உலகை குலுக்கிய புத்தகம் – டாவின்சி புதிரும் காலனித்துவக் கடவுளின் இறுதிச் சடங்கும்

0
தத்துவஞானிகள்குத்துயிரும் கொலையுயிருமாய்ப்
பாக்கி விட்டதை விஞ்ஞானிகள்சோதனைச் சாலை
எலிகளாக்கிக் கொன்றே விட்டனர். இப்போது இருக்கும்
கடவுள்யார்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க
அனார்கிஸ்ட் மேரிஸன் ஷிப்ட் சொன்னதைப் போல
உண்மையான அர்த்தத்தில் மதம்… காலாவதி ஆகிவிட்டது.
இத்தனை வன்முறை தொடர்வது டான் ப்ரௌனின்
அர்த்தத்தில் இறுதியாய்த் துடிக்கும் ஒரு வால்.
1908_ல் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் ஹார்டி ‘கடவுளின்
இறுதிச் சடங்கில்’ தான் கலந்து கொள்வது போல
கற்பனை செய்து கொண்டு ஒரு கவிதை எழுதினார்…
துக்கம் கொப்பளிக்கும் அஞ்சலிக் கவிதை. Ôஅழகு மிளிரும்
பெண்டிரே, இளைஞர்களே, ஆண்களே… நம் கடவுளின்
பூத உடலைப் பாருங்கள்… இந்த இழப்பை எப்படித் தாங்கிக்
கொள்ளப் போகிறீர்கள். மேற்கத்திய அய்ரோப்பா தனது
அறிவியல் மற்றும் வளர்ச்சி மந்திரங்களால் கடவுளுக்கு
அப்படி ஒரு நிர்கதியை உருவாக்கியது. ஆனால் அது
வெறும் மதம் அறிவியல் குறித்த போட்டி அல்ல.
காலனித்துவ கடவுளின் சூட்சுமம் ஏனைய கடவுளர்களை
காட்டுமிராண்டிகளாகவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட
அபத்தச் சடங்குகளாகவும் சித்திரித்து நிராகரிக்கும்
அரசியலையும் பின்னணியாகக் கொண்டது.
நாடு பிடிக்கும் திட்டம் என்பது வெறும் அரசாளும்
வேட்கையை மட்டும் உள்ளடக்கியது அல்ல என்பதைச்
சமூக விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. கலாசாரப்
படையெடுப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். தொழிற்புரட்சி
தொடர, பிரிட்டிஷ் சாம்ராஜியத்திற்குத் தொடர்ந்து கச்சாப்
பொருட்கள்தேவைப்பட்டன என்பதே உண்மை. நிரந்தர
Ôபுதையல்Õகளைத் தேடி ஆக்கிரமிப்புகள்திட்டமிட்டு
நிகழ்த்தப்பட்டவை என்பதற்குப் போதுமான ஆதாரங்கள்
உள்ளன. புதையல்களுக்கு நினைத்தபடி நிரந்தரத்
தன்மையை ஏற்படுத்த ஆட்சி அதிகாரம் மட்டும் போதாது.
கோடிக்கணக்கான மக்களின் உளப்பூர்வமான ஒத்துழைப்பு
தேவை. எனவே காட்டுமிராண்டிகள் நவீன உழைப்பாளிகளாக்
கப்பட்டு ஒட்டச் சுரண்டப்பட்டார்கள். அதற்கு
அவர்களை அடக்கியாள மூளையை மழுங்கடிக்கும்
மூன்றாந்தர கல்வியும்  பழங்காலத்தோடான நினைவிலி
மனத்தை அறுத்து புதிய தலைமையை ஏற்கச் செய்ய ஒரு
மாற்று மதமும் தேவைப்பட்டது. அடங்க மறுப்பவர்களைப்
பிரித்தாளும் சாணக்கியம் எப்படி ஒடுக்க உதவியது
என்பதற்கு ரத்த அடையாளங்கள்இன்றும் உள்ளன.
ஒரு நாட்டின் கதை மட்டுமே அல்ல இது.
காலனியாதிக்கத்தின்
ஒட்டுமொத்த அடிப்படை இப்படித்
தான் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
ஆதிக்கத்திற்கும்  முற்றிலும் பழைய அடையாளங்களை
அறுத்தெறியவும்  ஆட்சியாளனுக்கு சரியானதொரு
ஆயுதமாகப் பயன்படும் வசதியான மதம் தேவைப்பட்டதில்
ஆச்சர்யம் எதுவும் இல்லை.
