உலகை குலுக்கிய புத்தகம் – அரிஸ்டாட்டிலின் நிக்கோமாசின் எத்திக்ஸ்

0
விடுதலை இராசேந்திரன்

உலகின் பல்வேறு ஆட்சி முறைகளுக்கு
அடித்தளமிட்ட தேசம் கிரேக்கம். உலகில் நகரஅரசுகளை
நிர்மாணித்ததும் கிரேக்கம்தான். இலக்கியத்தின் மீது அதிக
ஆர்வம் கொண்டிருந்த அந்த நாடு தலைசிறந்த சிந்தனையா
ளர்களையும், பேச்சாளர்களையும் விஞ்ஞானிகளையும்
உலகிற்குத் தந்தது. கிரேக்கம் தந்த பகுத்தறிவுச் சிந்தனையா
ளர்தான் சாக்ரடீஸ். அவருடைய சீடர் பிளேட்டோ.
பிளேட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில். உலக வரலாற்றில்
மாவீரனாகப் பாராட்டப்படுகிற, மகா அலெக்சாண்டரின்
அரசியல் குரு அரிஸ்டாட்டில்.
அரிஸ்டாட்டிலின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு 384
ஆண்டுகளுக்கு முந்தையது. அவரது தத்துவத் தேடல்கள்,
தத்துவ விசாரணைகளின் எல்லை பரந்து விரிந்திருந்தது.
உலகங்களின் படைப்பு, இயக்கங்களின் குறிக்கோள்,
கடவுள், கலை, கவிதை, காதல், மக்கள்தொகைப் பெருக்கம்,
சமுதாயம், அரசியல், அμ ஆராய்ச்சி, ஆன்மிகம், பவுதிகம்,
தாவரம், உயிரினம், தர்க்கம் என்ற பொருள்களில் அவரது
சிந்தனைகள்விரிந்து பரந்து நின்றது.
இவர்களில் ஒழுக்கவியல் பற்றிய அரிஸ்டாட்டிலின்
சிந்தனைக்கே மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறந்த
வாழ்க்கை _ வாழ்க்கையின் மேன்மை, சமுதாயத்தின் பொது-
நன்மை, அதன் மூலம் தனி மனிதனுக்குக் கிடைத்திருக்கும்
நன்மை என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடிய அரிஸ்டாட்
டில் – அதை விளக்கி மூன்று நூல்களை எழுதினார்.
இதில் இரண்டு அவரது சீடர்களால் தொகுக்கப்பட்டவை.
அவரே நேரடியாக நூல் வடிவில் எழுதியது. Ôநிக்கோ-
மாசின் எத்திக்ஸ். (Nichomachean Ethics)
உலக இயக்கம் அனைத்துக்குமே ஒரு குறிக்கோள்
உண்டு என்பது அரிஸ்டாட்டிலின் அடிப்படையான
கொள்கை. அப்படியானால் மனித வாழ்வுக்கான குறிக்-
கோள்என்ன என்ற கேள்விக்கு, Ôஆனந்த நிலைÕ என்று
பதிலளித்தார். மனிதன் தன்னிடமுள்ள தனிச்சிறப்பான
சிந்தனைத் திறனை முழுமையாக வெளிப்படுத்திக்
கொள்வதே ஆனந்த நிலை என்று விளக்கினார். வெறும்
பகுத்தறிவை மட்டுமே கொண்டுள்ள மனித எந்திரமல்ல
மனிதன். அவனுக்கு உணர்ச்சிகள்உண்டு. எது சரியான
உணர்வு? எது தவறான உணர்வு? என்பதைத் தனது பகுத்-
தறிவைப் பயன்படுத்தித் தேர்வு செய்து வாழும்போதுதான்
அது சரியான வாழ்க்கைப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
அத்தகைய சிந்தனை-யாளனின் வாழ்வுதான் தலைசிறந்தது.
ஆனந்தம் நிறைந்தது.
மனிதர்கள்_ சிந்தனைத் திறன் கொண்டவர்களாக.
பகுத்தறிவு ஆற்றலைப் பயன்படுத்துவோராக வாழ்வதைத்-
தான் உண்மையில் கடவுள்களும் வானவர்களும்
விரும்புகிறார்கள்என்கிறார் அரிஸ்டாட்டில்.
ஆனந்தம் என்பது இன்பம் என்றாகிவிடுமா என்ற
கேள்விக்கு இல்லை என்பதே அரிஸ்டாட்டில் பதில்.
இரண்டும் வெவ்வேறு என்று கூறும் அவர், எடுத்த முயற்சி
வெற்றி பெறும்போது கிடைப்பது இன்பம். அது
அறிவார்ந்ததாகவோ, புலன் உணர்வு சார்ந்ததாகவோ
இருக்கலாம். இந்த இன்பம் வாழ்வின் லட்சியமாகி விடாது.
ஆனந்த நிலை அடைதல் எனும் லட்சியத்துக்கு இன்பம்,
