்கக் கூர்மை
மாறாமல் அதனை வளப்படுத்தினர். அத்தகு நூல்கள்
தமிழில் வராதது பெரும்குறை. (வெளிவந்துள்ள நூல்களில்
– கூட மார்க்சியத்தை நீர்த்துப் போகச் செய்கிறவை அதிகம்.
பின்நவீனத்துவவாதி மைக்கேல் பூக்கோவை தமிழகத்தில்
அறிமுகப்படுத்தியவர்கள்அல்த்தூசரையோ, பால்
ஸ்வீசியரையோ, வியோ ஹியூபெர்மேன் போன்றோரையோ
அவ்வளவாக அறிமுகப்படுத்தவில்லை).

பொருளாதாரம் சார்ந்தவை
மார்க்சியப் பொருளாதார நூல்களையும் முன்னேற்றப்
பதிப்பகம் வெளியிட்டுள்ளது. லேவ் லியாண்டியேவ்
எழுதிய மார்க்சியப் பொருளாதார Ôஅறிமுக நூல், முந்தைய
தலைமுறை சார்ந்த பல நூற்றுக்கணக்கானோரை மார்க்சிய
அரசியல் பொருளாதாரத்தில் புலமை பெற, துணை
நின்றது. மார்க்சின் மூலதனத்தைத் தியாகுவும், ஜமதக்னியும்
மொழிபெயர்த்து வெளிவந்தது, ஒரு முக்கிய வரலாற்றுப்பணி.
சிங்காரவேலரும் Ôமூலதனத்தைÕ விளக்கி எழுதியுள்ளார்.
லெனினது ÔÔஏகாதிபத்தியம்ÕÕ நூலை பாரதி புத்தகாலயம்
சிறந்த முறையில், பேராசிரியர் பிரபாத் பட்நாயக்கின்
முன்னுரையோடு வெளியிட்ட பாங்கு போற்றற்குரியது.
இதே வகையில் Ôகம்யூனிஸ்டு அறிக்கையையும் பாரதி
வெளியிட்டுள்ளது.
எனினும் மார்க்சிய அடிப்படையிலான உலகப்
பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு
செய்து வெளிவந்த நூல்கள்குறைவு. முப்பதாண்டுகளுக்கு
முன்பு “இந்தியா: சமூக பொருளாதார வளர்ச்சிÕÕ என்ற
சோவியத் ஆய்வாளர் பாவ்லாவ் ஷராசாவ் ஆகியோர்
எழுதிய நூல், இது போன்ற ஒரு முயற்சி. ஆனால் பெரும்
அளவில் செய்யப்படவில்லை.
தமிழில் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைக் கதைவ
டிவில் அறிமுகம் செய்தது, ராகுல சாங்கிருத்தியாயனின்
ÔÔவால்காவிலிருந்து கங்கை வரைÕÕ. ராகுல்ஜியின் ÔÔசோசலிசம்
ஏன்?ÕÕ என்ற புத்தகமும் சோசலிசத்துக்கு ஒரு நல்ல அறி-
முகம். ஆனால் ÔÔசோசலிசம் வராமல் போனால் காட்டு-
மிராண்டித்தனம்தான்ÕÕ என்று ஆணித்தரமாக எச்சரித்த
ரோசா லக்சம்பர்க்கின் நூல்கள்வராதது மிகப்பெரிய
இழப்பு.
இந்திய விடுதலைப் போரை மார்க்சிய அடிப்படையில்
ஆய்வு செய்து ரஜினி பாமிதத் எழுதிய ÔÔஇன்றைய
இந்தியா’’வை நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது.
இந்தியத் தத்துவத்தை மார்க்சிய நோக்கில் தேவி பிரசாத்
சட்டோபாத்யாவின் ÔÔஉலகாயதம்’’, ‘‘இந்திய தத்துவத்தில்
நிலைத்தனவும், அழிந்தனவும்’’ போன்ற நூல்களை
சவுத்விஷன் போன்ற நிறுவனங்கள்வெளியிட்டது சிறப்பா
ன நிகழ்வு. தமிழகத் தத்துவங்கள்பற்றி நா. வானமா
மலை எழுதியவையும் முக்கியமானவை.
இப்படிப்பட்ட நூல்கள்மேலும் வெளிவருவதற்கும்
மறுபதிப்பிற்கும் நூல் வெளியீட்டாளர்கள்முயற்சிக்க
வேண்டுமென்று வற்புறுத்தலாம். ஆனால் அது மட்டும்
போதாது. அனைத்து மார்க்சிய இடதுசாரி இயக்கங்களும்
அடிப்படை (சிறீணீssவீநீணீறீ) மார்க்சிய நூல்களைக் கற்கும்
ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். மார்க்சிய அடிப்படை
நூல் வாசிப்பினை தங்கள்அமைப்பிற்குள்ஒரு இயக்கமா
கவே நடத்திட வேண்டும். அமைப்பிற்கு வெளியேயும்,
குறிப்பாக மாணவர்கள்மற்றும் இளந் தலை-முறை-
யினரிடமும், இத்தகு பழக்கம் ஏற்பட திட்டமிட்ட முயற்சி
மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் Ôஆயுதங்கள்