அரசியல் அதிகாரத்திற்கு வசதியாகக் கிறித்துவ மதம்
எப்படி எல்லாம் வளைக்கப்பட்டது என்பதை விளங்கிக்
கொண்டு மதத்தின் அதிகாரத்தை எதிர்த்து கார்லைல்,
ரஸ்கின், மாத்யூ அர்னால்டு போன்றவர்களும் டென்னிஸன்
போன்ற கவிஞர்களும் தேவாலயத்தின் ஆட்சியை
ஆக்கிரமிப்பை எதிர்த்து பெடரிக் ஏங்கெல்ஸிலிருந்து
தொடங்கி ஆழமான அரசியல் புரிதலை நோக்கமாகக்
கொண்டவர்களும் சாமுவேல் பெக்கட், வில்லியம்
ஃபாக்னர் முதல் ஆல்பர்ட் காம்யு வரை அபத்த நாடகமாகச்
சித்திரித்தவர் பலர். இரண்டாம் உலக யுத்தத்திடம் அதற்-
குரிய பாடம் கற்று உச்சகட்ட காட்சியைக் காலனித்துவம்
நடத்தியபோதும் ரத்தக் காட்டேரியாகி தனது பீதாம்பர
ராஜ வீதியில் பிணக்குவியல்களைக் கண்ட போதிலும்
அதிலிருந்து மீண்டு பிரைமோ லெவி, பால்ஸெலன் ஆந்ரே
ழீத் போன்றவர்களும் தாங்கள்சார்ந்திருந்த துறைகளில்
ஆழமான புரிதல்களுடன் திட்டமிட்டுப் படைப்புகளைக்
காலனித்துவ மனம் கடந்து சிந்தித்து உற்பத்தி செய்தார்கள்.
அந்தப் பேரலை வில்ஹெம் ஹெகல் வழியாக கார்ல்
மார்க்ஸை கடந்து ஐஸக் நியூட்டன் முதல் சார்லஸ்
டார்வின் வரை பல விஞ்ஞானிகளை உள்ளடக்கி இன்றும்
கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. சந்தேகங்கள் குறித்த
நாவல்கள்பல. அதிகம் அறியப்படாத ஆங்கில பெண்
எழுத்தாளர் திருமதி ஹம்ப்ரி வார்டு என்பவர்தான் கடவுள்
_ சந்தேக நாவல்களின் பிறப்பிடம் என்பது பலருக்கும்
தெரியாது. அவரது நாவல்கள்கத்தோலிக்க மரபைக்
கேள்விக்கு உட்படுத்தும் தீவிரம் கொண்டவை… தனது
தேவாலய பாதிரி கணவரை விட்டு இந்தியாவிற்கு வந்து
நிரந்தரமாய்மதத்திடமிருந்து விலகி நாத்திக
சோஷலிஸத்திடம் சரண் புகுந்த அன்னிபெசண்ட்
போன்றவர்கள்ஹம்ப்ரி வார்டின் தீவிர வாசகிகள்என்பது
குறிப்பிடத்தக்கது.
டாவின்ஸி புதிர் அந்த வரிசையில் வந்த நாவல்தான்
என்றாலும் சில வித்தியாசங்கள்உண்டு. முதலில் ஒன்றைக்
குறிப்பிட்டு விட வேண்டும். ஹாரி பார்ட்டர் நாவல்களை
விடவும் அதிகம் விற்பனையாகி ஒரு வெகுஜன நாவலாக
ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் விற்பனையில் அசுர
சாதனை படைத்துள்ளது.  நூலாசிரியர்
டான் பிரௌனே குறிப்பிடுவது போல பல ஆண்டுகளின்
தீவிர களப்பணியும் பொறுமையாகத் தொடர்ந்த ஆய்வும்
இதன் வெற்றிப் பின்னணி என்றாலும் ரத்தத்தை உறைய
வைக்கும் மர்ம முடிச்சுகளைக் கொண்டு உலக அரசிய-
லையும் மதத்தின் முகமூடியையும் சேர்த்தே கிழித்திருப்பதற்கு
நேரடி காரணி ஒன்று உண்டு: அதன் நடை.
லியோனார்டோ டாவின்சி! மனித வரலாற்றின்
விசித்திரங்களில் ஒன்று இந்தப் பெயர். ஓவியம், எழுத்து,
பொறியியல் கண்டுபிடிப்பு, வான சாஸ்திரம், புவியியல்,
கட்டிடவியல் இசைக் கருவிகள்… என அனைத்துத்
துறைகளின் வல்லுநர். இன்னமும் பல மர்ம முடிச்சுகளைக்
காலம் அந்தப் பெயரைப் பற்றி அவிழ்த்தபடியே உள்ளது.
