இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல்

0
உலக இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
கலிலியோ கலிலியை Ôநவீன இயற்பியலின் தந்தை (Father of Modern Physics) என்று புகழ் மாலை சூட்டியுள்ளார்.
இந்தப் புகழ் மாலைக்குத் தகுதியான கலிலியோ 1632_ஆம்
ஆண்டு இரு பெரும் உலக அமைப்பாடுகள்பற்றிய
உரையாடல் (Dialogue of the Two Principal Sysyems of the world) என்னும் நூலை எழுதி முடித்து வெளியிட்டார்.
இந்நூலைப் படித்த ரோம் மதவாதிகளுக்குக் கோபம்
வந்துவிட்டது. இந்நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி
மதவாதிகள் கட்டளையிட்டனர். நூலுக்குத் தடையும்
விதித்தனர். கலிலியோவுக்குத் தண்டனையளித்த செய்தியி
னை எல்லா பல்கலைக்கழகங்களிலும் வாசிக்கப்பட
வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.
இந்நூலில் போலந்து
விஞ்ஞானி கோப்பர்னிகஸின்
(Copernicus 1473 -1543)
சூரிய மைய கொள்கையை
உயர்வாகப் பல ஆதாரங்களுடன்
நிரூபித்து உயர்வாக
எழுதியுள்ளார். கலிலியோ தம்
கைப்பட அமைத்த தொலை-
நோக்கி மூலம் அண்ட கோள்களின் நகர்ச்சிகளைக்
கண்டதையும் சோதித்ததையும் எடுத்துக் காட்டி
கோபர்னிகஸின் சூரிய மைய கொள்கையே மெய்யானதாக
விளக்கியுள்ளார்.
அத்துடன் பைபிளில் எங்கெங்கு அறிவியல் கருத்து-
களுக்கு முரணான கூற்றுகள்உள்ளன என்பதையும்
சுட்டிக் காட்டி அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது
பைபிளில் உள்ள முரண்பாடுகள்திருத்தப்பட வேண்டும்
என்றும் ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையை எந்த
அறிவியல் மெய்ப்பாட்டுக்கும் சான்றாக வாதிக்கக் கூடாது
என்றும் எழுதியுள்ளார்.
தொலைநோக்கி மூலம் முதலில் நிலவில் மலைகளையும்
குழிகளையும் கண்டார். பால் மய வீதியில் (Milky way)
கோடான கோடி விண்மீன்கள்கொண்டுள்ளதையும்
கண்டார். வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய
சந்திரன்களைக் கண்டார். ஒளிவீசும் வெள்ளியின்
வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு வெள்ளியும் சூரியனைச்
சுற்றி வருகிறதுÕÕ என முதன்முதலில் சோதனை மூலம்
காட்டி தாலமியின் ÔÔபூமைய கொள்கைÕÕ பிழையானது
என்றும் கூறியுள்ளார்.
அதுபோலவே புதன் கோளின், பிறைகளையும் கண்டு
குறிப்பிட்டுள்ளார். அப்போது ரோம் மதவாதிகள்
அரிஸ்டாட்டில் கூற்றுப்படி முழுக்கோள்களைத் தவிர
குறைகோள்கள்விண்வெளியில் இருக்க முடியாது என்றும்
வாதிட்டார்கள்.
சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான
Ôநெப்டியூனின்Õ (Planet Neptune) நகர்ச்சியைத் தொடர்ந்து
(1612 – 1613) குறித்து வைத்தும் தாம் ஒரு புதுக்கோளைக்
கண்டுபிடித்ததை அறியாமலே
போய்விட்டார். நெப்டியூன்
கோள்230 ஆண்டுகளுக்குப்
பின் 1846_ல் ஜொஹான்
காலே (John Galle)
என்பவரால் கண்டுபிடிக்கப்
பெற்றது.
Ôபழையன கழிதலும்,
புதியன புகுதலும்Õ என்னும்
கருத்துக்கேற்ப கால வெள்ளத்-
தில் கோபர்னிகஸின் மெய்யான சூரிய மையக்
கொள்கையை ஒருவராலும் தடைபோட்டு நிறுத்த
முடியவில்லை.
கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த
பல மகத்தான காட்சிகளைத் தான் மட்டுமே முதன்முதலில்
கண்டதற்காக ஆனந்தப்படுகின்றார் கலிலியோ. ஐந்து
நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில்
முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப்படுபவர்
கலிலியோ. முதன்முதலில் தம் கையால் உருவாக்கிய
தொலைநோக்கி உதவியால் அண்ட கோள்களை ஆய்ந்து
விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர்
விஞ்ஞான மேதை கலிலியோ.
இந்நூல் விண்வெளி ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் முதல்
நூலாகும். விண்வெளி ஆர்வலர்களும் பிறரும் கட்டாயம்
படித்து அறிந்து கொள்ள வேண்டிய நூலாகும்.
–  திருவேங்கடம்
Share.

About Author

Leave A Reply