துணை புரியலாம் என்கிறார் அரிஸ்டாட்டில். Ôஇன்பம்
என்பதே தவறானது என்ற கருத்தை அரிஸ்டாட்டில்
ஏற்கவில்லை. நற்செயலோடு தொடர்புடைய இன்பங்கள்
நன்று. தீச்செயல்களோடு தொடர்புடைய இன்பங்கள்தவறு
என்று அவர் இன்பத்தைப் பகுத்துப் பார்க்கிறார். விலங்-
கினங்களைப் போல் அல்லாமல் மனிதன், தகுதிவாய்ந்த
இன்பங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும்.
நடுங்கும் குளிரில் ஆடைகள்ஏதுமின்றிப் படுப்பதில்
ஆனந்தம் காண்பதாகக் கூறுவது பேதைமையே என்கிறார்
அரிஸ்டாட்டில்.
குழந்தைகளுக்குப் பொதுக் கல்வியைக் கட்டாயமாக்
கி, நல்லாசிரியர்களை, நல்ல செய்கைகள்செய்வதற்கே,
நன்னெறிப்படுத்துவதற்கே அவர்களைப் பயிற்றுவிக்க
வேண்டும். இதில் கண்டிப்பு காட்டப்பட வேண்டும்
என்கிறார்.
எது நன்னெறி? இந்தக் கேள்விக்கு அரிஸ்டாட்டில்
தரும் விடை மிதம், – தீவிரம். இரண்டுக்கும் இடைப்பட்ட
இடைவழியிடையே நன்னெறி என்று முன்மொழிகிறார்.
கோழைத்தனமும் வேண்டாம். அசட்டுத் துணிச்சலும்
வேண்டாம். துணிவு என்ற இடைவழியே சிறந்தது. அதிகப்
பணமும் கெடுதி  வறுமையும் கொடிது. இடைவழியே
சிறந்தது. இந்த இடைவழி என்பதை எந்திர ரீதியில் முடிவு
செய்துவிடக் கூடாது. சூழ்நிலைக்கும், பகுத்தறிவுத்
திறனுக்கும் ஏற்றாற் போல் அது மாறக்கூடியது. நற்பண்பு
செயல் மட்டுமல்ல; அது பழக்கமாக வேண்டும் என்கிறார்
அரிஸ்டாட்டில்.
நீதி என்பதை வரையறுக்கும் போது அரிஸ்டாட்டிலின் சிந்தனை வேறு திசையில் பயணித்து விடுகிறது.
நீதியை’ – ஒரு நற்பண்பு என்றே அவர் பார்க்கிறார். தகுதிக்குத்
தக்கவாறே பொறுப்புகளும் நன்மைகளும் வழங்கப்பட
வேண்டும் என்று கூறுவதோடு அப்படி வழங்குவதில் தவறு
நேர்ந்துவிட்டால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்
என்கிறார். நீதி அனைவருக்கும் சமத்துவமாக வழங்கப்பட
வேண்டும் என்பதை மறுக்கும் அரிஸ்டாட்டில்- நீதி
சமத்துவத்துக்கானது அல்ல; அவரவர்களுக்கு ஏற்ற
விதத்தில் இருக்க வேண்டும் என்கிறார். அடிமை முறையை
ஆதரிக்கும் அரிஸ்டாட்டில், எஜமானும் அடிமையும்
நண்பர்களாகக் கூட இருக்க முடியாது. அடிமை ஓர்
உயிர் வாழும் இயந்திரம். இயந்திரத்துடன் நட்பாக எப்படி
இருப்பது? ஒரு பொதுவான சட்ட அமைப்பின் கீழ் வாழும்
இரண்டு மனிதர்களுக்கிடையேதான் நீதியும், நாட்டில்
இருக்க முடியும்ÕÕ என்று தனது நீதி நூலில் கூறுகிறார்.
சிலர் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பது
இயற்கையின் நியதி என்று கூறும் அவர், அவர்களுக்கு
அறிவூட்டி சுதந்திரமளிப்பது ஓட்டைப் பாத்திரத்தில் நீர்
ஊற்றுவது போல்தான் என்று கூறிவிடுகிறார்.
(சங்கராச்சாரி கூறி வரும் கருத்துதான்).
இலட்சிய மனிதர்களுக்கு: அரிஸ்டாட்டில் தரும்
விளக்கம் நடைமுறைக்கு ஒவ்வாததாகும். இது முடிவாக
இலட்சிய மனிதனுக்கு நண்பன் அவனேதான். அவன்
அடிக்கடித் தனித்திருந்து இறுதி ஏகாந்தத்திலே இன்பம்
காண்பான் என்கிறார். இத்தகைய இலட்சிய மனிதர்கள்,
ஒரு தேசத்தில் ஒரு சிலரே இருக்க முடியும் என்பதை
உணர்ந்ததால், மன்னர் ஆட்சிமுறையே மிகச் சிறந்த அரசியல
மைப்பு என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிடுகிறார்.