நோம் சாம்ஸ்க்கி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில்
குறிப்பிடுவதைப் போல டாவின்ஸியின் அரசியல் பின்னணி
குறித்து அறிய இன்னும் பல வருடங்கள்கூட ஆகலாம்.
கி.பி. 1452_க்கும் 1519_க்கும் இடையில் வாழ்ந்து கலை
அறிவியல் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில்
மறுமலர்ச்சி ஏற்படுத்திய இந்த அறிவு ஜீவித சிகரம் தனது
மோனோ லிஸா ஓவியத்தில் கண்ட சிரிப்பில்
புதைந்துள்ளதைப் போலவே வாழ்விலும் பல மர்ம
முடிச்சுகளை ஒளித்து வைத்துக் கொண்டுள்ளதாக பலரும்
நம்புகிறார்கள். அந்த மர்மங்கள்மனித மனங்களுக்கே
படியாத மாய _ மாந்திரீக விஷயங்கள்அல்ல. மாறாக
தன்னைக் கட்டாயப்படுத்தி தேவாலய ஓவியங்களை
வரைந்து வாங்கியவர்கள்மீதான விமர்சனங்களைத் தனது
ஓவியத்திற்குள்ளேயே ஒளித்து வைத்தது; புதிர்களை
விடுவிப்பதில் சூரரான டாவின்சி நீண்ட அறிவியல்
கூறுகளைக் கூட வினோத சமிக்ஞை மொழிகளில் எழுதி
அசத்தியது (உதாரணமாய்வானூர்தி குறித்த அவரது
அசாத்தியக் குறிப்புகளை முகம் பார்க்கும் கண்ணாடி
வழியாக எதிரொளித்து வாசித்தால் மட்டுமே புரியும்!)
போன்ற கூறுகளில் அடங்கியுள்ளது.
முகங்களை விதம் விதமாக வரைந்து (பிரிட்ஜ்மேன்
ஆர்ட் கேலரி, இலண்டன்) தன் போக்கில் திருப்தி
அடைந்த ஓவியராக இருந்தவரை தேவாலயம் இயேசு
குறித்த ஓவியங்களை வரைய நிர்பந்தித்தது என்பதை
மறுக்க ஆதாரம் இல்லை. ஆனால் கிறிஸ்துவின் வாழ்வைப்
படம் பிடித்து அவர் வரைந்த ஓவியங்களில் இடை
இடையே ஓவிய ரீதியில் எழுத்துகள்தென்படுவதும் அவர்
கண்ட கிறித்துவ மதம் ஆண் _ பெண் இருபாலாரையும்
தேவ மைந்தர்களாகக் கண்டதோடு பெண் சீடர்களும்
இயேசுவிற்கு இருந்தனர் என்பதை நம்பி _ பெண்ணியக்
கிறித்துவத்தை ஆதரித்தவர் எனும் நிலைப்பாட்டையும்
ஆழப் பதிவு செய்துள்ளன.
ஃபுளோரென்டைன் நகரில் டாவின்சி ஒரு ஓவிய
ஸ்டூடியோ கடைப்பையனாக எடுப்பு வேலை பார்த்த
பிரபல ஓவியர் ஆண்டியேல் டெல் வெரோச்சி (மார்பிள்
கல் சிலை வடிப்பதில் சூரர்) கூட நூறு சதவிகித கிறித்து-
வரல்லர். வெரோச்சியின் கிறிஸ்துவின் ஞானஸ்நானம்Õ
ஓவியம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. அந்த ஓவியத்தில்
மண்டியிட்ட தேவதை படம் மட்டும் முழுக்க முழுக்க
டாவின்சி வரைந்தது. சர்ச்சை மண்டியிடும் தேவதை
மட்டுமல்ல; இயேசுவை மண்டி இட வைத்ததுதான்!
1478_ல் பிளாரன்ஸ் நகரின் நகர் மன்றக் கட்டடத்தின்
மேற்கூரை ஓவியத்தில் தொடங்கி மாகீக்கள்(இயேசு
பிறந்தபோது பரிசுகள்தந்த அரசர்கள்), பெனாயன்
மடோன்னா (1478), கனவெரா டி பென்சியின் முக ஓவியம்
(1474), முடிக்கப்படாத புனித ஜெரோம் எனத் தொடரும்
அதிர்ச்சி வைத்தியங்கள்1485_ல் பாறைகளின்
கன்னியாஸ்திரி (ஜிலீமீ ஸ்க்ஷீவீரீவீஸீ ஷீயீ tலீமீ ஸிஷீநீளீs) வந்து திருப்பு-
முனை பெற்றது. இந்த ஓவியத்தை (தேசிய அருங்காட்
சியகம், லண்டன்) உற்றுநோக்கினால் அடுத்த புதிர்
உண்டு. குழந்தை இயேசுவைச் சூழ்ந்திருப்பவர்களின்
இடையே மரம் போன்ற உருவம் _ ரோமாபுரியின் பழைய
மதப் பெண் கடவுளர் புராதன கருப்பு ஆடையில் மற்றொரு
குழந்தையுடன் இருப்பார். இறைத் தூதருடன் ஒரு
பெண்μம் அவதரித்திருக்க வேண்டும் என்பதே
டாவின்சியின் வாதம்!