இல்லாமல் கூட சோசலிசப் புரட்சி நடக்கக் கூடும்; ஆனால்
புத்தகங்கள்இல்லாமல் சோசலிசம் சாத்தியமில்லை.’
தமிழ்ச் சூழலில் மார்க்சியம்
கம்யூனிஸ்ட்களின் இலட்சியப் பிரகடனமான
ÔÔகம்யூனிஸ்ட் அறிக்கைÕÕ 1920ஆம் ஆண்டுகளிலிருந்தே
இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில்
பெரியாரும், சிங்காரவேலரும் இந்நூலைப் பதிப்பித்து,
அதனைப் பிரசாரம் செய்திடும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
திராவிட இயக்கம் உருவான துவக்க காலங்களில்
கம்யூனிச சித்தாந்தத் தாக்கம் பலமாக இருந்தது. நல்ல
நோக்கங்களோடும், விருப்பு வெறுப்பற்ற மனிதாபி-மானத்-
தோடும், உருவாகிற சித்தாந்தக் கருத்துகள்காலப்போக்கில்
முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ உடைமை வர்க்கங்களின்
முதலை வாய்க்குள்சிக்குண்டு போகிற வரலாற்றுப்
பரிதாபங்கள்அவ்வப்போது நிகழ்வதுண்டு. அத்தகு நிலை
திராவிட இயக்கத்திற்கும் ஏற்பட்டதை விளக்கிப் பலர்
எழுதியுள்ளனர். இதில் நடைமுறை அரசியலோடு உரசி,
எழுதப்பட்ட நூல் பி.ராமமூர்த்தியின் ÔÔவிடுதலைப் போரும்
திராவிட இயக்கமும்ÕÕ என்ற நூல். மார்க்சிய வர்க்கக்
கண்-ணோட்டத்துடன் சமகால அரசியலை ஆய்வு செய்கிற
நூல்.
அதேபோன்று சிங்காரவேலர் இந்திய, தமிழகச் சூழலில்,
சமூகம், பொருளாதாரம், சாதியம், சமயம் உள்ளிட்ட பல
தளங்களில் உள்ள முரண்பாடுகளை மார்க்சிய இயக்கவியல்
பார்வையில் அμகி, மகத்தான அறிவுச்செல்வத்தை வழங்-
கியுள்ளார். இது தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்
துள்ளன.
இன்னும் ஏராளமான எழுத்துகள்முதல் பதிப்போடு
நின்று போயுள்ளன. மேலே குறிப்பிட்டவை அனைத்தும்
நினைவில் நிற்கும் ஒருசில நூல்கள்மட்டுமே. பல இங்கு
குறிப்பிடப்படவில்லை.
தமிழில் வெளிவந்துள்ள மார்க்சிய லெனினிய அடிப்ப
டை நூல்கள், மார்க்சியத் தத்துவார்த்த அடிப்படையில்
சமகாலப் பிரச்னைகளையும், தமிழக, இந்திய வரலாற்-
றையும் ஆய்வு செய்து வெளிவந்துள்ள நூல்கள்அனைத்-
தும் கண்டறியப்பட்டு மீண்டும் பதிப்பிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், இவை அனைத்தும் நமது பண்பாட்டுச்
செல்வங்கள். இக்கடமையை நிறைவேற்ற அரசாங்கமும்
முழு-மை-யாகத் துணை நிற்க வேண்டும். சிங்காரவேலர்,
பி.ராம-மூர்த்தி உள்ளிட்ட பலரது எழுத்துகளையும் அரசாங்க
மே கூட பதிப்பிக்கிற பணியை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு ஓர் உதாரணம் உள்ளது. பிரான்ஸ் நாட்டில்
வாழ்ந்த மார்க்சிய அறிவாளர் லூயில் அல்த்தூசர், வாழ்-
நாள்முழுவதும் பிரெஞ்சு முதலாளித்துவ அரசு வீழ
வேண்டு-மென்று போராடியவர். ஆனால் இன்று பிரெஞ்சு
அரசில் உள்ள முதலாளித்துவ அரசாங்கமே (அதிலும்
ஜனாதிபதி ஷிராக், சார்கோசி போன்றவர்களின் வலதுசாரி
அரசாங்கங்கள்) அவரது நூல்களைப் பதிப்பித்து வெளியி
டுகின்றனர். Ôஅல்த்தூசர் எழுத்துகள்எங்களது பண்-
பாட்டுப் பொக்கிஷங்கள்Õ என்ற பரந்த மனப்பான்மையே
இதற்குக் காரணம்.
இத்தகு மனப்பான்மை இங்கும் தேவை. இன்றைய
தமிழகத்தின் வளர்ச்சிக்குள்ளே மார்க்சியர்களின் பங்களிப்
பும் உள்ளது. இந்த வரலாற்றை மறப்பதும், மறுப்பதும்
நமது எதிர்கால சந்ததியினருக்குத் தீங்காக முடியும்.

Share.

About Author

Leave A Reply