பெண்ணடிமையை அழுத்தமாக வலியுறுத்தும்
அரிஸ்டாட்டில், ஆணுக்கும் பெண்ணுக்கும் துணிவு
ஒன்றுதான் என்று சாக்ரடீஸ் கூறியது தவறு. ஆணின்
துணிவு, அவன் ஆணையிடுவதில் உள்ளது. பெண்ணின்
துணிவு, அந்த ஆணைக்கு அவள்அடங்கிப் போவதில்
இருக்-கிறது… யாரோ ஒரு கவிஞர் கூறியது போல், மவுனமாக
இருப்பதே பெண்ணின் பெருமை என்கிறார். (அரசியல்
நூல்).
ஆளும் வகுப்பினருக்கு மட்டுமே பொதுவுடைமை
சமுதாயத்தை முன்மொழிந்தார் பிளாட்டோ. அத்தகைய
பொதுவுடைமைத் தத்துவத்தை நிராகரித்த அரிஸ்டாட்டில்,
அத்தகைய பொதுவுடைமை ஆளும் வகுப்பின் ஒற்றுமை-
யைச் சீர்குலைத்திடும் என்கிறார். இருவரது சிந்தனையும்
ஆளும் வகுப்பின் நலன் சார்ந்தவையாகவே இருந்திருக்-
கின்றன என்பதே இதில் கவனிக்கத்தக்கதாகும்.
புரட்சியைத் தடுப்பதற்கு அதீத ஏற்றத்தாழ்வுகளைக்
களைய வேண்டும் என்று கூறுவதோடு புரட்சிக்கு எதிராக
Ôநாட்டுப்பற்றுÕ, Ôகடவுள்பக்திÕ என்ற கருவிகளை மன்னர்கள்
வலிமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனைக
ளையும் அவர் முன்வைக்கிறார். Ôமன்னனுக்குக் கடவுள்
பக்தி இல்லாவிட்டாலும் கடவுள்பக்தி உள்ளவனாகக்
காட்டிக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மன்னன்
தீங்கிழைத்தாலும், மக்கள்அவனை எதிர்த்துப் போராட
அஞ்சுவார்கள்Õ என்று கூறுகிறார்.
கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு அரிஸ்டாட்டி-
லின் கொள்கை மிக உகந்ததாகவே இருந்ததால் கிறிஸ்தவ
உலகம், அவரது கருத்துகளை ஆரத் தழுவியது. கி.பி.1215_ல்
அவரது நூல்களை விமர்சனமே செய்யக் கூடாது என்று
போப்பின் பிரதிநிதி தடை உத்தரவே பிறப்பித்தார்.
ஆனாலும் நாம் வாழும் உலகு – ஆண்டவனால்
படைக்கப்பட்டது என்பதை அரிஸ்டாட்டில் ஏற்கவில்லை.
உலகிற்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை என்பது
அவரது கருத்து. ஆனாலும் கடவுளை அவர் கேள்விக்கு
உட்படுத்தவில்லை.
அலெக்சாந்தர் மரணம் நிகழ்ந்தவுடன் மன்னராட்சியில் வெறுப்புற்றிருந்த ஏதென்சு நகர மக்கள்-மன்னனின்
குருவான அரிஸ்டாட்டிலையும் சாக்ரட்டீசைப் போல்
குற்றக் கூண்டில் நிறுத்தத் துடித்தபோது ஏதென்சை
விட்டு வெளியே தனது தாயின் ஊரான சால்கிங்
நகரத்துக்குப் போய்விட்டார் அரிஸ்டாட்டில்.
அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள்பல
பிற்போக்கானவை என்பது உண்மைதான் என்றாலும்
தத்துவத் தேடல்களிலும் விசாரணைகளிலும் ஆய்வுகளிலும்
அவரின் முழுமையான அர்ப்பணிப்புகளைப் புறக்கணித்து
விட முடியாது. இந்தியாவில் தத்துவம் என்பதே மதங்கள்,
கடவுளுக்குள்தங்கிப் போய்நிற்கும் நிலையில் இந்த
கிரேக்கச் சிந்தனையாளர்கள்மதங்களையும் கடந்து
சிந்தித்திருக்கிறார்கள்.
மனிதர்களை அவர்கள்தனி மனிதர்களாகப் பார்த்தார்கள். சமூகம் என்பது தனி மனிதர்களின் கூட்டமல்ல.
அது பல்வேறு சமூகக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு
கட்டமைப்பு. அந்தச் சமூகக் கூறுகள்ஒன்றோடொன்று
பின்னிப் பிணைந்து ஒன்றோடு ஒன்று ஆதிக்கம் செலுத்தி
இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற பார்வை அவர்களிடம்
இல்லாமல் போய்விட்டது.

Share.

About Author

Leave A Reply