அடுத்த சர்ச்சை இயேசுவின் கடைசிப் பகிர்தல்(The Last supper). இந்த ஓவியம் அமைந்த இடமே
சர்ச்சைக்குரியது. மிலானிலுள்ள சாண்டா மாரியா! சுவரில்
ஓவிய பசை சரியாகப் பதியவில்லை என்று உண்மை ஓவியம்
அழிக்கப்பட்டது. Ôஉங்களில் ஒருவர் என்னைக் காட்டிக்
கொடுப்பீர்Õ என்று கூறுவார் கிறிஸ்து. காட்டிக்
கொடுத்தவர் வேறு யாருமல்ல டாவின்சி தான்!
பல நூற்றாண்டுகளுக்குக் குடைந்து குடைந்து எடுத்த
ஆதாரங்கள்ஒன்றிரண்டு அல்ல. இந்த The Last supper
ஓவியத்தில் இயேசுவிற்கு வலதுபுறம் உற்று நோக்கினால்
இயேசு போலவே உடையணிந்த… ஒரு பெண் வரையப்பட்
டுள்ளாள். அவள்யார்? ஏன் டாவின்சி இப்படிச்
செய்தார். யேசுவின் கையிலா.. அப்பெண்ணின் கையிலா…
கோப்பை யார் கையில் உள்ளது? ஓவியத்தில் தெளிவி
ல்லை… வழக்கம் போல தனது பாணியில் அறையின்
கூரை-களில் தனக்கேயான அரசியலைச் செய்திகளாக்கி
நுμக்கி எழுதி இருக்கிறார்… இப்படிப் பல புதிர்
வியூகங்கள்.
டாவின்சியின் மதத்திற்கு எதிரான போராட்டத்தின்
பின்னணி என்ன? தி பியரி சியான் எனும் முந்தைய
கிறித்துக்களின் ரகசிய அமைப்பு. இந்த அமைப்பு புதிய
ஏற்பாட்டின் அரசியல் சூழ்ச்சிகளை எதிர்த்ததோடு
முந்தைய பெண் சார்ந்த கிறித்துவத்தின் ஒழித்துக் கட்டப்பட்
ட சடங்குகளை ரகசியமாக பின்பற்றவும் செய்தது.
ஐசக் நியூட்டன் விக்டர் ஹ§கோ மற்றும் லியனார்டோ
டாவின்சி உட்பட பலரை உறுப்பினர்களாகக் கொண்ட
மாற்று கிறித்துவ அமைப்பாக ரகசியமாய் தி பியரி சியான்
செயல்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள்உள்ளன.
Ôபெண் ஏன் அடிமையானாள்? கட்டுரையில் ஏங்கெல்ஸ்
அதனை விவரித்துள்ளமையை இங்கே குறிப்பிட
விரும்புகிறேன். பெண்ணியமும் இணைந்த மதமாகக்
கிறித்துவம் இல்லாமல் போனதற்குத் திட்டமிட்ட அரச
_ ஆதிக்கம் காரணம் என்பதை யாருமே மறுக்க முடியாது.
லட்சக்கணக்கானவர்கள்பெண்ணிய _ கிறித்துவத்தோடு
தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாய்செயல்பட்-
டதைப் பாரீசின் தேசிய வரலாற்றியல் _ தொல்லியல்
துறையான Bibliotheque nationale அமைப்பு Les Dossiers Secrets எனும் நூலாக 1975-ல் வெளியிட்டபோது பெரும்
சர்ச்சையை அது கிளப்பியது. 1099-ல் தி பியரி சியான்
எனும் பெண்ணிய கிறித்துவ அமைப்பு தோற்று-
விக்கப்பட்டதாக Les Dossiers secrets ஆதாரப்பூர்வமாக
நிறுவுகிறது. டான் பிரௌன் தனது நாவலின் அடித்தளமாக தி பியரி சியானின் அமைப்புச் செயல்பாடுகளை
வைத்திருப்பது தான் டாவின்சி புதிர் நாவலுக்கு அதீத
நாத்திகத் தன்மையைத் தருகிறது.
– இரா. நடராசன்
Share.

About Author

Leave A Reply